அமல் மற்றும் விமல் இருவரும் ஒரு கூட்டாண்மை நிறுவனத்தின் கூட்டாளிகள். அவர்கள் 7:5 என்ற விகிதத்தில் இலாபங்கள் மற்றும் நட்டங்களை பகிர்ந்து வந்தனர். 2019, மார்ச் 31 அன்றைய அவர்களின் இருப்புநிலைக் குறிப்பு பின்வருமாறு:
பொறுப்புகள் |
ரூ. |
ரூ. |
சொத்துகள் |
ரூ. |
முதல் கணக்குகள்: |
|
|
கட்டடம் |
80,000 |
அமல் |
70,000 |
|
அறைகலன் |
20,000 |
விமல் |
50,000 |
1,20,000 |
சரக்கிருப்பு |
25,000 |
பற்பல கடனீந்தோர் |
|
30,000 |
கடனாளிகள் |
30,000 |
இலாப நட்ட க/கு |
|
24,000 |
வங்கி |
19,000 |
|
|
1,74,000 |
|
1,74,000 |
1.4.2019 இல் நிர்மல் புதிய கூட்டாளியாக சேருகிறார். அவர் ரூ.30,000 முதலுடன் எதிர்கால இலாபப்பங்கில் 1/3 விகிதத்தில், பின்வரும் சரிக்கட்டலுடன் கூட்டாளியாகிறார்.
அ) சரக்கிருப்பின் மதிப்பு ரூ.5,000 குறைக்கப்பட வேண்டும்.
(ஆ) வாரா ஐயக்கடன் ஒதுக்கு ரூ.3,000 உருவாக்கப்பட வேண்டும்.
(இ) கட்டடம் ரூ.20,000 மதிப்பேற்றம் செய்யப்பட வேண்டும்.
மறுமதிப்பீட்டுக் கணக்கு மற்றும் கூட்டாளி சேர்க்கைக்கு பின்பான கூட்டாளி முதல் கணக்கு தயார் செய்யவும்.