அறிவியல்
இயக்க விதிகள்
- விசை மற்றும் இயக்கம் சார்ந்த கருத்துகளை அறிந்து கொள்ளுதல்
- நிலைமம் மற்றும் அதன் வகைகளை விளக்குதல்
- நியூட்டனின் மூன்று இயக்கவிதிகளை வரையறுத்தல்
- விசை மற்றும் இயக்கத்தில் நியூட்டனின் இயக்க விதிகளைப் பயன்படுத்துதல்
- விசை, உந்தம் மற்றும் கணத்தாக்கு விசை இவற்றை விளக்குதல்
- நேர் கோட்டு உந்த மாறா கோட்பாட்டினைத் தருவித்தல்.
- நிறை மற்றும் எடையினை வேறுபடுத்தி அறிந்து கொள்ளுதல்.
- பொது ஈர்ப்பியல் விதியினை அறிந்து கொள்ளுதல் மற்றும் அதன் பயன்களை அறிதல்
- உயரம் மற்றும் ஆழம் சார்ந்து புவிஈர்ப்பு முடுக்கம் (g) ன் மதிப்பு மாறுதலை புரிந்து கொள் ளுதல்.
- எடையிழப்பினைப் பகுத்தறிதல்.
- விசை மற்றும் இயக்கம் சார்பான கணக்குகளைத் தீர்வு செய்தல்
ஒளியியல்
- ஒளிவிலகல் விதிகளைக் கூற இயலும்.
- ஒளியின் பண்புகளைப் பட்டியலிட முடியும்.
- ஒளிச் சிதறலின் பல்வேறு வகைகளை விளக்க இயலும்.
- குவிலென்சு மற்றும் குழிலென்சு உருவாக்கும் பிம்பங்களைப் புரிந்துகொள்ள இயலும்.
- குவிலென்சு மற்றும் குழி லென்சின் கதிர் படங்களைப் பகுத்தறிய முடியும்.
- மனிதக் கண் மற்றும் ஒளியியல் கருவிகளின் செயல்பாடுகளைப் புரிந்துகொள்ள இயலும்.
- ஒளிவிலகல் சார்பான கணக்குகளைத் தீர்க்க இயலும்.
வெப்ப இயற்பியல்
- வெப்ப ஆற்றல் மற்றும் வெப்பநிலை பற்றி புரிந்து கொள்வர்
- வெப்பநிலையின் தனித்த அளவுகோல் பற்றி தெரிந்து கொள்வர்.
- வெப்ப ஆற்றல் மற்றும் வெப்பச் சமநிலை பற்றி புரிந்து கொள்வர்.
- பொருள்கள் விரிவடைவதை வகைப்படுத்துவர்.
- நல்லியல்பு வாயு விதிகளைப் பற்றி தெரிந்து கொள்வர்
- இயல்பு வாயு மற்றும் நல்லியல்பு வாயுவை வேறுபடுத்துவர்.
- நல்லியல்பு வாயுக்களுக்கான சமன்பாட்டை நிறுவுவர்.
- மேற்காண் தலைப்புகளில் தொடர்புடைய கணக்குகளுக்கு தீர்வு காண்பர்
மின்னோட்டவியல்
- மின் சுற்றுக்கள் உருவாக்குதல்.
- மின்னழுத்தம் மற்றும் மின்னழுத்த வேறுபாட்டினை வேறுபடுத்துதல்.
- மின்தடை மற்றும் மின் கடத்து திறன் பற்றி உணர்ந்து கொள்ளுதல்.
- மின் தடையாக்கிகளின் தொடர் மற்றும் பக்க இணைப்பு மற்றும் இது தொடர்பான கணக்குகளுக்கு தீர்வு காணுதல்.
- மின்னோட்டத்தின் வெப்ப விளைவு பற்றி அறிந்துகொ ள்ளுதல் மற்றும் அன்றாட வாழ்வில் இதனை பயன்படுத்துதல்.
- மின்திறன் மற்றும் மின்னாற்றல் வரையறுத்தல் மற்றும் வீட்டுக்கா ன மின்சுற்றுகள் பற்றிய விளக்கமளித்தல்.
