St. Britto Hr. Sec. School - Madurai
12th கணக்குப்பதிவியல் மாதத் தேர்வு -4(கூட்டாளி விலகல் மற்றும் கூட்டாளி இறப்பு)-Aug 2020
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
ரம்யா, சாரா மற்றும் தாரா என்ற கூட்டாளிகள் முறையே 5:3:2 எனும் விகிதத்தில் இலாப நட்டம் பகிர்ந்து வந்தனர். 2018, ஏப்ரல் 1 அன்று தாரா கூட்டாண்மையிலிருந்து விலகினார். பின்வரும் சரிக்கட்டுதல்கள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
i) வளாகத்தின் மதிப்பை ரூ. 40,000 உயர்த்த வேண்டும்
ii) சரக்கிருப்பு ரூ.3,000, இயந்திரம் ரூ. 6,500 மதிப்பு குறைக்க வேண்டும்.
iii) கொடுபடாச் செலவுகள் ரூ. 500 ஒதுக்கு உருவாக்க வேண்டும்.
குறிப்பேட்டுப் பதிவுகள் தந்து மறுமதிப்பீட்டுக் கணக்கு தயாரிக்கவும். -
மேரி, மீனா மற்றும் மரியம் எனும் கூட்டாளிகள் ஒரு கூட்டாண்மை நிறுவனத்தில் இலாபநட்டங்களை சமமாகப் பகிர்ந்து வந்தனர். 1-1-2019 அன்று மேரி கூட்டாண்மையிலிருந்து விலகினார். அந்நாளில், அந்நிறுவனத்தின் இருப்புநிலைக் குறிப்பு சொத்துகள் பக்கத்தில் ரூ. 75,000 பகிர்ந்து தரா நட்டம் எனக் காட்டியது. பகிர்ந்து தரா நட்டத்தைப் பகிர்ந்தளிப்பதற்கான குறிப்பேட்டுப் பதிவினைத் தரவும்.
-
விவின், ஹரி மற்றும் ஜாய் என்ற கூட்டாளிகள் 3:2:1 எனும் விகிதத்தில் இலாபம் பகிர்ந்து வருகின்றனர்.
31-3-2017 அன்று ஹரி விலகினார். அவர் விலகிய நாளில், நிறுவனத்தின் ஏடுகளில் பொதுக்காப்பு
ரூ.60,000 காட்டியது. பொதுக்காப்பு மாற்றுவதற்கான குறிப்பேட்டுப் பதிவைத் தரவும். -
இராஜா, ரோஜா மற்றும் பூஜா எனும் கூட்டாளிகள் 4:5:3 எனும் விகிதத்தில் இலாபம் பகிர்ந்து வந்தனர். நிறுவனத்திலிருந்து ரோஜா என்பவர் விலகினார். புதிய இலாப விகிதத்தையும் மற்றும் ஆதாய விகிதத்தையும் கணக்கிடவும்.
-
நரேஷ், மணி மற்றும் முத்து ஆகிய கூட்டாளிகள் 2:2:1 எனும் விகிதத்தில் இலாபம் பகிர்ந்து வந்தனர். 2019 மார்ச் 31ஆம் நாள் நிறுவனத்திலிருந்து முத்து விலகினார். முத்து விலகிய நாளன்று, ஏடுகளில் நற்யெர் ரூ.40,000 எனக் காட்டியது. அவர்கள் முதல் மாறுபடும் முதல் எனக் கொண்டு, தேவையான குறிப்பேட்டுப் பதிவுகளைத் தரவும்.
அ) நற்பெயர் முழுவதையும் போக்கெழுத கூட்டாளிகள் முடிவெடுத்தால்
ஆ) நற்பெயரில் பாதித்தொகையை போக்கெழுத கூட்டாளிகள் முடிவெடுத்தால் -
கூட்டாளி விலகலின்போது செய்யப்பட வேண்டிய சரிக்கட்டுதல்களை பட்டியலிடவும்.
-
தியாக விகிதத்திற்கும் ஆதாய விகிதத்திற்கும் இடையே உள்ள வேறுபாடுகள் யாவை?
