St. Britto Hr. Sec. School - Madurai
12th கணக்குப்பதிவியல் மாதத் தேர்வு -2(கூட்டாளி விலகல் மற்றும் கூட்டாளி இறப்பு)-Aug 2020
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
ஆதாய விகிதம் என்றால் என்ன?
-
ராகுல், ரவி மற்றும் ரோஹித் எனும் கூட்டாளிகள் முறையே 5 : 3 : 2 என்ற விகிதத்தில் இலாபம் பகிர்ந்து வந்தனர். அவர்களில் ரோஹித் விலகினார். அவருடைய பங்கு ராகுல் மற்றும் ரவி ஆகியோரால் 3: 2 எனும் விகிதத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டது. புதிய இலாப விகிதம் மற்றும் ஆதாய விகிதம் கணக்கிடவும்.
-
ஆர்யா, பெனின் மற்றும் சார்லஸ் என்ற கூட்டாளிகள் முறையே 3:3:2 எனும் விகிதத்தில் இலாபம் பகிர்ந்து வந்தனர். அவர்களில் சார்லஸ் என்பவர் விலகினார். அவருடைய பங்கு முழுவதையும் ஆர்யா எடுத்துக் கொண்டார். ஆர்யா மற்றும் பெனின் ஆகியோரின் புதிய இலாப விகிதம் மற்றும் ஆதாய விகிதத்தைக் கணக்கிடவும்.
-
குமார், கேசவன் மற்றும் மனோகர் எனும் கூட்டாளிகள் முறையே \(\frac {1}{2},\frac {1}{3}\) மற்றும் \(\frac {1}{6}\) எனும் விகிதத்தில் இலாபம் பகிர்ந்து வந்தனர். மனோகர் விலகினார். அவருடைய பங்கினை குமார் மற்றும் கேசவன் இருவரும் சமமாக எடுத்துக் கொண்டனர். புதிய இலாப விகிதத்தையும் மற்றும் ஆதாய விகிதத்தையும் கணக்கிடவும்
-
தியாக விகிதத்திற்கும் ஆதாய விகிதத்திற்கும் இடையே உள்ள வேறுபாடுகள் யாவை?
-
சுரேஷ், செந்தாமரை மற்றும் இராஜ் ஆகியோர் ஒரு நிறுவனத்தின் இலாப நட்டங்களை 3:2:1 எனும் விகிதத்தில் பகிர்ந்து வந்தனர். சுரேஷ் என்பவர் அக்கூட்டாண்மையிலிருந்து விலகினார். அவர் விலகிய நாளில் நிறுவனத்தின் நற்பெயர் ` 36,000 என மதிப்பிடப்பட்டது. கூட்டாளிகளின் முதல் கணக்குகள் மாறுபடும் முதல் எனக் கொண்டு நற்பெயர் பதிவிற்கான தேவையான குறிப்பேட்டுப் பதிவுகளைத் தரவும்.
-
இராஜா, ரோஜா மற்றும் பூஜா எனும் கூட்டாளிகள் 4:5:3 எனும் விகிதத்தில் இலாபம் பகிர்ந்து வந்தனர். நிறுவனத்திலிருந்து ரோஜா என்பவர் விலகினார். புதிய இலாப விகிதத்தையும் மற்றும் ஆதாய விகிதத்தையும் கணக்கிடவும்.
-
-
நரேஷ், மணி மற்றும் முத்து ஆகிய கூட்டாளிகள் 2:2:1 எனும் விகிதத்தில் இலாபம் பகிர்ந்து வந்தனர். 2019 மார்ச் 31ஆம் நாள் நிறுவனத்திலிருந்து முத்து விலகினார். முத்து விலகிய நாளன்று, ஏடுகளில் நற்யெர் ரூ.40,000 எனக் காட்டியது. அவர்கள் முதல் மாறுபடும் முதல் எனக் கொண்டு, தேவையான குறிப்பேட்டுப் பதிவுகளைத் தரவும்.
அ) நற்பெயர் முழுவதையும் போக்கெழுத கூட்டாளிகள் முடிவெடுத்தால்
ஆ) நற்பெயரில் பாதித்தொகையை போக்கெழுத கூட்டாளிகள் முடிவெடுத்தால் -
கூட்டாளி விலகலின்போது செய்யப்பட வேண்டிய சரிக்கட்டுதல்களை பட்டியலிடவும்.
-
-
-
கவிதா, குமுதா மற்றும் லலிதா ஆகிய கூட்டாளிகள் தங்கள் இலாப நட்டங்களை முறையே 5:3:3 என்ற விகிதத்தில் பகிர்ந்து வந்தனர். 2018, டிசம்பர் 31 அன்று குமுதா நிறுவனத்திலிருந்து விலகுகிறார். அவர் விலகும் நாளில் அவருடைய முதல் கணக்கு ரூ.2,00,000 வரவு இருப்பினைக் காட்டியது.
