St. Britto Hr. Sec. School - Madurai
12th கணக்குப்பதிவியல் மாதத் தேர்வு -2(நிறுமக் கணக்குகள்)-Aug 2020
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
ஒறுப்பிழப்பு செய்த பங்குகளின் மறுவெளியீடு என்றால் என்ன?
-
மருது நிறுமம் ரூ.10 மதிப்புள்ளள்ள 150 பங்குகளை பங்கொன்றுக்கு ரூ.4 இறுதி அழைப்புத் தொகை செலுத்தத் தவறியதால் ஒறுப்பிழப்பு செய்தது. அவற்றில் 100 பங்குகளை பங்கொன்றுக்கு ரூ.9 வீதம் மறுவெளியீடு செய்தது. ஒறுப்பிழப்பு மற்றும் மறுவெளியீட்டிற்கான குறிப்பேட்டுப் பதிவுகளைத் தரவும்.
-
ரொக்கம் தவிர இதர மறுபயனுக்கு பங்கு வெளியீடு என்றால் என்ன?
-
முத்து என்பவர் ரூ.10 மதிப்புள்ள 20 சாதாரண பங்குகளை வைத்திருந்தார். அவர் அதன் விண்ணப்பத் தொகையாக ரூ.2 செலுத்திய நிலையில் ஒதுக்கீட்டுப் பணம் ரூ.3 மற்றும் முதல் அழைப்பு பணம் ரூ.1 செலுத்தவில்லை. முதல் அழைப்புக்கு பின்னர் இயக்குநர்கள் அப்பங்குகளை ஒறுப்பிழப்பு செய்ய முடிவு செய்தனர். பங்கு ஒறுப்பிழப்பிற்கான குறிப்பேட்டுப் பதிவினைத் தரவும்.
-
புராகிரஸ் வரையறு நிறுமம் 50,000 சாதாரணப் பங்குகளை, பங்குகொன்று ரூ.10 வீதம் வெளியிட்டது. விண்ணப்பத்தின் போது ரூ.2, ஒதுக்கீட்டின் போது ரூ.4 முதலாவது அழைப்பின் போது ரூ.2 மற்றும் இரண்டாவது அழைப்பின் போது ரூ.2 செலுத்தப்பட்ட வேண்டும். அனைத்து பங்குகளும் ஒப்பப்பட்டன மற்றும் அனைத்து தொகைகளும் முறையாக பெறப்பட்டன. குறிப்பேட்டுப் பதிவுகள் தரவும்.
-
முத்து வரையறு நிறுமம் பங்கு ஒன்று ரூ.10 வீதம் ரூ.50,000 பங்குகளை பின்வருமாறு செலுத்தும் வண்ணம் வெளியிட்டது.
விண்ணப்பத்தின் மீது ` 2, ஒதுக்கீட்டின் மீது ` 4, முதல் மற்றும் இறுதி அழைப்பின் மீது ரூ.4, 1000 பங்குகள் வைத்துள்ள ஒருவர் அழைப்புத் தொகையை செலுத்தவில்லை. இதைத்தவிர, ஏனைய அனைத்து தொகைககைகளும் பெறப்பட்டன. அழைப்பு நிலுவை கணக்கினைப் பயன்படுத்தி அழைப்புக்கான குறிப்பேட்டுப் பதிவுகளைத் தரவும். -
-
வானவில் மின்பொருள் வரையறு நிறுமம் ரூ.10 மதிப்பில் வெளியிட்ட 1000 பங்குகளை அர்ஜீன் தம்வசம் வைத்திருந்தார். அவர் விண்ணப்பத்தின் மீது ரூ.3, ஒதுக்கீட்டின் மீது ரூ.4 செலுத்தி விட்டார். ஆனால், முதல் மற்றும் இறுதி அழைப்பின் மீதான ரூ.3 அவரால் செலுத்த முடியவில்லை. அழைப்பு தொகை செலுத்தாத காரணத்தினால் இயக்குனர்கள், அப்பங்குகளை ஒறுப்பிழப்பு செய்தனர். ஒறுப்பிழப்பிற்கான குறிப்பிட்டுப் பதிவுகளைத் தரவும்
