ரகு மற்றும் சாம் எனும் கூட்டாளிகள் முறையே 3:2 எனும் விகிதத்தில் இலாப நட்டம் பகிர்ந்து வந்தனர். 2017 மார்ச் 31 அன்று அவர்களின் இருப்புநிலைக் குறிப்பு பின்வருமாறு:
பொறுப்புகள் |
ரூ. |
ரூ. |
சொத்துகள் |
ரூ. |
ரூ. |
முதல் கணக்குகள் |
|
|
இயந்திரம் |
|
30,000 |
ரகு |
40,000 |
|
அறைகலன் |
|
10,000 |
சாம் |
30,000 |
70,000 |
சரக்கிருப்பு |
|
10,000 |
பற்பல கடனீந்தோர் |
|
30,000 |
கடனாளிகள் |
21,000 |
|
|
|
|
கழிக்க: வாரா |
|
|
|
|
|
ஐயக்கடன் ஒதுக்கு |
1,000 |
20,000 |
|
|
|
வங்கி |
|
30,000 |
|
|
1,00,000 |
|
|
1,00,000 |
1.4.2017 அன்று பின்வரும் நிபந்தனைகளுக்குட்பட்டு பிரகாஷ் என்பவரை கூட்டான்மையில் சேர்த்தனர்.
(அ) பிரகாஷ் ரூ.10,000 முதல் கொண்டு வருவது
(ஆ) இயந்திரம் ரூ.24,000 என மதிப்பிடப்பட்டது
(இ) அறைகலனின் மதிப்பில் ரூ.3,000 குறைப்பது
(ஈ) வாரா ஐயக்கடன் ஒதுக்கை ரூ.3,000 என அதிகரிப்பப்பது
(உ) ஏடுகளில் பதிவு பெறாமலுள்ள கணக்குகளின் மூலம் பெறவேண்டியவைகள் மதிப்பு ரூ.1,000 பதிவு செய்தல்.
குறிப்பேட்டுப் பதிவுகள் தந்து மறுமதிப்பீட்டு கணக்கு மற்றும் முதல் கணக்குகளைத் தயாரிக்கவும்.