வரலாறு

இந்தியாவில் தேசியத்தின் எழுச்சி

  • வேளாண்  செயல்களில் ஏற்பட்ட மாற்றங்களும் ஆங்கிலேய உற்பத்தியாளர்களின் இறக்குமதியும் இந்தியக் கைவினைத் தொழில்களையும் கைவினைஞர் வாழ்வையும் சீரழித்தது
  • குறிப்பிட்ட இடைவெளிகளில் ஏற்பட்ட பஞ்சங்கள் நிலமற்றத் தொழிலாளர்களையும் வேலையில்லாக் கைவினைஞர்களையும் புலம்பெயரச் செய்தது
  • மேற்கத்தியக் கல்வியின் அறிமுகமும் தேசிய எழுச்சியின் உதயமும்
  • இந்தியாவில் தேசிய எழுச்சிக்குப் பங்களிப்புச் செய்த ஏனைய காரணிகள்
  • நவீன இந்தியாவின் படித்த வகுப்பினர் இந்திய தேசிய காங்கிரசுக்கான அடித்தளம் அமைத்தல்
  • தொடக்ககாலத் தேசியவாதிகளும் அவர்களின் பங்களிப்பும் குறிப்பாக நௌரோஜியும் அவருடைய செல்வச் சுரண்டல் கோட்பாடும்

தீவிர தேசியவாதத்தின் எழுச்சியும் சுதேசி இயக்கமும்

  • வங்காளத்தில் நடைபெற்ற சுதேசி இயக்கத்தின் இயல்பையும் முக்கியத்துவத்தையும் புரிந்து கொள்வது.
  • பிரிட்டிஷ் இந்திய அரசின் அடக்குமுறை நடவடிக்கைகளை அறிந்து கொள்வது.
  • 1907இல் ஏற்பட்ட சூரத் பிளவுக்கு (இந்திய தேசிய காங்கிரசில்) இட்டுச் சென்ற நிகழ்வுகளைக் கண்டறிவது.
  • வங்காளத்துப் புரட்சிகரத் தீவிர தேசியவாதத்தை நன்கு தெரிந்து கொள்வது.
  • தமிழகத்தில் நடைபெற்ற சுதேசி இயக்கப்போராட்டங்களோடு அறிமுகமாதல்
  • வ.உ.சிதம்பரம், வ.வே.சுப்ரமணியம், சுப்ரமணிய சிவா, சுப்பரமணிய பாரதி ஆகியோர் வகித்தப் பங்கினைத் திறனாய்வு செய்தல்

இந்திய விடுதலைப்போரில் முதல் உலகப்போரின் தாக்கம்

  • முதல் உலகப்போரால் உருவான நிலைமை: மிதவாத தேசியவாதிகள் மற்றும் தீவிர தேசியத்தன்மைகொண்டவர்கள் இணைந்து திலகர் மற்றும் அன்னிபெசண்ட் அம்மையாரின் தன்னாட்சி (ஹோம் ரூல்) இயக்கத்தின் மூலமாக ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக ஒன்றுபட்டு போராட்டத்தை நடத்தியது.
  • ஆங்கிலேயரின் அடக்கி ஆளும் நடவடிக்கைகள்: இந்திய பாதுகாப்புத்துறைச் சட்டம் இயற்றப்படுதல்.
  • இந்து-முஸ்லிம் ஒற்றுமைக்கு வழிவகுத்த லக்னோ ஒப்பந்தம்.
  • ஜாலியன் வாலாபாக் படுகொலை மற்றும் கிலாபத் இயக்கம் வழியாக இந்து-முஸ்லிம் நல்லிணக்கம்.
  • இந்தியத் தொழிலாளர் இயக்கத்தில் முதல் உலகப்போர் மற்றும் ரஷ்யப் புரட்சியின் தாக்கம்

