St. Britto Hr. Sec. School - Madurai
12th கணிதவியல் மாதத் தேர்வு -2(வெக்டர் இயற்கணிதத்தின் பயன்பாடுகள்) -Aug 2020
-
-
-
-
-
-
3\(\hat { i }\)+4\(\hat { j }\)-5\(\hat { k }\) என்னும் விசை 4\(\hat { i }\)+2\(\hat { j }\)-3\(\hat { k }\) என்ற வெக்டரை நிலைவெக்டராகக் கொண்ட புள்ளி வழியாகச் செயல்படுகிறது எனில், 2\(\hat { i }\)-3\(\hat { j }\)+4\(\hat { k }\) என்ற வெக்டரை நிலைவெக்டராகக் கொண்ட புள்ளியைப் பொறுத்து அவ்விசையின் முறுக்குத் திறனின் எண்ணளவு மற்றும் திசைக்கொசைன்களைக் காண்க.
-
(2,2,1), (9,3,6) ஆகிய புள்ளிகள் வழிச் செல்லக்கூடியதும் 2x+6y+6z=9 என்ற தளத்திற்குச் செங்குத்தாக அமைவதுமான தளத்தின் துணையலகு வெக்டர் சமன்பாடு மற்றும் கார்டீசியன் சமன்பாடுகளைக் காண்க.
-
A (7,2,1), B (6,0,3), மற்றும் C (4,2,4) என்பன \(\Delta\)ABC -ன் உச்சிகள் எனில், \(\angle\)ABC -ஐக் காண்க.
-
\(\vec { r } =(2\hat { i } -\hat { j } +\hat { k } )+t(\hat { i } +2\hat { j } -2\hat { k } )\) என்ற கோட்டிற்கு \(\vec { r } =(6\hat { i } +3\hat { j } +2\hat { k } )=8\)என்ற தளத்திற்கும் இடைப்பட்ட கோணம் காண்க.
-
\(\vec { a }\)=\(\hat { i }\)-2\(\hat { j }\)+3\(\hat { k }\), \(\vec { b }\)=2\(\hat { i }\)+\(\hat { j }\)-2\(\hat { k }\), \(\vec { c }\)=3\(\hat { i }\)+2\(\hat { j }\)+\(\hat { k }\), எனில்
(i) \(\left( \vec { a } \times \vec { b } \right) \times \vec { c }\)
(ii) \(\vec { a } \times \left( \vec { b } \times \vec { c } \right)\)ஆகியவற்றைக் காண்க. -
\(\vec { r } =(5\hat { i } +7\hat { j } -3\hat { k } )+s(-4\hat { i } +4\hat { j } -5\hat { k } )\)மற்றும் \(\vec { r } =(8\hat { i } +4\hat { j } +5\hat { k } )+t(7\hat { i } +\hat { j } +3\hat { k } )\) ஆகிய கோடுகள் ஒரே தளத்தில் அமையும் எனக் காண்பிக்க. மேலும், இக்கோடுகள் அமையும் தளத்தின் துணையலகு அல்லாத வெக்டர் சமன்பாட்டைக் காண்க.
-
x + 2y + 3z = 2 மற்றும் x - y - z + 11 = 3 என்றதளங்களின் வெட்டுக்கோடு வழிச் செல்வதும், (3,1,-1) என்ற புள்ளியிலிருந்து \(\frac { 2 }{ \sqrt { 3 } } \) தொலைவில் உள்ளதுமான தளத்தின் சமன்பாட்டைக் காண்க.
-
-
ஒரே அடிப்பக்கத்தின் மீதமைந்த இரு இணைகோடுகளுக்கு இடைப்பட்ட இணைகரங்களின் பரப்பளவுகள் சமமானவை என வெக்டர் முறையில் நிறுவுக.
-
\(\vec { a }\), \(\vec { b }\), \(\vec { c }\) என்ற பூச்சியமற்ற மூன்று வெக்டர்களில் \(\vec { a }\), \(\vec { b }\) என்ற வெக்டர்களுக்கு செங்குத்தான அலகு வெக்டர் \(\vec { c }\) என்க. \(\vec { a }\), \(\vec { b }\) என்ற வெக்டர்களுக்கு இடைப்பட்ட கோணம் \(\frac { \pi }{ 6 }\) எனில், [\(\vec { a }\), \(\vec { b }\), \(\vec { c }\)]2=\(\frac { 1 }{ 4 }\)|\(\vec { a }\)|2 |\(\vec { b }\)|2 என நிறுவுக.
-
-
\(\vec { r } .(\hat { i } +\hat { j } -2\hat { k } )\) மற்றும் 2x - 2y + z =2 என்ற தளங்களுக்கு இடைப்பட்ட கோணம் காண்க.
