St. Britto Hr. Sec. School - Madurai
12th வேதியியல் மாதத் தேர்வு -3(வேதிவினை வேகவியல்)-Aug 2020
-
-
-
-
-
முதல் வகை வினையின் வரைபட விளக்கத்தினைத் தருக.
-
கிளர்வு ஆற்றல் என்றால் யாது?
-
வினைவேகம் வரையறு.
-
வினைவேகத்தை தீர்மானிக்கும் படி என்பதனை உதாரணத்துடன் விளக்குக.
-
நைட்ரிக் ஆக்சைடானது, ஆக்ஸிஜனேற்றம் அடைந்து NO2 உருவாகும் வினையினைக் கருதுவோம்.
2NO(g) + O2(g) → 2NO2(g)
அ) NO, O2 மற்றும் NO2 ஆகியனவற்றின் செறிவுகளில் ஏற்படும் மாறுபாடுகளின் அடிப்படையில் வினைவேகத்தினைக் குறிப்பிடுக.
ஆ) ஒரு குறிப்பிட்ட நேரத்தில் [O2] ன் செறிவு 0.2 mol L-1 S-1 என்ற அளவில் குறைகிறது எனில் அந்நேரத்தில் [ NO2 ] -ன் செறிவு எந்த வீதத்தில் அதிகரிக்கும்?
-
A,B மற்றும் C ஆகியவற்றிற்கிடையேயான வினையின் வேக விதி வினைவேகம் = k[A]2[B][L]3/2 பின்வரும் நேர்வுகளின் வினைவேகம் எவ்வாறு மாற்றமடையும்?
i) [L] ன் செறிவு நான்கு மடங்காக உயர்த்தும் போது
(ii) [A] மற்றும் [B] ஆகிய இரண்டின் செறிவுகளையும் இரு மடங்காக்கும் போது
(iii) [A] ன் செறிவை பாதியாகக் குறைக்கும் போது.
(iv) [A] ன் செறிவை (1/3) மடங்காக குறைத்தும் [L] ன் செறிவை நான்கு மடங்காகவும் மாற்றும் போது. -
ஒரு வினையின் அர்ஹீனியஸ் காரணிகள் பின்வருமாறு. அதிர்வெண் காரணி A = 1.11 x 1011 விநாடி-1 Ea = 164438 J/mol, 300° C-ல் வினைவேக மாறிலி மற்றும் அரைவாழ்வு நேரத்தைக் கணக்கிடுக.
-
-
ஒரு முதல் வகை வினையின் வினைவேக மாறிலி 1.54 × 10-3 s-1 அதன் அரை வாழ் காலத்தினைக் கண்டறிக.
-
400K மற்றும் 200K ஆகிய வெப்பநிலைகளில் வினைவேக மாறிலிகள் முறையே 0.04 மற்றும் 0.02 s-1 எனில் கிளர்வு ஆற்றலைக் கணக்கிடு
-
-
பின்வரும் விவரங்களிலிருந்து ஹைட்ரஜன் பெராக்ஸடு சிதைவுறுதல் ஒரு முதல் வகை வினை எனக்காட்டுக.
t(min) 0 10 20 V(ml) 46.1 29.8 19.3 இங்கு t என்பது நேரம் (நிமிடங்களில்) மற்றும் V என்பது ஒரு குறிப்பிட்ட கனஅளவு உடைய வினைக் கலவையுடன் தரம்பார்க்கும் போது தேவைப்படும் திட்ட KMnO4 கரைசலின் கன அளவு ஆகும்.
-
ஒரு வேதிவினையின் வேகத்தினை, வினைபடு பொருட்களின் செறிவு எவ்வாறு பாதிக்கின்றது என்பதை விளக்குக
-
ஒரு வினையின் வினைவேக மாறிலி k ஆனது வெப்பநிலையினைப் பொருத்து பின்வருமாறு அர்ஹினீயஸ் சமன்பாட்டின் படி மாற்றமடைகிறது.
\(log\quad K=log\quad A-\frac { { E }_{ a } }{ 2.303R } \left( \frac { 1 }{ T } \right) \)
இங்கு Ea என்பது கிளர்வு ஆற்றல் log K Vs \(\frac{1}{T}\) வரைபடம் வரையும் போது -400K சாய்வு உடைய நேர்கோடு பெறப்படுகிறது. கிளர்வு ஆற்றலைக் கணக்கிடுக. -
ஒரு முதல் வகை வினையில் 30% 12 நிமிடத்தில் நிறைவு பெறுகிறது எனில், 65 நிமிடத்தில் எத்தனை சதவீதம் நிறைவு பெறும்?
-
SO2Cl2 → SO2 + Cl2 என்ற வாயு நிலை ஒருபடித்தான வினையாது முதல் வகை வினைவேகவியலுக்கு உட்படுகிறது. அதன் அரை வாழ் காலம் 8.0 நிமிடங்கள் SOCl2 ன் செறிவானது அதன் ஆரம்ப அளவில் 1% ஆக குறைய ஆகும் காலத்தினை கணக்கிடுக.
-
ஒரு பூஜ்ய வகை வினை 20 நிமிடங்களில் 20% நிறைவுறுகிறது. வினை வேக மாறிலியைக் கணக்கிடுக. அவ்வினை 80% நிறைவடைய ஆகும் காலம் எவ்வளவு?