காந்தியடிகள் தேசியத் தலைவராக உருவெடுத்து மக்களை ஒன்றிணைத்தல்

  • சம்பரான் இயக்கம் மற்றும் கேதா சத்தியாகிரகம்
  • மாண்டேகு – செம்ஸ்ஃபோர்டு சீர்திருத்தங்கள்
  • பிராமணரல்லாதார் இயக்கம் மற்றும் ஒத்துழையாமை இயக்கம்
  • ஜாலியன் வாலாபாக் படுகொலை, சுயராஜ்ய கட்சி மற்றும் அதன் செயல்பாடுகள்
  • சைமன் குழு, வட்ட மேசை மாநாடுகள்
  • காந்தி - இர்வின் ஒப்பந்தம் மற்றும் அம்பேத்கரும் அரசியலும்

ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டங்களில் புரட்சிகர தேசியவாதத்தின் காலம்

  • கான்பூர் சதி வழக்கு
  • மீரட் வழக்கு விசாரணை
  • பகத் சிங் – கல்பனா தத்
  • இந்திய தேசிய காங்கிரசின் கராச்சி கூட்டத்தொடர்
  • மாபெரும் பொருளாதார மந்தநிலையும் இந்தியாவில் அதன் தாக்கமும்
  • இந்தியாவில் தொழில் மேம்பாடு

தேசியவாத அரசியலில் வகுப்புவாதம்

  • இந்திய சுதந்திரத்திற்கு முன் மதம் சார்ந்த தேசியவாதத்தின் தோற்றம்
  • தங்கள் ஏகாதிபத்திய நலன்களை மேம்படுத்துவதற்காக பிரிட்டிஷார் கையாண்ட பிரித்தாளும் கொள்கை
  • பிரிட்டிஷ் அரசு, முஸ்லிம்களுக்கு தனித்தொகுதிகளை வழங்கியதன் மூலம் முஸ்லிம் லீக்கும் ஜின்னாவும் முஸ்லிம்களுக்கான தனிநாடு கோரிக்கையை வலியுறுத்தக் காரணமாக அமைதல்
  • இந்திய அரசாங்கச் சட்டம், 1935இன் கீழ் காங்கிரஸ் பதவிகளை ஏற்றுக்கொண்டதன் காரணமாக காங்கிரசுக்கும் முஸ்லிம் லீக்கிற்கும் இடையே இடைவெளி அதிகரித்தல்
  • நேரடி நடவடிக்கை நாளிற்கு ஜின்னா விடுத்த அழைப்பு மற்றும் அதன் விளைவாக கல்கத்தாவில் ஏற்பட்ட வகுப்புவாத வன்முறை
  • நாடு, இந்தியா மற்றும் பாகிஸ்தான் என இரண்டாகப் பிரிவினை செய்யப்படுதல்

இந்திய தேசிய இயக்கத்தின் இறுதிக்கட்டம்

  • கிரிப்ஸ் தூதுக்குழுவின் வருகையும் அதன் தோல்வியும்
  • வெள்ளையனே வெளியேறு இயக்கமும் காந்தியடிகளின் ‘செய் அல்லது செத்துமடி’ முழக்கமும்
  • சுபாஷ் சந்திர போசும் இந்திய தேசிய இராணுவமும்
  • இராஜாஜியின் சமரச முன்மொழிவும் வேவல் திட்டமும்
  • இராயல் இந்திய கடற்படையின் கலகம் (1946)
  • மௌண்ட் பேட்டன் திட்டமும் இந்தியப் பிரிவினையும்

காலனியத்துக்குப் பிந்தைய இந்தியாவின் மறுகட்டமைப்பு

  • பிரிவினையின் அறைகூவல்கள் (சவால்கள்)
  • அரசமைப்பு உருவாக்கம்: செயல்முறையும் உணர்வும்
  • இந்திய ஒன்றியத்தில் சுதேச அரசுகளை ஒருங்கிணைத்தல்
  • மொழி அடிப்படையில் மாநிலங்களை மறுசீரமைத்தல்
  • அண்டை நாடுகளுடனான இந்தியாவின் உறவுகளும் உலக நிகழ்வுகளில் அதன் பங்கும்.

