St. Britto Hr. Sec. School - Madurai
12th கணக்குப்பதிவியல் மாதத் தேர்வு -1(நிறுமக் கணக்குகள்)-Aug 2020
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
ஜெயம் டயர்ஸ் நிறுமம் 15,000 சாதாரணப்பங்குகளை ரூ. 10 வீதம் பின்வருமாறு செலுத்தும்படி வெளியிட்டது. விண்ணப்பத்தின் மீது ரூ.3 ஒதுக்கீட்டின் மீது ரூ.5 முதல் மற்றும் இறுதி அழைப்பின் மீது ரூ.2. அனைத்து தொகையும் பெறப்பட்டது. ஆனால் 100 பங்குகளை வைத்திருக்கும் ஒரு பங்குதாரர் அழைப்பு பணத்தை செலுத்தத் தவறினார். அழைப்பு நிலுவைக் கணக்கைப் பயன்படுத்தி அழைப்பிற்கான குறிப்பேடுப் பதிவுகளைத் தரவும்.
-
கான் நிறுமம் ரூ.10 மதிப்புள்ளள்ள 50,000 பங்குகளை விண்ணப்பத்தின் போது ரூ.4, ஒதுக்கீட்டின் போது ரூ.4 மற்றும் முதல் மற்றும் இறுதி அழைப்பின் போது ரூ.2 என செலுத்தும் வகையில் துமக்களுக்கு வெளியிட்டது. 65,000 பங்குகளுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இயக்குனர்கள் 50,000 பங்குகளை விகித அளவு அடிப்படையில் ஒதுக்கீடு செய்யவும், மிகுதியாகப் பெற்ற விண்ணப்பத் தொகையை ஒதுக்கீட்டிற்கு பயன்படுத்தி கொள்ளவும் முடிவு செய்தனர். அனைத்துத் தொகைகளும் பெறப்பட்டன எனக் கொண்டு தேவையான குறிப்பேட்டுப் பதிவுகளைத் தரவும்.
-
அருணா ஆலைகள் வரையறு நிறுமத்தின் பதிவு செய்யப்பட்ட பங்கு முதல் ரூ.5,00,000. அதில் 20,000 பங்குகளை ரூ.10 வீதம் பின்வருமாறு செலுத்ததக்க வகையில் வெளியிட்டது. விண்ணப்பத்தின் மீது
ரூ.4; ஒதுக்கீட்டின் மீது ரூ.4; முதல் மற்றும் இறுதி அழைப்பின் மீது ரூ.2. வெளியிட்டப் பங்குகள் அனைத்தும் ஒப்பப்பட்டன. அனைத்து தொகைகளும் பெறப்பட்டன. ஆனால், ஒரு பங்குதாரர் தான் வைத்துள்ள 300 பங்குகளுக்கான அனைத்து தொகைகளையும் ஒதுக்கீட்டின்போதே முழுவதுமாக செலுத்தி விட்டார்.
குறிப்பேட்டுப் பதிவுகளைத் தரவும். -
பத்திர முனைமக் கணக்கு பற்றி சிறுகுறிப்பு வரையவும்
-
ஜாய் நிறுமம் ரூ.10 மதிப்புள்ள 10,000 நேர்மைப் பங்குகளை விண்ணப்பத்தின் போது ரூ.5, ஒதுக்கீட்டின் போது ரூ.3, முதல் மற்றும் இறுதி அழைப்பின் போது ரூ.2 செலுத்தும் வகையில் வெளியிட்டது. 9,000 பங்குகளை வாங்க பொதுமக்கள் விண்ணப்பித்தனர். இயக்குனர்கள் 9,000 பங்குகளையும் ஒதுக்கீடு செய்து அதற்கான தொகையையும் பெற்றுக் கொண்டனர். தேவையான குறிப்பேட்ப்பேட்டுப் பதிவுகளைத் தரவும்.
-
அழைப்பு நிலுவை என்பதன் பொருள் என்ன?
-
ஜெமினி வரையறு நிறுமம் பங்கொன்றுக்கு ரூ.10 மதிப்புள்ள ரூ. 7 அழைக்கப்பட்ட 20 சாதாரண பங்குகளை ஒறுப்பிழப்பு செய்தது. மகேஷ் என்பவர் அப்பங்குகளுக்கான விண்ணப்பம் மற்றும் ஒதுக்கீடு பணம் ரூ.5 செலுத்தி இருந்தார். அவற்றில் 15 பங்குகள் பங்கொன்றுக்கு ரூ.6 வீதம் பெற்றுக் கொண்டு ரூ.7 வீதம் செலுத்தப்பட்ட பங்குகளாக நரேஷ் என்பவருக்கு மறுவெளியீடு செய்யப்பட்டது. பங்கு ஒறுப்பிழப்பு மற்றும் மறுவெளியீட்டிற்கான குறிப்பேட்டுப் பதிவுகளைத் தரவும்.
