பொருளியல்
பேரியல் பொருளாதாரம்
- பேரியல் பொருளாதாரத்தின் பரிணாம வளர்ச்சி, முக்கியத்துவத்துவம் மற்றும் அடிப்படை கருத்துகள் ஆகியவற்றை தெளிவுப்படுத்துவது, மேலும்
- ஒரு பொருளாதார அமைப்பின் செயல்பாட்டினை புரிந்து கொள்வது.
தேசிய வருவாய்
- தேசிய வருவாயின் பொருள் மற்றும் அதனுடன் தொடர்புடைய கருத்துருக்களைப் புரிதல்
- தேசிய வருவாயைக் கணக்கிடும் முறைகளை அறிதல்.
வேலைவாய்ப்பு மற்றும் வருமான கோட்பாடுகள்
- முழு வேலை வாய்ப்பு, வேலையின்மை மற்றும் அதன் வகைகளைப் புரிதல்.
- தொன்மை வேலைவாய்ப்பு கோட்பாட்டினை அறிதல்.
- வருமானம் மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான கீன்ஸின் கோட்பாடுகளின் முக்கியத்துவத்தைத் தெரிதல்.
நுகர்வு மற்றும் முதலீடு சார்புகள்
- நுகர்வு மற்றும் முதலீடு சார்புகளின் அடிப்படைக் கருத்துக்களைப் புரிந்து கொள்ளல்
- பெருக்கி, முடுக்கி, சிறப்புப் பெருக்கி (Multiplier, Accelerator and Super Multiplier) ஆகியவற்றின் செயல்பாடுகளை அறிந்து கொள்ளல்
பணவியல் பொருளியல்
- பணத்தின் பரிமாணவளர்ச்சி, வகைகள், பணிகள், பணவீக்கத்தின் வகைகள், காரணங்கள், விளைவுகள் மற்றும் கட்டுப்படுத்தும் வழிமுறைகளை புரிந்து கொள்ளல்.
- வணிகச் சுழற்சியின் பல்வேறு கட்டங்களைத் தெரிந்து கொள்ளல்.
வங்கியியல்
- மையவங்கி மற்றும் வணிக வங்கிகளின் பணிகள்
- வங்கி சாரா நிதி நிறுவனங்களின் பணிகளைப் புரிந்துகொள்ளல்.
பன்னாட்டுப் பொருளியல்
- பன்னாட்டு வாணிபத்தின் அவசியத்தையும், அதன் கோட்பாடுகளையும் விளங்கிக் கொள்ளுதல்.
- செலாவணி விகித நிர்ணயம், மாற்றம் மற்றும் பன்னாட்டு வாணிபச் செலுத்து நிலை ஆகியவற்றை புரிந்து கொள்ளுதல்
- பன்னாட்டு வாணிகம் மற்றும் பன்னாட்டு நேரடி முதலீடு பற்றி நுண்ணறிவைப் பெற்றுக் கொள்ளுதல்.
பன்னாட்டு பொருளாதார அமைப்புகள்
- உலக வர்த்தகத்தின் அளவை அதிகரிப்பதில் சர்வதேச பொருளாதார அமைப்புகளின் பங்கை புரிந்து கொள்ளுதல்.
- பன்னாட்டு பண நிதி, உலக வங்கி மற்றும் உலக வர்த்தக அமைப்பு ஆகியவற்றின்
நோக்கங்கள், பணிகள் மற்றும் சாதனைகள் பற்றி அறிந்து கொள்ளுதல். - பிரிக்ஸ் (BRICS), ஏசியான் (ASEAN) மற்றும்சார்க்(SAARC) போன்ற வர்த்தக தொகுதிகளின்
நோக்கங்கள், பணிகள் மற்றும் சாதனைகளைப் பற்றி அறிந்து கொள்ளுதல்
நிதிப் பொருளியல்
- நிதிப் பொருளியலின் பொருள் மற்றும் பாடக் கருத்தினை பற்றி அறிந்து கொள்ளுதல்,
- நேர்முக, மறைமுக வரிகளைப் பற்றி அறிந்து கொள்ளுதல்,
- நிதிக் குழுவின் பணிகளைப் பற்றி அறிந்து கொள்ளுதல்.
சுற்றுச்சூழல் பொருளியல்
- பொருளாதாரமும் சுற்றுச்சூழலும் எவ்வாறு ஒன்றொருக்கொன்று தொடர்புள்ளவை என்பதை அறிவது,
- பல்வகை சுற்றுச்சூழல் மாசுகளையும் அதன் விளைவுகளையும் புரிந்துகொள்வது, மற்றும்
- நீடித்த நிலைத்த வளர்ச்சி என்ற கருத்தினை அறிந்து கொள்வது.
பொருளாதார மேம்பாடு மற்றும் திட்டமிடல்
- தேசிய வருவாயின் பொருள் மற்றும் அதனுடன் தொடர்புடைய கருத்துருக்களைப் புரிதல்
- தேசிய வருவாயைக் கணக்கிடும் முறைகளை அறிதல்.
- நிதி ஆயோக்கின் பணிகளை மதிப்பிடுதல்.
புள்ளியியல் முறைகள் மற்றும் பொருளாதார அளவையியல் ஓர் அறிமுகம்
- புள்ளியில் நுட்பங்களை அறிந்து கொண்டு பொருளாதார பிரசனைகளை பகுப்பாய்வு செய் வதற்கான அறிவைப் பெறுவது
- பொருளாதார அளவையியலின் அடிப்படைகளையும் அதன் பயன்பாட்டையும் அறிந்துகொள்வது