-
ஜஸ்டினா, நவி மற்றும் ரித்திகா எனும் கூட்டாளிகள் இலாப நட்டங்களை சமமாகப் பகிர்ந்து வந்தனர். 31.3.2019 அன்று ரித்திகா என்பவர் கூட்டாண்மையிலிருந்து விலகினார். முந்தைய ஆண்டுகளின் இலாபம் பின்வருமாறு.
2016: ரூ.5,000; 2017: ரூ.10,000; 2018: ரூ.30,000; 2019 ஆம் ஆண்டிற்கான ரித்திகாவின் இலாபப் பங்கை அவர் விலகும் நாள் வரை பின்வரும் நிலைகளில் கணக்கிடவும்.
(அ) முந்தைய ஆண்டின் இலாபத்தை அடிப்படையாகக் கொண்டு இலாபத்தைப் பகிர்ந்தளிக்க வேண்டும்.
(ஆ) கடந்த மூன்று ஆண்டுகளின் சராசரி இலாபத்தை அடிப்படையாகக் கொண்டு இலாபத்தைப் பகிர்ந்தளிக்க வேண்டும்.
மேலும், கூட்டாளிகளின் முதல் கணக்கு மாறுபடும் முதல் முறை எனக் கொண்டு தேவையான குறிப்பேட்டுப் பதிவுகளைத் தரவும். -
ஆர்யா, பெனின் மற்றும் சார்லஸ் என்ற கூட்டாளிகள் முறையே 3:3:2 எனும் விகிதத்தில் இலாபம் பகிர்ந்து வந்தனர். அவர்களில் சார்லஸ் என்பவர் விலகினார். அவருடைய பங்கு முழுவதையும் ஆர்யா எடுத்துக் கொண்டார். ஆர்யா மற்றும் பெனின் ஆகியோரின் புதிய இலாப விகிதம் மற்றும் ஆதாய விகிதத்தைக் கணக்கிடவும்.
-
குமார், கேசவன் மற்றும் மனோகர் எனும் கூட்டாளிகள் முறையே \(\frac {1}{2},\frac {1}{3}\) மற்றும் \(\frac {1}{6}\) எனும் விகிதத்தில் இலாபம் பகிர்ந்து வந்தனர். மனோகர் விலகினார். அவருடைய பங்கினை குமார் மற்றும் கேசவன் இருவரும் சமமாக எடுத்துக் கொண்டனர். புதிய இலாப விகிதத்தையும் மற்றும் ஆதாய விகிதத்தையும் கணக்கிடவும்
-
ராகுல், ரவி மற்றும் ரோஹித் எனும் கூட்டாளிகள் முறையே 5 : 3 : 2 என்ற விகிதத்தில் இலாபம் பகிர்ந்து வந்தனர். அவர்களில் ரோஹித் விலகினார். அவருடைய பங்கு ராகுல் மற்றும் ரவி ஆகியோரால் 3: 2 எனும் விகிதத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டது. புதிய இலாப விகிதம் மற்றும் ஆதாய விகிதம் கணக்கிடவும்.
-
வெளிச்செல்லும் கூட்டாளிக்குச் செலுத்தவேண்டிய தொகையினை எவ்வாறு தீர்வு செய்யலாம்?
-
சுரேஷ், செந்தாமரை மற்றும் இராஜ் ஆகியோர் ஒரு நிறுவனத்தின் இலாப நட்டங்களை 3:2:1 எனும் விகிதத்தில் பகிர்ந்து வந்தனர். சுரேஷ் என்பவர் அக்கூட்டாண்மையிலிருந்து விலகினார். அவர் விலகிய நாளில் நிறுவனத்தின் நற்பெயர் ` 36,000 என மதிப்பிடப்பட்டது. கூட்டாளிகளின் முதல் கணக்குகள் மாறுபடும் முதல் எனக் கொண்டு நற்பெயர் பதிவிற்கான தேவையான குறிப்பேட்டுப் பதிவுகளைத் தரவும்.