வேதியியல் I
வேதியியலின் அடிப்படைக் கருத்துக்கள் மற்றும் வேதிக் கணக்கீடுகள்
- வாழ்வின் பல்வேறு சூழல்களில் வேதியியலின் முக்கியத்துவத்தினை விளக்குதல்
- பல்வேறு பொருட்களை, தனிமங்கள், சேர்மங்கள் மற்றும் கலவைகள் என வகைப்படுத்துதல்.
- அணுநிறை மற்றும் மூலக்கூறு நிறையினை வரையறுத்தல்.
- பொருளின் அளவினை, ‘மோல்’ அலகினைப் பயன்படுத்தி வரையறுத்தல்.
- அவகாட்ரோ எண்ணை விவரித்தல்
- நிறை, மோல் மற்றும் அணுக்கள் அல்லது மூலக்கூறுகளின் எண்ணிக்கை ஆகியவற்றிற்கு இடையேயான தொடர்பினை விளக்குதல் மற்றும் அவை சார்ந்த கணக்கீடுகளைச் செய்தல்
- சமான நிறையினை வரையறுத்தல். அமிலம், காரம் மற்றும் ஆக்சிஜனேற்றி/ ஒடுக்கிகளின் சமான நிறையினைக் கணக்கிடுதல்.
- பரிசோதனைகளின் மூலம் பெறப்பட்ட தரவுகளைப் பயன்படுத்தி எளிய விகித வாய்பாடு மற்றும் மூலக்கூறு வாய்பாடுகளைத் தருவித்தல்.
- வேதிவினைக் கூறு விகித கணக்கீடுகள் அடிப்படையிலான எண்ணியல் கணக்குகளைத் தீர்த்தல்.
- வினைக் கட்டுப்பாட்டுக் காரணியினைக் கண்டறிதல் மற்றும் ஒரு வேதிவினையில் வினைபடுபொருட்கள் மற்றும் வினை விளைபொருட்களின் அளவினைக் கணக்கிடுதல்.
- ஆக்சிஜனேற்றம், ஒடுக்கம், ஆக்சிஜனேற்றி ஆக்சிஜன் ஒடுக்கி ஆகிய சொற்கூறுகளை வரையறுத்தல்.
- பல்வேறு சேர்மங்களில் அடங்கியுள்ள தனிமங்களின் ஆக்சிஜனேற்ற எண்ணைத் தீர்மானித்தல்.
- ஆக்சிஜனேற்ற - ஒடுக்க வினைகளில் நிகழும் செயல்முறைகளை விளக்குதல் மற்றும் எலக்ட்ரான் பரிமாற்ற செயல்முறையினை விவரித்தல்.
- ஆக்சிஜனேற்ற - ஒடுக்க வினைகளை வகைப்படுத்துதல்.
- இரு அரைவினைகளிலிருந்து ஆக்சிஜனேற்ற - ஒடுக்க வினைக்கான சமன்படுத்தப்பட்ட சமன்பாட்டை உருவாக்குதல், ஆகிய திறன்களை மாணவர்கள் பெற இயலும்.
அணுவின் குவாண்டம் இயக்கவியல் மாதிரி
- பல்வேறு அணுமாதிரிகளை மீட்டறிதல்
- பருப்பொருட்களின் ஈரியல்புத் தன்மையினை விளக்குதல்.
- டிபிராக்ளியின் சமன்பாட்டினை வருவித்தல் மற்றும் தொடர்புடைய எண்ணியல் கணக்குகளைத் தீர்த்தல்.
- ஹெய்சன்பர்க் நிச்சயமற்றதன்மை கோட்பாட்டை விளக்குதல் மற்றும் கணக்குகளை தீர்த்தல்.
- குவாண்டம் எண்களின் முக்கியத்துவத்தினை உணர்ந்து கொள்ளுதல்
- குவாண்டம் இயக்கவியலின் அடிப்படையிலான அணுமாதிரியின் முக்கியக் கூறுகளைத் தொகுத்துரைத்தல்..
