விஜயன், சுதன் மற்றும் சுமன் என்ற கூட்டாளிகள் தங்கள் இலாபம் மற்றும் நட்டங்களை தங்கள் முதல் விகிதத்தில் பகிர்ந்து வந்தனர். அவர்களுடைய 31.12.2018 அன்றைய இருப்புநிலைக் குறிப்பு பின்வருமாறு
31.12.2018 ஆம் நாளைய இருப்புநிலைக் குறிப்பு
பொறுப்புகள் |
ரூ |
ரூ |
சொத்துகள் |
ரூ |
முதல் கணக்குகள் |
|
|
கட்டடம் |
80,000 |
விஜயன் |
70,000 |
|
சரக்கிருப்பு |
45,000 |
சுதன் |
50,000 |
|
கடனாளிகள் |
25,000 |
சுமன் |
30,000 |
1,50,00 |
வங்கி ரொக்கம் |
20,000 |
பொதுக்காப்பு |
|
18,000 |
கைரொக்கம் |
15,000 |
கடனீந்தோர் |
|
17,000 |
|
|
|
|
1,85,000 |
|
1,85,000 |
சுமன் 31.3.2019 அன்று இறந்து விட்டார். சுமனின் இறப்பின் போது, பின்வரும் சரிக்கட்டுதல்கள் செய்யப்பட்டன.
(i) கட்டடம் ரூ.1,00,000 என மதிப்பிடப்பட வேண்டும்.
(ii) சரக்கிருப்பின் மதிப்பு ரூ.5,000 குறைக்க வேண்டும்.
(iii) நிறுவனத்தின் நற்பெயர் ரூ.36,000 என மதிப்பிடப்பட்டது.
(iv) கடந்த கடந்த நிதியாண்டின் இறுதியில் இருந்து கூட்டாளி இறந்த நாள் வரை உள்ள இலாபத்தின் பங்கு, கூட்டாளியின் இறப்பிற்கு முன் உள்ள மூன்று முழு ஆண்டுகளின் சராசரி இலாப அடிப்படையிலானது.
2016, 2017 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளுக்கான இலாபங்கள் முறையே ரூ.40,000,ரூ. 50,000 மற்றும் ரூ.30,000 ஆகும். சுமனின் இறப்பிற்குப் பின் உடனடியாக தயாரிக்கப்பட வேண்டிய பேரேட்டுக் கணக்குகள் மற்றும் இருப்புநிலைக் குறிப்பினைத் தயாரிக்கவும்.