(i) அவருடைய தொகை காசோலை மூலம் உடனடியாகச் செலுத்தப்பட்டால்
(ii) அவருடைய தொகை உடனடியாகச் செலுத்தப்படவில்லையெனில்
(iii) ரூ.70,000 உடனடியாக காசோலை மூலம் செலுத்தப்பட்டது
என்ற சூழ்நிலைகளுக்கான குறிப்பேட்டுப் பதிவுகளைத் தரவும். -
இரத்னா, பாஸ்கர், மற்றும் இப்ராஹிம் ஆகிய கூட்டாளிகள் 2 : 3 : 4 என்ற விகிதத்தில் இலாப நட்டங்களை பகிர்ந்து வந்தனர். 2018, டிசம்பர் 31 அன்று இரத்னா இறந்துவிட்டார். அவருக்குச் செலுத்த வேண்டிய இறுதித் தொகை ரூ.1,00,000 வரவு இருப்பினைக் காட்டியது. கீழ்கண்ட சூழ்நிலைகளில் குறிப்பேட்டுப் பதிவுகளைத் தரவும்.
(அ) சேரவேண்டியத் தொகை உடனடியாகக் காசோலை மூலம் செலுத்தப்பட்டது
(ஆ) சேரவேண்டியத்தொகை உடனடியாகச் செலுத்தப்படத்தப்படவில்லை
(இ) ரூ.60,000 காசோலை மூலம் உடனடியாகச் செலுத்தப்பத்தப்பட்டது
-
-
விஜயன், சுதன் மற்றும் சுமன் என்ற கூட்டாளிகள் தங்கள் இலாபம் மற்றும் நட்டங்களை தங்கள் முதல் விகிதத்தில் பகிர்ந்து வந்தனர். அவர்களுடைய 31.12.2018 அன்றைய இருப்புநிலைக் குறிப்பு பின்வருமாறு
31.12.2018 ஆம் நாளைய இருப்புநிலைக் குறிப்பு பொறுப்புகள் ரூ ரூ சொத்துகள் ரூ முதல் கணக்குகள் கட்டடம் 80,000 விஜயன் 70,000 சரக்கிருப்பு 45,000 சுதன் 50,000 கடனாளிகள் 25,000 சுமன் 30,000 1,50,00 வங்கி ரொக்கம் 20,000 பொதுக்காப்பு 18,000 கைரொக்கம் 15,000 கடனீந்தோர் 17,000 1,85,000 1,85,000 சுமன் 31.3.2019 அன்று இறந்து விட்டார். சுமனின் இறப்பின் போது, பின்வரும் சரிக்கட்டுதல்கள் செய்யப்பட்டன.
(i) கட்டடம் ரூ.1,00,000 என மதிப்பிடப்பட வேண்டும்.
(ii) சரக்கிருப்பின் மதிப்பு ரூ.5,000 குறைக்க வேண்டும்.
(iii) நிறுவனத்தின் நற்பெயர் ரூ.36,000 என மதிப்பிடப்பட்டது.
(iv) கடந்த கடந்த நிதியாண்டின் இறுதியில் இருந்து கூட்டாளி இறந்த நாள் வரை உள்ள இலாபத்தின் பங்கு, கூட்டாளியின் இறப்பிற்கு முன் உள்ள மூன்று முழு ஆண்டுகளின் சராசரி இலாப அடிப்படையிலானது.
2016, 2017 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளுக்கான இலாபங்கள் முறையே ரூ.40,000,ரூ. 50,000 மற்றும் ரூ.30,000 ஆகும். சுமனின் இறப்பிற்குப் பின் உடனடியாக தயாரிக்கப்பட வேண்டிய பேரேட்டுக் கணக்குகள் மற்றும் இருப்புநிலைக் குறிப்பினைத் தயாரிக்கவும். -
ஒரு கூட்டடாண்மை நிறுவனத்தில் சரண், அருண் மற்றும் கரண் என்ற கூட்டாளிகள் தங்கள் இலாபம் மற்றும் நட்டங்களை 4:3:3 என்ற விகிதத்தில் பகிர்ந்து வந்தனர். 2016, டிசம்பர் 31 ஆம் நாளைய இருப்புநிலைக் குறிப்பு பின்வருமாறு:
பொறுப்புகள் ரூ ரூ சொத்துகள் ரூ ரூ முதல் கணக்குகள் கட்டடம் 60,000 சரண் 60,000 இயந்திரம் 40,000 அருண் 50,000 முதலீடுகள் 20,000 கரண் 40,000 1,50,000 சரக்கிருப்பு 12,000 பொதுக்காப்பு 15,000 கடனாளிகள் 25,000 கடனீந்தோர் 35,000 கழிக்க: வாராக்கடன் ஒதுக்கு 1000 24,000 வங்கி ரொக்கம் 44,000 2,00,000 2,00,000 1.1.2017 அன்று கீழ்க்கண்ட நிபந்தனைகளுக்குட்பட்டு கரண் விலகினார்.