- பல்வேறு அணு ஆர்பிட்டால்களின் வடிவமைப்பினை வரைதல்.
- ஆஃபா தத்துவத்தினை விளக்குதல்.
- ஹூண்ட்விதி மற்றும் பௌலி தவிர்க்கைத் தத்துவத்தினை விவரித்தல்.
- அணுக்களில் எலக்ட்ரான்கள் நிரப்பப்படுவதற்கு தொடர்புடைய விதிகளைப் பயன்படுத்துதல் மற்றும் பல்வேறு அணுக்களுக்கு எலக்ட்ரான் அமைப்பினை எழுதுதல்.
தனிமங்களின் ஆவர்த்தன வகைப்பாடு
- தனிமவரிசை அட்டவணை உருவாக்கப்பட்டதன் வளர்ச்சியினை மீட்டறிதல்
- மோஸ்லேயின் ஆய்வு மற்றும் நவீன ஆவர்த்தன விதியினை விளக்குதல்
- தனிமங்களை, தொகுதிகளாகப் பிரிக்கும் கோட்பாட்டினை கூறுதல்
- 100 விட அதிக அணு எண்ணைக் கொண்டுள்ள தனிமங்களுக்கு IUPAC முறையின் அடிப்படையில் பெயரிடுதல்
- தனிமங்களை s, p, d மற்றும் f தொகுதி தனிமங்கள் என வகைப்படுத்துதல்
- ஆவர்த்தனத் தொடர்பினை அறிந்துணர்தல் மேலும் அணு ஆரம், அயனியாக்கும் ஆற்றல் முதலிய ஆவர்த்தனப் பண்புகளில் ஏற்படும் மாறுபாடுகளை விவரித்தல்
- ஆவர்த்தனப் பண்புகளில் எதிர்நோக்கப்படும் தொடர்பில் உள்ள முரண்பாடுகளை விளக்குதல்
- ஸ்லேட்டர் விதியினைப் பயன்படுத்தி செயலுறு அணுக்கரு மின்சுமையினைக் கணக்கிடுதல்.
- பௌலிங் முறையினைப் பயன்படுத்தி அயனி ஆரத்தினைக் கணக்கிடுதல்
- தனிம வரிசை அட்டவணையில், ஒரு தனிமம் பெற்றிருக்கவேண்டிய இடத்தினை தீர்மானித்தல்
- இரண்டாம் வரிசை தனிமங்களின் முரண்பட்ட பண்புகள் மற்றும் மூலைவிட்டத் தொடர்பினை விளக்குதல்.
ஹைட்ரஜன்
- தனிம வரிசை அட்டவணையில் ஹைட்ரஜனின் இடத்தினை நியாயப்படுத்துதல்
- ஹைட்ரஜனின் வெவ்வேறு ஐசோட்டோப்புகளை மீட்டறிதல்
- ஹைட்ரஜன் தயாரிக்கும் முறைகளை விளக்குதல்
- ஹைட்ரஜனின் பண்புகளை விளக்குதல்
- ஹைட்ரஜனின் பயன்களை உணர்ந்தறிதல்
- பல்வேறு வகை ஹைட்ரைடுகளை வேறுபடுத்தி அறிதல்
- நீரின் வடிவமைப்புப் பற்றிய அறிவின் மூலம் அதன் இயற் மற்றும் வேதிப் பண்புகளை விளக்குதல்
- கடின நீர் மற்றும் மென்நீரை வேறுபடுத்தி அறிதல் மேலும் நீரின் கடினத் தன்மையை நீக்க தகுந்த முறையினைத் தெரிவு செய்தல்.