- LED விளக்கு மற்றும் LED தொலைகாட்சிகளின் நவீன பயன்பாடுகள் பற்றி அறிதல்.
ஒலியியல்
- ஒலி உருவாக்கம் மற்றும் பரவலைப் புரிந்து கொள்ள முடியும்.
- திசை வேகம், அதிர்வெண் மற்றும் அலை நீளத்தைத் த�ொடர்புபடுத்த இயலும்.
- பல்வேறு ஊடகங்களில் ஒலியின் திசைவேகத்தைத் தெரிந்து கொள்ள இயலும்.
- வாயுக்களில் ஒலியின் திசைவேகத்தைப் பாதிக்கும் காரணிகளை விளக்க இயலும்.
- ஒலியின் எதிரொ லித்தலை விவரிக்க இயலும்
- எதிரொலிப்பு முறையைப் பயன்படுத்தி ஒலியின் திசைவேகத்தை காண இயலும்.
- டாப்ளர் விளைவைப் புரிந்து கொள்ள இயலும்.
- மேற்கண்ட பகுதிகளிலுள்ள கணக்கீடுகளைத் தீர்க்க இயலும்.
அணுக்கரு இயற்பியல்
- கதிரியக்கத்தை வரையறுக்க இயலும்.
- இயற்கை மற்றும் செயற்கைக் கதிரியக்கத்தை வேறுபடுத்த இயலும்
- ஆல்பா, பீட்டா, காமாக் கதிர்களின் பண்புகளை ஒப்பிட முடியும்
- அணுக்கரு சிதைவிற்கான சாடி மற்றும் ஃபஜன் இடம்பெயர்வு விதியினைக் கூற இயலும்
- அணுக்கரு இணைவு மற்றும் அணுக்கரு பிளவு ஆகியவற்றின் கருத்துகளைப் புரிந்து கொள்ள முடியும்
- பிளவுக்குட்படும் பொருள்களை அடையாளப்படுத்த இயலும்
- கட்டுப்பாடான மற்றும் கட்டுப்பாடற்ற தொடர்வினைகளைப் பகுத்தாராய இயலும்.
- அணுகுண்டு மற்றும் ஹைட்ரஜன் குண்டுகளின் தத்துவங்களை விவரிக்க இயலும்
- கதிரியக்கத்தின் பயன்களைப் பட்டியலிட முடியும்
- அணுக்கரு உலையின் கூறுகளைப் புரிந்து கொ ள்ள இயலும்
- கதிரியக்கப் பொருள்களைக் கையாளும்போது மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கைகளை அறிந்து கொ ள்ளமுடியும்.
அணுக்களும் மூலக்கூறுகளும்
- அணுக்கள் மற்றும் மூலக்கூறுகள் பற்றிய அறிவைப் பெறுதல்.
- அணுநிறை மற்றும் மூலக்கூறு நிறையை தொடர்புபடுத்துதல்.
- கிராம் அணு நிறை மற்றும் கிராம் மூலக்கூறு நிறை பற்றிய தகவல்களை பெறுதல்.
- வாயுக்கள் பற்றிய அவகாட்ரோ கருதுகோளின்உள்ளடங்கிய கருத்துக்களைப் புரிந்து கொள்ளுதல்.
- அவகாட்ரோ கருதுகோளினை வாழ்வியல் சூழலுடன் தொடர்புபடுத்துதல்.
- மூலக்கூறுகளின் அணுக்கட்டு எண்ணைக் கண்டறிதல்.
- ஆவி அடர்த்திக்கும் ஒப்பு மூலக்கூறு நிறைக்கும் உள்ள தொடர்பினை வருவித்தல்.
- வாயுக்களின் பருமனுக்கும் மூலக்கூறுகளின் எண்ணிக்கைக் கும் உள்ள தொடர் புகளைப் பெறுதல்.
- மோல் தத்துவத்தைப் பயன்படுத்தி கணக்குகளைத் தீர்த்தல்.
