11th Standard Tamil Medium - கணினி அறிவியல் Syllabus

கணினி அறிவியல்

கணினி அறிமுகம்

  • கணிப் பொறியைப் பற்றி தெரிந்து கொள்ளுதல் 
  • கணிப்பொறியின் பல்வேறு தலை முறைகளைப் பற்றி அறிந்து கொள்ளுதல் 
  • கணிப்பொறியின் அடிப்படை செயல்பாடுகள் பற்றி புரிந்து கொள்ளுதல்
  • கணிப்பொறியின் பாகங்களைப் பற்றியும் அதன் செயல்பாடுகளையும் தெரிந்து கொள்ளுதல் 
  • கணிப்பொறி தொடங்குதல் (Booting) பற்றி தெரிந்து கொள்ளுதல்

எண் முறைகள்

  • கணிப்பொறிகள் தரவுகளை எவ்வாறு புரிந்துகொண்டு நினைவகத்தில் சேமிக்கின்றன என்பதை அறிந்து கொள்ளுதல்.
  • பல வகையான தரவு பிரதியீடுகளையும் மற்றும் இருநிலை கணக்கீடுகளையும் பற்றி கற்றல்.
  • பல வகையான எண்முறைகளை ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கு மாற்றுதல் பற்றி கற்றல்.

கணினி அமைப்பு

  • கணிப்பொறியின் பல்வேறு சாதனங்கள் மற்றும் அதன் இணைப்புகள் பற்றி அறிதல்.
  • நுண்செயலியும் அதன் தன்மைகளைப் பற்றி அறிந்து கொள்ளுதல்.
  • நினைவகச் சாதனங்களின் முக்கியத்துவத்தையும், கணிப்பொறியில் அதன் பங்கினையும் அறிந்து கொள்ளுதல்.
  • RAM மற்றும் ROM களை ஆராய்ந்து அதனை வேறுபடுதல்
  • கேச் நினைவகத்தை அறிதல் மற்றும் கணிப்பொறியின் செயல் திறனை கேச்நினைவகம் எவ்வாறு மேம்படுத்துகிறது என்பதையும் அறிதல்
  • இரண்டாம் நினைவகச் சாதனங்களும் அதன் பயன்பாடுகளும் பற்றி அறிந்து கொள்ளுதல்.
  • தொடர்பு முகம் மற்றம் இடைமுகம் பயன்படுத்தி, வெளிச்சாதனங்கள் எவ்வறு இணைக்கப்படுகிறது என்பதை அறிதல்.

இயக்க அமைப்பின் கோட்பாட்டு கருத்துக்கள்

  • இயக்க அமைப்பின் கருத்துரு மற்றும் அதன் வகைகளைப் பற்றி அறிந்துகொள்ளுதல்.
  • இயக்க அமைப்பின் அடிப்படை அறிவு மற்றும் அதன் செயல்பாடுகளை அறிந்து கொள்ளுதல்.

கணினியின் அடிப்படைகள்

  • இயக்க அமைப்பின் கருத்துருக்களைத் தெரிந்து கொள்ளுதல்.
  • விண்டோஸ் இயக்க அமைப்பின் பதிப்புகளை அறிந்து கொள்ளுதல்.
  • முகப்புத்திரை மற்றும் சன்னல் திரையின் கூறுகளின் கருத்துருக்களைத் அறிந்து கொள்ளுதல்.
  • ஆவண சன்னல் திரையை ஆராய்தல்
  • பல்வேறு வகையான பணிக்குறிகளைஒப்பிடுதல் .
  • விண்டோஸ் கோப்புறை அடைவு அமைப்பை ஆராய்தல்.
  • ஒரு குறிப்பிட்ட இயக்கவட்டில் கோப்புகளையும், கோப்புறைகளையும், உருவாக்குவதற்கான பயிற்சி.
  • கோப்புகளையும், கோப்புறைகளையும் நிர்வகித்தல்
  • முறைப்படி ஒரு கணிப்பொறியின் இயக்கத்தைத் தொடங்குதல் மற்றும் நிறைவு செய்தல்.

விவரக்குறிப்பு மற்றும் அருவமாக்கம்

  • சிக்கல் தீர்க்கும் நெறிமுறை கருத்தை பற்றி புரிந்து கொள்ளுதல்
  • சிக்கல் தீர்க்கும் நெறிமுறை நுட்பத்தை பற்றி அறிந்து கொள்ளுதல்

பிரித்தல் மற்றும் ஒருங்கிணைத்தல்

  • நெறிமுறைகளில் பயன்படுத்தப்படும் குறியீட்டு முறைகளை தெரிந்து கொள்ளுதல்.
  • நெறிமுறையில் பிரித்தல் மற்றும் ஒருங்கிணைத்தல் நுட்பங்களை தெரிந்து கொள்ளுதல்.

சுழற்சியும், தற்சுழற்சியும்

  • நெறிமுறை நுட்பங்களில் பயன்படுத்தப்படும் மற்றும் மாற்றமிலி கருத்துருக்களை அறிந்து கொள்ளுதல்.
  • சுழற்சி மற்றும் தற்சுழற்சி செயல்பாடுகளில் நெறிமுறை நுட்பங்களைப் பயன்படுத்துதல்.

C++ ஓர் அறிமுகம்

  • C++ நிரலாக்க மொழியின் அடிப்படைக் கட்டுமான தொகுதியைப்பற்றி புரிந்து கொள்ளுதல்.
  • எளிய C++ நிரல்களை உருவாக்க முடியும்.
  • C++ நிரல்களை செயல்படுத்துதல் மற்றும் பிழைதிருத்துதல்.