- கன நீரை மீட்டறிதல் மற்றும் அதன் பண்புகளை விளக்குதல்
- ஹைட்ரஜன் பெராக்சைடு தயாரித்தல் மற்றும் அதன் பண்புகளை விளக்குதல்
- ஹைட்ரஜன் பெராக்சைடின் பயன்களைப் பட்டியலிடுதல் ஆகிய திறன்களை மாணவர்கள் பெற இயலும்.
கார மற்றும் காரமண் உலோகங்கள்
- கார உலோகங்கள் மற்றும் கார மண் உலோகங்களின் பண்புகளை விளக்குதல்
- லித்தியம் மற்றும் பெரிலியத்தின் முரண்பட்ட பண்புகளை மீட்டறிதல்
- .கார மற்றும் கார மண் உலோகங்களின் பயன்களைப் பட்டிய லிடுதல்
- சோடியம் மற்றும் பொட்டாசியம் மெக்னிசியம் மற்றும் கால்சியம் ஆகியவற்றின் உயிரியல் முக்கியத்துவத்தினை அறிந்துணர்தல்
- கால்சியம் ஆக்சைடு கால்சியம் ஹைட்ராக் சைடு ஜிப்சம் மற்றும் பாரீஸ்சாந்து ஆகியவற்றின் தயாரித்தல் பண்புகள் மற்றும் பயன்களை விளக்குதல்
வாயு நிலைமை
- நல்லியல்பு வாயுக்களுக்குரிய விதிகளை வகுத்துரைத்தல்.
- நடைமுறை வாழ்வின் பல்வேறு சூழல்களில் வாயு விதிகளின் பயன்பாட்டினை செயல் விளக்கமளித்தல்
- நல்லியல்பு வாயுச் சமன்பாட்டினை வருவித்தல் மற்றும் அதனைப் பயன்படுத்தி கணக்கீடுகள் செய்தல்
- நல்லியல்பு நிலையிலிருந்து விலகுதலை எடுத்துரைத்தல்.
- வாண்டர்வால்ஸ் சமன்பாட்டினை வருவித்தல்
- கிரஹாமின் வாயுவிரவல் விதியினை வரையறுத்தல்
- அமுக்கத்திறன் காரணியை வரையறுத்தல்
- நிலைமாறு நிகழ்வினை விவரித்தல்
- நிலைமாறு மாறிலிகளின் மதிப்பினை வாண்டர்வால்ஸ் மாறிலிகளைக் கொண்டு வருவித்தல்
- கார்பன் டை ஆக்ஸைடிற்கான ஆண்ட்ரூஸின் சமவெப்பநிலைக் கோடுகளை விளக்குதல்
- ஜுல் தாம்சன் விளைவு மற்றும் வாயுக்களை திரவமாக்குதலை விவரித்தல்.
வெப்ப இயக்கவியல்
- மூடிய திறந்த மற்றும் தனித்த அமைப்புகளை வரையறுத்தல்
- நிலைச்சார்ப்புகள் மற்றும் வழிச்சார்புகள் வேறுபடுத்தி அறிதல்
- வெப்பம் வேலை மற்றும் அகஆற்றல் ஆகியவற்றிற்கு இடையேயான தொடர்பை விவரித்தல்
- வெப்ப இயக்கவியலின் நான்கு விதிகளை எடுத்துரைத்தல்
- அகஆற்றல் மாற்றம் (AU) மற்றும் என்தால்பி மாற்றம் (AH) ஆகியவற்றை தொடர் படுத்துதல் மற்றும் அவைகளை அளவிடுதல்
- பல்வேறு வகையான வினைகளில் ஏற்படும் என்தால்பி மாற்றங்களை கணக்கிடுதல்
- படிகங்களின் படிக கூடு ஆற்றலை ஹெஸ் விதியினைப் பயன்படுத்தி கணக்கிடுதல்
- தன்னிச்சை மற்றும் தன்னிச்சையற்ற செயல்முறைகளை வரையறுத்தல்
- வெப்ப இயக்கவியல் நிலைச்சார்ப்புகளான என்தால்பி (H), என்ட்ரோபி(S) மற்றும் கட்டிலா ஆற்றல்(G) ஆகியவற்றைத் தொடர்புபடுத்துதல்
- ஒரு செயல்முறையின் தன்னிச்சைத் தன்மையை தீர்மானிக்கும் காரணிகளை பட்டியலிடுதல்
- ΔG மற்றும் தன்னிச்சை தன்மையினை தொடர்பு படுத்தி ∆G0 மற்றும் சமநிலை மாறிலிக்கு இடையேயான தொடர்பிணை நிறுவுதல்
வேதியியல் II
இயற் மற்றும் வேதிச்சமநிலை
- சமநிலையின் பொருளினை விவரித்தல்
- இயற் மற்றும் வேதிச் சமநிலைகளில் காணப்படும் இயங்கு சமநிலையை விளக்குதல்
- நிறைத் தாக்க விதியைக்கூறுதல்
- சமநிலைமாறிலிகளான KP மற்றும் KC ஆகியவற்றிற்கான கோவையினை வருவித்தல்
- KP மற்றும் KC ஆகியவற்றிற்கிடையேயான தொடர்பை நிறுவுதல்.
