St. Britto Hr. Sec. School - Madurai
12th கணக்குப்பதிவியல் மாதத் தேர்வு -1(முழுமை பெறா பதிவேடுகளிலிருந்து கணக்குகள்) -Aug 2020
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
பின்வரும் விவரங்களிலிருந்து இலாபம் அல்லது நட்டம் கணக்கிடவும்:
விவரம் ரூ. ஆண்டு தொடக்கத்தில் முதல் (1 ஏப்ரல், 2016) 2,00,000 ஆண்டு இறுதியில் முதல் (31 மார்ச், 2017) 3,50,000 அவ்வாண்டில் கொண்டு வந்த கூடுதல் முதல் 70,000 அவ்வாண்டின் எடுப்புகள் 40,000 -
பின்வரும் விவரங்களைக் கொண்டு அவ்வாண்டின் மொத்த விற்பனையை கண்டறியவும்:
விவரம் ரூ. 2018, ஏப்ரல் 1 அன்று கடனாளிகள் 50,000 அவ்வாண்டில் கடனாளிகளிடமிருந்து பெற்ற ரொக்கம் 1,50,000 உள்திருப்பம் 15,000 வாராக்கடன் 5,000 2019, மார்ச் 31 அன்று கடனாளிகள் 70,000 ரொக்க விற்பனை 1,40,000 -
-
பின்வரும் விவரங்களிலிருந்து மொத்த விற்பனையை கணக்கிடவும்:
விவரம் ரூ. 2017, ஏப்ரல் 1 அன்று கடனாளிகள் 1,50,000 2017, ஏப்ரல் 1 அன்று பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு 40,000 கடனாளிகளிடமிருந்து பெற்ற ரொக்கம் 3,90,000 பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு ரொக்கம் பெறப்பட்டது 90,000 பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு மறுக்கப்பட்டது 10,000 விற்பனைத் திருப்பம் 40,000 2018, மார்ச் 31 அன்று பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு 30,000 2018, மார்ச் 31 அன்று பற்பல கடனாளிகள் 1,30,000 ரொக்க விற்பனை 2,00,000 -
பின்வரும் விவரங்களிலிருந்து கடன் கொள்முதலைக் கணக்கிடவும்:
விவரம் ரூ. 2018, ஏப்ரல் 1 அன்று கடனீந்தோர் 50,000 வெளித் திருப்பம் 6,000 கடனீந்தோருக்கு அளித்த ரொக்கம் 1,60,000 2019, மார்ச் 31 அன்று கடனீந்தோர் 70,000
-
-
பின்வரும் விவரங்களிலிருந்து, பெறுதற்குரிய மாற்றுச்சீட்டுக் கணக்கினைத் தயாரித்து கடனாளிகளிடமிருந்து பெற்ற மாற்றுச்சீட்டினைக் கணக்கிடவும்.
விவரம் ரூ. தொடக்க பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு 20,000 இறுதி பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு 30,000 மாற்றுச்சீட்டிற்கான ரொக்கம் பெற்றது 60,000 பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு மறுக்கப்பட்டது 5,000 -
பின்வரும் விவரங்களிலிருந்து கடன் விற்பனையைக் கண்டறியவும்:
விவரம் ரூ. 2018, ஜனவரி 1 அன்று கடனாளிகள் 40,000 கடனாளிகளிடம் பெற்ற ரொக்கம் 1,00,000 அளித்த தள்ளுபடி 5,000 விற்பனைத் திருப்பம் 2,000 2018, டிசம்பர் 31 அன்று கடனாளிகள் 60,000 -
நிலை அறிக்கை வாயிலாக இலாபம் அல்லது நட்டம் கண்டறியும் படிநிலைகளைத் தரவும்.
-
முழுமை பெறா பதிவேடுகளின் குறைபாடுகள் யாவை?
