St. Britto Hr. Sec. School - Madurai
12th வணிகக் கணிதம் மாதத் தேர்வு -1(தொகை நுண்கணிதம் – II)-Aug 2020
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
உற்பத்தியாளரின் இறுதிநிலை வருவாய் சார்பு MR=275-x-0.3x2 எனில், உற்பத்தியின் மொத்த வருவாயை அதன் உற்பத்தி 10 அலகுகளிலிருந்து 20 அலகுகளாக அதிகரிக்கும் பொழுது காண்க.
-
தேவைசார்பு P =122-5x-2x2 மற்றும் x =20 எனும் போது நுகர்வோர் உபரியைக் காண்க.
-
உற்பத்தி செய்யப்படும் x அழகு பொருள்களின் இறுதிநிலைச் செலவு சார்பு \(\frac { dC }{ dx } \)=100-10x+0.1x2 என்க. அந்நிறுவனத்தின் மாறாச் செலவு ரூ.500 எனில், அந்நிறுவனத்தின் மொத்தச் செலவுச் சார்பு மற்றும் சராசரி செலவு ஆகியவற்றை காண்க.
-
ஒரு நிறுவனத்தின் இறுதிநிலை வருவாய் MR =\(\frac { 2 }{ x+3 } -\frac { 2x }{ (x+3)^{ 2 } } +5\) எனில் அந்நிறுவனத்தின் தேவைச் சார்பு P =\(\frac { 2 }{ x+3 } +5\) எனக் காட்டுக.
-
y2=4x என்ற பரவளையம் அதன் செவ்வகலத்துடன் ஏற்படுத்தும் பரப்பைக் காண்க.
-
சரியான போட்டியின் கீழ் ஒரு பொருளின் தேவை மற்றும் அளிப்பு சார்புகள் முறையே pd =1600-x2 மற்றும் ps =2x2+400 எனில், உற்பத்தியாளரின் உபரியைக் காண்க.
-
ஒரு குளிர்சாதனத்தின் இறுதிநிலைச் செலவு C'(x)=\(\frac { x^{ 2 } }{ 200 } \)+4. 200 குளிர்சாதனங்களின் உற்பத்திச் செலவைக் காண்க.
-
ஒரு நிறுவனம், 30 நாள்களுக்கு ஒரு முறை 500 இருசக்கர வாகனங்களை பெறுகிறது. அனுபவத்தில் சரக்கு கையிருப்பு, இருப்பு நாள்களுடன் (x) உடன் தொடர்புடையது என தெரிகிறது. கடைசியில் பெறப்பட்ட சரக்கு முதலில் இருந்து I(x)=500-0.03x2, தினசரி சரக்கு தேக்கச் செலவு ரூ.0.3 எனில் 30 நாள்களுக்கான மொத்த செலவைக் காண்க.
-
தேவைச் சார்பு pd =25-3x மற்றும் அளிப்புச் சார்பு ps =5+2x எனில், சமன்நிலையில் நுகர்வோர் உபரி மற்றும் உற்பத்தியாளர் உபரியைக் காண்க.
-
500 அலகு பொருள்களை உற்பத்தி செய்வதற்கு தேவைப்படும் மொத்த மணிநேரம் f(x)=1800x-0.4 என்ற சார்பால் குறிக்கப்படுகிறது. எனில், கூடுதலாக 400 அலகு பொருள்களை உற்பத்தி செய்வதற்கான மொத்த கால (மணியில்) நேரத்தைக் காண்க. [(900)0.6=59.22, (500)0.6=41.63]
-
உற்பத்தி செய்யப்படும் x அலகு பொருள்களின் இறுதிநிலைச் செலவு \(\frac { a }{ \sqrt { ax+b } } \) என்க. x=0 எனும் பொழுது உற்பத்தி செலவு 0 எனில் மொத்த செலவுச் சார்பைக் காண்க.
-
ஒரு பொருளின் தேவைச் சார்பு y=36-x2 எனில், y0=நுகர்வோர் உபரியை காண்க.
-
ஒரு பொருளின் தேவைச் சார்பு மற்றும் அளிப்புச் சார்ப்பு முறையே Pd=18-2x-x2, Ps=2x-3. சமநிலை விலையில் நுகர்வோர் உபரி மற்றும் உற்பத்தியாளர் உபரியைக் காண்க.
