12th Standard Tamil Medium - இயற்பியல் Syllabus

இயற்பியல் I

நிலை மின்னியல்

  • மின்னியல் மற்றும் காந்தவியலின் வரலாற்றுப் பின்னணி
  • நம் அன்றாட வாழ்வில் நிலைமின் விசையின் பங்கு
  • கூலூம் விதி மற்றும் மேற்பொருந்துதல் தத்துவம்
  • மின்புலம், அதன் கருத்துரு
  • பல்வேறு மின்துகள் கட்டமைப்புகளுக்கு மின்புலத்தைக் கணக்கிடுதல்
  • நிலை மின்னழுத்தம் மற்றும் நிலைமின்னழுத்த ஆற்றல்
  • மின் இருமுனை மற்றும் இருமுனை திருப்புத்திறன்
  • மின் இருமுனையின் மின்புலம் மற்றும் நிலை மின்னழுத்தம்
  • மின்பாயம்
  • காஸ் விதியும் அதன் பல்வேறு பயன்பாடுகளும்
  • கடத்திகள் மற்றும் மின்காப்புப் பொருள்களின் நிலைமின்னியல் பண்புகள்
  • மின்முனைவாக்கம்
  • தொடரிணைப்பு மற்றும் பக்கஇணைப்பில் மின்தேக்கிகள்
  • மின்காப்பினால் மின்தேக்கியில் ஏற்படும் விளைவு
  • கடத்திகளில் மின்துகள்களின் பரவல் மற்றும் ஒளிவட்ட மின்னிறக்கம்
  • வான் டி கிராப் மின்இயற்றி செயல்படும் விதம்

மின்னோட்டவியல்

  • உலோகக் கடத்தியில் மின்துகள்களின் ஓட்டம்
  • ஓம் விதி, மின்தடை, V – I பண்புகள்
  • கார்பன் மின்தடையாக்கிகள் மற்றும் மின்தடையாக்கிகளின் தொகுப்பு.
  • கிர்க்காஃப் விதிகள் – வீட்ஸ்டோன் சமனச்சுற்று மற்றும் அதன் பயன்பாடுகள்
  • மின்திறன் மற்றும் மின் ஆற்றல்
  • வெப்பவிளைவு – ஜுல் விதி மற்றும் அதன் பயன்பாடுகள்
  • வெப்பமின் விளைவுகள் – சீபக் விளைவு – பெல்டியர் விளைவு – தாம்சன் விளைவு

காந்தவியல் மற்றும் மின்னோட்டத்தின் காந்த விளைவுகள்

  • புவிகாந்தப்புலம் மற்றும் காந்தக்கூறுகள்
  • காந்தங்களின் அடிப்படைப் பண்புகள்
  • காந்தவியல் கூலூம் எதிர்த்தகவு இருமடி விதியின் கூற்று
  • காந்த இருமுனை
  • சட்டகாந்தத்தின் அச்சுக்கோடு மற்றும் நடுவரைக் கோட்டில் ஏதேனும் ஒரு புள்ளியில் ஏற்படும் காந்தப்புலம்
  • சீரான காந்தப்புலத்தில் உள்ள ஒரு சட்டகாந்தத்தின் மீது செயல்படும் திருப்புவிசை
  • காந்தப்பண்புகள் – காந்த உட்புகுதிறன், காந்த ஏற்புத்திறன் மற்றும் சில
  • காந்தப்பொருட்களின் வகைப்பாடு – டயா, பாரா மற்றும் ஃபெர்ரோ காந்தப்பொருட்கள்
  • காந்தத்தயக்கம் பற்றிய கருத்து
  • மின்னோட்டத்தின் காந்த விளைவுகள் – நீண்ட நேரான கடத்தி மற்றும் வட்டவடிவக் கம்பிச்சுருள்
  • வலதுகை பெருவிரல் விதி மற்றும் மேக்ஸ்வெல்லின் வலதுகை திருகுவிதி
  • பயட் – சாவர்ட்விதி மற்றும் அதன் பயன்பாடுகள்
  • டேஞ்சன்ட் விதி மற்றும் டேஞ்சன்ட் கால்வனோமீட்டர்
  • மின்னோட்ட சுற்று காந்த இருமுனையாக செயல்படல்
  • சுற்றிவரும் எலக்ட்ரானின் காந்த இருமுனைத்திருப்புத்திறன்
  • ஆம்பியர் சுற்றுவிதி மற்றும் அதன் பயன்பாடுகள்
  • வரிச்சுருள் மற்றும் வட்ட வரிச்சுருள்
  • லாரன்ஸ் விசை – மின்காந்தப்புலத்தில் இயங்கும் மின்துகள்
  • சைக்ளோட்ரான்
  • காந்தப்புலத்தில் உள்ள மின்னோட்டம் பாயும் கடத்தியின் மீது செயல்படும் விசை
  • மின்னோட்டம் பாயும் இரு நீண்ட இணை கடத்திகளுக்கிடையே ஏற்படும் விசை
  • காந்தப்புலத்தில் உள்ள மின்னோட்ட சுற்று மீது ஏற்படும் திருப்புவிசை
  • இயங்கு சுருள் கால்வனோமீட்டர்