(i) நிறுவனத்தின் நற்பெயர் ரூ.21,000 என மதிப்பிடப்பட்டது.
(i) இயந்திரம் மீது 10% மதிப்பேற்றம் செய்ய வேண்டும்.
(i) கட்டடம் ரூ.80,000 ஆக மதிப்பிட வேண்டும்.
(i) வாராக்கடன் ஒதுக்கு ரூ.2,000 ஆக அதிகரிக்க வேண்டும்.
(i) சரக்கிருப்பு மதிப்பில் ரூ.2,000 குறைக்க வேண்டும்.
(ii) கரணுக்கு செலுத்த வேண்டிய தொகை உடனடியாகச் செலுத்தப்படவில்லை.
தேவையான பேரேட்டுக் கணக்குகளை தயார் செய்யவும் மற்றும் விலகலுக்குப் பின் உள்ள கூட்டாண்மை நிறுவனத்தின் இருப்புநிலைக் குறிப்பையும் தயார் செய்யவும் -
சந்துரு, விஷால் மற்றும் ரமணன் என்ற கூட்டாளிகள் ஒரு கூட்டாண்மை நிறுவனத்தின் இலாபம் மற்றும் நட்டங்களை சமமாகப் பகிர்ந்து வந்தனர். 2018, மார்ச் 31 ஆம் நாளைய இருப்புநிலைக் குறிப்பு பின்வருமாறு:
பொறுப்புகள் ரூ சொத்துகள் ரூ முதல் கணக்குகள் அறைகலன் 60,000 சந்துரு 60,000 இயந்திரம் 1,20,000 ரமணன் 70,000 2,00,000 கழிக்க: ஐயக்கடன் செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டு 80,000 ஒதுக்கு 3,000 30,000 பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு 50,000 வங்கி ரொக்கம் 20,000 2,80,000 2,80,000 ரமணன் கீழ்க்கண்ட நிபந்தனைகளுக்குட்பட்டு 2019, மார்ச் 31 அன்று கூட்டாண்மையிலிருந்து விலகினார்.
(i) இயந்திரம் ரூ.1,50,000 என மதிப்பிடப்பட்டது.
(ii) அறைகலன் மதிப்பில் ரூ.10,000 குறைக்கப்பட்டது.
(iii) ஐயக்கடன் ஒதுக்குரூ.5,000 ஆக அதிகரிக்கப்பட வேண்டும்.
(iv) ஏடுகளில் பதியப்பெறாத முதலீடுகள் ரூ.30,000 தற்போது பதியப்பட வேண்டும்.
தேவையான குறிப்பேட்டுப் பதிவுகள் தந்து மறுமதிப்பீட்டுக் கணக்கு தயார் செய்யவும் -
ராமு, சோமு மற்றும் கோபு என்ற கூட்டாளிகள் தங்கள் இலாபங்களை 3:5:7 என்ற விகிதத்தில் பகிர்ந்து வந்தனர். கோபு என்பவர் கூட்டாண்மையை விட்டு விலகுகிறார் மற்றும் அவருடைய பங்கை 3:1 எனும் விகிதத்தில் ராமுவும் சோமுவும் எடுத்துக்கொள்கின்றனர். புதிய இலாபப் பகிர்வு விகிதம் மற்றும் ஆதாய விகிதத்தைக் கணக்கிடவும்.
-
ரோஸி, ரதி மற்றும் இராணி என்ற கூட்டாளிகள் தங்கள் இலாபங்கள் மற்றும் நட்டங்களை சமமாகப் பகிர்ந்து வந்தனர். 1.1.2018 அன்று, ரதி கூட்டாண்மையிலிருந்து விலகினார். அந்நாளைய இருப்புநிலைக்குறிப்பின் சொத்துகள் பக்கம் ரூ.45,000 பகிர்ந்துத்தரா நட்டங்கள் இருப்பைக் காட்டியது. பகிர்ந்து தரா நட்டத்தை பகிர்ந்தளிப்பதற்கான குறிப்பேட்டுப் பதிவினைத் தரவும்.