ஓர் புதிய சமூக - பொருளாதார ஒழுங்கமைவை எதிர் நோக்குதல்

  • சுதந்திரம் அடைந்தபோது இந்தியாவின் பொருளாதார நிலை
  • இந்தியா ஒரு சமதர்ம, மக்களாட்சி நாடாதல் மற்றும் அதன் முக்கியத்துவம்
  • வேளாண்மை, கிராமப்பொருளாதாரம் ஆகியவற்றை மேம்படுத்த மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள்
  • அ) நிலச்சீர்திருத்தங்கள் மற்றும் அவற்றின் விளைவுகள் குறித்த மதிப்பீடு
  • ஆ) பசுமைப்புரட்சியின் மூலம் தொழில் நுட்ப வளர்ச்சி
  • இ) ஊரக வளர்ச்சித் திட்டங்கள்
  • ஈ) ஊரக வேலைவாய்ப்புத் திட்டங்கள்
  • தொழில்துறை வளர்ச்சி
  • அ) கனரகத் தொழில்களில் முதலீடு செய்வதற்கான உத்தி மற்றும் அடிப்படைக் கோட்பாடுகள்
  • ஆ) தொழில்களை முறைபடுத்தும் கொள்கைகள், சட்டங்கள் வாயிலாக தனியார் தொழில்களையும், நுகர்வையும் கட்டுப்படுத்துவதில் அரசு மற்றும் அரசாங்கத்தின் பங்கு
  • இ) பொதுத்துறையின் பங்கு
  • ஈ) தாராளமயமாக்கலும் அதற்குப் பிந்தைய நிலையும்
  • இந்தியாவில் ஐந்தாண்டு திட்டங்கள்
  • கல்வி - எழுத்தறிவில் ஏற்பட்ட முன்னேற்றமும் பள்ளிக் கல்வியின் விரிவாக்கமும்
  • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் – நாட்டில் அறிவியல் ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களின் வளர்ச்சி

நவீன உலகம்: பகுத்தறிவின் காலம்

  • இத்தாலிய மறுமலர்ச்சி மற்றும் மேற்கத்திய ஐரோப்பாவுக்கு அதன் பரவல்
  • புதிய நிலப்பரப்பையும் கடல் வழித்தடங்களையும் கண்டுபிடித்தல்
  • வர்த்தகப் புரட்சியும் அதன் தாக்கமும்
  • பிராட்டஸ்டன்ட் சீர்திருத்தம் மற்றும் கத்தோலிக்க எதிர் சீர்திருத்தம்
  • மேற்கு ஐரோப்பாவில் முடியாட்சிகளின் எழுச்சியும் தேசிய அரசுகளின் தோற்றமும்

புரட்சிகளின் காலம்

  • அமெரிக்க விடுதலைப் போருக்கான காரணங்கள், அதன் போக்கு, விளைவுகள் ஆகியவற்றை அறிந்துகொள்ளல்
  • பிரெஞ்சுப் புரட்சி, அதற்கான காரணங்கள், போக்கு, ஐரோப்பாவின் மீதும் உலக நாடுகளின் மீதும் ஏற்படுத்திய தாக்கத்தினைப் புரிந்துகொள்ளல்
  • லத்தீன் அமெரிக்க புரட்சியினை புரிந்துகொள்ளல்
  • முதலில் இங்கிலாந்திலும் பின்னர் ஜெர்மனி, அமெரிக்கா ஆகிய நாடுகளில் நடைபெற்ற தொழிற்புரட்சியின் தொடக்கத்தை அறிந்துகொள்ளல்

