பொருளியல்
நுண்ணினப் பொருளியல்: ஓர் அறிமுகம்
- பொருளியல் பாடம் பற்றிய அடிப்படை அறிவைப் பெறுதல் மற்றும் அதன் இயல்பையும் எல்லையையும் புரிந்து கொள்ளுதல்.
- பொருளியலின் சில அடிப்படைக் கருத்துக்களை புரிந்து கொள்ளுதல் மற்றும் பொருளியல் அறிவியலில் பல்வேறு வரையறைகளில் இவை எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றன என்பதை தெரிந்து கொள்ளுதல்.
நுகரவுப் பகுப்பாய்வு
- விலையில் மாற்றங்கள் நிகழும்போது நுகர்வோரின் போக்கினைப் புரிதல்.
- எண்ணளவைப் பயன்பாட்டு ஆய்வு மற்றும் தரவரிசை ஆய்வு முறைகளைப் பயன்படுத்தி நுகர்வோர் சமநிலையை அறிதல்.
உற்த்தி பகுப்பாய்வு
- பல்வேறு உற்பத்தி காரணிகளின் வகைகளையும் மற்றும் அவற்றின் சிறப்பியல்புகளையும் அறிந்து கொள்ளுதல்.
- குறுகிய கால மற்றும் நீண்டகால உற்பத்திச் சார்பினை அறிந்து கொள்ளுதல்.
- அளிப்பு கருத்தினை அறிந்து கொள்ளுதல்.
செலவு மற்றும் வருவாய் பற்றிய ஆய்வு
- பண்டங்கள் மற்றும் பணிகளின் உற்பத்திக்கான செலவுகளையும், அவை பயன்படுத்தப்படும் விதத்தையும், வருவாயுடன் இணைத்து நிறுவனத்தின் இலாபத்தை கணக்கிடுவதையும் பற்றி அறிதல்.
- பல்வேறு அங்காடியில் பண்டங்கள் மற்றும் பணிகள் விற்பனை செய்வதால் எவ்வாறு வருவாய் வருகிறது என்பதை பற்றி தெரிந்து கொள்ளுதல்.
அங்காடி அமைப்பும் விலை நிர்ணயமும்
- அங்காடியின் பண்புகளையும், பல்வேறு வகையான அங்காடியில் விலை மற்றும் வெளியீடு எவ்வாறு தீர்மானிக்கப்படுகிறது என்பதையும்பற்றி அறிந்து கொள்ளுதல்.
- பல்வேறு வகையான அங்காடிகளில், நிறுவனங்களின் இலாபத்தின் தன்மை பற்றி படிப்பது.
பகிர்வு பற்றிய ஆய்வு
- உற்பத்தி காரணிகளிடையே வருவாயை பகிர்ந்தளித்தல் பற்றிய அறிவைப் பெறுதல்.
- வாரம், கூலி, வட்டி மற்றும் இலாபம் பற்றிய கோட்பாடுகளை மாணவர்கள் புரிந்துகொள்ளும்படி செய்தல்.
இந்தியப் பொருளாதாரம்
- நடப்பு இந்தியப் பொருளாதாரத்தின் இயல்புகள், இயற்கை வளங்கள், உள்கட்டமைப்பு வசதிகளின் நிலை போன்றனவற்றைப் புரிந்து கொள்ளுதல்.
- தலைசிறந்த இந்தியப் பொருளியல் சிந்தனையாளர்களின் பங்களிப்பைப் புரிந்து கொள்ளுதல்.
இந்தியப் பொருளாதாரம் சுதநதிரத்திற்கு முன்னரும் பின்னரும்
- ஆங்கில காலனித்துவ ஆட்சியின் போது இந்திய அனுபவங்களை புரிந்து கொள்ளல்
- சுதந்திரம் அடைந்த பிறகு இந்திய அரசு எடுத்த முயற்சிகளைசு ஆய்வு செய்தல்.
இ்நதியொவின் மேம்பாடு அனுபவங்கள்
- இந்தியாவில் கொண்டுவரப்பட்ட பொருளாதா சீர்திருத்தங்களை புரிந்து கொள்ளல்.
ஊரக பொருளாதொரம்
- ஊரகப் பொருளாதாரத்தின் அம்சங்கள் மற்றும் ஊரக பகுதிகள் வளர்ச்சியுற செய்ய வேண்டியதன் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்ளல்.
- ஊரக பகுதியில் காணும் பிரச்சனைகளை வெளிக்கொணர மற்றும் அவற்றைகளைய மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளை அறிதல்.
தமிழ்நாட்டுப் பொரு்ளாதொரம்
- தமிழ்நாட்டின் பொருளாதார வளங்களின் நிலையைப் புரிந்து கொள்ளுதல்.
- தமிழ்நாட்டின் பொருளாதார செயல்திறனை பிற மாநிலங்களோடு ஒப்பிட்டு ஆய்வு செய்தல்.
பொருளியலுக்கொன கணி்த முலைகள்
- பொருளியல் பாடத்திற்கு ஏன் கணிதம் தேவைப்படுகின்றது என்பதை புரிந்துககொள்ள
- அளவைசார் பொருளியலை மட்டுமின்றி கருத்துசார் பொருளியலையும் கணித முறையில் கற்க