- சமநிலை மாறிலியைக் கொண்டு வினை நிகழும் அளவினை தீர்மானித்தல்.
- சமநிலையில் உள்ள ஒரு அமைப்பில், அதனைபாதிக்கும் பல்வேறு காரணிகளால் ஏற்படும் விளைவுகளை விளக்குதல்.
- வாண்ட்- ஹாப் சமன்பாட்டை வருவித்தல்
- ஆகிய பண்புகளை மாணவர்கள் பெற இயலும்.
கரைசல்கள்
- பல்வேறு வகை கரைசல்கள் உருவாவதை விளக்குதல்.
- கரைசல்களின் செறிவை வெ வ்வேறு அலகுகளில் எழுதுதல்.
- இருப்புக் கரைசல்களை நீர்க்கச்செய்து தேவையான செறிவுகளையுடைய கரைசல்களை தயாரித்தல்
- ஹென்றி மற்றும் ரெளல்ட் விதிகளை கூறுதல்
- இயல்புக் கரைசல்கள் ரெ ளலட் விதியிலிருந்து விலகலடைதலை விளக்குதல்.
- கரைசல்களின் தொகைசார் பண்புகளை அவற்றின் கரைபொருள்களின் மோலார் நிறைகளுடன் தொடர்புபடுத்துதல்
- அசாதாரண தொகைசார் பண்புகளை விளக்குதல்
- வாண்ட் ஹாஃப் காரணியை வரையறுத்தல் மற்றும் பிரிகையடைதல்/ இணைதல் வீதத்தை கணக்கிடுதல் ஆகிய பண்புகளைப் பெறலாம்.
வேதிப் பிணைப்புகள்
- வேதிப் பிணைப்பினைப் பற்றிய கோசல் மற்றும் லூயிஸின் அணுகுமுறையினை விவரித்தல்.
- எண்ம விதியினை விளக்குதல்.
- எளிய மூலக்கூறுகளுக்கான லூயிஸ் வடிவமைப்புகளை வரைதல்.
- பல்வேறு வகை பிணைப்பு உருவாதல் மற்றும் பிணைப்பு அளவீட்டுக் காரணிகளை விவரித்தல்.
- எளிய மூலக்கூறுகளுக்கான உடனிசைவு அமைப்புகளை வரைதல்.
- எலக்ட்ரான் கவர்தன்மை பற்றிய கோட்பாட்டினைப் பயன்படுத்தி சகப் பிணைப்பின் முனைவுத்தன்மையை விளக்குதல்.
- VSEPR கொள்கையை விவரித்தல் மற்றும் எளிய மூலக்கூறுகளின் வடிவமைப்புகளைத் தீர்மானித்தல்.