மின்காந்தத்தூண்டலும் மாறுதிசை மின்னோட்டமும்

  • மின்காந்தத்தூண்டல் நிகழ்வு
  • தூண்டப்பட்ட மின் இயக்குவிசையின் திசையை அறிய லென்ஸ் விதியைப் பயன்படுத்துதல்
  • சுழல் மின்னோட்டம் பற்றிய கருத்து மற்றும் அதன் பயன்கள்
  • தன் மின்தூண்டல் மற்றும் பரிமாற்று மின்தூண்டல் நிகழ்வுகள்
  • தூண்டப்பட்ட மின் இயக்குவிசையை உருவாக்கும் பல்வேறு முறைகள்
  • AC மின்னியற்றிகளின் அமைப்பு மற்றும் செயல்பாடு
  • மின் மாற்றிகளின் தத்துவம் மற்றும் நீண்ட தொலைவிற்கு மின்திறன் அனுப்புதலில் அதன் பங்கு
  • மாறுதிசை மின்னோட்டத்தின் RMS மதிப்பு
  • வெவ்வேறு AC சுற்றுகளில் கட்டம் மற்றும் கட்டத் தொடர்புகள் பற்றிய கருத்து
  • AC சுற்றில் திறன் மற்றும் சுழித்திறன் மின்னோட்டம் பற்றிய நுண்ணறிவு
  • LC அலைவுகளின் போது ஆற்றல் மாறா நிலையைப் புரிந்துகொள்ளுதல்

மின்காந்த அலைகள்

  • இடப்பெயர்ச்சி மின்னோட்டம்
  • ஆம்பியரின் சுற்றுவிதியில் மேக்ஸ்வெல்லின் திருத்தம்
  • மேக்ஸ்வெல் சமன்பாடுகளின் தொகை நுண் கணித வடிவம்
  • மின்காந்த அலைகள் உருவாக்கம் மற்றும் அவற்றின் பண்புகள் – ஹெர்ட்ஸ் ஆய்வு
  • மின்காந்த அலைகளின் மூலங்கள்
  • மின்காந்த நிறமாலை

 

இயற்பியல் II

ஒளியியல்

  • ஒளியைக் கதிராகவும் அலையாகவும் கருதும் இரு கருத்துக்கள் 
  • ஒளி பரவுதலும் மற்றும் அதன் பண்புகளும் 
  • சமதள ஆடி லென்ஸ் மற்றும் முப்பட்டகத்தோடு தொடர்புடைய கருத்துகள்
  • நுண்ணோக்கி தொலைநோக்கி போன்ற ஒளியியல் கருவிகளின் செயல்பாடுகள் 
  • உருப்பெருக்கம் பிரிதிறன் போன்ற பல்வேறு வரையறைகள் 
  • ஒளியின் அலைப்பண்பை நிருபிக்கத் துணைபுரியும் பல்வேறு நிகழ்வுகள் 

  கதிர்வீ ச்சு மற்றும் பருப் பொருளின் இருமைப்பண்பு

  • எலக்ட்ரான் உமிழ்வும் அதன் வகைகளும் 
  • ஹெர்ட்ஸ் ஹால்வாக்ஸ் மற்றும் லெனார்டு ஆகியயோரின் சோதனைகள் 
  • ஒளிமின் விளைவு மற்றும் அதன் விதிகள் 
  • ஆற்றல் குவாண்டமாக்கல் பற்றிய கருத்து
  • ஓளி மின்கலமும் அதன் பயன்பாடுகளும் 
  • கதிர்வீசசின் துகள் இயல்பு 
  • பருப்பொருளின் அலை இயல்பு 
  • டி ப்ராய் சமன்பாடு மற்றும் எலக்ட்ரானின் டி ப்ராய் அலைநீளம் 
  • டேவிசன் மற்றும் ஜெர்மர் பரிசோதனை 
  • எலக்ட்ரான் நுண்ணோக்கியின் அமைப்பு மற்றும் வேலை செய்யும் விதம் 
  • X-கதிர்கள் மற்றும் அதன் உற்பத்தி 
  • X-கதிர்நிறமாலை மற்றும் அதன் வகைகள் 