-
அனு நிறுமத்தால் ரூ.10 முகமதிப்பில் வெளியிடப்படப்பட்ட நேர்மைப் பங்குகளில், தியாகு என்பவர் வைத்திருந்த ரூ.200 நேர்மைப் பங்குகளுக்கு இறுதி அழைப்புத் தொகையான ரூ.3 செலுத்தாத காரணத்தால் அவை ஒறுப்பிழப்பு செய்யப்பட்டன. அப்பங்குகள் ரூ.6 வீதம் லக் ஷ்மனுக்கு மறுவெளியீடு செய்யப்பட்டன். ஒறுப்பிழப்பு மற்றும் மறுவெளியீட்டிற்கான குறிப்பேட்டுப் பதிவுகளைத் தரவும்
-
ஜெனிபர் நிறுமம் பங்கொன்று ரூ.10 முகமதிப்புள்ள 10,000 பங்குகளை வெளியிட்டது. பங்கொன்றுக்கு விண்ணப்பத்தின் மீது ரூ.3, ஒதுக்கீட்டின் மீது ரூ.3, முதல் அழைப்பின் மீது ரூ.2 மற்றும் இரண்டாம் மற்றும் இறுதி அழைப்பின் மீது ரூ.2 செலுத்த வேண்டி இருந்தது. சுப்பு என்பவர் 100 பங்குகளுக்கான இரண்டாவது மற்றும் இறுதி அழைப்பினைக் கட்ட தவறினார். எஞ்சிய தொகைகள் அனைத்தும் பெறப்பட்டன. சுப்புவின் பங்குகள் ஒறுப்பிழப்பு செய்யப்பட்டன மற்றும் அவைகள் ஹேமா என்பவருக்கு பங்கு ஒன்று ரூ.7 வீதம் மறுவெளியீடு செய்யப்பட்டன. மேற்கண்ட நடவடிக்கைகளுக்கு குறிப்பேட்டுப் பதிவுகள் தரவும்.
-
அழைப்பு முன்பணம் குறித்து சுருக்கமாக எழுதவும்.
-
சிறுகுறிப்பு வரைக.
(அ) அங்கீகரிக்கப்பட்ட முதல்
(ஆ) காப்புமுதல் -
ரொக்கம் தவிர இதர மறுபயனுக்கு பங்கு வெளியீடு என்றால் என்ன?
-
ஒறுப்பிழப்பு செய்த பங்குகளின் மறுவெளியீடு என்றால் என்ன?
-
-
அனிதா என்பவர் தஞ்சாவூர் மோட்டார் வரையறு நிறுமத்தின் ரூ.10 மதிப்புள்ள 500 நேர்மைப் பங்குகளை வைத்துள்ளார். அவர் விண்ணப்பத்தின் மீது ரூ.3, ஒதுக்கீட்டின் மீது ரூ.5 செலுத்தி உள்ளார். ஆனால் முதல் மற்றும் இறுதி அழைப்புத் தொகையான ரூ.2 செலுத்தவில்லை. அழைப்புத் தொகையை செலுத்தத் தவறியதால் இயக்குநர்கள் அப்பங்குகளை ஒறுப்பிழப்பு செய்தனர். ஒறுப்பிழப்பிற்கான குறிப்பேட்டுப் பதிவினைத் தரவும்.
-
முத்து என்பவர் ரூ.10 மதிப்புள்ள 20 சாதாரண பங்குகளை வைத்திருந்தார். அவர் அதன் விண்ணப்பத் தொகையாக ரூ.2 செலுத்திய நிலையில் ஒதுக்கீட்டுப் பணம் ரூ.3 மற்றும் முதல் அழைப்பு பணம் ரூ.1 செலுத்தவில்லை. முதல் அழைப்புக்கு பின்னர் இயக்குநர்கள் அப்பங்குகளை ஒறுப்பிழப்பு செய்ய முடிவு செய்தனர். பங்கு ஒறுப்பிழப்பிற்கான குறிப்பேட்டுப் பதிவினைத் தரவும்.