- சதவீத இயைபினைக் கணக்கிடக் கற்றுக் கொள்ளுதல்.
தனிமங்களின் ஆவர்த்தன வகைப்பாடு
- நவீன ஆவர்த்தன விதியின் அடிப்படையும், அதன் வளர்ச்சியும் பற்றி அறிதல்
- தொகுதிகளையும், தொடர்களையும் பற்றிய சிறப்புகளை வரிசைப்படுத்துதல்.
- தனிமங்களின் ஆவர்த்தன பண்புகளை விவரித்தல்.
- தாதுக்களுக்கும், கனிமங்களுக்கும் உள்ள வேறுபாடுகளை அறிதல்.
- தாதுக்களில் உள்ள மாசுக்களை நீக்கும் முறைகளை அறிதல்.
- தமிழ்நாட்டில் உள்ள வெவ்வேறு பகுதிகளில் செறிந்துள்ள கனிமங்களைப் பற்றி தெரிதல்
- உலோகங்களின் பண்புகளை உரைத்தல்
- உலோகவியலில் உள்ள வெ வ்வேறு படிநிலைகள் தெரிதல்
- உலோகக் கலவைகளும் அவற்றின் வகைகளும் பற்றி அறிவியல் பூர்வமாய் சிந்தித்தல்.
- இரசக் கலவையைப் பற்றிய உண்மையை உணர்தல்
- உலோக அரிமானத்திற்கான காரணங்களையும், அவற்றைத் தடுக்கும் முறைகளையும் புரிதல்.
கரைசல்கள்
- கரைசலை வரையறுத்தல்.
- கரைசல்களின் வகைகளை அறிந்து கொள்ளுதல்.
- கரைதிறனை பாதிக்கக்கூடிய காரணிகளை பகுப்பாய்வு செய்தல்.
- கரைசல்களின் செறிவுகளை வெளிப்படுத்தும் வெவ்வேறு முறைகளை விளக்குதல்.
- கொடுக்கப்பட்ட கரைப்பானில் கரைபொருளின் கரைதிறனைக் கணக்கிடுதல்.
- நீரேறிய உப்புகளை நீரற்ற உப்புகளாக மாற்றும் சோதனையை செய்தல்.
- ஈரம் உறிஞ்சும் சேர்மங்களையும், ஈரம் உறிஞ்சிக் கரையும் சேர்மங்களையும் வேறுபடுத்தல்.
வேதிவினைகளின் வகைகள்
- பல்வேறு வேதிவினைகளின் வகைகளை அறிதல்.
- சுட்ட சுண்ணாம்பு மற்றும் நீரை பயன்படுத்தி சேர்க்கை வினை நடைபெறுவதை செய்து பார்க்கும் திறனைப் பெறுதல்.
- மீள் மற்றும் மீளா வினைகளை அடையாளம் காணுதல் மற்றும் வேறுபடுத்துதல்.
- மீள் வினைகளின் சமநிலையை விளக்குதல்.
- சமநிலையின் தன்மைகளை பட்டியலிடுதல் மற்றும் விளக்குதல்.
- வேதிவினையின் வேகத்தை வரையறை செய்தல்.
- செறிவு, வெப்பநிலை மற்றும் வினையூக்கியை ப�ொருத்து வினைவேகத்தின் மாற்றங்களை விவரித்தல்.
- pH வரையறை செய்தல்.
- நடுநிலை, அமில மற்றும் காரத்தன்மையுடைய நீர்க்கரைசல்களில் ஹைட்ரஜன் அயனி செறிவு மற்றும் pH யை தொடர்பு படுத்துதல்.
- அன்றாட வாழ்வில் pH-ன் முக்கியத்துவத்தை கண்டுணர்தல்.
- நீரின் அயனிப் பெருக்கத்தை விளக்குதல்.
கார்பனும் அதன் சேர்மங்களும்
- கரிமச் சேர்மங்கள் பற்றி அறிந்து கொள்ளுதல்.
- கரிமச் சேர்மங்களை வகைப்படுத்துதல் மற்றும் IUPAC முறையில் பெயரிடுதல்.