பாய்வுக் கட்டுப்பாடு

  • பல விதமான கூற்றுகளைப்பற்றி தெரிந்து கொள்ளுதல்
  • பல்வேறு பாய்வுக் கட்டுப்பாட்டு கூற்றுகளை உருவாக்குதல்

C++ - ன் செயற்கூறுகள்

  • செயற்கூறுகளின் வரையறை மற்றும் செயற்கூறுகளின் பயன்களைப் பற்றி அறிந்து கொள்ளுதல்.
  • முன்னரே வரையறுக்கப்பட்ட மற்றும் பயனர் வரையறுக்கும் செயற்கூறுகளை பற்றி அறிந்து கொள்ளுதல்.
  • சிக்கல்களைத் தீர்க்க கணித செயற்கூறுகளைப் பயன்படுத்துதல்.
  • சரம் மற்றும் குறியுறு செயற்கூறுகளைப் பயன்படுத்தி சரம் மற்றும் குறியுறு தரவுகளை கையாளுதல் .
  • பெரிய சிக்கல்களை சிறு சிறு செயற்கூறுகளாக உருவாக்கி அவற்றை செயல்படுத்தும் நிரலாக்கம் (Modular Programming) பற்றி
    அறிந்து கொள்ளுதல்.
  • செயலுருபுகளின் பங்குகள் மற்றும் செயலுருபுகளின் பல்வேறு வழிமுறைகளை ஒப்பிடுதல்.
  • மாறிகள் மற்றும் செயற்கூறுகளின் வரையெல்லையைக் கண்டறிதல்.

அணிகள் மற்றும் கட்டுருக்கள்

  • கட்டுரு தரவினத்தை, அணிகளை பயன்படுத்தி அறிந்து கொள்ளுதல்.
  • அணிகளின் வகைகளை அறிந்து கொள்ளுதல்.
  • பல்வேறு வகையான அணிகளை கையாளுவதற்கு நிரல்களை எழுதுதல்.

அறிமுகம் – பொருள்நோக்கு நிரலாக்கநுட்பங்கள்

  • பொருள் நோக்கு நிரலாக்க கருத்துருவை பற்றி அறிந்து கொள்ளுதல்.
  • செயல்முறை, கூறுநிலை மற்றும் பொருள் நோக்கு நிரலாக்கம் இடையேயான வேறுப்பாட்டை தெரிந்துக் கொள்ளுதல்.
  • பொருள் நோக்கு நிரலாக்கத்தின் நன்மைகள், தீமைகள் பற்றி அறிதல்.

இனக்குழுக்கள் மற்றும் பொருள்கள்

  • இனக்குழு, பொருள்கள், ஆக்கிகள் மற்றும் அழிப்பியின் பயன்பாடுகளை புரிந்து கொள்ளுதல்.
  • ஆக்கி மற்றும் அழிப்பியுடன் கூடிய இனக்குழுவை பயன்படுத்தி C++ நிரல் எழுதுதல்.
  • ஆக்கி மற்றும் அழிப்பியுடன் கூடிய C++ நிரலை இயக்கி தவறுகளை திருத்துதல்.

பல்லுருவாக்கம்

  • பணிமிகுப்பு பற்றி புரிந்து கொள்ளுதல்.
  • செயற்கூறு பணிமிகுப்பு, ஆக்கி பணிமிகுப்பு, செயற்குறி பணிமிகுப்பு கொண்ட C++ நிரல்களை உருவாக்குதல்.
  • பல்லுருவாக்க கருத்துகளைக் கொண்டு நிரல்களை இயக்குதல் மற்றும் பிழைதிருத்தம் செய்தல்.

மரபுரிமம்

  • மரபுரிமத்தின் நோக்கத்தைப் புரிந்துகொள்ளுதல்.
  • மரபுரிமத்தை பயன்படுத்தி C++ நிரல்களை உருவாக்குதல்.
  • மரபுரிமத்தின் கருத்துருக்களைக் கொண்டு நிரல்களை இயக்குதல் மற்றும் பிழைத் திருத்தம் செய்தல்.

கணிப்பொறி நன்னெறி மற்றும் இணையப் பாதுகாப்பு

  • இணைய குற்றங்கள் பற்றி அறிந்து கொள்வார்கள்.
  • இணைய உலகத்தில் இணையப் பாதுகாப்பு பற்றிய வழி காட்டுதல்கள் மற்றும் அவற்றின் தேவைகள் பற்றி அறிந்துக் கொள்ளுவார்கள்.
  • இணையப் பாதுகாப்பு பற்றிய சிக்கல்கள் பற்றி தெரிந்துக்கொள்வார்கள்.
  • பிராக்ஸி சேவையகம் மற்றும் பயர்வால் செயல்பாடுகள் பற்றி அறிந்துக்கொள்வார்கள்.
  • மறையாக்கம் மற்றும் குறியாக்கத்தின் அடிப்படை பற்றி கற்றுக்கொள்வார்கள்.
  • தகவல் தொழில்நுட்ப சட்டங்கள், விதிகள், செயல்படுத்துதல் பற்றி அறிந்துக்கொள்வார்கள்.

 

 

 

Related Exam Links

Click here To get 11th Standard Tamil Medium கணினி அறிவியல் Exam Patten.