-
முழுமை பெறா பதிவேடுகளிலிருந்து கடன் விற்பனைத் தொகை எவ்வாறு கண்டறியப்படுகிறது?
-
டேவிட் முறையான கணக்கேடுகளைப் பராமரிக்கவில்லை. அவருடைய ஏடுகளிலிருந்து தரப்பட்டுள்ள விவரங்கள் பின்வருமாறு:
விவரம் 1.4.2018
ரூ.31.3.2019
ரூ.ரொக்கம் 43,000 29,000 சரக்கிருப்பு 1,20,000 1,30,000 பற்பல கடனாளிகள் 84,000 1,10,000 பற்பல கடனீந்தோர் 1,05,000 1,02,000 கடன் 25,000 20,000 வணிக வளாகம் 2,50,000 2,50,000 அறைகலன் 33,000 45,000 அவ்வாண்டில் அவர் கூடுதல் முதலாக ரூ. 45,000 கொண்டு வந்தார். தன்னுடைய வியாபாரத்திலிருந்து சொந்த பயனுக்காக ரூ. 2,500 ஒவ்வொரு மாதமும் எடுத்துக் கொண்டார். மேற்கண்ட விவரங்களைக் கொண்டு இலாப நட்ட அறிக்கையை தயார் செய்யவும்.
-
முழுமை பெறா பதிவேடுகளின் இயல்புகள் யாவை?
-
பாண்டியன் தன்னுடைய கணக்கேடுகளை இரட்டைப்பதிவு முறையில் பராமரிப்பதில்லை. பின்வரும் விவரங்களிலிருந்து 2018, டிசம்பர் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய வியாபார மற்றும் இலாபநட்டக் கணக்கு மற்றும் அந்நாளைய இருப்புநிலைக் குறிப்பு தயாரிக்கவும்.
விவரம் 1-1-2018
ரூ.31-12-2018
ரூ.அறைகலன் 30,000 30,000 கைரொக்கம் 10,000 17,000 கடனாளிகள் 40,000 60,000 சரக்கிருப்பு 28,000 11,000 பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு 12,000 35,100 வங்கிக் கடன் 25,000 25,000 கடனீந்தோர் 15,000 16,000 கூடுதல் தகவல்கள்:
விவரம் ரூ. விவரம் ரூ. ரொக்க விற்பனை 11,200 கடன் விற்பனை 88,800 ரொக்கக் கொள்முதல் 4,250 கடன் கொள்முதல் 35,750 கொள்முதல் மீதான தூக்குக்கூலி 3,000 விற்பனை மீதான தூக்குக்கூலி 700 கழிவு பெற்றது 600 வங்கிக் கடன் மீது வட்டி 2,500 எடுப்புகள் 8,000 கூடுதல் முதல் 14,000 சம்பளம் 8,900 அலுவலக வாடகை 2,400 சரிக்கட்டுதல்கள்:
அறைகலன் மீது 5% தேய்மானம் போக்கெழுதவும். கடனாளிகள் மீது 1% ஐயக்கடன் ஒதுக்கு உருவாக்கவும். -
-
பின்வரும் விவரங்களிலிருந்து பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு கணக்கு தயாரிக்கவும் மற்றும் கடனாளிகளிடமிருந்து பெற்ற மாற்றுச்சீட்டுத் தொகையினைக் கணக்கிடவும்.
விவரம் ரூ. ஆண்டு தொடக்கத்தில் பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு 1,40,000 ஆண்டு முடிவில் பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு 2,00,000 பெறுதற்குரிய மாற்றுச்சீட்டுக்காக ரொக்கம் பெற்றது 3,90,000 பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு மறுக்கப்பட்டது 30,000 -
மேரி தன்னுடைய ஏடுகளை இரட்டைப்பதிவு முறையில் பராமரிப்பதில்லை. பின்வரும் விவரங்களிலிருந்து 2019, மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய வியாபார மற்றும் இலாபநட்டக் கணக்கு மற்றும் அந்நாளைய இருப்புநிலைக் குறிப்பு தயாரிக்கவும்.
