வேதியியல் I
உலோகவியல்
- தாதுக்களை அடர்பிக்கப் பயன்படும் பல்வேறு முறைகளை விவரித்தல்
- பண்படா உலோகத்தைப் பிரித்தெடுப்பதில் உள்ள பல்வேறு முறைகளை விளக்குதல்
- உலோகவியல் செயல்முறைகளுக்கு வெப் ப இயக்கவியல் கொள்கைகளைப் பயன்படுத்துல்
- எலிங்கம் வரைபடத்தைப் பயன்படுத்தி ஒடுக்கச செயல்முறைகளுக்கு சாதகமான நிபந்தனைகளைத் தீர்மானி த்தல்
- உலாகவியலின் மின்வேதித் தத்துவங்களை விவரித்தல்
- மின்வேதித் தத்துவங்களை உலாகப் பிரித்தெடுத்தலுக்குப் பயன் படுத்துதல்
- மின்னாற் தூய்மையாக்கும் செயல்முறைகளில் மின்முனைகளில் நிகழும் வினைகளை விளக்குதல்
- Al, Zn, Fe, Cu மற்றும் Au ஆகியனவற்றின் பயன்களைப் பட்டியலிடுதல்
p-தொகுதி தனிமங்கள்-I
- p-தொகுதி தனிமங்களின் பண்புகளில் காணப்படும் பொதுவான போக்கினை விவரித்தல்
- p-தொகுதி தனிமங்களில் முதல் தனிமங்களின் முரண்பட்ட பண்புகளை விளக்குதல்
- போரானின் தயாரிப்பு முறைகள் , பண்புகள் மற்றும் பயன்களை விவாதித்தல்
- போரான் மற்றும் அலுமினியம் ஆகியவற்றின் முக்கிய சேர்மங்களின் தயாரிப்பு முறைகளை விவாதித்தல்
- கார்பன் மற்றும் சிலிக்கன் ஆகியவற்றின் முக்கிய சேர்மங்களின் தயாரிப்பு முறைகளை விவாதித்தல் ஆகியதிறன்களை மாணவர்கள் பெற இயலும்
p-தொகுதி தனிமங்கள்-II
- நைட்ரஜன் மற்றும் பாஸ் பரஸ் ஆகியவற்றின் முக்கியமான சேர்மங்களின் தயாரிப்பு மற்றும் பண்புகள் குறித்து விவாதித்தல்
- ஆக்ஸிஜன் மற்றும் சல்பர் ஆகியவற்றின் முக்கியமான சேர்மங்களின் தயாரிப்பு மற்றும் பண்புகள் குறித்து விளக்குதல்
- ஹலஜன்க்ள் மற்றும் ஹைட்ரஜன் ஹலைடுகள் ஆகியவற்றின் தயாரிப்பு மற்றும் பண்புகள் குறித்து விளக்குதல்
- கேலஜன் இடைசேர்மங்களின் வேதியியலைப் பற்றி விளக்குதல்
- மந்தவாயுக்களின் பண்புகள் மற்றும் பயன்களை விளக்குதல்
- அன்றாட வாழ்வில் தொகுதி தனிமங்கள் மற்றும் அவற்றின் சேர்மங்களின் முக்கியத்துவத்தை பாராட்டுதல் ஆகிய திறன்களைப் மாணவர்கள் பெறலாம்
இடைநிலை மற்றும் உள்இடைநிலைத் தனிமங்கள்
- தனிம வரிசை அட்டவனையில் மற்றும் f தொகுதி தனிமங்களின் இடத்தினை மீட்டறிதல்
- 3d வரிசை தனிமங்களின் பொதுப் பண்புகளை விவரித்தல்
- 3d வரிசை தனிமங்களின் Mn+/M திட்ட மின்முனை மின் அழுத்தத்தில் எற்படும் மாறுபாடுகளை விவாதித்தல்
- E0 மதிப்புகளிலிருந்து தனிமங்களின் ஆக்சிஜனேற்ற மற்றும் ஒடுக்க பண்புகளைத் தீர் மானித்தல்
- d தொகுதி தனிமங்களின் அணைவு சேர்மங்கள் உலோகக் கலவைகள் மற்றும் இடைசசெருகல் சேர்மங்கள் உருவாக்கும் பண்புகளை விளக்குதல்
- பொட்டாசியம் பெர்மாங்க னேட் மற்றும் பொட்டாசியம் டைகுரோமேட் ஆகியனவற்றின் தயாரித்தல் மற்றும் பண்புகளை விவரித்தல்
