கணினி
பல்லூடகம் மற்றும் கணிப்பொறிப் பதிப்பகம்
- பல்லூடக சூழல்கள் முழுவதிலும் பயன்படுத்தக்கூடிய கருத்துருக்கள், நுட்பங்கள் மற்றும்
செயல்முறைகள் ஆகியவற்றை மாணவர்கள் இந்த பாடத்தில் கற்றுக் கொள்வார்கள். - பல்லூடகக் கருவியான வரைகலை வழங்குதலை (Graphics Presentation) புரிந்து
கொள்ளும் திறனைப் பெறுதல் - வரைகலையைத் தருவித்தல் (Import Graphics), பல்வேறு கருவிகளைப் பயன்படுத்தி
பொருள்களை உருவாக்குதல், பொருள்களுக்கு விளைவுகளைச் சேர்த்தல். - பல்வேறு பல்லூடக ஒலி மற்றும் ஒளி கோப்பு வடிவங்களைத் தெரிந்து கொள்ளுதல்.
- பல்லூடகத்தை உருவாக்கும் முறை மற்றும் அவர்களின் குழு நடவடிக்கைகள் பற்றிப்
புரிந்து கொள்ளுதல்.
அடோப் பேஜ்மேக்கர்
- டெஸ்க்டாப் பப்பிளிசிங் (Desktop publishing) என்றால் என்ன என்பதைக் கற்றுக் கொள்ளுதல்.
- பேஜ்மேக்கரைப் பயன்படுத்தி ஆவணங்கள் உருவாக்குதல்.
- உரைத்தொகுதியை உருவாக்குதல்.
- உரைத்தொகுதியின் அளவை மாற்றுதல்.
- மைக்ரோசாஃப்ட் வேர்டு (Microsoft Word) போன்ற பிற மென்பொருளில் இருக்கும் உரையை
பேஜ்மேக்கர் ஆவணத்தில் செருகுதல். - உரையை வைக்க உரைத்தொகுதிக்கு பதிலாக சட்டங்களைப் பயன்படுத்துதல்.
தரவுதள மேலாண்மை அமைப்பு – அறிமுகம்
- தரவுதள கருத்துருக்கள், கூறுகள் மற்றும் அதன் செயற்பாடுகளை புரிந்து கொள்ளுதல்.
- தரவின் வரவுநிலை மாதிரியைப் பற்றி தெரிந்து கொள்ளுதல்
- தரவுதளத்தில் வனவில் மொழிகளை புரிந்து கொள்ளுதல்
- SQL கட்டகளை மற்றும் வினவல் செயலாக்கங்களை எழுதுவதற்கு தயார் செய்தல்
- MySQL-ஐ ்பயன்படுததி நிரலாக்க திறன்கள் மற்றும் நுட்பங்களை அதிகரித்தல்
அறிமுகம்–மீஉவரமுன்மேயலி(PHP)
- வலை பயன்பாட்டின் முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்ளுதல்
- சேவையகம் சார்ந்த ஸ்கிரிப்டிங் மொழியினை அறிந்து கொள்ளுதல்
- PHP-ன் சிறப்பம்சங்களை அறிந்து கொள்ளுதல்
- வலை உருவாக்கும் செயலின் அடிப்படைகளை அறிந்து கொள்ளுதல்
- வலை சேவையகத்தை நிறுவுதல் மற்றும் கட்டமைத்தல் பற்றி புரிந்து கொள்ளுதல்
PHP செயற்கூறுகள் மற்றும் அணிகள்
- PHP செயற்கூறு கருத்துருக்களின் முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்ளுதல்
- PHP செயற்கூறு வகைகளை அறிந்து கொள்ளுதல்
- PHP அணிகளின் அடிப்படை கருத்துருக்களை அறிந்து கொள்ளுதல்
- PHP அணிகளின் வகைகளை பற்றி அறிந்து கொள்ளுதல்
PHP நிபந்தனை கூற்றுகள்
- நி்பந்தவை கூற்றுகளின முக்கியத்துவத்தை பற்றி அறிந்து கொள்ளுதல்
