St. Britto Hr. Sec. School - Madurai
12th கணக்குப்பதிவியல் மாதத் தேர்வு -1(கூட்டாளி விலகல் மற்றும் கூட்டாளி இறப்பு)-Aug 2020
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
மேரி, மீனா மற்றும் மரியம் எனும் கூட்டாளிகள் ஒரு கூட்டாண்மை நிறுவனத்தில் இலாபநட்டங்களை சமமாகப் பகிர்ந்து வந்தனர். 1-1-2019 அன்று மேரி கூட்டாண்மையிலிருந்து விலகினார். அந்நாளில், அந்நிறுவனத்தின் இருப்புநிலைக் குறிப்பு சொத்துகள் பக்கத்தில் ரூ. 75,000 பகிர்ந்து தரா நட்டம் எனக் காட்டியது. பகிர்ந்து தரா நட்டத்தைப் பகிர்ந்தளிப்பதற்கான குறிப்பேட்டுப் பதிவினைத் தரவும்.
-
இறந்த கூட்டாளிக்கு செலுத்த வேண்டிய தொகையினை அவருடைய நிறைவேற்றாளர் கணக்கிற்கு மாற்றுவதற்குரிய குறிப்பேட்டுப் பதிவினைத் தரவும்.
-
கூட்டாளி விலகல் என்றால் என்ன?
-
பிரின்ஸ், தேவ், சசிரேகா எனும் கூட்டாளிகள் ஒரு நிறுவனத்தின் இலாப நட்டங்களை 2:4:1 எனும் விகிதத்தில் பகிர்ந்து வந்தனர். 2019, மார்ச் 31 ஆம் நாளைய அவர்களுடைய இருப்புநிலைக் குறிப்பு பின்வருமாறு
பொறுப்புகள் ரூ. ரூ. சொத்துகள் ரூ.
முதல் கணக்குகள்: கட்டடம் 40,000 பிரின்ஸ் 30,000 பொறித்தொகுதி 50,000 தேவ் 50,000 அறைகலன் 10,000 சசிரேகா 20,000 1,00,000 சரக்கிருப்பு 15,000 இலாப நட்டப் பகிர்வு க/கு 10,000 கடனாளிகள் 20,000 பொதுக்காப்பு 15,000 வங்கி ரொக்கம் 15,000 தொழிலாளர் ஈட்டு நிதி 17,000 பற்பல கடனீந்தோர் 8,000 1,50,000 1,50,000 1-4-2019 அன்று சசிரேகா கூட்டாண்மையிலிருந்து விலகினார். பகிர்ந்து தரா இலாபத்தைப் பகிர்ந்தளிப்பதற்கான குறிப்பேட்டுப் பதிவினைத் தரவும்
-
ஆதாய விகிதம் கணக்கிடுவதன் நோக்கம் என்ன?
-
விவின், ஹரி மற்றும் ஜாய் என்ற கூட்டாளிகள் 3:2:1 எனும் விகிதத்தில் இலாபம் பகிர்ந்து வருகின்றனர்.
31-3-2017 அன்று ஹரி விலகினார். அவர் விலகிய நாளில், நிறுவனத்தின் ஏடுகளில் பொதுக்காப்பு
ரூ.60,000 காட்டியது. பொதுக்காப்பு மாற்றுவதற்கான குறிப்பேட்டுப் பதிவைத் தரவும். -
ஆதாய விகிதம் என்றால் என்ன?
-
கிரண், வினோத் மற்றும் விமல் எனும் கூட்டாளிகள் 5:3:2 எனும் விகிதத்தில் இலாபம் பகிர்ந்து வந்தனர். கிரண் விலகினார். வினோத் மற்றும் விமல் ஆகியோரின் புதிய இலாப விகிதம் 2:1 ஆகும். ஆதாய விகிதத்தை கணக்கிடவும்
-
ஆர்யா, பெனின் மற்றும் சார்லஸ் என்ற கூட்டாளிகள் முறையே 3:3:2 எனும் விகிதத்தில் இலாபம் பகிர்ந்து வந்தனர். அவர்களில் சார்லஸ் என்பவர் விலகினார். அவருடைய பங்கு முழுவதையும் ஆர்யா எடுத்துக் கொண்டார். ஆர்யா மற்றும் பெனின் ஆகியோரின் புதிய இலாப விகிதம் மற்றும் ஆதாய விகிதத்தைக் கணக்கிடவும்.