ப ரொக்க ஏடு வ விவரம் ரூ. விவரம் ரூ. இருப்பு கீ/கொ 1,20,000 கொள்முதல் 1,50,000 விற்பனை 3,60,000 கடனீந்தோர் 2,50,000 கடனாளிகள் 3,40,000 கூலி 70,000 பற்பலச் செலவுகள் 1,27,000 இருப்பு கீ/இ 2,23,000 8,20,000 8,20,000 பிற தகவல்கள்:
விவரம் 1.4.2018
ரூ.31.3.2019
ரூ.சரக்கிருப்பு 1,10,000 1,80,000 பற்பல கடனாளிகள் 1,30,000 ? பற்பல கடனீந்தோர் 1,60,000 90,000 அறைகலனும் பொருத்துகைகளும் 80,000 80,000 கூடுதல் தகவல்கள்: ரூ. கடன் கொள்முதல் 1,80,000 கடன் விற்பனை 2,90,000 தொடக்க முதல் 2,80,000 அறைகலன் மற்றும் பொருத்துகைகள் மீது ஆண்டுக்கு 10% தேய்மானம் நீக்கவும்.
-
-
பின்வரும் தகவல்களிலிருந்து, 2018, டிசம்பர் 31 ஆம் நாளைய முதல் கண்டறியவும்.
விவரம் ரூ. 31.3.2018 அன்று இறுதி முதல் 1,00,000 உரிமையாளர் தனது சொந்த பயனுக்காக சரக்கு எடுத்தது 30,000 அவ்வாண்டில் கொண்டுவந்த கூடுதல் முதல் 15,000 அவ்வாண்டின் இலாபம் 60,000 -
பின்வரும் விவரங்களிலிருந்து மொத்தக் கொள்முதலைக் கணக்கிடவும்:
விவரம் ரூ. 2017, ஏப்ரல் 1 அன்று பற்பல கடனீந்தோர் 75,000 2017, ஏப்ரல் 1 அன்று செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டு 60,000 கடனீந்தோருக்குச் செலுத்திய ரொக்கம் 3,70,000 செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டுக்கு செலுத்தியது 1,00,000 கொள்முதல் திருப்பம் 15,000 ரொக்கக் கொள்முதல் 3,20,000 2018, மார்ச் 31 அன்று கடனீந்தோர் 50,000 2018, மார்ச் 31 அன்று செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டு 80,000 -
ஆனந்த் தன் கணக்கேடுகளை இரட்டைப்பதிவு முறையில் பராமரித்து வருவதில்லை. 2019, மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய இலாபம் அல்லது நட்டம் கண்டறியவும்.
விவரம் 31.3.2018
ரூ.31.3.2019
ரூ.வங்கி ரொக்கம் 5,000 (ப.) 60,000 (வ.) கைரொக்கம் 3,000 4,500 சரக்கிருப்பு 35,000 45,000 பற்பல கடனாளிகள் 1,00,000 90,000 பொறி மற்றும் இயந்திரம் 80,000 80,000 நிலம் மற்றும் கட்டடங்கள் 1,40,000 1,40,000 பற்பல கடனீந்தோர் 1,70,000 1,30,000 ஆனந்த் தனது சொந்த பயனுக்காக ரூ. 60,000 எடுத்துக் கொண்டார். அவர் தன்னுடைய வியாபாரத்தை விரிவுபடுத்துவதற்காக ரூ. 17,000 கூடுதல் முதல் கொண்டு வந்தார். கடனாளிகள் மீது 5% ஒதுக்கு உருவாக்கவும். பொறி மற்றும் இயந்திரம் மீது 10% தேய்மானம் நீக்கவும்.
-
பின்வரும் விவரங்களிலிருந்து விடுபட்ட தகவலைக் காணவும்.
