St. Britto Hr. Sec. School - Madurai
12th வேதியியல் வாரத் தேர்வு -1(வேதிவினை வேகவியல்)-Aug 2020
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
அடிப்படை வினைகள் என்றால் என்ன? ஒரு வினையின் வினை வகை மற்றும் மூலக்கூறு எண் ஆகியனவற்றிற்கு இடையேயான வேறுபாடுகள் யாவை?
-
A,B மற்றும் C ஆகியவற்றிற்கிடையேயான வினையின் வேக விதி வினைவேகம் = k[A]2[B][L]3/2 பின்வரும் நேர்வுகளின் வினைவேகம் எவ்வாறு மாற்றமடையும்?
i) [L] ன் செறிவு நான்கு மடங்காக உயர்த்தும் போது
(ii) [A] மற்றும் [B] ஆகிய இரண்டின் செறிவுகளையும் இரு மடங்காக்கும் போது
(iii) [A] ன் செறிவை பாதியாகக் குறைக்கும் போது.
(iv) [A] ன் செறிவை (1/3) மடங்காக குறைத்தும் [L] ன் செறிவை நான்கு மடங்காகவும் மாற்றும் போது. -
சராசரி வினைவேகம் மற்றும் குறிப்பிட்ட நேரத்தில் வினை வேகம் ஆகியனவற்றை வரையறு.
-
இரு மூலக்கூறு வினைகளுக்கான மோதல் கொள்கையினைச் சுருக்கமாக விளக்குக.
-
-
500 K வெப்பநிலையில் வாயு நிலையில் உள்ள Cl2O7 சிதைவடைந்த Cl2 மற்றும் O2 ஆக மாறும் வினை ஒரு முதல் வகை வினையாகும். 500K ல் ஒரு நிமிடத்திற்குப் பின் Cl2O7 ன் செறிவு 0.08 லிருந்து 0.04 atm ஆக மாற்றமடைந்தால் S-1 ல் வினைவேக மாறிலியைக் கணக்கிடுக
-
பின்வரும் வினைகளில் வினைவகையைக் கண்டறிக
(i) இரும்பு துருப்பிடித்தல்
(ii) 92U238 ன் கதிரியக்கச் சிதைவு
(iii) 2A +3B \(\rightarrow \)விளைபொருள்; வினைவேகம்=K [A]1/2 [B]2
-
-
ஒருபடியின் (monomer) செறிவானது 0.05 mol L-1 ஆக உள்ள ஒரு இருபடி (dimer) உருவாகும் இரண்டாம் வகை வினையின் வினைவேகம் 7.5x 10-3 mol L-1s-1 வினைவேக மாறிலியினைக் கண்டறிக.
-
அர்ஹீனியஸ் சமன்பாட்டினை எழுதி அதில் இடம் பெற்றுள்ளனவற்றை விளக்குக.
-
போலி முதல் வகை வினையை ஒரு எடுத்துக்காட்டுடன் விளக்குக.
-
400K மற்றும் 200K ஆகிய வெப்பநிலைகளில் வினைவேக மாறிலிகள் முறையே 0.04 மற்றும் 0.02 s-1 எனில் கிளர்வு ஆற்றலைக் கணக்கிடு
-
-
ஒரு வினையின் வினைவேக மாறிலி k ஆனது வெப்பநிலையினைப் பொருத்து பின்வருமாறு அர்ஹினீயஸ் சமன்பாட்டின் படி மாற்றமடைகிறது.
\(log\quad K=log\quad A-\frac { { E }_{ a } }{ 2.303R } \left( \frac { 1 }{ T } \right) \)
இங்கு Ea என்பது கிளர்வு ஆற்றல் log K Vs \(\frac{1}{T}\) வரைபடம் வரையும் போது -400K சாய்வு உடைய நேர்கோடு பெறப்படுகிறது. கிளர்வு ஆற்றலைக் கணக்கிடுக. -
A என்ற பொருள் சிதைவடையும் வினை ஒரு முதல் வகை வினையாகும். வினைபொருளில் சரிபாதி குறைய ஆகும் காலம் 60 விநாடிகள் எனில் அவ்வினையின் வினைவேக மாறிலியைக் கணக்கிடுக. 180 வினாடிகளுக்குப் பிறகு எஞ்சியிருக்கும் வினைபொருளின் (A) அளவினைக் கண்டறிக
-
-
SO2Cl2 → SO2 + Cl2 என்ற வாயு நிலை ஒருபடித்தான வினையாது முதல் வகை வினைவேகவியலுக்கு உட்படுகிறது. அதன் அரை வாழ் காலம் 8.0 நிமிடங்கள் SOCl2 ன் செறிவானது அதன் ஆரம்ப அளவில் 1% ஆக குறைய ஆகும் காலத்தினை கணக்கிடுக.