10th Standard Tamil Medium - சமூக அறிவியல் Syllabus

சமூக அறிவியல்

முதல் உலகப்போரின் வெடிப்பும் அதன் பின்விளைவுகளும்

  • ஐரோப்பிய வல்லரசுகளிடையே பகைமையும் மோதல்களும் ஏற்படுவதற்கு இட்டுச் சென்ற காலனியாதிக்கப் போட்டி
  • கிழக்கு ஆசியாவில் ஜப்பான் அதிக வலிமை மிகுந்த நாடாகவும் ஆக்கிரமிப்பு செய்யும் தன்மை கொண்ட நாடாகவும் மேலெழுதல்
  • காலனியாதிக்கம் ஆப்பிரிக்காவின் மீது தாக்கத்தை ஏற்படுத்துதல்
  • முதல் உலகப்போருக்கான காரணங்கள், போரின் போக்கு, விளைவுகள்
  • வெர்செய்ல்ஸ் உடன்படிக்கையும் அதன் சரத்துக்களும்
  • ரஷ்யப் புரட்சிக்கான காரணங்களும் அதன் போக்கும் விளைவுகளும்
  • பன்னாட்டுச் சங்கம் உருவாக்கப்படுதலும் அதன் செயல்பாடுகளும் தோல்வியும்

இரு உலகப்போர்களுக்கு இடையில் உலகம்

  • முதல் உலகப்போருக்குப் பிந்தைய நிகழ்வுகள் பொருளாதாரப்  பெருமந்தத்திற்கு இட்டுச் சென்றது 
  • தோல்வியடைந்த நாடுகளின் மீது திணிக்கப் பட்ட நீதிக்குப் புறம்பான வெர் செய்ல்ஸ் உடன் படிக்கையின் சரத்துக்கள் இத்தாலியில் முசோலினியின் தலைமையிலும் ஜெர்மனியில் ஹிட்லரின் தலைமையிலும் பாசிச அரசுகள் எழுசசி பெறுதல் 
  • காலனிகளாக்கப்பட்ட உலகில் காலனிய எதிர்ப்புப் போராட்டங்களும் காலனிய நீக்கச செயல் பாடுகளும் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட பகுதிகளாக தென்கிழக் காசியாவில் இந்தோ பிரான்சும் தெற்காசியாவில் இந்தியாவும் 
  • ஆப்பிரிக்காவில் ஜரோப்பியக்காலனிகள் உருவாக்கப்படுதல் அவ்வகையில் தென்னாப்பி ரிக்காவில் இங்கிலாந்து காலனிகளை எற்படுத்துதல் 
  • தென் அமெரிக்காவில் விடுதலைப் போராட்டங்களும் அரசியல் வளர்சசிகளும்

இரண்டாம் உலகப்போர்

  • முதல் உலப்போருக்குப் பிந்தைய அரசியல் பொருளாதார வளர்சசிகளை அறிமுகப்படுத்திக் கொள்ளுதல் அவையே இறுதியில் இரண்டாம் உலகப்போருக்கு இட்டுச சென்றதை அறிந்து கொள்ளுதல் 
  • பொதுவாகப் போரின் போக்கைப் புரிந்து கொள்ளுதல் குறிப்பாகப் போரின் திருப்புமுனைகளாய் அமைந்த முக்கிய நிகழ்வுகளை அறிந்து கொள்ளுதல் 
  • இரண்டாம் உலகப் போரின் விளைவுகளை அறிந்து கொள்ளுதல் 
  • பேரழிவு என்பதையும் நாசி ச ஜெர்மனியில் யூதர்கள் பெரும் எண்ணிக்கையில் கொல்லப்பட்டதையும் புரிந்து கொள்ளுதல் 
  • இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் ஒரு புதிய பன்னாட்டு அமைப்பு முறையை உருவாக்கு வதற்காக அமைக்கப்பட்ட பன்னாட்டு நிறுவனங்கள் குறித்த அறிவைப் பெறுதல் 

இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய உலகம்

  • சீனாவின் பொதுவுடைமைப் புரட்சி
  • பனிப்போரும் அணிசேரா இயக்கமும்
  • கொரியப் போரும் கியூபாவின் ஏவுகணைச் சிக்கலும்
  • இஸ்ரேலியப் போரும் வியட்நாம் போரும்
  • ஐரோப்பியப் பொருளாதாரக் குழுமம் மற்றும் ஐரோப்பிய ஒருங்கிணைப்பு
  • பெர்லின் சுவர் வீழ்ச்சியும் பனிப்போர் யுகமுடிவும்

19ஆம் நூற்றாண்டில் சமூக, சமய சீர்திருத்த இயக்கங்கள்

  • 19ஆம் நூற்றாண்டு பிரிட்டிஷ் இந்தியாவில் புதிய விழிப்புணர்ச்சியை உருவாக்கியதில் மேற்கத்தியச் சிந்தனைகள் மற்றும் கிறித்தவ மதத்தின் செல்வாக்கு
  • சமுதாய மற்றும் சமயத்துறைக ளில் ஏற்பட்ட போட்டிகள், உடன்கட்டை ஏறுதல் (சதி), அடிமைமுறை, தீண்டாமை, குழந்தைத் திருமணம் போன்ற பழக்கங்களுக்கு எதிர்ப்பு
  • உருவவழிபாடு, சடங்குகள், மூடநம்பிக்கைகள் ஆகியனவற்றிற்கு எதிர்ப்பு
  • இந்தியா புத்துயிர் பெற்றதில் பிரம்ம சமாஜம், ஆரிய சமாஜம், இராமகிருஷ்ணா மிஷன், பிரம்மஞானசபை, அலிகார் இயக்கம் ஆகியவற்றின் பங்களிப்பு
  • பார்சிகள், சீக்கியர்கள் ஆகிய சமூகங்களில் விழிப்புணர்வை ஏற்படுத்தியதில் முக்கிய ஆளுமைகளின் பங்கு
  • ஜோதிபா பூலேயின் சமூகஇயக்கமும், கேரளா, தமிழ்நாட்டில் தோன்றிய சீர்திருத்த இயக்கங்களும்

ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக தமிழகத்தில் நிகழ்ந்த தொடக்ககால கிளர்ச்சிகள்

  • பாளையக்காரர் அமைப்பும், ஆங்கிலேயர்களுக்கு எதிரான பாளையக்காரர்களின் புரட்சியும்
  • வேலுநாச்சியார், பூலித்தேவர், கட்டபொம்மன், மருது சகோதரர்கள் போன்றோரின் ஆங்கிலேய எதிர்ப்புக் கிளர்ச்சிகள்
  • தென்னிந்தியாவில் ஆங்கிலேயரின் அடக்குமுறைக்கு பதிலடியாக அமைந்த வேலூர் புரட்சி

காலனியத்துக்கு எதிரான இயக்கங்களும் தேசியத்தின் தோற்றமும்

  • ஆங்கிலேயருக்கு எதிரான பழங்குடியினர் மற்றும் விவசாயிகளின் போராட்டங்களின் தன்மை
  • 1857இல் பெரும்கலகம் வெடிப்பத ற்கான காரணிகளும் அதனைத் தொடர்ந்து ஆங்கிலேயர் இந்தியாவை ஆளும் தங்கள் அணுகுமுறையில் ஏற்படுத்திக்கொண்ட மாற்றங்களும்
  • இந்திய தேசிய காங்கிரஸ் உருவாக்கத்துக்கான காரணிகளும் தொடக்ககால தேசியவாதிகளின் கண்ணோட்டமும்
  • 1905இல் வங்கப்பிரிவினைக்கு பின்னா லிருந்த ஆங்கிலேயர்களின் பிரித்தாளும் கொள்கையும் வங்காளத்தில் சுதேசி இயக்கத்தின் தோற்றமும்
  • தன்னாட்சி (ஹோம் ரூல்) இயக்கத் தோற்றத்துக்கானப் பின்னணி