விவரம் ரூ. 31.3.2018 அன்று இறுதி முதல் 80,000 அவ்வாண்டில் கொண்டுவந்த கூடுதல் முதல் 30,000 அவ்வாண்டில் எடுப்புகள் 15,000 01.4.2017 அன்று தொடக்க முதல் ? 31.3.2018 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டில் நட்டம் 25,000 -
மளிகை வியாபாரம் நடத்திவரும் அர்ஜுன் தன்னுடைய கணக்கேடுகளை இரட்டைப்பதிவு முறையில் பராமரிப்பதில்லை. அவருடைய ஏடுகளிலிருந்து பெறப்பட்ட தகவல்கள் பின்வருமாறு:
விவரம் 1-4-2018
ரூ.31-3-2019
ரூ.பொறி மற்றும் இயந்திரம் 20,000 20,000 சரக்கிருப்பு 9,000 16,000 பற்பல கடனாளிகள் 2,000 5,300 பற்பல கடனீந்தோர் 5,000 4,000 வங்கி ரொக்கம் 4,000 6,000 31.3.2019 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டின் பிற தகவல்கள் பின்வருமாறு:
விவரம் ரூ. விளம்பரம் 4,700 உள்தூக்குக் கூலி 8,000 கடனீந்தோருக்கு அளித்த ரொக்கம் 64,000 எடுப்புகள் 2,000 அவ்வாண்டின் மொத்த விற்பனை ரூ. 85,000. கொள்முதல் திருப்பம் ரூ. 2,000 மற்றும் விற்பனைத் திருப்பம் ரூ. 1,000. பொறி மற்றும் இயந்திரம் மீது 5% தேய்மானம் நீக்கவும். ரூ. 300 ஐயக்கடன் ஒதுக்கு உருவாக்க வேண்டும். 2019, மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய வியாபார மற்றும் இலாபநட்டக் கணக்கு மற்றும் அந்நாளைய இருப்புநிலைக் குறிப்பு தயாரிக்கவும்.
-
2019, மார்ச் 31 அன்று தாமஸ் என்பவரின் ஏடுகளிலிருந்து பெறப்பட்ட இருப்புகள் பின்வருமாறு:
விவரம் ரூ. விவரம் ரூ. பற்பல கடனீந்தோர் 6,00,000 செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டு 1,20,000 அறைகலன் 80,000 கைரொக்கம் 20,000 நிலம் மற்றும் கட்டடம் 3,00,000 பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு 60,000 பற்பல கடனாளிகள் 3,20,000 சரக்கிருப்பு 2,20,000 2019, மார்ச் 31 ஆம் நாளைய நிலை அறிக்கை தயாரிக்கவும் மற்றும் அந்நாளைய முதல் கண்டறியவும்.
-
ராஜு முறையான கணக்கேடுகளைப் பின்பற்றுவதில்லை. அவருடைய பதிவேடுகளிலிருந்து பெறப்பட்ட தகவல்கள் பின்வருமாறு:
விவரம் 1.1.2018
ரூ.31.12.2018
ரூ.கைரொக்கம் 80,000 90,000 சரக்கிருப்பு 1,80,000 1,40,000 கடனாளிகள் 90,000 2,00,000 பற்பல கடனீந்தோர் 1,30,000 1,95,000 வங்கிக் கடன் 60,000 60,000 செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டு 80,000 45,000 பொறி மற்றும் இயந்திரம் 1,70,000 1,70,000 அவ்வாண்டில் அவர் கொண்டுவந்த கூடுதல் முதல் ரூ. 50,000 மற்றும் அவர் வியாபாரத்திலிருந்து தன்னுடைய சொந்த பயனுக்காக மாதந்தோறும் ரூ. 2,500 எடுத்துக்கொண்டார். மேற்கண்ட தகவல்களிலிருந்து இலாப நட்ட அறிக்கை தயாரிக்கவும்.