- f தொகுதி தனிமங்களின் பண்புகளை விளக்குதல்
- லாந்தனாய்டுகள் மற்றும் ஆக்டீனாய்டுகளின் பண்புகளை ஒப்பிடுதல் ஆகிய திறன்களை மாணவர்கள் பெற இயலும்
அணைவு வேதியியல்
- அணைவுச சேர்ம வேதியியலில் இடம் பெறும் முக்கியமான கலைச சொற்களை வரையறுத்தல்
- IUPAC வழிமுறைகளைப் பின்பற்றி அணைவு சேர்மங்களுக்குப் பெயரிடுதல்
- அணைவு சேர்மங்களில் காணப்படும் பல்வேறு மாற்றியங்களை விவரித்தல்
- அணைவு சேர்மங்கள் பற்றிய வெர்னரின் கொள் கையினை விவாதித்தல்
- இணைதிற பிணைப்புக் கொள்கையைப் பயன்படுத்தி அணைவு சேர்மங்களின் வடவங்களைத் தீர்மானித்தல்
- படிகப்புலக் கொள்கையினைப் பயன்படுத்தி அணைவு சேர்மங்களின் நிறம் மற்றும் காந்தப் பண்புகளை விளக்குதல்
- உயர் சுழற்சி அணைவுகள் மற்றும் தாழ்சுழற்சி அணைவுகளை வேறுபடுத்தி அறிதல்
- நிலைப்பு மாறிலியின் அடிப்படையில் அணைவு சேர்மங்களின் நிலைப்புத் தன்மையினை விளக்குதல்
- அன்றாட நடைமுறை வாழ்வில் அணைவு சேர்மங்களின் பயன்பாடுகளை விளக்குதல் ஆகிய பண்புகளை மாணவர்கள் பெற இயலும்
திட நிலைமை
- திடப்பொருட்களின் பொதுப் புகளை விவரித்தல்
- படிகவடிவமுடைய மற்றும் படிகவடிமற்ற திடப்பொருட்களை வேறுபடுத்தி அறிதல்
- அலகு கூட்டினை வரைய றுத்தல்
- வெற்றிடங்க்ள் மற்றும் நெருங்கிப் பொதிந்த அமைப்புகளை விவரித்தல்
- வெவ்வேறு கனச்சதுர அலகு கூடுகளின் பொதிவுத்திறனைக் கணக்கிடல்
- அலகுகூடு பரிமாணங்கள் அடிப்படையிலான கணக்கு களைத் தீர்த்தல்
- திடப்பொருட்களில் காணப்ப்டும் புள்ளிக்குறைபாடுகளை விளக்குதல் ஆகிய திறன்களை மாணவ்ர்கள் பெற இயலும்
வேதிவினை வேகவியல்
- வினைவேகம் மற்றும் வினை வகையை வரைய றுத்தல்
- பூஜ்ய மற்றும் முதல் வகை வினைகளுக்கான தொகைப்படுத்தப்பட்ட சமன்பாட்டினை வருவித்தல்
- அரை வாழ் காலத்தை விவரித்தல்
- மோதல் கொள்கையை விவரித்தல்
- வினைவேகமானது எவ்வாறு வெப்பநிலையினை சார்ந்து அமைகிறது என விவாதித்தல் மற்றும்
- வினைவேகத்தை பாதிக்கும் பல்வேறு காரணிகளை விளக்குதல் ஆகிய திறன்களை மாணவர்கள் பெற இயலும்
வேதியியல் II
அயனி சமநிலை
- அரினியஸ் லெளரி ப் ரான்ஸ்டட் மற்றும் லூயி கொள்கை ஆகியவற்றின் அடிப்படையில் சேர்மங்களை அமிலங்கள் மற்றும் காரங்கள் என வகைப்படுத்துதல்
- pH அளவீட்டை வரையுறுத்தல்,pH மற்றும் pOH ஆகியவற்றிற்க்கிடையே உள்ள தொடர்பை நிறுவுதல்
- நீர் அயனியாக்கத்தில் நிலவும் சமநிலையை விளக்குதல்
- ஆஸ்வால்ட் நீர்த்தல் விதியை விளக்குதல் மற்றும் ஒரு வலிமை குறைந்த மின்பகுளியின் பிரிகை மாறிலி மற்றும் பிரிகை விதம் ஆகியவற்றிற்கிடையே உள்ள தொடர்பை வருவித்தல்
