St. Britto Hr. Sec. School - Madurai
12th கணக்குப்பதிவியல் மாதத் தேர்வு -3(கூட்டாண்மை நிறுவன கணக்குகள் – அடிப்படைகள்)-Aug 2020
-
-
-
-
-
-
-
-
-
-
-
சிபி மற்றும் மனோஜ் இருவரும் ஒரு கூட்டாண்மை நிறுவனத்தின் கூட்டாளிகள். சிபி கழிவுக்கு முன் உள்ள நிகர இலாபத்தில் 20% கழிவாகப் பெற வேண்டும். மனோஜ், கழிவுக்குப் பின் உள்ள நிகர இலாபத்தில் 20% கழிவாகப் பெற வேண்டும். 2018, டிசம்பர் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய கழிவு கணக்கிடுவதற்கு முன்னர் உள்ள நிகர இலாபம் ரூ.60,000. சிபி மற்றும் மனோஜின் கழிவினைக் கண்டுபிடிக்கவும். மேலும் இலாபப் பகிர்வினையும் கணக்கிடவும்.
-
துரை மற்றும் வேலன் 2018, ஏப்ரல் 1 அன்று கூட்டாண்மை ஒப்பந்தத்தில் ஈடுபட்டனர். துரை ரூ.25,000 மற்றும் வேலன் ரூ.30,000 முதலாக கொண்டுவந்தனர். ஒப்பந்தம் பின்வருவனவற்றைக் கொண்டுள்ளது:
(அ) துரை மற்றும் வேலன் இலாப நட்டங்களை 2:3 என்ற விகிதத்தில் பகிர வேண்டும்.
(ஆ) கூட்டாளிகளுக்கு முதல் மீது வட்டி ஆண்டுக்கு 5% தரப்பட வேண்டும்.
(இ) எடுப்புகள் மீதான வட்டி கணக்கிடப்பட வேண்டியது: துரை ரூ.300 மற்றும் வேலன் ரூ.450.
(ஈ) துரைக்கு ஊதியம் ஆண்டுக்கு ரூ.5,000 வழங்கப்பட வேண்டும் மற்றும்
(உ) வேல வேலனுக்கு தரப்பட வேண்டிய கழிவு ரூ.2,000.
அவ்வாண்டில் வட்டி, ஊதியம் மற்றும் கழிவு போன்றவற்றை சரிக்கட்டுவதற்கு முன் நிறுவனம் ஈட்டிய இலாபம் ரூ.20,000. இலாபநட்டப் பகிர்வு கணக்கைத் தயாரிக்கவும். -
அருண் மற்றும் செல்வம் என்ற கூட்டாளிகள் தங்கள் முதல் கணக்குகளை நிலைமுதல் முறையில் பராமரித்து வருகின்றனர். பின்வரும் விவரங்களைக் கொண்டு கூட்டாளிகளின் முதல் கணக்குகளைத் தயாரிக்கவும்.
விவரம் அருண் ரூ. செல்வம் ரூ. 2018, ஜனவரி 1 அன்று முதல் 2,20,000 1,50,000 2018, ஜனவரி 1 அன்று நடப்புக் கணக்கு 4,250(ப) 10,000(ப) அவ்வாண்டில் கொண்டுவந்த கூடுதல் முதல் - 70,000 சொந்த பயனுக்காக எடுத்தது 10,000 20,000 எடுப்புகள் மீது வட்டி 750 600 2018 ஆம் ஆண்டிற்கான இலாபப் பங்கு 22,000 15,000 முதல் மீது வட்டி 1,100 750 கழிவு 6,900 - ஊதியம் - 6,850 -
சையது, சாமுவேல் மற்றும் சுதாகர் மூவரும் ஒரு கூட்டாண்மை நிறுவனத்தின் கூட்டாளிகள். அவர்கள் தங்கள் இலாப நட்டங்களை சமமாகப் பகிர்ந்து வருகின்றனர். அவர்கள் நிறுவனத்தின் தொழிலுக்கு அளித்த பங்களிப்புக்காக, கூட்டாண்மை ஒப்பாவணத்தின் விதிமுறைகளின் படி சாமுவேலிற்கு மாத ஊதியம் ரூ.2,000 அனுமதிக்கப்பட்டது மற்றும் சுதாகருக்கு கழிவு ஆண்டுக்கு ரூ. 6,000 அனுமதிக்கப்பட்டது. கூட்டாளிகளுடைய முதல் மாறுபடும் முதல் எனக் கொண்டு தேவையான குறிப்பேட்டுப் பதிவுகளைத் தரவும்.