St. Britto Hr. Sec. School - Madurai
12th கணக்குப்பதிவியல் மாதிரி தேர்வு -2-Aug 2020
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
முழுமை பெறா பதிவேடுகளின் இயல்புகள் யாவை?
-
சானியா நிறுமத்தின் கொடுக்கப்பட்ட தகவல்களிலிருந்து சரக்கிருப்பு சுழற்சி விகிதம் மற்றும் சரக்கிருப்பு மாற்று காலத்தை (மாதங்களில்) கணக்கிடவும்.
விவரம் ரூ. விற்பனை மூலம் பெற்ற வருவாய் 1,90,000 அவ்வாண்டில் தொடக்கச் சரக்கிருப்பு 40,000 அவ்வாண்டில் இறுதிச் சரக்கிருப்பு 20,000 அவ்வாண்டில் மேற்கொண்ட கொள்முதல் 90,000 உள்தூக்குக்கூலி 10,000
-
-
பின்வரும் விவரங்களைக் கொண்டு அவ்வாண்டின் மொத்த விற்பனையை கண்டறியவும்:
விவரம் ரூ. 2018, ஏப்ரல் 1 அன்று கடனாளிகள் 50,000 அவ்வாண்டில் கடனாளிகளிடமிருந்து பெற்ற ரொக்கம் 1,50,000 உள்திருப்பம் 15,000 வாராக்கடன் 5,000 2019, மார்ச் 31 அன்று கடனாளிகள் 70,000 ரொக்க விற்பனை 1,40,000 -
டெல்ஃபி நிறுமத்திடமிருந்து பெறப்பட்ட பின்வரும் தகவல்களிலிருந்து
(i) சரக்கிருப்பு சுழற்சி விகிதம்
(ii) கணக்குகள் மூலம் பெற வேண்டியவைகளின் சுழற்சி விகிதம்
(iii) கணக்குகள் மூலம் செலுத்தப்பட வேண்டியவைகளின் சுழற்சி மற்றும்
(iv) நிலைச் சொத்துகள் சுழற்சி விகிதம் கணக்கிடவும்.விவரம் 2018, மார்ச் 31
ரூ.2019, மார்ச் 31
ரூ.சரக்கிருப்பு 1,40,000 1,00,000 கணக்குகள் மூலம் பெற வேண்டியவைகள் 80,000 60,000 கணக்குகள் மூலம் செலுத்த வேண்டியவைகள் 40,000 50,000 நிலைச் சொத்துகள் 5,50,000 5,00,000 கூடுதல் தகவல்கள்:
(i) அவ்வாண்டில் விற்பனை மூலம் பெற்ற வருவாய் ரூ.10,50,000
(ii) அவ்வாண்டின் கொள்முதல் ரூ.4,50,000
(iii) விற்பனை மூலம் பெற்ற வருவாய்க்கான அடக்கவிலை ரூ.6,00,000.
விற்பனை மற்றும் கொள்முதலை கடன் நடவடிக்கைகளாகக் கருதவும். -
ரமேஷ் மற்றும் ராஜு என்ற இரு கூட்டாளிகள் 2:1 என்ற விகிதத்தில் இலாப நட்டத்தைப் பகிர்ந்து வந்தனர். அவர்கள் ரஞ்சன் என்பவரை 1/4 பங்குக்கு கூட்டாளியாகச் சேர்த்தனர். ரஞ்சன் அவரது பங்கை பழைய கூட்டாளிகளிடமிருந்து 3:2 என்ற விகிதத்தில் வாங்கினார். புதிய இலாபப் பகிர்வு விகிதம் மற்றும் தியாக விகிதம் கணக்கிடவும்.
-
பின்வரும் விவரங்களிலிருந்து கடன் விற்பனையைக் கண்டறியவும்:
விவரம் ரூ. 2018, ஜனவரி 1 அன்று கடனாளிகள் 40,000 கடனாளிகளிடம் பெற்ற ரொக்கம் 1,00,000 அளித்த தள்ளுபடி 5,000 விற்பனைத் திருப்பம் 2,000 2018, டிசம்பர் 31 அன்று கடனாளிகள் 60,000 -
ஆஷிகா நிறுமத்தின் பின்வரும் தகவல்களிலிருந்து நிலைச் சொத்துகள் சுழற்சி விகிதத்தைக் கணக்கிடவும்.
அவ்வாண்டில் விற்பனை மூலம் பெற்ற வருவாய் ரூ.60,00,000.
அவ்வாண்டின் இறுதியில் நிலைச்சொத்துகள் ரூ.6,00,000. -
இயக்க இலாபம் எவ்வாறு கண்டறியப்படுகிறது?