- கரிமச் சேர்மங்களின் வினைச் செயல் தொகுதியை கண்டறிதல்.
- எத்தனால் மற்றும் எத்தனாயிக் அமிலம் ஆகியவவைகளின் தயாரிப்பு முறை, பண்புகள் மற்றும் பயன்களை அறிந்து கொள்ளுதல்.
- சோப்பு மற்றும் டிடர்ஜெண்டின் இயைபு மற்றும் தயாரிக்கும் முறையை அறிந்து கொள்ளுதல்.
- சோப்பு மற்றும் டிடர்ஜெண்ட் செயல்படும் முறையை அறிந்து கொள்ளுதல்.
- சோப்பு மற்றும் டிடர்ஜெண்ட் ஆகியவற்றை வேறுபடுத்துதல்.
தாவர உள்ளமைப்பியல் மற்றும் தாவர செயலியல்
- வாஸ்குலார் திசுத்தொகுப்பின் வகைகள் மற்றும் பணிகளை புரிந்து கொள்ளுதல்
- இருவிதையிலை மற்றும் ஒரு விதையிலைத்தாவர வேர், தண்டு, இலைகளின் உள்ளமைப்பை தெரிந்து கொள்ளுதல்
- அவற்றிற்கிடையேயான வேறுபாட்டை அறிந்து கொள்ளுதல்
- பசுங்கணிகத்தில் காணப்படும் ஒளிச்சேர்க்கை நிறமிகளை அறிதல்
- கணிகங்களின் அமைப்பு மற்றும் பணியினை தெரிந்து கொள்ளுதல்
- மைட்டோகாண்ட்ரியாவின் அமைப்பைப் புரிந்து கொள்ளுதல்
- காற்று சுவாசம் மற்றும் காற்றில்லா சுவாசித்தலின் அடிப்படை நிகழ்வுகளை அறிந்து கொள்ளுதல்.
உயிரினங்களின் அமைப்பு நிலைகள்
- அட்டை மற்றும் முயலின் புறஅமைப்பை பற்றி புரிந்துகொள்ளுதல்.
- இவ்வுயிரிகளின் பல்வேறு வகையான உறுப்பு மண்டலங்க ளின் அமைப்புகளை அடையாளம் காணுதல்.
- அட்டை மற்றும் முயலின் பல்வேறு உறுப்பு மண்டலங்களின் உடற் செயலியல் நிகழ்வுகளைப் புரிந்து கொள்ளுதல்.
- அட்டையின் ஒட்டுண்ணித் தகவகைமைப்புகளைக் கற்றல்
- முயலின் பல்லமைப்பை அடையாளம் காணுதல் மற்றும் அதன் முக்கியத்துவத்தினை அறிதல்.
- முதுகெலும்பற்ற (அட்டை) மற்றும் முதுகெலும்புள்ள (முயல்) உயிரினங்களின் தோற்ற அமைப்பில் காணப்படும் வேறுபாடுகளை அறிந்துணர்தல்
தாவரங்களின் கடத்துதல் மற்றும் விலங்குகளின் சுற்றோட்டம்
- தாவரங்களுக்கு மண்ணிலிருந்து நீர் மற்றும் கனிமங்கள் எவ்வாறு செல்கிறது.
- தாவரங்களின் இலைகள் மூலம் தயாரிக்கப்படும் உணவானது மற்ற பாகங்களுக்கு எவ்வாறு கடத்தப்படுகிறது.
- சவ்வூடு பரவல் மற்றும் நீராவிப் போக்கு நிகழ்ச்சியினை அறிதல்
- இரத்தத்தின் இயைபினைப் புரிந்து கொள்ளுதல்.
- இதயத்தின் அமைப்பு மற்றும் அதனுடன் தொடர்புடைய இரத்த நாளங்களை அடையாளம் கண்டு விளக்குதல்.
- உடல், நுரையீரல் மற்றும் இதய சுற்றோட்டங்களைப் புரிந்து கொள்ளுதல்.
