St. Britto Hr. Sec. School - Madurai
12th கணக்குப்பதிவியல் மாதத் தேர்வு -2(கூட்டாளி சேர்ப்பு)-Aug 2020
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
சொத்துகள் மற்றும் பொறுப்புகள் மறுமதிப்பீடு செய்வதற்கான குறிப்பேட்டுப் பதிவுகள் யாவை?
-
கூட்டாளி சேர்ப்பின் போது மேற்கொள்ள வேண்டிய சரிகட்டுதல்கள் யாவை?
-
அனில், சுனில் மற்றும் ஹரி என்ற மூன்று கூட்டாளிகள் 4:3:3 என்ற விகிதத்தில் இலாப நட்டத்தைப் பகிர்ந்து வந்தனர். அவர்கள் ராஜா என்பவரை 20% இலாபத்திற்கு கூட்டாளியாகச் சேர்த்தனர். புதிய இலாபப் பகிர்வு விகிதம் மற்றும் தியாக விகிதம் கணக்கிடவும்.
-
ரமேஷ் மற்றும் ராஜு என்ற இரு கூட்டாளிகள் 2:1 என்ற விகிதத்தில் இலாப நட்டத்தைப் பகிர்ந்து வந்தனர். அவர்கள் ரஞ்சன் என்பவரை 1/4 பங்குக்கு கூட்டாளியாகச் சேர்த்தனர். ரஞ்சன் அவரது பங்கை பழைய கூட்டாளிகளிடமிருந்து 3:2 என்ற விகிதத்தில் வாங்கினார். புதிய இலாபப் பகிர்வு விகிதம் மற்றும் தியாக விகிதம் கணக்கிடவும்.
-
கார்த்திக் மற்றும் கண்ணன் இருவரும் இலாபத்தை சமமாக பகிர்ந்து கொள்ளும் கூட்டாளிகள். அவர்கள் கைலாஷ் என்பவரை 1/4 இலாபப் பங்குக்கு கூட்டாளியாகச் சேர்த்தனர். கைலாஷ் தனது பங்கை பழைய கூட்டாளிகளிடமிருந்து 7:3 என்ற விகிதத்தில் பெறுகிறார். புதிய இலாபப் பகிர்வு விகிதம் மற்றும் தியாக விகிதம் கணக்கிடவும்.
-
-
2018, மார்ச் 31 ஆம் நாளைய ரேகா மற்றும் மேரியின் இருப்புநிலைக் குறிப்பு பின்வருமாறு:
பொறுப்புகள் ரூ. ரூ. சொத்துகள் ரூ. முதல் கணக்குகள்: கட்டடம் 50,000 ரேகா 50,000 சரக்கிருப்பு 8,000 மேரி 30,000 80,000 பற்பல கடனாளிகள் 60,000 பொதுக் காப்பு 40,000 வங்கி ரொக்கம் 32,000 தொழிலாளர் ஈட்டு நிதி 10,000 பற்பல கடனாளிகள் 20,000 1,50,000 1,50,000 ரேகா, மேரி இருவரும் தங்கள் இலாபம் மற்றும் நட்டங்களை 3:1 என்ற விகிதத்தில் பகிர்ந்துகொள்கின்றனர். அவர்கள் கவிதாவை 1/4 பங்கு விகிதத்தில் கூட்டாண்மையில் சேர்த்துக்கொண்டு, இப்பங்கு முழுவதையும் ரேகாவிடமிருந்து பெற ஒப்புகின்றனர்.
பின்வரும் சரிக்கட்டுதல்கள் பின்பற்றப்படுகின்றன:
(i) கவிதா ரூ.20,000 முதலாக கொண்டு வர வேண்டும். அவருடைய பங்கான நற்பெயர் ரூ.4,000 என மதிப்பிடப்படுகிறது. அவர் நற்பெயருக்கென ரொக்கம் கொண்டுவரவில்லை.
(ii) கட்டடத்தின் மீது 10% தேய்மானம் உருவாக்கவும்.
(iii) சரக்கிருப்பு ரூ.6,000 என மறுமதிப்பீடு செய்யப்படுகிறது.
(iv) வாரா ஐயக்கடன் ஒதுக்கு 5% உருவாக்கவும்.