- சகப்பிணைப்பு உருவாதலுக்கான இணைதிறன் பிணைப்புக் கொள்கையை விளக்குதல்.
- s,p மற்றும் d ஆர்பிட்டால்களின் பல்வேறு இனக்கலப்பாதலை விளக்குதல் மற்றும் எளிய சகப்பிணைப்பு மூலக்கூறுகளின் வடிவங்களை வரைதல்.
- மூலக்கூறு ஆர்பிட்டால் கொள்கையினை விளக்குதல் பிணைப்புத்தரத்தை கணக்கிடுதல் மற்றும் H2 , O2 , N2 , CO மற்றும் NO ஆகிய மூலக்கூறுகளின் காந்தப் பண்புகளை விளக்குதல்.
- உலோகப் பிணைப்பினைச் சுருக்கமாக விளக்குதல். ஆகிய திறன்களைப் பெறலாம்.
கரிம வேதியியலின் அடிப்படைகள்
- கார்பனின் நான்கு இணைதிற தன்மை மற்றும் கரிம மூலக்கூறுகளின் வடிவங்களைப் புரிந்து கொள்ளுதல்.
- கரிமச் சேர்மங்களை வகைப்படுத்துதல்
- IUPAC பெயரிடுதல் முறையினைப் பயன்படுத்தி கரிமச் சேர்மங்களுக்குப் பெயரிடுதல் மற்றும் IUPAC பெயரிலிருந்து அதன் அமைப்பினைக் கண்டறிதல்
- பல்வேறு வகையான மாற்றியங்களை விவரித்தல்
- கரிமச்சேர்மங்களில் உள்ள தனிமங்களைக் கண்டறிதல் மற்றும் எடையறிதலில் உள்ள தத்துவங்களை விளக்குதல்.
- கரிமச் சேர்மங்களை தூய்மைப்படுத்த பயன்படுத்தப்படும் பல்வேறு நுட்பங்களை விவரித்தல்.
கரிம வேதி வினைகளின் அடிப்படைக் கருத்துக்கள்
- கரிம வேதி வினை வழிமுறை பற்றிய கருத்தினை புரிந்து கொள்ளுதல்.
- சீரான மற்றும் சீரற்ற பிணைப்பு பிளவுகளை விவரித்தல்.
- தனி உறுப்பு, கருக்கவர் பொருள் மற்றும் எலக்ட்ரான் கவர்பொருள் ஆகியனவற்றை இனங்காணுதல்.
- கரிம வேதி வினைகளை பதிலீட்டு வினை, நீக்க வினை சேர்க்கை வினை, ஆக்சிஜனேற்ற ஒடுக்க வினை என வகைப்படுத்துதல்
- கரிம வேதி வினைகளில் எலக்ட்ரான்கள் இடம் பெயர்தலை விளக்குதல்
- சகப்பிணைப்பில் எலக்ட்ரானியல் விளைவுகளை விளக்குதல்...
ஹைட்ரோகார்பன்கள்
- கார்பன் அணுக்களுக்கிடையே உள்ள பிணைப்பின் தன்மையைக் கொண்டு ஹைட்ரோ கார்பன்களை வகைப்படுத்துதல்.
- ஹைட்ரோகார்பன்களுக்கு, IUPAC முறையினை பின் பற்றிப் பெயரிடுதல்.
- ஹைட்ரோகார்பன்களை தயாரிக்கும் பல்வே று முறைகளை விளக்குதல்.
- தனி உறுப்புகள், சங்கிலி தொ டர் வினையின் துவக்கநிலை, வினைத் தொ டர்தல் நிலை மற்றும் முடிவுநிலை போன்ற
கரிமவேதியியலில் இடம்பெறும் சொ ற்றொடர்களுக்கு பொ ருள் விளக்கமளித்து விளக்குதல். - ஹாலஜனேற்றம், எரித்தல், பிளத்தல் போன்ற வினைகளின் மூலம் ஆல்கேன்களின் வேதியியலை விளக்குதல்.
