A, B, C மற்றும் D ஆகியோர் ஒரு கூட்டாண்மை நிறுவனத்தின் கூட்டாளிகள். நிறுவனத்தில் கூட்டாண்மை ஒப்பாவணம் ஏதுமில்லை. பின்வருவனவற்றை எவ்வாறு மேற்கொள்வீர்கள்?
(i) A அதிக முதல் வழங்கியுள்ளார். அவர் முதல் மீது வட்டி ஆண்டுக்கு 12% கோருகிறார்.
(ii) B ஒவ்வொரு மாதமும் ரூ.1,000 எடுத்துக் கொள்கிறார். ஏனைய கூட்டாளிகள் B-யிடம் நிறுவனத்திற்கு ஆண்டுக்கு 10% எடுப்புகள் மீது வட்டி அளிக்குமாறு கேட்கிறார்கள். ஆனால், B அதனை ஒப்புக்கொள்ளவில்லை.
(iii) C யிடமிருந்து நிறுவனத்திற்கு பெறப்பட்ட கடன் ரூ.10,000. அவர் கடன் மீது வட்டி ஆண்டுக்கு 9% வேண்டுமென்று கோருகிறார். A மற்றும் B அதனை ஒப்புக்கொள்ளவில்லை.
(iv) D தனது முழு நேரத்தையும் தொழிலில் செலவிடுவதால் அவர் ஒவ்வொரு மாதமும் ரூ.5,000 ஊதியம் வேண்டுமென்று கோருகிறார். B மற்றும் C அதனை ஒப்புக்கொள்ளவில்லை.
(v) A, இலாபத்தினை முதல் விகிதத்தில் பகிர்ந்தளிக்க வேண்டும் என்கிறார். ஆனால் B, C மற்றும் D அதனை ஒப்புக்கொள்ளவில்லை.