St. Britto Hr. Sec. School - Madurai
12th கணக்குப்பதிவியல் வாரத் தேர்வு -1(கூட்டாளி சேர்ப்பு)-Aug 2020
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
வீணா மற்றும் பியர்ல் ஒரு நிறுவனத்தின் கூட்டாளிகள். முறையே 2:1 எனும் விகிதத்தில் இலாபம் பகிர்ந்து வந்தனர். அவர்களின் 2018, மார்ச் 31 ஆம் நாளைய இருப்புநிலைக் குறிப்பு பின்வருமாறு:
பொறுப்புகள் ரூ. ரூ. சொத்துகள் ரூ. முதல் கணக்குகள்: கட்டடம் 60,000 வீணா 60,000 இயந்திரம் 30,000 பியர்ல் 40,000 1,00,000 கடனாளிகள் 20,000 காப்பு நிதி 30,000 சரக்கிருப்பு 10,000 தொழிலாளர் ஈட்டு நிதி 10,000 வங்கி ரொக்கம் 30,000 பற்பல கடனீந்தோர் 10,000 1,50,000 1,50,000 01-04-2018 அன்று டெரி என்பவர் பின்வரும் நிபந்தனைக்குட்பட்டு கூட்டாளியாகச் சேர்க்கப்பட்டார்.
(i) வீணா, பியர்ல் மற்றும் டெரியின் புதிய இலாபப்பகிர்வு விகிதம் 5:3:2 ஆகும்.
(ii) டெரி ரூ.30,000 முதலாக கொண்டு வர வேண்டும்.
(iii) சரக்கிருப்பின் மதிப்பை 20% குறைக்க வேண்டும்.
(iv) தொழிலாளர் ஈட்டு நிதி மீது எதிர்பார்க்கப்படும் கோருரிமை ரூ.1,000.
(v) பதிவுறா முதலீடுகள் ரூ.11,000 ஏடுகளில் கொண்டுவரப்பட வேண்டும்.
(vi) நிறுவனத்தின் நற்பெயர் ரூ.30,000 என மதிப்பிடப்பட்டது. டெரி தன்னுடைய நற்பெயரின் பங்கினை ரொக்கமாக கொண்டுவந்தார். டெரி நற்பெயராகக் கொண்டு வந்த தொகை முழுவதையும் பழைய கூட்டாளிகள் எடுத்துக் கொண்டனர்.
தேவையான பேரேட்டு கணக்குகள் மற்றும் சேர்ப்பிற்கு பின் உள்ள இருப்புநிலைக் குறிப்பினை தயார் செய்யவும். -
வெற்றி மற்றும் இரஞ்சித் இருவரும் கூட்டாளிகள். அவர்கள் 3:2 எனும் விகிதத்தில் இலாபம் பகிர்ந்து வந்தனர். அவர்களது 31-12-2017 நாளன்றைய இருப்புநிலைக் குறிப்பு பின்வருமாறு இருந்தது.
பொறுப்புகள் ரூ. ரூ. சொத்துகள் ரூ. முதல் கணக்குகள் அறைகலன் 25,000 வெற்றி 30,000 சரக்கிருப்பு 20,000 இரஞ்சித் 20,000 50,000 கடனாளிகள் 10,000 காப்பு நிதி 5,000 கைரொக்கம் 35,000 பற்பல கடனீந்தோர் 45,000 இலாப நட்ட க/கு (நட்டம்) 10,000 1,00,000 1,00,000 பின்வரும் சரிக்கட்டுதல்களில் 01.01.2018 அன்று சூரியா என்பவர் நிறுவனத்தின் புதிய கூட்டாளியாக சேர்கிறார்.
(i) சூரியா 1/4 இலாபப் பங்கிற்காக ரூ.10,000 முதல் கொண்டுவருகிறார்.
(ii) சரக்கிருப்பு 10% குறைத்து மதிப்பிடப்படுகிறது.
(iii) கடனாளிகள் ரூ.7,500 என மதிப்பிடப்படுகிறது.
(iv) அறைகலன் மதிப்பு ரூ.40,000 என மாற்றி அமைக்கப்படுகிறது.
(v) கொடுபட வேண்டிய கூலி ரூ.4,500 இதுவரை பதிவு செய்யப்படவில்லை.
புதிய கூட்டாளி சேர்க்கைக்கு பின் நிறுவனத்தின் மறுமதிப்பீடு கணக்கு, கூட்டாளிகளின் முதல் கணக்கு மற்றும் இருப்புநிலைக் குறிப்பு தயார் செய்யவும்.