- PHP ல் உள்ள பல்வேறு வகையான நி்பந்தவை கூற்றுகளை தெரிந்து கொள்ளுதல்
- நி்பந்தவை கூற்றுகளை பயன்படுத்தி சிக்கல்களுக்கு தீர்வு காண்பது பற்றி அறிந்து கொள்ளுதல்
மடக்கு அமைப்பு
- மடக்கு அனமப்புகளின் முக்கியத்துவத்தை பற்றி புரிந்து கொள்ளுதல்
- PHP-ல் உள்ள பல்வேறு விதமான மடக்கு அனமப்புகளை பற்றி தெரிந்து கொள்ளுதல்
- மடக்கு அனமப்புகளை பயன்படுத்தி சிக்கல்களுககு தீரவு காண்பது பற்றி அறிந்து கொள்ளுதல்
படிவங்கள் மற்றும் கோப்புகள்
- வலை பயன்பாடுகளில் HTML படிவங்களின் முக்கியத்துவத்தை அறிந்து கொள்ளுதல்
- PHP-ல் உள்ள கோப்பு கையாள்வதில் உள்ள நுட்பத்தை பற்றி தெரிந்து கொள்ளுதல்
- வலை சார்ந்த கோப்பு மேலாண்மை அமைப்பின் அடிப்படையினை தெரிந்து கொள்ளுதல்
PHP-உடன் MySQL-ஐ இணைத்தல்
- தரவுத்தள இணைப்பின் முக்கியத்துவத்தை புரிந்து கொள்ளுதல்
- PHP MySQL செயற்கூறுகளை தெரிந்து கொள்ளுதல்
- MySQL-ஐ இணைப்பிலுள்ள சிறப்பியல்புகளை தெரிந்து கொள்ளுதல்
- வலைத் தரவுத்தளத்தின் அடிப்படைகளை அறிந்து கொள்ளுதல்
கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம்
- கணினி வலையமைப்பு மற்றும் இணையத்தின் வரலாறு பற்றி அறிந்து கொள்ளுதல்.
- இணைய வரலாற்றில் ஏற்பட்ட அதீத வளர்சசி பற்றி விவாதித்தல்
- இணையத்தை பயன்படுத்துவதால் எற்படும் திமைகள்
- கணினி வலையமைப்பின் பரிணாம வளர்சசி பற்றி அறிந்து கொள்ளுதல்.
- நமது அன்றாட வாழ்க்கை ,சமுக ஊகங்களின் கணணி வலையமைப்புகளின் பயன்கள் அறிந்து கொள்ளுதல்
வலையமைப்பு எடுத்துக்க்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள்
- இணையம் அக இணையம் புற இணையம் போன்ற வலையமைப்பு எடுத்துக்க்காட்டுகளை பற்றி தெரிந்து கொள்ளுதல்
- கைப்பேசி வலையமைப்புகளின் பல்வேறு வகைகளைத் தெரிந்து கொள்ளுதல்
- WLANS: 802.11 பற்றி தெரிந்து கொள்ளுதல்
- RFID பற்றி தெரிந்து கொள்ளுதல்
- OSI, TCP, IP மற்றும் பல்வேறு வலையமைப்பு நெறிமுறைகளை தெரிந்து கொள்ளுதல்
களப்பெயர் முறைமை
- இணையத்தின் சரியான செயல்பாட்டிற்கு களப் பெயர் முறைமையின் தேவையை புரிந்து கொள்ளுதல்
- IP முகவரிகளின் முக்கியத்துவத்தை அறிதல்
- URL மற்றும் அதன் வகைகளை அறிதல்
- DNS இன் பகுதிகளையும் அதன் பணிகளையும் அறிந்து கொள்ளுதல்
- DNS எவ்வாறு வேலை செய்கிறது என்பதை அறிதல்
வலையமைப்பு வடமிடல்
- வலையமைப்பு வடமிடலின் அவசியத்தை அறிந்து கொள்ளுதல்
- வலையமைப்பில் பயன்படுத்தப்படும் பல்வேறு வகையான வடங்கள் (Cables) பற்றி தெரிந்து கொள்ளுதல்.