-
-
முன்னுரிமைப் பங்குகளுக்கும், நேர்மைப் பங்குகளுக்குமுள்ள வேறுபாடுகளை கூறவும்
-
மருது நிறுமம் ரூ.10 மதிப்புள்ளள்ள 150 பங்குகளை பங்கொன்றுக்கு ரூ.4 இறுதி அழைப்புத் தொகை செலுத்தத் தவறியதால் ஒறுப்பிழப்பு செய்தது. அவற்றில் 100 பங்குகளை பங்கொன்றுக்கு ரூ.9 வீதம் மறுவெளியீடு செய்தது. ஒறுப்பிழப்பு மற்றும் மறுவெளியீட்டிற்கான குறிப்பேட்டுப் பதிவுகளைத் தரவும்.
-
-
நதியா ஜவுளி வரையறு நிறுமம் ரூ.10 மதிப்பிலான ரூ.8 அழைக்கப்பட்ட 100 பங்குகளை ஒறுப்பிழப்பு செய்தது. இதில் மயூரி பங்கு ஒன்றுக்கு ` 6 விண்ணப்ப்ணப்பம் மற்றும் ஒதுக்கீட்டிற்கான தொகையினைச் செலுத்தி இருந்தார். அப்பங்குகள் பங்கு ஒன்றிற்கு ரூ.7 பெற்றுக் கொண்டு சௌந்தர்யா என்பவருக்கு மறுவெளியீடு செய்யப்பட்டது. ஒறுப்பிழப்பு மற்றும் மறுவெளியீட்டிற்கான குறிப்பேட்டுப் பதிவுகளைத் தரவும்
-
சைமன் வரையறு நிறுமம் ஒன்று ரூ.10 வீதம் 50,000 நேர்மைப் பங்குகளை வெளியிட்டது. விண்ணப்பத்தின் மீது பங்கொன்று ரூ.1, ஒதுக்கீட்டின் மீது பங்கொன்றிற்கு ரூ.5, முதலாவது அழைப்பின் மீது பங்கொன்றிற்கு ரூ.2, மேலும் இரண்டாவது மற்றும் இறுதி அழைப்பிற்கு ரூ.2, செலுத்தப்பட வேண்டும். அனைத்து பங்குகளும் ஏற்கப்பட்டன. செழியன் வைத்திருந்த 2,000 பங்குகள் தவிர அனைத்து தொகைகளும் முழுமையாக பெறப்பட்டன. அவர் இரண்டாவது மற்றும் இறுதி அழைப்பினை செலுத்தவில்லை. அவருடைய பங்குகள் ஒறுப்பிழப்பு செய்து இளங்கோ என்பவருக்கு பங்கொன்றிற்கு ரூ.8 வீதம் மறுவெளியீடு செய்யப்பட்டது. மேற்கண்ட நடவடிக்கைகளுக்கு குறிப்பேட்டுப் பதிவினை தரவும்
-
-
அப்துல் வரையறு நிறுமம் ரூ.10 மதிப்புள்ள 50,000 பங்குகளை, ரூ.2 வெளியிட்டது. அனைத்துத் தொகையும், விண்ணப்பத்துடன் செலுத்துமாறு பின்வரும் நிலைகளில் குறிப்பேட்டுப் பதிவினைத் தரவும்.
(i) பங்குகளை முகமதிப்பில் வெளியிட்டால்
(ii) பங்கொன்று ரூ.2 முனைமத்தில் வெளியிட்டால் -
சம்பத் நிறுமம் 25,000 பங்குகளை, பங்கு ஒன்று ரூ.10 என பொதுமக்களுக்கு வெளியிட்டது. விண்ணப்பத்தின் போது ரூ.3, ஒதுக்கீட்டின் போது ரூ.4, முதல் மற்றும் இறுதி அழைப்பின் போது ரூ.3 செலுத்தப்பட வேண்டும். பொதுமக்களால் 24,000 பங்குகள் ஒப்பப்பட்டன. இயக்குனர்கள் அனைத்து பங்குகளையும் ஒதுக்கீடு செய்தனர். அதற்காக தொகைகை முழுவதும் முறையாகப் பெறப்பட்டன. தேவையான குறிப்பேட்டுப் பதிவுகளைத் தரவும்.