- பொது அயனி விளைவுக் கொள்கை மற்றும் தாங்கல் செயல்முறையை விளக்குதல்
- தாங்கல் கரைசலை தயாரிக்க ஹென்டேர்சன் சமன்பாட்டை பயன்படுத்துதல்
- கரைதிறன் பெருக்கத்தை கணக்க்கிடுதல் கரைதிறன் மற்றும் கரைதிறன் பெருக்கத்திற்கு இடையே உள்ள தொடர்பை புரிந்து கொள்ளுதல்
- அயனி சமநிலை தொடர் பான கணக்கிடுகளை தீர்த்தல் ஆகிய திறன்களை மாணவர்கள் பெறுவர்
மின் வேதியியல்
- மின்பகுளிக் கரைசலின் கடத்துத்திறனை கண்டுணர்தல்
- மின்தடை கடத்துத்திறன் சமான கடத்துத்திறன் மற்றும் மோலார் கடத்துத்திறன் ஆகிய சொற்கூறுகளை வரையறுத்தல்
- கரைசலின் செறிவைப் பொறுத்து கடத்துத்திறன் மாறுபடுதலை விளக்குதல்
- கோல்ராஷ் விதியை பயன்படுத்தி அளவிலா நிர்த்தலில் வலிமை குறைந்த மின்பகுளியின் கடத்துத்திறனை கணக்கிடுதல்
- மின்வேதிக் கலனை விவரித்தல்
- மின்வேதிக் கலன் மற்றும் மின்னாற்பகுப்புக் கலன் ஆகியவற்றை வேறுபடுத்துதல்
- IUPAC மின்கல குறியீடுகளைப் பயன்படுத்தி கால்வானிக் மின்கலனை குறிப்பிடுதல்
- நெர்ன்ஸ்ட் சமன்பாட்டை வருவித்தல் மற்றும் அதனைப் பயன்படுத்தி மின் கலத்தின் மதிப்பை கணக்கிடுதல்
- மின்னாற்பகுத்தல் பற்றிய பாரடே விதிகளை வரையறுத்தல்
- மின் கலங்களின் கட்டமைப்பை விளக்குதல்
- அரித்தல் செயல்முறையை ஒரு மின் வேதிக் செயல்முறையாக விளக்குதல் ஆகிய திறன்களை மாணவர்கள் பெறுவர்
புறப்பரப்பு வேதியியல்
- பரப்புகவர்தலை வகைப்படுத்துதல்
- உறிங்சுதல் மற்றும் பரப்புகவர்தல் ஆகியவற்றை வேறுபடுத்துதல்
- பிரண்டலிக் பரப்புகவர்தல் சமவெப்பக்கோடுகளை விளக்குதல்
- வினைவேக மாற்றம் மற்றும் வினைவேக மாற்றிகளின் சிறப்பியல்புகள் பற்றி புரிந்து கொள்ளுதல்
- வினைவேக மாற்ற கொள்கைகள் மற்றும் நொதி வினைவேகமாற்றம் ஆகியவற்றை விளக்குதல்
- கூழ்மங்களை வகைப்படுத்துதல்
- கூழ்மங்களின் தயாரிப்பு முறைகள் மற்றும் கூழ்மங்களின் தூய்மையாக்கல் முறைகளை விளக்குதல்
- கூழ்மக் கரைசலின் பண்புகளை விவாதித்தல்
- நம் அன்றாட வாழ்வில் கூழ்மங்கள் மற்றும் பால்மங்களின் பங்களிப்பை விளக்குதல் ஆகிய திறன்களை மாணவர்கள் பெறுவர்
ஹைட்ராக்ஸி சேர்மங்கள் மற்றும் ஈதர்கள்
- ஆல்கஹால்களின் முக்கியமான தயாரிப்பு முறைகள் மற்றும் ஆல்கஹால்களின் வினைகளை பற்றி விவரித்தல்
- ஆல்கஹால் மற்றும் ஈத்தர்களின் கருக்கவர் பதிலிட்டு வினைகளின் வழிமுறையை விளக்குதல்
- ஆல்கஹால்களின் நீக்குதல் வினைகளை விளக்குதல்
- பினால்களின் தயாரிப்பு மற்றும் பண்புகளை விவரிக்கவும்
- ஈதர்கள் தயாரிப்பது பற்றியும் அவற்றின் வேதி வினைகளையும் விவாதித்து விளக்குதல்
- ஆல்கஹால் மற்றும் ஈதர்களின் பயன்பாடுகளை கண்டுணர்தல் ஆகிய திறன் களை மாணவர்கள் பெறுவர்
