St. Britto Hr. Sec. School - Madurai
12th வேதியியல் மாதத் தேர்வு -2(வேதிவினை வேகவியல்)-Aug 2020
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
நைட் ரிக் ஆக் ஸைடானது, ஆக்சிஜனேற்றம் அடைந்து NO2 உருவாகும் வினையினை க் கருதுவோம். 2NO(g)+O2 (g) \(\rightarrow \)2NO2 (g)
(அ) NO, O2, மற்றும் NO2 ஆகியனவற்றின் செறிவுகளில் ஏற்படும் மாறுபாடுகளின் அடிப்படையில் வினை வேகத்தினைக் குறிப்பிடுக.
(ஆ) ஒரு குறிப்பிட்ட நேரத்தில் [O2] ன் செறிவு 0.2mol L-1S-1 என்ற அளவில் குறைகிறது எனில் அந்நேரத்தில், [NO2] ன் செறிவு எந்த வீதத்தில் அதிகரிக்கும் -
வேக விதி மற்றும் வினைவேக மாறிலியினை வரையறு.
-
நைட்ரிக் ஆக்சைடானது, ஆக்ஸிஜனேற்றம் அடைந்து NO2 உருவாகும் வினையினைக் கருதுவோம்.
2NO(g) + O2(g) → 2NO2(g)
அ) NO, O2 மற்றும் NO2 ஆகியனவற்றின் செறிவுகளில் ஏற்படும் மாறுபாடுகளின் அடிப்படையில் வினைவேகத்தினைக் குறிப்பிடுக.
ஆ) ஒரு குறிப்பிட்ட நேரத்தில் [O2] ன் செறிவு 0.2 mol L-1 S-1 என்ற அளவில் குறைகிறது எனில் அந்நேரத்தில் [ NO2 ] -ன் செறிவு எந்த வீதத்தில் அதிகரிக்கும்?
-
பின்வரும் வினைகளுக்கான வேக விதியினைத் தருக.
அ. ஒரு வினை x ஐப் பொருத்து \(\frac{3}{2}\) வினை வகையையும், y ஐப் பொருத்து பூஜ்ய வகையையும் பெற்றுள்ளது.
ஆ. ஒரு வினை NO வைப் பொறுத்து இரண்டாம் வகை Br2 வைப் பொறுத்து முதல் வகை. -
x+2y விளைபொருள், [x] = [y] 0.2 M என்ற வினையின் வினைவேகமானது 4 x 10-3 mol L-1 S-1 எனும் போது 400 K ல் வினைவேக மாறிலி 2x10-2S-1. இவ்வினையின் ஒட்டுமொத்த வினைவகையைக் கண்டறிக.
-
சராசரி வினைவேகம் மற்றும் குறிப்பிட்ட நேரத்தில் வினை வேகம் ஆகியனவற்றை வரையறு.
-
பூஜ்ய வகை வினைக்கு இரு எடுத்துக்காட்டுகள் தருக.
-
இரு மூலக்கூறு வினைகளுக்கான மோதல் கொள்கையினைச் சுருக்கமாக விளக்குக.
-
-
x +y+z \(\rightarrow \)விளைபொருள் என்ற வினையின், வேக விதி, வினைவேகம் =k[x]3/2 [y]1/2 வினையின் ஒட்டு மொத்த வினைவகை மற்றும் Z ஐப் பொருத்து வினையின் வினைவகை என்ன?
-
2x +y \(\rightarrow \) L என்ற வினைக்கு பின் வரும் விவரங்களிலிருந்து வேக விதியினைத் தீர்மானிக்கவும்.
[X]
min[y]
(min)rate
(Ms-1)0.2 0.02 0.15 0.4 0.02 0.30 0.4 0.08 1.20
-
-
ஒருபடியின் (monomer) செறிவானது 0.05 mol L-1 ஆக உள்ள ஒரு இருபடி (dimer) உருவாகும் இரண்டாம் வகை வினையின் வினைவேகம் 7.5x 10-3 mol L-1s-1 வினைவேக மாறிலியினைக் கண்டறிக.
-
ஒரு முதல்வகை வினையானது 90% நிறைவு பெற 8 மணி நேரம் தேவைப்படுகிறது. எனில், அவ்வினை 80% நிறைவு பெற தேவையான நேரத்தினைக் கணக்கிடுக.
(log5=0.6989;log10=1) -
அர்ஹீனியஸ் சமன்பாட்டினை எழுதி அதில் இடம் பெற்றுள்ளனவற்றை விளக்குக.
-
ii) 500k வெப்பநிலையில், X\(\rightarrow \)விளைபொருள் என்ற ஒரு முதல் வகை வினையின் அரை வாழ் காலம் 6.932x 104s at 500K வெப்பநிலையில் x ஐ வெப்பப்படுத்தும் போது 100 நிமிடங்களில், அது எவ்வளவு சதவீதம் சிதைவடிந்திருக்கும்? (e0.06=1.06)
-
ஒரு வினையின் வினைவேக மாறிலி k ஆனது வெப்பநிலையினைப் பொருத்து பின்வருமாறு அர்ஹினீயஸ் சமன்பாட்டின் படி மாற்றமடைகிறது.
\(log\quad K=log\quad A-\frac { { E }_{ a } }{ 2.303R } \left( \frac { 1 }{ T } \right) \)
இங்கு Ea என்பது கிளர்வு ஆற்றல் log K Vs \(\frac{1}{T}\) வரைபடம் வரையும் போது -400K சாய்வு உடைய நேர்கோடு பெறப்படுகிறது. கிளர்வு ஆற்றலைக் கணக்கிடுக. -
ஒரு வினையின் கிளர்வு ஆற்றல் 225 k Cal mol-1 மேலும் 400C ல் வினைவேக மாறிலி 1.8×10-5 s-1 எனில் அதிர்வுக் காரணி A ன் மதிப்பைக் கண்டறிக.
-
A என்ற பொருள் சிதைவடையும் வினை ஒரு முதல் வகை வினையாகும். வினைபொருளில் சரிபாதி குறைய ஆகும் காலம் 60 விநாடிகள் எனில் அவ்வினையின் வினைவேக மாறிலியைக் கணக்கிடுக. 180 வினாடிகளுக்குப் பிறகு எஞ்சியிருக்கும் வினைபொருளின் (A) அளவினைக் கண்டறிக
-
-
ஒரு வினையின் அர்ஹீனியஸ் காரணிகள் பின்வருமாறு. அதிர்வெண் காரணி A = 1.11 x 1011 விநாடி-1 Ea = 164438 J/mol, 300° C-ல் வினைவேக மாறிலி மற்றும் அரைவாழ்வு நேரத்தைக் கணக்கிடுக.
-
400K மற்றும் 200K ஆகிய வெப்பநிலைகளில் வினைவேக மாறிலிகள் முறையே 0.04 மற்றும் 0.02 s-1 எனில் கிளர்வு ஆற்றலைக் கணக்கிடு
-
-
. ஒரு முதல் வகை வினையின் வினைவேக மாறிலியின் மதிப்பு 0.45 விநாடி' எனில் அரை வாழ்காலத்தைக் கணக்கிடுக.