-
தங்கள் இலாப நட்டங்களை 3:4 என்ற இலாபவிகிதத்தில் பகிர்ந்து வரும் பிருந்தா மற்றும் பிரவீனா என்ற கூட்டாளிகளின் பின்வரும் இருப்புநிலைக் குறிப்பிலிருந்து 2017, டிசம்பர் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய முதல் மீது வட்டி ஆண்டுக்கு 6 % கணக்கிடவும்.
2017, டிசம்பர் 31 ஆம் நாளைய இருப்புநிலைக் குறிப்பு பொறுப்புகள் ரூ. சொத்துகள் ரூ. முதல்கணக்குகள்: பல்வகைச் சொத்துகள் 80,000 பிருந்தா 30,000 பிரவீனா 40,000 இலாப நட்டப் பகிர்வு க/கு 10,000 80,000 80,000 2017, ஜுலை 1 அன்று பிருந்தா கொண்டு வந்த கூடுதல் முதல் ரூ.6,000 மற்றும் 2017, அக்டோபர் 1 அன்று பிரவீனா கொண்டு வந்த கூடுதல் முதல் ரூ.10,000. அவ்வாண்டில் பிருந்தா மற்றும் பிரவீனா எடுப்புகள் முறையே ரூ.5,000 மற்றும் ரூ.7,000. அவ்வாண்டில் ஈட்டிய இலாபம் ரூ.31,000.
-
விமல் மற்றும் ஆதி என்ற இரு கூட்டாளிகள் 2:1 என்ற விகிதத்தில் இலாப நட்டத்தைப் பகிர்ந்து வந்தனர். அவர்கள் ஜெயம் என்பவரை 1/4 பங்குக்கு கூட்டாளியாகச் சேர்த்தனர். புதிய இலாபப் பகிர்வு விகிதம் மற்றும் தியாக விகிதம் கணக்கிடவும்.
-
அமுதா மற்றும் புவனா இருவரும் கூட்டாளிகள். அவர்கள் 5:3 என்ற விகிதத்தில் இலாப-நட்டம் பகிர்ந்து வந்தனர். சித்ரா 3/8 பங்கு விகிதத்தில் புதிய கூட்டாளியாக சேர்கிறார். அப்போது ரூ.8,000 தமது நற்பெயர் பங்களிப்பாக கொண்டு வருகிறார். அவர்கள் மாறுபடும் முதல் முறையில் கணக்கினை பராமரிக்கின்றனர். நற்பெயருக்கென தொகை முழுவதையும் அவர்கள் எடுத்துக்கொள்கிறார்கள். நற்பெயரைச் சரிகட்டத் தேவையான குறிப்பேட்டுப்பதிவுகளை உருவாக்கவும்.
-
-
ஆகாஷ், முகேஷ் மற்றும் சஞ்சய் என்ற கூட்டாளிகள் 3:2:1 என்ற விகிதத்தில் இலாபங்கள் மற்றும் நட்டங்களைப் பகிர்ந்து வந்தனர். 2017, மார்ச் 31 அன்று அவர்களுடைய இருப்புநிலைக் குறிப்பு பின்வருமாறு:
பொறுப்புகள் ரூ ரூ சொத்துகள் ரூ முதல் கணக்குகள் கட்டடம் 1,10,000 ஆகாஷ் 40,000 வாகனம் 30,000 முகேஷ் 60,000 சரக்கிருப்பு 26,000 சஞ்சய் 30,000 1,50,000 கடனாளிகள் 25,000 இலாபநட்டப் பகிர்வு க/கு 12,000 கைரொக்கம் 15,000 பொதுக்காப்பு 24,000 தொழிலாளர் ஈட்டு நிதி 18,000 செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டு 2,000 2,06,000 2,06,000 பகிர்ந்து தரா இலாபத்தினைப் பதிவு செய்யும் குறிப்பேட்டுப் பதிவினைத் தரவும்
-
முகேஷ் நிறுமத்தின் பின்வரும் இலாபம் நட்ட அறிக்கையிலிருந்து
(I) மொத்த இலாப விகிதம்
(ii) நிகர இலாப விகிதம் கணக்கிடவும்.முகேஷ் நிறுமத்தின் இலாப நட்ட அறிக்கை விவரம் தொகை
ரூ.I. விற்பனை மூலம் பெற்ற வருவாய் 5,00,000 II. இதர வருமானம் முதலீடு மூலம் வருவாய் 40,000 III. மொத்த வருவாய் (I + II) 5,40,000 IV. செலவுகள் கொள்முதல் செய்த சரக்குகள் 1,80,000 சரக்கிருப்பு மாற்றம் 20,000 பணியாளர் நலன்களுக்கான செலவுகள் 30,000 இதர செலவுகள் 1,10,000 வரி ஒதுக்கு 50,000 மொத்த செலவுகள் 3,90,000 V. அவ்வாண்டிற்கான இலாபம் 1,50,000
-
-
இராணி, ஜெயா மற்றும் ரதி என்ற கூட்டாளிகள் தங்கள் இலாபம் மற்றும் நட்டங்களை 2:2:1 என்ற விகிதத்தில் பகிர்ந்து வந்தனர். 31.3.2018 அன்று ரதி என்பவர் கூட்டாண்மையை விட்டு விலகினார். முந்தைய ஆண்டுகளின் இலாபம் பின்வருமாறு:
2014: ரூ.10,000; 2015: ரூ.20,000; 2016: ரூ.18,000 மற்றும் 2017: ரூ.32,000 2018 ஆம் ஆண்டில் கூட்டாளி விலகல் நாள் வரையிலான இலாபத்தில் ரதிக்குரிய இலாபப் பங்கினை கீழ்க்கண்ட நிலைகளில் தயாரிக்கவும்.