- இதய சுழற்சியின் பல்வேறு நிகழ்வுகளை வேறுபடுத்துதல்.
- இரத்த அழுத்தம் மற்றும் இதயத் துடிப்பினை அறிந்து கொள்ளுதல்.
- ஸ்டெத்தாஸ்கோப் மற்றும் ஸ்பிக்மோமானோமீட்டர் ஆகியவற்றின் பயன்பாட்டினைப் புரிந்து கொள்ளுதல்.
- வேறுபட்ட இரத்த வகைகளை அடையாளம் காணுதல்.
- நிணநீர் மண்டலத்தின் பங்கினைப் புரிந்து கொள்ளுதல்.
நரம்பு மண்டலம்
- நரம்பு மண்டலம் உடலின் கட்டுப்பாடு மற்றும் ஒருங்கிணைப்பு மையமாக செ யல்படுதலை அறிதல்.
- நரம்பு மண்டலத்தின் உட் கூறுகளை அறிந்து கொள்ளுதல்.
- நரம்புத் தூண்டல்கள் எவ்வாறு கடத்தப்படுகின்றன என அறிந்து கொள்ளுதல்.
- மனித நரம்பு மண்டலத்தின் பல்வேறு பிரிவுகளை அறிந்து கொள்ளுதல்.
- மனித மூளையின் பல்வேறு பகுதிகளையும் அவற்றின் பணிகளையும் அறிந்து கொள்ளுதல்.
- அனிச்சை செயலின் முக்கியத்துவம் மற்றும் செயல்படும் பாதையினை அறிந்து கொள்ளுதல்
தாவர மற்றும் விலங்கு ஹார்மோன்கள்
- ஹார்மோன்களை வரையறை செய்தல்.
- தாவர ஹார்மோன்களை வரிசைப்படுத்துதல்.
- வளர்ச்சி ஊக்கிகள் மற்றும் வளர்ச்சி அடக்கிகள் என தாவர ஹார்மோன்களை வகைப்படுத்துதல்.
- பல்வேறு தாவர ஹார்மோன்களின் வாழ்வியல் விளைவுகளை வேறுபடுத்துதல்.
- தாவரங்களின் வாழ்வியல் செயல்பாடுகளை தாவர ஹார்மோன்க ள் எவ்வாறு கட்டுப்படுத்தி ஒருங்கிணைக்கின்றன என்பதை புரிந்து கொள்ளல்.
- மனித உடலில் உள்ள பல்வேறு நாளமில்லாச் சுரப்பிகளை அறிந்து கொள்ளுதல்.
- மனித உடலில் வெவ்வேறு இடங்களில் அமைந்துள்ள நாளமில்லாச் சுரப் பிகளையும், அவற்றின் அமைப்பையும் அடையாளம் காணுதல்.
- நாளமில்லாச் சுரப்பிகள் மற்றும் நாளமுள்ள சுரப்பிகள் ஆகியவற்றிற்கு இடையேயான வேறுபாட்டினை அறிந்து கொள்ளுதல்.
- ஹார்மோன்கள் செயல்படும் குறிப்பிட்ட இலக்கு உறுப்புகள் மற்றும் அவற்றின் பணிகளை அறிந்து கொள்ளுதல்.
- ஹார்மோன்கள் சுரத்தலின் காரணமாக ஏற்படும் பல்வேறு குறைபாடுகளை அடையாளம் காணுதல்.
தாவரங்கள் மற்றும் விலங்குகளில் இனப்பெருக்கம்
- உடல இனப்பெருக்கம், பாலிலா இனப்பெருக்கம் மற்றும் பாலினப்பெருக்கத்தை வேறுபடுத்துதல்.
- மலரின் பாகத்தையும் அதன் பணிகளையும் விளக்குதல்.
- மகரந்தச்சேர்க்கையின் வகைகள், நடைபெறும் விதம் மற்றும் அவற்றின் முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்ளுதல்.
