சுதா நிறுமம் ரூ.10 மதிப்புள்ள 1,00,000 பங்குகளை விண்ணப்பத்தின் போது ரூ.3, ஒதுக்கீட்டின் போ து ரூ.4, மீதமுள்ள தொகை தேவையானபபொழுது என்ற அடிப்படையில் பொதுமக்களுக்கு வெளியிட்டது. 1,40,000 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அவற்றை இயக்குனர்கள் பின்வருமாறு ஒதுக்கீடு செய்தனர்
60,000 பங்குகளுக்கான விண்ணப்பதாரர்களுக்கு - முழுமையாக
75,000 பங்குகளுக்கான விண்ணப்பதாரர்களுக்கு - 40,000 பங்குகள் (மிகுதியான விண்ணப்ப பணம் ஒதுக்கீட்டிற்கு பயன்படுத்தப்படும்)
5,000 பங்குகளுக்கான விண்ணப்பதாரர்களுக்கு - எதுவுமில்லை
அனைத்து தொகைகளும் பெறப்பட்டன. ஒதுக்கீட்டுத் தொகை பெறுவது வரையிலான குறிப்பேட்டுப் பதிவுகளைத் தரவும்.