-
சுரேஷ், செந்தாமரை மற்றும் இராஜ் ஆகியோர் ஒரு நிறுவனத்தின் இலாப நட்டங்களை 3:2:1 எனும் விகிதத்தில் பகிர்ந்து வந்தனர். சுரேஷ் என்பவர் அக்கூட்டாண்மையிலிருந்து விலகினார். அவர் விலகிய நாளில் நிறுவனத்தின் நற்பெயர் ` 36,000 என மதிப்பிடப்பட்டது. கூட்டாளிகளின் முதல் கணக்குகள் மாறுபடும் முதல் எனக் கொண்டு நற்பெயர் பதிவிற்கான தேவையான குறிப்பேட்டுப் பதிவுகளைத் தரவும்.
-
ஜஸ்டினா, நவி மற்றும் ரித்திகா எனும் கூட்டாளிகள் இலாப நட்டங்களை சமமாகப் பகிர்ந்து வந்தனர். 31.3.2019 அன்று ரித்திகா என்பவர் கூட்டாண்மையிலிருந்து விலகினார். முந்தைய ஆண்டுகளின் இலாபம் பின்வருமாறு.
2016: ரூ.5,000; 2017: ரூ.10,000; 2018: ரூ.30,000; 2019 ஆம் ஆண்டிற்கான ரித்திகாவின் இலாபப் பங்கை அவர் விலகும் நாள் வரை பின்வரும் நிலைகளில் கணக்கிடவும்.
(அ) முந்தைய ஆண்டின் இலாபத்தை அடிப்படையாகக் கொண்டு இலாபத்தைப் பகிர்ந்தளிக்க வேண்டும்.
(ஆ) கடந்த மூன்று ஆண்டுகளின் சராசரி இலாபத்தை அடிப்படையாகக் கொண்டு இலாபத்தைப் பகிர்ந்தளிக்க வேண்டும்.
மேலும், கூட்டாளிகளின் முதல் கணக்கு மாறுபடும் முதல் முறை எனக் கொண்டு தேவையான குறிப்பேட்டுப் பதிவுகளைத் தரவும். -
ராகுல், ரவி மற்றும் ரோஹித் எனும் கூட்டாளிகள் முறையே 5 : 3 : 2 என்ற விகிதத்தில் இலாபம் பகிர்ந்து வந்தனர். அவர்களில் ரோஹித் விலகினார். அவருடைய பங்கு ராகுல் மற்றும் ரவி ஆகியோரால் 3: 2 எனும் விகிதத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டது. புதிய இலாப விகிதம் மற்றும் ஆதாய விகிதம் கணக்கிடவும்.
-
குமார், கேசவன் மற்றும் மனோகர் எனும் கூட்டாளிகள் முறையே \(\frac {1}{2},\frac {1}{3}\) மற்றும் \(\frac {1}{6}\) எனும் விகிதத்தில் இலாபம் பகிர்ந்து வந்தனர். மனோகர் விலகினார். அவருடைய பங்கினை குமார் மற்றும் கேசவன் இருவரும் சமமாக எடுத்துக் கொண்டனர். புதிய இலாப விகிதத்தையும் மற்றும் ஆதாய விகிதத்தையும் கணக்கிடவும்
-
நரேஷ், மணி மற்றும் முத்து ஆகிய கூட்டாளிகள் 2:2:1 எனும் விகிதத்தில் இலாபம் பகிர்ந்து வந்தனர். 2019 மார்ச் 31ஆம் நாள் நிறுவனத்திலிருந்து முத்து விலகினார். முத்து விலகிய நாளன்று, ஏடுகளில் நற்யெர் ரூ.40,000 எனக் காட்டியது. அவர்கள் முதல் மாறுபடும் முதல் எனக் கொண்டு, தேவையான குறிப்பேட்டுப் பதிவுகளைத் தரவும்.
அ) நற்பெயர் முழுவதையும் போக்கெழுத கூட்டாளிகள் முடிவெடுத்தால்
ஆ) நற்பெயரில் பாதித்தொகையை போக்கெழுத கூட்டாளிகள் முடிவெடுத்தால் -
இராஜா, ரோஜா மற்றும் பூஜா எனும் கூட்டாளிகள் 4:5:3 எனும் விகிதத்தில் இலாபம் பகிர்ந்து வந்தனர். நிறுவனத்திலிருந்து ரோஜா என்பவர் விலகினார். புதிய இலாப விகிதத்தையும் மற்றும் ஆதாய விகிதத்தையும் கணக்கிடவும்.