கூட்டாளி சேர்க்கைக்கு பின் பேரேட்டு கணக்குகள் மற்றும் இருப்புநிலைக் குறிப்பினை தயார் செய்யவும். -
பிரவீணா மற்றும் தான்யா என்ற இரு கூட்டாளிகள் 7:3 என்ற இலாப விகிதத்தில் இலாபத்தைப் பகிர்ந்து வந்தனர். அவர்கள் மாலினி என்பவரை கூட்டாண்மையில் சேர்த்துக் கொண்டனர். பிரவீணா, தான்யா மற்றும் மாலினி அவர்களின் புதிய இலாப விகிதம் 5:2:3. தியாக விகிதத்தைக் கணக்கிடவும்.
-
-
அனு மற்றும் அருள் இருவரும் ஒரு கூட்டாண்மை நிறுவனத்தின் கூட்டாளிகள். அவர்கள் 4:1 என்ற விகிதத்தில் இலாபம் மற்றும் நட்டங்களைப் பகிர்ந்து வருகின்றனர். அவர்கள் மனோ என்பவரை 2/5 இலாப விகிதத்தில் நிறுவனத்தில் சேர்க்க முடிவு செய்கின்றனர். சேர்க்கையின் போது நிறுவனத்தின் நற்பெயர் மதிப்பு ரூ.25,000 என்று மதிப்பிடப்படுகிறது. மனோ தன்னுடைய பங்கிற்கான நற்பெயர் மதிப்பிற்கான தொகையைக் கொண்டுவர முடியவில்லை. மாறுபடும் முதல் முறையினை அடிப்படையாக கொண்டு நற்பெயர் சரிக்கட்டுவதற்கு தேவையான குறிப்பேட்டுப் பதிவினைத் தரவும்.
-
செல்வம் மற்றும் செந்தில் இருவரும் 2:3 என்ற விகிதத்தில் இலாபம் பகிரும் கூட்டாளிகள். இதில், சிவா என்பவர் 1/5 பங்கு விகிதத்தில் கூட்டாளியாக சேருகிறார். சிவா, இப்பங்கினை செல்வம் மற்றும் செந்தில் இருவரிடமும் சமமாக பெறுகிறார். புதிய இலாபப் பகிர்வு விகிதம் மற்றும் தியாக விகிதம் கண்டறியவும்.
-
சதீஷ் மற்றும் சுதன் இருவரும் ஒரு கூட்டாண்மை நிறுவனத்தின் கூட்டாளிகள். அவர்கள் 4:3 என்ற விகிதத்தில் இலாபம் மற்றும் நட்டங்களைப் பகிர்ந்து வருகின்றனர். 2018 ஏப்ரல் 1 அன்று சசி என்பவரை கூட்டாளியாகச் சேர்த்துக்கொண்டனர். சசி கூட்டாண்மையில் சேர்ந்த அன்று நிறுவன ஏடு நற்பெயர் மதிப்பினை ரூ.35,000 என்று காட்டியது. மாறுபடும் முதல் முறையில் பராமரிக்கப்படுவதாக கருதி தேவையான குறிப்பேட்டுப் பதிவுகளைத் தரவும். கூட்டாளிகள் பின்வரும் முடிவினை எடுத்தனர்.
(i) ஏட்டில் உள்ள நற்பெயர் தொகை முழுவதையும் போக்கெழுவது
(ii) ஏட்டில் உள்ள நற்பெயரில் ரூ.21,000 மட்டும் போக்கெழுவது -
அரவிந்த் மற்றும் பாலாஜி இருவரும் 3:2 விகிதத்தில் இலாப நட்டம் பகிர்ந்து வரும் கூட்டாளிகள். அவர்கள் அனிருத் என்பவரை புதிய கூட்டாளியாகச் சேர்க்க அனுமதித்தனர். புதிய இலாபப்பகிர்வு விகிதமாக 1:1:1 என்பதை மூவரும் ஒப்புக் கொள்கின்றனர். அனிருத் செலுத்த வேண்டிய நற்பெயர் மதிப்பு ரூ.20,000 என்று மதிப்பிடப்படுகிறது. அதில், அவர் ரூ.12,000 ரொக்கம் செலுத்துகிறார். மாறுபடும் முதல் முறையில் கணக்குகள் உள்ளதெனக் கொண்டு நற்பெயருக்கான குறிப்பேட்டுப் பதிவுகளைத் தரவும்.