தேசியம்: காந்திய காலகட்டம்

  • இந்திய விடுதலைப் போராட்டத்தில் காந்திய காலகட்டம்
  • இந்தியாவில் மக்களை ஒன்றிணைக்க அகிம்சை மற்றும் சத்தியாகிரகம் ஆகிய காந்தியக் கொள்கைகள் பயன்படுத்தப்பட்டு சோதிக்கப்பட்ட காலகட்டம்
  • சம்பரான் மற்றும் ரௌலட் சட்டம் ஆகியவற்றுக்கு எதிரான வன்முறையற்ற போராட்டங்கள்
  • ஒத்துழையாமை இயக்கம் மற்றும் அதன் வீழ்ச்சி
  • தீவிரத்தன்மை கொண்டவர்களும் தீவிர தேசியவாதப் போக்கு உடையவர்களின் தோற்றமும் விடுதலைப் போராட்டத்தில் அவர்கள் ஆற்றிய பங்கும்
  • சட்டமறுப்பு இயக்கத்தின் தொடக்கம்
  • தனித்தொகுதிகள் குறித்த சர்ச்சை மற்றும் பூனா ஒப்பந்தம் கையெழுத்திடப்படுதல்
  • மாகாணங்களில் முதலாவதாக அமைந்த காங்கிரஸ் அமைச்சரவைகள் மற்றும் வெள்ளையனே வெளியேறு இயக்கம் தோன்றுவதற்கான சூழ்நிலைகள்
  • இந்தியத் துணைக்கண்டத்தை இந்தியா-பாகிஸ்தான் என இரண்டாகப் பிரிவினை செய்ய வழிவகுத்த வகுப்புவாதம்

தமிழ்நாட்டில் விடுதலைப் போராட்டம்

  • தமிழ்நாட்டில் காலனிய எதிர்ப்புப் போராட்டங்கள்
  • கல்வியின் வளர் ச்சிக்கும் ஒடுக்கப்பட்ட மக்களின் மேம்பாட்டிற்கும் கிறித்தவ சமயப்பரப்பு நிறுவனங்களின் பங்களிப்பு
  • தமிழ்நாட்டில் காங்கிரசின் அரசியலுக்கு நீதிக்கட்சியின் சவால்
  • தமிழ்நாட்டில் காங்கிரசின் போர்க்குணமிக்க வெகு மக்கள் இயக்கங்கள்

தமிழ்நாட்டில் சமூக மாற்றங்கள்

  • நவீனத் தமிழ்நாட்டின் சமூக மாற்றங்கள் குறித்த அறிவினைப் பெறுதல்
  • தமிழ்நாட்டின் பல்வேறு சமூக சீர்திருத்த இயக்கங்களை அறிதல்
  • சமூக சீர்திருத்தவாதிகளின் கருத்துக்களைப் புரிந்து கொள்ளல்

இந்தியா - அமைவிடம், நிலத்தோற்றம் மற்றும் வடிகாலமைப்பு

  • புவியில், இந்தியாவின் அமைவிட முக்கியத்துவத்தைப்பற்றி புரிந்துகொள்ளல்
  • இந்தியாவின் முக்கிய தனித்துவப் பண்புகளைக் கொண்ட இயற்கையமைப்புப் பிரிவுகளைப் பற்றி அறிந்துகொள்ளல்
  • இந்திய பெரும் சமவெளிப் பகுதிகளை ஒப்பிடுதல்
  • இந்தியாவின் வடிகாலமைப்பு பற்றி புரிந்துகொள்ளல்
  • இமயமலையில் உருவாகும் ஆறுகள் மற்றும் தீபகற்ப ஆறுகளுக்கு இடையேயான வேற்றுமைகளைப் புரிந்துகொள்ளல்

 

 

 

Related Exam Links

Click here To get 10th Standard Tamil Medium சமூக அறிவியல் Exam Patten.