(i) இலாபம் முந்தைய ஆண்டுகளின் இலாபத்தின் அடிப்படையில் பகிர்ந்தளிக்கப்ப்கப்படுவதாக இருந்தால்
(ii) இலாபம் கடந்த நான்கு ஆண்டுகளின் சராசரி இலாபத்தின் அடிப்படையில் பகிர்ந்தளிக்கப் படுவதாக இருந்தால்
மேலும் மாறுபடும் முதல் முறை எனக்கொண்டு, தேவையான குறிப்பேட்டுப் பதிவுகள் தரவும். -
வன்பொருள் வியாபாரம் செய்துவரும் அருண் என்பவர் தன்னுடைய ஏடுகளை இரட்டைப்பதிவு முறையில் பராமரிப்பதில்லை. அவருடைய ஏடுகளிலிருந்து பெறப்பட்ட தகவல்கள் பின்வருமாறு:
விவரம் 31.12.2017
ரூ.31.12.2018
ரூ.நிலம் மற்றும் கட்டடம் 2,40,000 2,40,000 சரக்கிருப்பு 1,20,000 1,70,000 கடனாளிகள் 40,000 51,500 கடனீந்தோர் 50,000 45,000 வங்கி ரொக்கம் 30,000 53,000 31.12.2018 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டின் பிற தகவல்கள் பின்வருமாறு:
கூலி 65,000 வெளித் தூக்குக்கூலி 7,500 பற்பல செலவுகள் 28,000 கடனீந்தோருக்கு அளித்த ரொக்கம் 6,00,000 எடுப்புகள் 10,000 அவ்வாண்டுக்குரிய மொத்த விற்பனை ரூ. 7,70,000. அவ்வாண்டின் கொள்முதல் திருப்பம் ரூ. 30,000 மற்றும் விற்பனைத் திருப்பம் ரூ. 25,000. நிலம் மற்றும் கட்டடங்கள் மீது 5% தேய்மானம் நீக்கவும். ரூ. 1,500 –க்கு ஐயக்கடன் ஒதுக்கு உருவாக்கவும். 2018, டிசம்பர் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய வியாபார மற்றும் இலாபநட்டக் கணக்கு மற்றும் அந்நாளைய இருப்புநிலைக் குறிப்பு தயாரிக்கவும்.
-
அஞ்சலி மாவு அரைக்கும் வரையறு நிறுமம் பங்கு ஒன்று ரூ.10 வீதம் ரூ.4,00,000 அங்கீகரிக்கப்பட்ட முதல் திரட்டுவதற்கென வெளியிட்டது. அதில், 30,000 பங்குகளை விண்ணப்பத்துடன் ரூ.2, ஒதுக்கீட்டில் ரூ.5 மற்றம் முதலாவது அழைப்பில் ரூ.3 பெறப்பட வேண்டும். அனைத்து பங்குகளும் ஒப்பப்பட்டன. அனைத்து தொகைகளும் பெறப்பட்டன. ஆனால், ஒதுக்கீட்டில், 500 பங்குள்ள ஒரு பங்குதாரர் முழுவதுமான தனது தொகையினை செலுத்திவிட்டார். குறிப்பேட்டுப் பதிவினைத் தரவும்.
-
முத்து வரையறு நிறுமம் பங்கு ஒன்று ரூ.10 வீதம் ரூ.50,000 பங்குகளை பின்வருமாறு செலுத்தும் வண்ணம் வெளியிட்டது.
விண்ணப்பத்தின் மீது ` 2, ஒதுக்கீட்டின் மீது ` 4, முதல் மற்றும் இறுதி அழைப்பின் மீது ரூ.4, 1000 பங்குகள் வைத்துள்ள ஒருவர் அழைப்புத் தொகையை செலுத்தவில்லை. இதைத்தவிர, ஏனைய அனைத்து தொகைககைகளும் பெறப்பட்டன. அழைப்பு நிலுவை கணக்கினைப் பயன்படுத்தி அழைப்புக்கான குறிப்பேட்டுப் பதிவுகளைத் தரவும்.