அணு மற்றும் அணுக்கரு இயற்பியல்

  • வாயுக்களின் வழியே மின்னிறக்கம் 
  • ஜே ஜே தாம்சன் ஆய்வின் மூலம் மின்னுட்ட எண் ணைக் கண்டறிதல் 
  • மில்லிகன் எண்ணெய்த் துளி ஆய்வின் மூலம் எலக்ட்ரானின் மின்னுட்ட மதிப்பைக் கண்டறிதல் 
  • ஜே ஜே தாம்சன் மற்றும் ரூதர்போர்டு அணு மாதிரிகள் 
  • போர் அணு மாதிரியும் ஹைட்ரஜன் அணுவும் 
  • அணுவியல் நிறமாலையும் ஹைட்ரஜன் நிறமாலையும் 
  • அணுக்கருவின் அமைப்பு மற்றும் பண்புகள் 
  • அணு எண் மற்றும் நிறை எண்ணின் அடிப்படையில் அணுக்கருக்களின் வகைகள் 
  • நிறை குறைபாடு மற்றும் பிணைப்பாற்றல் 
  • பிணைப்பாற்றல் வரைபடத்திற்கும் நிலைத்தன்மைக்குமான தொடர்பு 
  • ஆல்பா பீட்டா மற்றும் காமா சிதைவுகள் 
  • கதிரியக்கச சிதைவு விதி 
  • அணுக்கரு பிளவு மற்றும் இணைவு
  • அணுக்கரு உலைகளைப் பற்றிய அடிப்படைக் கருத்துகள் 
  • அடிப்படைத் துகள்களைப் பற்றிய பண்புசார் கருத்துகள் 

குறைகடத்தி எலக்ட்ரானியல் 

  • குறைகடத்திகளில் ஆற்றல் பட்டை படம் 
  • குறைகடத்திகளின் வகைகள் 
  • PN சந்தி டையோடு உருவாக்கம் மற்றும் அதன்  V-I  சிறப்பியல்புகள் 
  • அலைதிருத்தும் செயல்முறை 
  • டிரான்சிஸ்டர்கள் மற்றும் அதன் பயன்பாடுகள் 
  • இலக்க மற்றும் தொடர் சைகைகள் 
  • லாஜிக் கேட்டுகள் 
  • பூலியன் இயற்கணிதம் 
  • டீ மார்கனின் தேற்றங்கள்

தகவல்தொடர்பு அமைப்புகள் 

  • பண்பேற்றத்தின் தேவை மற்றும் அதன் வகைகள்
  • தகவல்தொடர்பு அமைப்பின் அடிப்படை உறுப்புகள் 
  • வெளியின் வழியே மின் காந்த அலைகளின் பரவல் 
  • செயற்கைக்கோள் தகவல் தொடர்பு 
  • ஒளி இழைத் தகவல்தொடர்பு
  • ரேடார் 
  • இணையம் 
  • உலகளாவிய நிலை அறியும் அமைப்பு (GPS)
  • மின் வளம் சுரங்கத்துறை மற்றும் விவசாயத்துறையில் தகவல்தொடர்பு தொழில்நுட்பத்தின் பயன் பாடுகள் 

இயற்பியலின் அண்மைக்கால வளர்சசிகள் 

  • அணைத்து வகையான வளர்சசிக்கும் இயற்பியலின் முக்கியத்துவம்
  • பொறியியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கு அடிப்படைக் கட்டுமானத் தொகுதியாக உள்ள இயற்பியல் 
  • நானோ அறிவியல் மற்றும் நானோ தொழில் நுட்பம் 
  • எந்திரனியல் துறையில் இயற்பியல் 
  • மருத்துவ நோய் அறிதல் மற்றும் சிகிசசையில இயற்பியல் கொள்கைகள்
  • துகள் இயற்பியல் பிரபஞ்சவியல் மற்றும் குவாண்டம் தகவல் கோட்பாடு 
  • இயற்பியலின் அண்மைக்கால வளர்சசிகளை ஆராய்வதற்கான அடித்தளம் மேல்நிலை வகுப்பு இயற்பியலில் உள்ளதை உணர்தல்
  • உயர்கல்வியில் உள்ள சவால்களை வசதியாகவும் மற்றும் நம்பிக்கையுடனும் சந்திக்க மாணவர்க்ள் தயார்படுத்துதல்