கார்பனைல் சேர்மங்கள் மற்றும் கார்பாக்சிலிக் அமிலங்கள்
- கார்பனைல் சேர்மங்களை தயாரிக்கும் முக்கிய முறைகளையும் , அவைகளின் வேதிவினைகளையும் விவரித்தல்
- கார்பனைல் சேர்மங்களின் கருக்கவர் பொருள் சேர்க்கை வினைகளின் வினைவழி முறைகளை விளக்குதல்
- கார்பாசிலிக் அமிலங்கள் மற்றும் அவற்றின் பெறுதிகளின் தயாரித்தல் மற்றும் வேதிவினைகளை விவரித்தல்
- ஆல்டிஹைடுகள் கீட்டோன் மற்றும் கார்பாசிலிக் அமிலங்களின் பயன்களை பட்டியலிடுதல் ஆகிய திறன்களை மாண வர்கள் பெறுவர்
கரிம நைட்ரஜ்ன் சேர்மங்கள்
- கரிம நைட்ரஜ்ன் சேர்மங்களில் காணப்படும் மாற்றியத்தினை புரிந்துக் கொள்ளுதல்
- நைட்ரோ சேர்மங்களின் தயாரித்தல் மற்றும் பண்புகளை விவரித்தல்
- அமீன்களை ஓரிணைய , ஈரிணைய் மற்றும் மூவிணைய ஆமீன்களை வேறுபடுத்தி அறிதல்
- அமீன்கள் தயாரிக்கும் முறைகளை விவரித்தல்
- ஓரிணைய , ஈரிணைய மற்றும் மூவிணைய ஆமீன்களை வேறுபடுத்தி அறிதல்
- டைசோனியம் உப்புகளை தயாரிக்கும் முறைகளை விவரித்தல்
- சயனைடுகளின் தயாரித்தல் மற்றும் பண்புகளை விளக்குதல்
உயிரியல் மூலக்கூறுகள்
- கார்போஹைட்ரேட்டுகளின் அமைப்பு செயல்பாடுகளின் அடிப்படையில் அவற்றின் வகைப்பாடு மற்றும் முக்கியத்துவம் ஆகியவற்றை விவரித்தல்
- குளுக்கோஸ் மற்றும் பிரக்டோஸ் ஆகியவற்றின் அமைப்பு மற்றும் அவற்றின் தளிவாக்கம் ஆகியவற்றை விளக்குதல்
- இருபது அமினோ அமிலங்களை பட்டியலிடுதல் மற்றும் பெப்டைடு பிணைப்பு உருவாதலை விளக்குதல்
- புரதங்களின் நான்கு வெவ்வெறு அமைப்பு நிலைகளை விளக்குதல்
- நொதி வினைவேக மாற்றத்தின் வினை வழிமுறையை சுட்டிக் காட்டுதல்
- வைட்டமின்களின் மூலங்கள் மற்றும் பற்றாக்குறை நோய்களை சுருக்கிக் கூறுதல்
- நியுக்ளிக் அமிலங்களின் இயைபு மற்றும் அமைப்பை விளக்குதல்
- DNA விலிருந்து RNA வை வேறுபடுத்துதல் மற்றும் DNA ரேகைப்பதிவு
- நம் அன்றாட வாழ்வில் உயிரியல் மூலக் கூறுகளின் முக்கியத்துவத்தை மெசசுதல் ஆகிய திறன்களை மாணவர்கள் பெறுவர்
அன்றாட வாழ்வில் வேதியியல்
- மருந்துப்பொருள் மற்றும் வேதி மருத்துவம் போன்ற சொற்கூறுகளை அங்கிகரித்தல்
- மருந்துப்பொருளை அவற்றின் பண்புகளின் அடிப்படையில் வகைப்படுத்துதல்
- மருந்து இலக்கு இடையீடுகளை விளக்குதல்
- சில முக்கியமான மருந்து வகைகளை விளக்குதல்
- அழுக்குநிக்கும் காரணிகள் பற்றிய வேதியியலை விளக்குதல்
- உணவில் உள்ள வேதிப் பொருட்களை பற்றி விளக்குதல்
- பலபடியாக்கல் வேதியியலிலுள்ள முக்கிய சொற்கூறுகளை விளக்குதல்
- சில முக்கியமான தொகுப்பு பலபடிகளை விளக்குதல்
- நம் அன்றாட வாழ்வில் பல படிகளின் முக்கியத்துவத்தை மெசசுதல் ஆகிய திறன்களை மாணவர்கள் பெறுவர்