- மார்கோனிகாஃப் விதி மற்றும் பெர்ராக்சை டு விளைவுகளைப் பயன்படுத்தி, சீர்மையற்ற ஆல்கீன்களின் சேர்க்கை வினை
விளைபொருட்களைக் கண்டறிதல். - ஆல்கைன்களின் அமில ஹைட்ரஜனை அறிந்துணர்த்துதல்.
- பென்சீனின் அமைப்பை அறிந்து கொள்ளுதல், அதன் அரோமேட்டிக் தன்மை மற்றும் எலக்ட்ரான் கவர்பொருள் பதிலீட்டு வினைகளின் வினை வழிமுறைகளை விளக்குதல்.
- ஒற்றை பதிலீட்டு பென் சீனில் உள்ள பதிலீட்டு தொகுதிகளின் ஆற்றுப்படுத்தும் பண்பினை கணித்தல்.
- அரோமேட்டிக் ஹைட்ரோகார்பன்களின் நச்சுத்தன்மை மற்றும் புற்றுநோய் காரணியாக செயல்ப டும் தன்மையை அறிந்து கொள்ளுதல் ஆகிய திறன்களை பெறுகின்றனர்.
ஹேலோ ஆல்கேன்கள் மற்றும் ஹேலோ அரீன்கள்
- பல்வேறு கரிம ஹாலஜன்சேர்மங்களை வகைப்படுத்துதல்.
- IUPAC முறையில் கரிம ஹேலோ சேர்மங்களுக்குப் பெயரிடுதல்
- C – X பிணைப்பின் தன்மையினை அறிந்துணர்தல்
- ஹேலோ ஆல்கேன்கள் மற்றும் ஹேலோ அரீன்களை தயாரிக்க உதவும் பொதுவான முறைகளை விவரித்தல்
- ஹேலோ ஆல்கேன் மற்றும் ஹேலோ அரீன்களின் இயற் மற்றும் வேதிப் பண்புகளை விளக்குதல்.
- கரிம ஹாலஜன் சேர்மங்களின் கருக்கவர் பதிலீட்டு வினை மற்றும் நீக்க வினைகளின் வினைவழி முறைகளை விளக்குதல்.
- கிரிக்னார்டு வினைப்பொருளை தயாரித்தல் மற்றும் அதனின் தொகுப்புமுறை பயன்களை விளக்குதல்.
- பல ஹாலஜன் சேர்மங்களின் பயன்களை சுட்டிக்காட்டுதல்.
- பல ஹாலஜன் சேர்மங்களின் சூழலியல் விளைவுகளை அறிந்துணர்தல்.
சுற்றுசூழல் வேதியியல்
- சுற்றுச்சூழல் வேதியியலின் பல்வேறு கருத்துக்களை பாராட்டுதல்.
- பல்வேறு சுற்றுச்சூழல் மாசுபாடுகளை வகைப்படுத்துதல்.
- துகள் மாசுபடுத்திகள் மற்றும் அவற்றின் விளைவுகளை அடையாளம் காணுதல்.
- அமிலமழை, பசுமைக்குடில் விளைவு, ஓசோன் சிதைவு மற்றும் உலக வெப்பமயமாதல் ஆகியவற்றின் தீங்கு விளைவுகளை விளக்குதல்.
- நீர் மாசுபடுதலுக்கான காரணங்களை அறிதல் மற்றும் குடிநீருக்கான பரிந்துரைக்கப்பட்ட தரநிலைகளை அறிதல்.
- பல்வேறு வகை மாசுபடுதலை கட்டுப்படுத்தும் உத்திகளை முன்னிலைப்படுத்துதல்.
- பசுமை வேதியியலின் அர்த்தத்தை பாராட்டுதல் மற்றும் அன்றாட வாழ்வில் பசுமை வேதியியலின் முக்கியத்துவத்தை புரிந்துணர்தல்.