-
ஒரு பொருளின் அளிப்பு சார்பு g9x)=4x+8 எனில் 5 அலகுகள் விற்பனை செய்யும்போது உற்பத்தியாளரின் உபரியை காண்க.
-
தொகையிடல் முறையைப் பயன்படுத்தி y2=16x என்ற பரவளையம் x =4 என்ற கோட்டுடன் ஏற்படுத்தும் அரங்கத்தின் பரப்பைக் காண்க.
-
y=|x+3| என்ற வளைவரையை வரைக. மேலும் \(\int _{ -6 }^{ 0 }{ |x+3| } dx\)-இன் மதிப்பைக் காண்க.
-
இறுதி நிலை செலவுச் சார்பு MC=2+5ex எனில்,
C (0)=100 எனும் போது C யைக் காண்க -
நெகிழ்ச்சி சார்பு \(\frac { { E }_{ y } }{ { E }_{ x } } =\frac { x }{ x-2 } \). x =6 மற்றும் y =16 எனும் போது அதன் தொடக்க நிலைச் சார்பைக் காண்க.
-
இறுதி நிலை வருவாய் சார்பு MR=35+7x-3x2 எனில், வருவாய் சார்பு மற்றும் தேவைச் சார்பு காண்க.
-
2000 ஆம் ஆண்டில் உலக தங்க உற்பத்தியின் அளவு 2547 மெட்ரிக் டன்கள் மற்றும் தங்க உற்பத்தி ஆண்டிற்கு 0.6% பெருக்கு வீதத்தில் அதிகரிக்கின்றது. இதே வீதத்தில் தொடர்ந்தால் 2000 -லிருந்து 2013-க்குள் எவ்வளவு டன்கள் தங்கம் உற்பத்தி செய்யப்பட்டிருக்கும்? [e0.078=1.0811)
-
-
ஒரு நிறுவனத்தின் இறுதிநிலை வருவாய் சார்பு MR=\(\frac { a }{ (x+b)^{ 2 } } \)-c. இங்கு x என்பது பொருள்களின் உற்பத்தி மற்றும் a, b, c என்பன மாறிலிகள் எனில், தேவைச் சார்பு x =\(\frac { a }{ b(p+c) } -b\)-b
-
ஒரு நிறுவனம் 30 நாள்களுக்கு ஒருமுறை 200 மகிழ்வுந்துகளை பெறுகிறது, அனுபவத்தில், சரக்கு கையிருப்பு, இருப்பு நாள்களுடன் தொர்புடையது எனத் தெரிகிறது. கடைசியில் பெறப்பட்ட சரக்கு முதலிருந்து
I(x)=200-0.2x. என்க. தினசரி சரக்கு தேக்கச் செலவு ரூ.3.5 எனில் 30 நாள்களுக்கான மொத்த தேக்கச் செலவை தொகையீடல் மூலம் காண்க.
-
-
திரு. அருள் என்பவர் ABC வங்கியில், ஒவ்வொரு ஆண்டிற்கும் ரூ.10,000 -ஐ ஆண்டிற்கு 10% கூட்டு வட்டியில் 5 ஆண்டுகளுக்கு செலுத்துகிறார். 5 ஆண்டுகளின் முடிவில் அவர் வங்கி கணக்கில் உள்ள மொத்த தொகை எவ்வளவு? (e0.5=1.6487)
-
ஒரு நிறுவனம் 200 தொழிலாளர்களைக் கொண்டு வாரத்திற்கு 50,000 அலகுப் பொருள்களை உற்பத்தி செய்கிறது. அதிகபடியான x- தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துவதன் மூலம் பொருளின் உற்பத்தி வீதச் சார்பு 300-5x2/3 ஆகும். 64 தொழிலாளர்களை மிகுதியாக வேலைக்கு அமர்த்துவதன் மூலம் அந்நிறுவனம் உற்பத்தி செய்யும் பொருள்களின் எண்ணிக்கையை காண்க.
-
காலணிகளின் உற்பத்தியின் எண்ணிக்கை x-ஐ பொறுத்த இறுதிநிலை செலவு 6+10x-6x2 என்க. ஒரு ஜோடி காலணிகள் உற்பத்திக்கான செலவு ரூ.12 எனில், மொத்தச் செலவு மற்றும் சராசரி செலவு ஆகியவற்றைக் காண்க.