-
வெளிச்செல்லும் கூட்டாளிக்குச் செலுத்தவேண்டிய தொகையினை எவ்வாறு தீர்வு செய்யலாம்?
-
தியாக விகிதத்திற்கும் ஆதாய விகிதத்திற்கும் இடையே உள்ள வேறுபாடுகள் யாவை?
-
கூட்டாளி விலகலின்போது செய்யப்பட வேண்டிய சரிக்கட்டுதல்களை பட்டியலிடவும்.
-
ஒரு கூட்டடாண்மை நிறுவனத்தில் சரண், அருண் மற்றும் கரண் என்ற கூட்டாளிகள் தங்கள் இலாபம் மற்றும் நட்டங்களை 4:3:3 என்ற விகிதத்தில் பகிர்ந்து வந்தனர். 2016, டிசம்பர் 31 ஆம் நாளைய இருப்புநிலைக் குறிப்பு பின்வருமாறு:
பொறுப்புகள் ரூ ரூ சொத்துகள் ரூ ரூ முதல் கணக்குகள் கட்டடம் 60,000 சரண் 60,000 இயந்திரம் 40,000 அருண் 50,000 முதலீடுகள் 20,000 கரண் 40,000 1,50,000 சரக்கிருப்பு 12,000 பொதுக்காப்பு 15,000 கடனாளிகள் 25,000 கடனீந்தோர் 35,000 கழிக்க: வாராக்கடன் ஒதுக்கு 1000 24,000 வங்கி ரொக்கம் 44,000 2,00,000 2,00,000 1.1.2017 அன்று கீழ்க்கண்ட நிபந்தனைகளுக்குட்பட்டு கரண் விலகினார்.
(i) நிறுவனத்தின் நற்பெயர் ரூ.21,000 என மதிப்பிடப்பட்டது.
(i) இயந்திரம் மீது 10% மதிப்பேற்றம் செய்ய வேண்டும்.
(i) கட்டடம் ரூ.80,000 ஆக மதிப்பிட வேண்டும்.
(i) வாராக்கடன் ஒதுக்கு ரூ.2,000 ஆக அதிகரிக்க வேண்டும்.
(i) சரக்கிருப்பு மதிப்பில் ரூ.2,000 குறைக்க வேண்டும்.
(ii) கரணுக்கு செலுத்த வேண்டிய தொகை உடனடியாகச் செலுத்தப்படவில்லை.
தேவையான பேரேட்டுக் கணக்குகளை தயார் செய்யவும் மற்றும் விலகலுக்குப் பின் உள்ள கூட்டாண்மை நிறுவனத்தின் இருப்புநிலைக் குறிப்பையும் தயார் செய்யவும் -
-
கவின், மதன் மற்றும் ரஞ்சித் என்ற கூட்டாளிகள் தங்கள் இலாபம் மற்றும் நட்டங்களை முறையே 4 : 3 : 3 என்ற விகிதத்தில் பகிர்ந்து வந்தனர். 2018, டிசம்பர் 31 அன்று கவின் கூட்டாண்மையை விட்டு விலகுகிறார். விலகலுக்குப்பின் தேவையான சரிக்கட்டுதல்களைச் செய்த பிறகு அவருடைய முதல் கணக்கு ரூ.1,50,000 வரவிருப்பைக் காட்டியது. பின்வரும் நிலைகளில் பதிய வேண்டிய குறிப்பேட்டுப் பதிவுகளைத் தரவும்.
(i) விலகும் கூட்டாளிக்குச் செலுத்த வேண்டிய தொகை உடனடியாக காசோலை மூலம் செலுத்தப் பட்டது.
(ii) விலகும் கூட்டாளிக்குச் செலுத்த வேண்டிய தொகை உடனடியாகச் செலுத்தப்படவில்லை.