-
திவ்யா நிறுமம் 10,000 ரூ.10 மதிப்புள்ள நேர்மைப் பங்குகளை ரூ.2 முனைமத்தில் 14,000 பங்குகள் விண்ணப்பித்தவர்களுக்கு விகித அளவு அடிப்படையில் ஒதுக்கீடு செய்தது. மிகுதியாகப் பெறப்பட்ட விண்ணப்பத் தொகை ஒதுக்கீட்டுத் தொகையில் சரிக்கட்டப்படும். பங்கொன்றுக்கு விண்ணப்பத்தின் போது ரூ.2, ஒதுக்கீட்டின் போது ரூ.5 (முனைமம் ரூ.2 உட்பட) முதல் அழைப்பின்போது ரூ.3 மற்றும் இறுதி அழைப்பின்போது ரூ.2 செலுத்தப்பட வேண்டும். விகாஸ் என்ற பங்குதாரர் தன்னுடைய 300 பங்குகளுக்கு முதல் மற்றும் இறுதி அழைப்புகளை செலுத்தத் தவறினார். அனைத்துப் பங்குகளும் ஒறுப்பிழப்புச் செய்யப்பட்டன. அவற்றில் 200 பங்குகள் பங்கொன்று ரூ.9 வீதம் மறுவெளியீடு செய்யப்பட்டன. தேவையான குறிப்பேட்டுப் பதிவுகளைத் தரவும்.
-
இலக் ஷித் என்பவர் ரூ.10 மதிப்புள்ள 50 பங்குகளை தன்வசம் வைத்துள்ளார். அவர் அதற்கென விண்ணப்பத்தின் மீது ரூ.2 செலுத்தியுள்ளார். ஆனால், ஒதுக்கீட்டின் மீது ரூ.4 மற்றும் முதலாவது அழைப்பின் மீது ரூ.2 செலுத்தவில்லை. முதலாவது அழைப்பிற்கு பின் இயக்குனர்கள் பங்கினை ஒறுப்பிழப்பு செய்தனர். ஒறுப்பிழப்பு செய்த பங்குகளுக்கான குறிப்பேட்டு பதிவினைத் தரவும்
-
கஜா வரையறு நிறுமம் பங்கு ஒன்றின் மதிப்பு ரூ.10 வீதம் 40,000 பங்குகளை பொதுமக்களிடம் வெளியிட்டது. விண்ணப்பத்தின் பொது ரூ.2, ஒதுக்கீட்டின் பொது ரூ.5 மற்றும் முதல் மற்றும் இறுதி அழைப்பின் பொது ரூ.3 என தொகை செலுத்தப்பட வேண்டும். 50,000 பங்குகளுக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டன. 40,000 பங்குகளுக்கு விகித அளவு அடிப்படையில் ஒதுக்கீடு செய்யப்பட்டன. கூடுதலாக உள்ள விண்ணப்பத் தொகைகை ஒதுக்கீட்டிற்கு பயன்படுத்தப்பட்டது. அனைத்து தொகையும் முறையாக பெறப்பட்டன எனக் கொண்டு, குறிப்பேட்டுப் பதிவுகளைத் தரவும்
-
புராகிரஸ் வரையறு நிறுமம் 50,000 சாதாரணப் பங்குகளை, பங்குகொன்று ரூ.10 வீதம் வெளியிட்டது. விண்ணப்பத்தின் போது ரூ.2, ஒதுக்கீட்டின் போது ரூ.4 முதலாவது அழைப்பின் போது ரூ.2 மற்றும் இரண்டாவது அழைப்பின் போது ரூ.2 செலுத்தப்பட்ட வேண்டும். அனைத்து பங்குகளும் ஒப்பப்பட்டன மற்றும் அனைத்து தொகைகளும் முறையாக பெறப்பட்டன. குறிப்பேட்டுப் பதிவுகள் தரவும்.
-
கஸ்தூரி வரையறு நிறுமம் ரூ.10 மதிப்புள்ள 20,000 பங்குகளை ரூ.2 முனைமத்தில் வெளியிட்டது. 30,000 பங்குகளுக்கான விண்ணப்பதாரர்களுக்கு விகித அளவு அடிப்படைப்படையில் ஒதுக்கீடு செய்தது. ரூ.1 விண்ணப்பத்தின் மீதும், ரூ.5 ஒதுக்கீட்டின் மீதும் (முனைமம் ரூ.2 உள்பட), ரூ.2 முதல் அழைப்பின் மீதும் மற்றும் ரூ.2 இறுதி அழைப்பின் மீதும் செலுத்தப்பட வேண்டும். சுபின் என்னும் பங்குதாரர் தன்னுடைய 500 பங்குகளுக்கான முதலாவது மற்றும் இறுதி அழைப்பிற்கான தொகையினை கட்டத் தவறினார். அவரது பங்குகள் ஒறுப்பிழப்பு செய்யப்பட்டன. அதில், 400 பங்குகள் ஒன்று ரூ.8 வீதம் மறுவெளியீடு செய்யப்பட்டன. தேவையான குறிப்பேட்டுப் பதிவினைத் தரவும்