- ஈத்தர்நெட் கேபிள் தயாரிப்பில் தொடர்புடைய பகுதிகளை தெரிந்து கொள்ளுதல்.
- பல்வேறு வகையான பதிவு செய்யப்பட்ட ஜாக் (Registered Jack) மற்றும் அதன் செயல்பாடுகளை தெரிந்து கொள்ளுதல்
- ஈத்தர்நெட் வடமிடலின் பயன்படுத்தப்படும் வயரிங் மற்றும் வண்ண குறியீட்டு நுட்பங்களை தெரிந்து கொள்ளுதல்
திறந்த மூல கருத்துருக்கள்
- திறந்த மூல மென்பொருளின் தேவை பற்றி அறிதல்
- NS2 மென்பொருள் மற்றும் அதன் பயன்களைக் கற்றல்
- OpenNMS மற்றும் அதன் உருவாக்க குழு பற்றி அறிதல்
- திறந்த மூல வன்போருள் பற்றி அறிந்து கொள்ளல்
மின்-வணிகம்
- மின்-வணிகக் கோட்பாடுகளை கற்றல்
- மின்-வணிகத்தின் வரலாற்றை சுருக்கமாக அறிதல்
- பல்வேறு வகையான மின்-வணிக மாதிரிகள் மற்றும் வருவாய் மாதிரிகளைப் பகுப்பாய்வு செய்தல்
- மரபார்ந்த வணிகம் மற்றும் மின்வணிகம் வேறுபாடு அறிதல்
- மின்-வணிகத்தின் நன்மைகளையும் குறைபாடுகளையும் அறிந்து கொள்ளுதல்
மின்னணு செலுத்தல் முறைகள் சு
- மின்னணு செலுத்தல் முறைகள் என்றால் என்ன என்பதைப் புரிந்து கொள்ளுதல்
- மின்செலுத்தல் முறைகளின் வகைகளை அறிந்து கொள்ளுதல்
- கீழ் கண்ட மின்செலுத்தல் முறைகளை பற்றி சுருக்கமாக அறிந்து கொள்ளுதல்
- அட்டை அடிப்பட்டையிலான பணம் செலுத்தல் (Credit, Debit, Stored Value Card)
- மின்னணு கணக்கு பரிமாற்றம் (ECS, NEFT, RTGS)
- மின்னணு பணம் செலுத்தல் முறைகள் (Cryptocurrency, E-Wallets)
- கைப்பேசி மற்றும் இணைய செலுத்தல் முறைகளை
மின் வணிக பாதுகாப்பு அமைப்புகள்
- மின் வணிக பாதுகாப்பு அமைப்புகளின் அடிப்படைகளைத் தெரிந்து கொள்ளுதல்
- பல்வேறு வகையான மின் வணிக அச்சுறுத்தல்களை புரிந்து கொள்ளுதல்
- மின் வணிக பாதுகாப்பின் பரிமாணங்கள் பற்றி அறிந்து கொள்ளுதல்
- மின் வணிக பரிமாற்றத்தில் பாதுகாப்பு தொழில்நுட்பங்கள் பற்றி அறிந்து கொள்ளுதல்
மின்னணு தரவு பரிமாற்றம்
- மின்னணு தரவு பரிமாற்றம் (EDI) இல் அடிப்படை அறிவை பெறுதல்
- EDI வரலாற்றை மேலோட்டமாக அறிந்துக்கொள்ளுதல்
- EDI வகைகளைப் புரிந்து கொள்ளுதல்
- EDI நன்மைகள் தெரிந்துகொள்ளுதல்
- EDI அடுக்குகளைப் பற்றி அறிந்துகொள்ளுதல்
- EDI நியமங்களை புரிந்து கொள்ளுதல்
- un/edifact பற்றி சுருக்கமாக அறிதல்