- இரட்டைக் கருவுறுதல், கருவுறுதலின் படிநிலைகள் ( சின்கேமி மற்றும் மூவிணைவு), கரு, கருவூண் மற்றும் விதை உருவாதல் பற்றி புரிந்து கொள்ளுதல்.
- மனிதரில் நடைபெறும் பாலினப்பெருக்க நிகழ்வுகளைப் பற்றி புரிந்து கொள்ளுதல்.
- விந்தக மற்றும் அண்டக செல்களின் அமைப்பினை அறிந்து கொள்ளுதல்.
- மனிதனின் விந்து மற்றும் அண்டத்தின் அமைப்பை விளக்கமாக அறிந்து கொள்ளுதல்.
- மாதவிடாய் சுழற்சி மற்றும் கருவுறுதல் நிகழ்வுகளைப் பற்றி தெளிவாக அறிதல்.
- இனப்பெருக்க சுகாதாரம் மற்றும் அதன் உத்திகளைப் பற்றி விழிப்புணர்வு பெறுதல்.
- தன் சுகாதாரம் மற்றும் சமூக சுகாதாரத்தினைப் பற்றிய அறிவைப் பெறுதல்.
மரபியல்
- மெண்டலின் விதிகளைப் பற்றி அறிதல்
- புறத்தோற்றப் பண்பு மற்றும் ஜீனாக்கப் பண்பு ஆகியவற்றை வேறுபடுத்துதல்
- ஒரு பண்பு மற்றும் இரு பண்புக் கலப்பு பற்றிப் புரிந்து கொள்ளுதல்
- குரோமோசோம், டி.என்.ஏ. மற்றும் ஜீன் ஆகியவற்றை வேறுபடுத்துதல்
- குரோமோசோமின் அமைப்பைப் புரிந்து கொள்ளுதல்
- சென்ட்ரோமியரின் நிலைக்குத் தகுந்தவாறு குரோமோசோம்களை வகைப்படுத்துதல்
- டி.என்.ஏ.வின் அமைப்பு மற்றும் இரட்டிப்பாதலைப் புரிந்து கொள்ளுதல்.
- சடுதி மாற்றத்தை வரை யறுத்தல் மற்றும் குரோமோசோம் மற்றும் ஜீன் சடுதி மாற்றத்தினை வகைப்படுத்துதல்.
- டவுன் நோய்க் கூட்டு அறிகுறியின் குரோமோசோம் குறைபாட்டை அடையாளம் காணுதல்.
உயிரின் தோற்றமும் பரிணாமமும்
- அண்டத் தோற்றத்தின் பெரு வெடிப்புக் கோட்பாடு பற்றி அறிந்து கொள்ளுதல்
- உயிரினங்களின் தோற்றம் பற்றிய கோட்பாடுகளைப் புரிந்து கொள்ளுதல்
- கிடைக்கப்பெறும் சான்றுகளின் அடிப்படையில் பரிணாமச் செயல்முறைகள் குறித்து விவாதித்தல்
- லாமார்க் மற்றும் டார்வினின் கொள்கைகளைப் பரிணாமத்தோடு தொடர்புபடுத்துதல்
- வேறுபாடுகள் எவ்வாறு ஏற்படுகின்றன மற்றும் அதன் முக்கியத்துவம் பற்றி அறிதல்
- புதைபடிவங்களின் முக்கியத்துவத்தைப் பட்டியலிடுதல் மற்றும் புதைப்படிவ உருவாக்கச் செயல்முறைகளை விளக்குதல்
- வட்டார முக்கியத்துவம் வாய்ந்த தாவரங்களை அடையாளம் காணுதல்
- வேற்றுக் கிரக உயிரிகள் பற்றி உணர்தல்
இனக்கலப்பு மற்றும் உயிரித்தொழில்நுட்பவியல்
- தாவரப் பயிர்ப்பெ ருக்கத்தை வரையறை செய்து, அதன் படிநிலைகளையும், முறைகளையும் விவாதித்தல்.
- பயிர் மேம்படுத்துதலால் உருவாக்கப்பட்ட பயிர் வகைகளை அறிதல்.