ஐரோப்பாவில் அமைதியின்மை

  • சமதர்ம (சோஷலிசம்) சிந்தனையின் எழுச்சியையும், பொதுவுடைமை (கம்யூனிசம்) கருத்துகளின் தோற்றத்தையும் அறிதல்
  • இங்கிலாந்தின் மக்கள் உரிமை சாசன இயக்கத்தைப் பற்றி தெளிதல்
  • பிரான்சில் நிகழ்ந்த ஜூலை (1830) மற்றும் பிப்ரவரி (1848) புரட்சிகளின் முக்கியத்துவத்தை விளங்கிக் கொள்ளல்
  • மாஸினி, கவூர், கரிபால்டி போன்றவர்கள் இத்தாலிய ஒருங்கிணைப்பிற்காக ஆற்றிய பங்களிப்பை உணர்ந்து கொள்ளல்
  • ஜெர்மனியின் ஐக்கியத்தை நிறுவ பிஸ்மார்க் மேற்கொண்ட ‘இரத்தமும் இரும்பும்’ கொள்கையைப் புரிந்து தெளிதல்
  • ஜெர்மனி மற்றும் அமெரிக்காவில் 1873 முதல் 1896 வரையுள்ள காலத்தில் ஏற்பட்ட நீண்ட பெருமந்தத்தையும் அதன் விளைவுகளையும் அறிதல்

ஏகாதிபத்தியமும் அதன் தாக்கமும்

  • சந்தையைக் கைப்பற்றும் நோக்கில் ஏகபோக தொழில்முறையும், நிதியும் ஏற்படுத்திக் கொண்ட கூட்டணியின் சூழலில் எழுந்த ஏகாதிபத்தியத்தைக் குறித்து அறிதல்
  • காலனிகளை உருவாக்க ஏற்பட்ட போட்டியும் அதனால் நாடுகளுக்கிடையே எழுந்த முரண்போக்குகளும் முதல் உலகப்போருக்கு வழிவகுத்தல் பற்றி அறிந்து தெளிதல்
  • முதல் உலகப்போர் உருவானதற்கான காரணங்கள், போக்குகள், மற்றும் விளைவுகள் போன்ற கூறுகளை அலசி ஆராய்தல்
  • ரஷ்ய புரட்சியையும் அதன் முக்கியத்துவத்தையும் புரிந்து கொள்ளல்
  • 1930களின் பொருளாதாரப் பெருமந்தத்தை உள்ளார்ந்து உணர்தல்
  • இத்தாலியிலும், ஜெர்மனியிலும் பாசிச எதிர்-புரட்சி நேர்ந்தமையை மதிப்பீட்டிற்கு உட்படுத்துதல்

இரண்டாம் உலகப்போரும் காலனிய நாடுகளில் அதன் தாக்கமும்

  • இரண்டாம் உலகப்போருக்கான காரணங்கள், அதன் போக்கு மற்றும் விளைவுகள்
  • சீனப் புரட்சி
  • இந்தோனேசியா மற்றும் பிலிப்பைன்சில் உருவான தேசியவாத இயக்கங்களும் சுதந்திரத்திற்கான போராட்டங்களும்

இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய உலகம்

  • இரண்டாம் உலகப்போருக்குப் பின்னரான காலப்பகுதியில் இருதுருவ உலகம் தோன்றுதல்
  • போருக்குப் பின்னர் அமெரிக்காவின் நிதியளிப்பில் ஐரோப்பா புனரமைக்கப்படுதலும் பனிப்போரின் தொடக்கமும்
  • கருத்தியல் அடிப்படையில் இரு வேறுபட்ட முகாம்கள் உருவாவதற்கு இட்டுச்சென்ற இராணுவ உடன்படிக்கைகள். அமெரிக்க ஐக்கிய நாடுகள் தலைமையேற்ற நேட்டோ, சோவியத் ரஷ்யாவின் தலைமையிலான வார்சா ஒப்பந்த நாடுகள்
  • மூன்றாம் உலக நாடுகளும் அணிசேரா இயக்கமும்
  • ஐ.நா சபையும் உலகப் பிரச்சனைகளைத் தீர்த்து வைப்பதில் அதன் பங்கும்
  • ஐரோப்பிய யூனியன் உருவாக்கப்படுதலும் ஒருங்கிணைக்கப்படுதலும்
  • சோவித் யூனியனின் வீழ்ச்சியும் பனிப்போரின் முடிவும்