(iii) ரூ.1,00,000 உடனடியாக காசோலை மூலம் செலுத்தப்பட்டது, மீதத்தொகை இன்னும் செலுத்தப்பட உள்ளது -
ஒரு கூட்டண்மை நிறுவனத்தில் மஞ்சு, சாரு மற்றும் லாவண்யா என்ற கூட்டாளிகள் தங்கள் இலாபம் மற்றும் நட்டங்களை 5:3:2 என்ற விகிதத்தில் பகிர்ந்து வந்தனர். 2018, மார்ச் 31 ஆம் நாளைய அவர்களுடைய இருப்புநிலைக் குறிப்பு பின்வருமாறு:
பொறுப்புகள் ரூ ரூ சொத்துகள் ரூ முதல் கணக்குகள்: கட்டடம் 1,00,000 மஞ்சு 70,000 அறைகலன் 80,000 சாரு 70,000 சரக்கிருப்பு 60,000 லாவண்யா 70,000 2,10,000 கடனாளிகள் 40,000 பற்பல கடனீந்தோர் 40,000 கைரொக்கம் 20,000 இலாப நட்டக் கணக்கு 50,000 3,00,000 3,00,000 பின்வரும் சரிக்கட்டுதல்களுக்கு உட்பட்டு மஞ்சு என்பவர் 31.03.2018 அன்று
கூட்டாண்மையிலிருந்து விலகினார்.
(i) சரக்கிருப்பின் மதிப்பில் ரூ.10,000 குறைக்க வேண்டும்.
(i) ஐயக்கடன் ஒதுக்கு ரூ .3,000 உருவாக்க வேண்டும்.
(i) கட்டடத்தில் ரூ. 28,000 மதிப்பேற்றம் செய்ய வேண்டும்.
(ii) மஞ்சுவுக்கு செலுத்த வேண்டிய இறுதித் தொகை இன்னும்செலுத்தப்படவில்லை.மறுமதிப்பீட்டுக் கணக்கு மற்றும்விலகலுக்குப் பின் கூட்டாளிகளின் முதல் கணக்கினைத் தயார் செய்யவும்.
-
-
கவிதா, குமுதா மற்றும் லலிதா ஆகிய கூட்டாளிகள் தங்கள் இலாப நட்டங்களை முறையே 5:3:3 என்ற விகிதத்தில் பகிர்ந்து வந்தனர். 2018, டிசம்பர் 31 அன்று குமுதா நிறுவனத்திலிருந்து விலகுகிறார். அவர் விலகும் நாளில் அவருடைய முதல் கணக்கு ரூ.2,00,000 வரவு இருப்பினைக் காட்டியது.
(i) அவருடைய தொகை காசோலை மூலம் உடனடியாகச் செலுத்தப்பட்டால்
(ii) அவருடைய தொகை உடனடியாகச் செலுத்தப்படவில்லையெனில்
(iii) ரூ.70,000 உடனடியாக காசோலை மூலம் செலுத்தப்பட்டது
என்ற சூழ்நிலைகளுக்கான குறிப்பேட்டுப் பதிவுகளைத் தரவும். -
ஆகாஷ், முகேஷ் மற்றும் சஞ்சய் என்ற கூட்டாளிகள் 3:2:1 என்ற விகிதத்தில் இலாபங்கள் மற்றும் நட்டங்களைப் பகிர்ந்து வந்தனர். 2017, மார்ச் 31 அன்று அவர்களுடைய இருப்புநிலைக் குறிப்பு பின்வருமாறு:
பொறுப்புகள் ரூ ரூ சொத்துகள் ரூ முதல் கணக்குகள் கட்டடம் 1,10,000 ஆகாஷ் 40,000 வாகனம் 30,000 முகேஷ் 60,000 சரக்கிருப்பு 26,000 சஞ்சய் 30,000 1,50,000 கடனாளிகள் 25,000 இலாபநட்டப் பகிர்வு க/கு 12,000 கைரொக்கம் 15,000 பொதுக்காப்பு 24,000 தொழிலாளர் ஈட்டு நிதி 18,000 செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டு 2,000 2,06,000 2,06,000 பகிர்ந்து தரா இலாபத்தினைப் பதிவு செய்யும் குறிப்பேட்டுப் பதிவினைத் தரவும்
-
ஒரு கூட்டாண்மை நிறுவனத்தின் பாலு, சந்துரு மற்றும் நிர்மல் என்ற கூட்டாளிகள் தங்கள் இலாபம் மற்றும் நட்டங்களை 5:3:2 என்ற விகிதத்தில் பகிர்ந்து வந்தனர். 2018, மார்ச் 31 அன்று நிர்மல் என்பவர் கூட்டாண்மையை விட்டு விலகுகிறார். நிர்மல் விலகும் நாளன்று, நிறுமத்தின் ஏடுகளில் இருந்த நற்பெயரின் மதிப்பு ரூ.60,000. மாறுபடும் முதல் முறை எனக்கொண்டு, தேவையான குறிப்பேட்டுப் பதிவுகளை கீழ்கண்ட நிலைகளில் தரவும்.