-
நதியா ஜவுளி வரையறு நிறுமம் ரூ.10 மதிப்பிலான ரூ.8 அழைக்கப்பட்ட 100 பங்குகளை ஒறுப்பிழப்பு செய்தது. இதில் மயூரி பங்கு ஒன்றுக்கு ` 6 விண்ணப்ப்ணப்பம் மற்றும் ஒதுக்கீட்டிற்கான தொகையினைச் செலுத்தி இருந்தார். அப்பங்குகள் பங்கு ஒன்றிற்கு ரூ.7 பெற்றுக் கொண்டு சௌந்தர்யா என்பவருக்கு மறுவெளியீடு செய்யப்பட்டது. ஒறுப்பிழப்பு மற்றும் மறுவெளியீட்டிற்கான குறிப்பேட்டுப் பதிவுகளைத் தரவும்
-
-
அஞ்சலி மாவு அரைக்கும் வரையறு நிறுமம் பங்கு ஒன்று ரூ.10 வீதம் ரூ.4,00,000 அங்கீகரிக்கப்பட்ட முதல் திரட்டுவதற்கென வெளியிட்டது. அதில், 30,000 பங்குகளை விண்ணப்பத்துடன் ரூ.2, ஒதுக்கீட்டில் ரூ.5 மற்றம் முதலாவது அழைப்பில் ரூ.3 பெறப்பட வேண்டும். அனைத்து பங்குகளும் ஒப்பப்பட்டன. அனைத்து தொகைகளும் பெறப்பட்டன. ஆனால், ஒதுக்கீட்டில், 500 பங்குள்ள ஒரு பங்குதாரர் முழுவதுமான தனது தொகையினை செலுத்திவிட்டார். குறிப்பேட்டுப் பதிவினைத் தரவும்.
-
கஸ்தூரி வரையறு நிறுமம் ரூ.10 மதிப்புள்ள 20,000 பங்குகளை ரூ.2 முனைமத்தில் வெளியிட்டது. 30,000 பங்குகளுக்கான விண்ணப்பதாரர்களுக்கு விகித அளவு அடிப்படைப்படையில் ஒதுக்கீடு செய்தது. ரூ.1 விண்ணப்பத்தின் மீதும், ரூ.5 ஒதுக்கீட்டின் மீதும் (முனைமம் ரூ.2 உள்பட), ரூ.2 முதல் அழைப்பின் மீதும் மற்றும் ரூ.2 இறுதி அழைப்பின் மீதும் செலுத்தப்பட வேண்டும். சுபின் என்னும் பங்குதாரர் தன்னுடைய 500 பங்குகளுக்கான முதலாவது மற்றும் இறுதி அழைப்பிற்கான தொகையினை கட்டத் தவறினார். அவரது பங்குகள் ஒறுப்பிழப்பு செய்யப்பட்டன. அதில், 400 பங்குகள் ஒன்று ரூ.8 வீதம் மறுவெளியீடு செய்யப்பட்டன. தேவையான குறிப்பேட்டுப் பதிவினைத் தரவும்
-
லலிதா வரையறு நிறுமம் ரூ.10 வீதம் 30,000 நேர்மைப் பங்குகளை பொதுமக்களிடம் வெளியிட்டது. விண்ணப்பத்தின் போது ரூ.2, ஒதுக்கீட்டின் போது ரூ.3, மீதம் தேவைப்படும் போது செலுத்தப்பட வேண்டும், 50,000 பங்குகளுக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இயக்குனர்கள் பின்வருமாறு ஒதுக்கீடு செய்தனர்.
10,000 பங்குகளுக்கான விண்ணப்பம் - முழுவதும் ஒதுக்கீடு
35,000 பங்குகளுக்கான விண்ணப்பம் - 20,000 பங்குகள் (மிகுதித் தொகை ஒதுக்கீட்டில் சரிசெய்யப்படும்)
5,000 பங்குகளுக்கான விண்ணப்பம் - ஒதுக்கீடு இல்லை
அனைத்து தொகைகளும் முறையாக பெறப்பட்டன. ஒதுக்கீடு பெரும் வரையிலான குறிப்பேட்டுப் பதிவுகளைத் தரவும்.