-
(2,1,4) மற்றும் ( a-1, 4, -1) என்ற புள்ளிகளை இணைக்கும் நேர்க்கோடு (0,2,b−1) மற்றும் (5,3,-2) என்ற புள்ளிகளை இணைக்கும் நேர்க்கோட்டுக்கு இணை எனில், a மற்றும் b -ன் மதிப்புகளைக் காண்க.
-
a\(\hat { i }\)+a\(\hat { j }\)+c\(\hat { k }\), \(\hat { i }\)+\(\hat { k }\) மற்றும் c\(\hat { i }\)+c\(\hat { j }\)+b\(\hat { k }\) என்ற வெக்டர்கள் ஒரு தள வெக்டர்கள் எனில், a மற்றும் b ஆகியவற்றின் பெருக்குச் சராசரி c ஆகும் என நிரூபிக்க.
-
( 4,3,2) என்ற புள்ளியில் இருந்து x + 2y + 3z = 2 என்ற தளத்திற்கு வரையப்படும் செங்குத்தின் அடியின் அச்சுத்தூரங்களையும், செங்குத்தின் நீளத்தையும் காண்க.
-
(2,3,6) என்ற புள்ளி வழிச் செல்வதும் மற்றும் என்ற கோடுகளுக்கு இணையானதுமான தளத்தின் துணையலகு அல்லாத வெக்டர் சமன்பாடு மற்றும் கார்டீசியன் சமன்பாடுகளைக் காண்க.
-
\(\vec { r } =(\hat { i } -\hat { j } +3\hat { k } )+t(2\hat { i } -\hat { j } +4\hat { k } )\) என்ற கோட்டை உள்ளடக்கியதும் \(\vec { r } .(\hat { i } +2\hat { j } +\hat { k } )=8\) என்ற தளத்திற்குச் செங்குத்தானதுமான தளத்தின் துணையலகு வடிவ வெக்டர், மற்றும் கார்டீசியன் சமன்பாடுகளைக் காண்க.
-
8\(\hat { i }\)-6\(\hat { j }\)-4\(\hat { k }\) என்ற வெக்டரை நிலை வெக்டராகக் கொண்ட புள்ளியில் செயல்படும் -3\(\hat { i }\)+6\(\hat { j }\)-3\(\hat { k }\), 4\(\hat { i }\)-10\(\hat { j }\)+12\(\hat { k }\) மற்றும் 4\(\hat { i }\)+7\(\hat { j }\) விசைகளின் திருப்புத்திறனை 18\(\hat { i }\)+3\(\hat { j }\)-9\(\hat { k }\) என்ற வெக்டரை நிலை வெக்டராகக் கொண்ட புள்ளியைப் பொறுத்துக் காண்க.
-
\(\vec { b }\), \(\vec { c }\) என்ற வெக்டர்களால் உருவாக்கப்படும் இணைகரத்தை அடிப்பக்கமாக எடுத்துக்கொண்டு \(\vec { a }\) = -2\(\hat { i }\)+5\(\hat { j }\)+3\(\hat { k }\), \(\vec { b }\) = \(\hat { i }\)+3\(\hat { j }\)-2\(\hat { k }\), மற்றும் \(\vec { c }\) = -3\(\hat { i }\)+\(\hat { j }\)+4\(\hat { k }\) என்ற வெக்டர்களால் உருவாக்கப்படும் இணைகரத் திண்மத்தின் உயரத்தைக் காண்க.
-
\(\frac { x-1 }{ 1 } =\frac { y-2 }{ 1 } =\frac { z-3 }{ { m }^{ 2 } } \) மற்றும் \(\frac { x-3 }{ 1 } =\frac { y-2 }{ { m }^{ 2 } } =\frac { z-1 }{ 2 } \) ஆகிய கோடுகள் ஒரே தளத்தில் அமைகின்றன எனில், m-ன் வேறுபட்ட மெய்மதிப்புக்களைக் காண்க.
-
வெக்டர் முறையில் cos (\(\alpha\) - \(\beta\)) = cos \(\alpha\) cos \(\beta\) + sin \(\alpha\) sin \(\beta\) என நிறுவுக.
-
2\(\hat { i }\)+3\(\hat { j }\)+\(\hat { k }\), \(\hat { i }\)-2\(\hat { j }\)+2\(\hat { k }\), மற்றும் 3\(\hat { i }\)+\(\hat { j }\)+3\(\hat { k }\) என்ற மூன்று வெக்டர்கள் ஒரு தள வெக்டர்களாகுமா எனக் காண்க.