- விலங்கினப் பெருக்கத்தையும் அதன் தாக்கங்களையும் புரிந்து கொள்ளல்.
- உட்கலப்பு மற்றும் வெளிக்கலப்பு ஆகியவற்றின் வேறுபாடுகளைச் சுட்டிக்காட்டல்
- கலப்பின வீரியம் என்றால் என்ன என்பதையும் அதன் முக்கியத்துவத்தையும் அறிதல்.
- மரபுப் பொறியியலின் பல்வேறு படிநிலைகளை அடையாளம் காணல்.
- DNA விரல் ரேகை தொழில்நுட்பத்தின் நடைமுறைப் பயன்பாடுகளைப் புரிந்து கொள்ள ல்.
- ஜீன் சிகிச்சை பற்றிய அறிவைப் பெற்றுக் கொள்ளல்.
- குருத்தணு செயல்நுட்பத்தின் முக்கியத்துவத்தை அறிதல்.
உடல் நலம் மற்றும் நோய்கள்
- தவறான பயன்பாடுகளின் வகைகள் மற்றும் அது தொடர்புடைய நடத்தை மாற்றங்கள் பற்றி புரிந்து கொள்ளுதல்.
- குழந்தைகளை பாலியல்ரீதியாக தவறாகப் பயன்படுத்துதலிலிருந்து பாதுகாத்தலை யும், தடுத்தலையும் பற்றிய அறிவைப் பெறுதல்.
- மருந்து, புகையிலை மற்றும் மதுவுக்கு அடிமையாதலுக்கான காரணங்கள் மற்றும் அவை உடல் நலத்தில் ஏற்படுத்தும் விளைவுகள் குறித்து அறிதல்.
- போதையிலிருந்து மீள்வதற்கான சரியான வழிமுறைகளை ஆய்ந்தறிதல்.
- நடைமுறை வாழ்க்கை மாற்றம் தொடர்புடைய நோய்கள் மற்றும் குறைபாடுகள் (disorders) பற்றி அறிதல்.
- வகை 1 மற்றும் வகை 2 டயாபடீஸ் மெல்லிடஸின் அடையாளம் மற்றும் அறிகுறிகளின் பண்புகளை தொடர்புபடுத்துதல்.
- உடல் பருமன், இதய நோய்கள் , புற்றுநோய் மற்றும் எய்ட்ஸ் ஆகியவற்றிற்கா ன காரணம் மற்றும் அறிகுறிகளை விளக்குதல்.
- நோய் மற்றும் குறைபாடுகளின் தடுப்பு மற்றும் கட்டுப்பாட் டு முறைகள் பற்றி பரிந்துரை செய்தல்.
- நலமான வாழ்க்கைக்கான சமுதாய விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துதல்.
சுற்றுச்சூழல் மேலாண்மை
- புதுப்பிக்கத்தக்க மற்றும் புதுப்பிக்கஇயலாத வளங்களை வேறுபடுத்த தெரிந்து கொள்ளல்.
- பல்வேறு இயற்கை வளங்களைப் பாதுகாப்பதற்கான அவசியத்தை அறிந்து கொள்ளுதல்.
- இயற்கை வளங்களை பாதுகாக்க கையாளப்படும் பல்வேறு முறைகள் பற்றி அறிந்து கொள்ளுதல்.
- இயற்கை வளங்களைப் பயன்படுத்துவதில் உள்ள வரையறைகள் பற்றிய விழிப்புணர்வு பெறுதல்.
- சுற்றுச்சூழல் பாதுகாப்பிலும் மற்றும் சுற்றுச்சூழல் மேலாண்மையிலும் ஈடுபாட்டோடு பங்கேற்க ஊக்கப்படுத்துதல்.
காட்சித் தொடர்பு
- கோப்பு, கோப்புத் தொகுப்பு ஆகியவற்றை வேறுபடுத்துதல்
- கோப்பு, கோப்புத் தொகுப்பு ஆகியவற்றை உருவாக்க அறிதல்
- மென்பொருள் வழியாக அசைவூட்டத்தை உருவாக்குதல்