(அ) ஏற்கனவே இருக்கின்ற நற்பெயர் முழுவதையும் போக்கெழுதுவதற்கு கூட்டாளிகள் தீர்மானித்தால்
(ஆ) ஏற்கனவே இருக்கின்ற நற்பெயரில் பாதியை போக்கெழுதுவதற்கு கூட்டாளிகள் தீர்மானித்தால் -
ராமு, சோமு மற்றும் கோபு என்ற கூட்டாளிகள் தங்கள் இலாபங்களை 3:5:7 என்ற விகிதத்தில் பகிர்ந்து வந்தனர். கோபு என்பவர் கூட்டாண்மையை விட்டு விலகுகிறார் மற்றும் அவருடைய பங்கை 3:1 எனும் விகிதத்தில் ராமுவும் சோமுவும் எடுத்துக்கொள்கின்றனர். புதிய இலாபப் பகிர்வு விகிதம் மற்றும் ஆதாய விகிதத்தைக் கணக்கிடவும்.
-
சார்லஸ், முத்து மற்றும் சேகர் என்ற கூட்டாளிகள் முறையே 3:4:2 என்ற விகிதத்தில் இலாபங்களைப் பகிர்ந்து கொண்டனர். 2018, டிசம்பர் 31 ஆம் நாளைய அவர்களின் இருப்புநிலைக் குறிப்பு பின்வருமாறு.
பொறுப்புகள் ரூ. ரூ. சொத்துகள் ரூ. முதல் கணக்குகள்: அறைகலன் 20,000 சார்லஸ் 30,000 சரக்கிருப்பு 40,000 முத்து 40,000 கடனாளிகள் 42,000 சேகர் 20,000 90,000 வங்கி ரொக்கம் 42,000 தொழிலாளர் ஈட்டு நிதி 27,000 இலாபநட்ட க/கு 18,000 பற்பல கடனீந்தோர் க/கு 33,000 1,50,000 1,50,000 1.1.2019 அன்று பின்வரும் ஏற்பாடுகளின்படி சார்லஸ் கூட்டாண்மையிலிருந்து விலகினார்.
(i) சரக்கிருப்பின் மதிப்பு 10% அதிகரிக்கப்பட வேண்டும்
(ii) அறைகலன் மீது 5% தேய்மானம் நீக்கப்பட வேண்டும்
(iii) வாராக்கடன் மீது ரூ. 1,000 ஒதுக்கு உருவாக்க வேண்டும்
(iv) கொடுபடா பழுதுபார்ப்புச் செலவு ரூ.10,000 இன்னமும் பதியப்படவில்லை
(v) சார்லஸிற்கு உரியத்தொகை உடனடியாகச் செலுத்தப்பட்டது
மறுமதிப்பீட்டுக் கணக்கு, விலகலுக்குப் பின் உள்ள கூட்டாளிகளின் முதல் கணக்கு மற்றும் இருப்பு நிலைக் குறிப்பினைத் தயார் செய்யவும் -
வினோத், கார்த்தி மற்றும் பிரணவ் என்ற கூட்டாளிகள் 2:2:1 என்ற விகிதத்தில் இலாபம் மற்றும் நட்டங்களைப் பகிர்ந்து வந்தனர். 2018, ஏப்ரல் 1 அன்று பிரணவ் என்பவர் கூட்டாண்மையிலிருந்து விலகினார். அவருடைய விலகலின்போது கீழ்க்கண்ட சரிக்கட்டுதல்கள் செய்யப்பட வேண்டும்.
(i) நிலம் மற்றும் கட்டடத்தின் மதிப்பை ரூ.18,000 அதிகரிக்க வேண்டும்.
(ii) இயந்திரத்தின் மதிப்பை ரூ.15,000 குறைக்க வேண்டும்.
(iii) கொடுபட வேண்டியச் செலவுகளுக்கு ரூ.8,000 ஒதுக்கு உருவாக்கவேண்டும்.
குறிப்பேட்டுப் பதிவுகள் தந்து மறுமதிப்பீட்டுக் கணக்கினைத் தயாரிக்கவும்.