-
\(\vec { a }\) = \(\hat { i }\)-\(\hat { k }\), \(\vec { b }\) = x\(\hat { i }\)+\(\hat { j }\)+(1-x)\(\hat { k }\), \(\vec { c }\) = y\(\hat { i }\)+x\(\hat { j }\)+(1+x-y)\(\hat { k }\), எனில், [\(\vec { a }\), \(\vec { b }\), \(\vec { c }\)] என்பது x -யையும் y -யையும் பொறுத்து அமையாது என நிரூபிக்க.
-
\(\frac { x-3 }{ -4 } =\frac { y-4 }{ -7 } =\frac { z-3 }{ 12 } \) என்ற கோடு 5x - y + z = 8 என்ற தளத்தில் அமையுமா எனச்சரிபார்க்க
-
\(\vec { a } ,\vec { b } ,\vec { c } \) என்பன மூன்று வெக்டர்கள் எனில் \([\vec { a } +\vec { c } ,\vec { a } +\vec { b } ,\vec { a } +\vec { b } +\vec { c } ]\) = \([\vec { a } ,\vec { b } ,\vec { c } ]\) என நிரூபிக்க.
-
\(\vec { r } =(\hat { i } +2\hat { j } +4\hat { k } )+t(2\hat { i } +2\hat { j } +\hat { k } )\)என்ற கோட்டிற்கும் (5,1,4) மற்றும் (9,2,12) என்ற புள்ளிகளை இணைக்கும் கோட்டிற்கும் இடைப்பட்ட கோணம் காண்க.
-
ஒரு நேர்க்கோடு (1,2,3) என்ற புள்ளி வழியாகச் செல்கிறது \(4\hat { i } +5\hat { j } -7\hat { k } \)மற்றும் என்ற வெக்டருக்கு இணையாக உள்ளது எனில், அக்கோட்டின் (i) துணை அலகு வெக்டர் சமன்பாடு (ii) துணை அல்லாத வெக்டர் சமன்பாடு (iii) கார்டீசியன் சமன்பாடுகளைக் காண்க.
-
-
\(\vec { a } ,\vec { b } ,\vec { c } \) என்ற வெக்டர்கள் ஒரு தள வெக்டர்கள் எனில, \(\vec { a } +\vec { b } ,\vec { b } +\vec { c } ,\vec { c } +\vec { a } \) என்ற வெக்டர்களும் ஒரு தள வெக்டர்களாகும் என நிறுவுக.
-
ஆதியில் இருந்து 12 அலகுகள் தூரத்தில் இருப்பதும் \(6\hat { i } +2\hat { j } -3\hat { k } \) என்ற வெக்டருக்குச் செங்குத்தானதாகவும் உள்ள தளத்தின் வெக்டர் மற்றும் கார்டீசியன் சமன்பாடுகளைக் காண்க.
-
-
ஒரு நேர்க்கோட்டின் துணையலகு வெக்டர் \(\vec { r } =(3\hat { i } -2\hat { j } +6\hat { k } )+(2\hat { i } -\hat { j } +3\hat { k } )\)சமன்பாடு எனில், அக்கோட்டின் (i) திசைக்கொசைன்கள் (ii) துணையலகு அல்லாத வெக்டர் சமன்பாடு (iii) கார்டீசியன் சமன்பாடுகள் ஆகியவற்றைக் காண்க.
-
\(\frac { x-1 }{ 4 } =\frac { 2-y }{ 6 } =\frac { z-4 }{ 12 } \)மற்றும் \(\frac { x-3 }{ -2 } =\frac { y-3 }{ 3 } =\frac { 5-z }{ 6 } \)என்ற கோடுகள் இணையானவை என நிறுவுக.
-
ஒரு நகரும் தளம் ஆய அச்சுக்களில் ஏற்படுத்தும் வெட்டுத் துண்டுகளின் தலைகீழிகளின் கூடுதல் ஒரு மாறிலியாக இருக்குமாறு நகர்கிறது எனில், அத்தளமானது ஒரு நிலைத்த புள்ளி வழியாகச் செல்கிறது எனக்காட்டுக.
-
\(2\hat { i } -\hat { j } +3\hat { k } ,3\hat { i } +2\hat { j } +\hat { k } ,\hat { i } +m\hat { j } +4\hat { k } \) என்ற வெக்டர்கள் ஒரு தள வெக்டர்கள் எனில், m -ன் மதிப்புக் காண்க.
-
\(2\hat { i } -3\hat { j } +4\hat { k } ,\hat { i } +2\hat { j } -\hat { k } \) மற்றும் \(3\hat { i } -\hat { j } +2\hat { k } \) என்ற ன்ற வெக்டர்களை ஒரு முனையில் சந்திக்கும் விளிம்புகளாகக் கொண்ட இணைகரத் திண்மத்தின் கனஅளவினைக் காண்க.