St. Britto Hr. Sec. School - Madurai
12th கணக்குப்பதிவியல் மாதத் தேர்வு -1(கூட்டாளி சேர்ப்பு)-Aug 2020
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
ஹரி மற்றும் சலீம் என்ற இரு கூட்டாளிகள் 5:3 என்ற இலாப விகிதத்தில் இலாபத்தைப் பகிர்ந்து வந்தனர். அவர்கள் ஜ�ோயல் என்பவரை \(\frac{1}{8}\)
பங்கிற்கு கூட்டாளியாகச் சேர்த்தனர். அவர் அப்பங்கு முழுவதையும் ஹரி என்பவரிடம் பெற்றுக் கொண்டார். புதிய இலாபப் பகிர்வு விகிதம் மற்றும் தியாக விகிதம் கணக்கிடவும். -
சொத்துகள் மற்றும் பொறுப்புகளை மறுமதிப்பீடு செய்தல் என்றால் என்ன?
-
பின்வருவனவற்றுள் மறுமதிப்பீட்டு கணக்கில் பற்று அல்லது வரவு வைக்கப்படுவதைத் தரவும்.
(அ) சொத்தின் மீதான தேய்மானம்
(ஆ) பதிவுறா பொறுப்புகள்
(இ) கொடுபடவேண்டிய செலவிற்கான ஒதுக்கீடு
(ஈ) சொத்தின் மீதான மதிப்பேற்றம் -
புதிய கூட்டாளி சேர்க்கப்படும் போது, ஏற்கனவே உள்ள நற்பெயரை பழைய கூட்டாளிகளுக்கு பகிர்ந்தளிப்பதற்கான குறிப்பேட்டுப் பதிவினைத் தரவும்.
-
கவிதா மற்றும் இராதா எனும் கூட்டாளிகள் முறையே 4:3 எனும் விகிதத்தில் இலாபநட்டம் பகிர்ந்து வந்தனர். 1.1.2019 அன்று அவர்கள் தீபா என்பவரை கூட்டாளியாக சேர்த்தனர். அந்நாளில் அவர்களுடைய இருப்புநிலைக் குறிப்பில் இலாப நட்டக் கணக்கு பற்று இருப்பாக ரூ.70,000 பகிர்ந்து தரா நட்டமாக சொத்துகள் பக்கத்தில் காட்டியது. கூட்டாளி சேர்ப்பின் போது பகிர்ந்து தரா நட்டத்தை மாற்றுவதற்கு குறிப்பேட்டுப் பதிவு தரவும்.
-
புதிய கூட்டாளி சேர்க்கையின்போது, பகிர்ந்துதரா இலாபங்கள் மற்றும் நட்டங்கள் எவ்வாறு கூட்டாளிகளிக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது?
-
-
மகேஷ் மற்றும் தனுஷ் என்ற இரு கூட்டாளிகள் 2:1 என்ற விகிதத்தில் இலாப நட்டத்தைப் பகிர்ந்து வந்தனர். அவர்கள் அருண் என்பவரை 1/4 பங்குக்கு கூட்டாளியாகச் சேர்த்தனர். அருண் தன்னுடைய பங்கை மகேஷ் மற்றும் தனுஷ் ஆகிய இரு கூட்டாளிகளிடமிருந்தும் சம விகிதத்தில் வாங்கினார். புதிய இலாபப் பகிர்வு விகிதம் மற்றும் தியாக விகிதம் கணக்கிடவும்.
-
விமல் மற்றும் ஆதி என்ற இரு கூட்டாளிகள் 2:1 என்ற விகிதத்தில் இலாப நட்டத்தைப் பகிர்ந்து வந்தனர். அவர்கள் ஜெயம் என்பவரை 1/4 பங்குக்கு கூட்டாளியாகச் சேர்த்தனர். புதிய இலாபப் பகிர்வு விகிதம் மற்றும் தியாக விகிதம் கணக்கிடவும்.
-
-
ரமேஷ் மற்றும் ராஜு என்ற இரு கூட்டாளிகள் 2:1 என்ற விகிதத்தில் இலாப நட்டத்தைப் பகிர்ந்து வந்தனர். அவர்கள் ரஞ்சன் என்பவரை 1/4 பங்குக்கு கூட்டாளியாகச் சேர்த்தனர். ரஞ்சன் அவரது பங்கை பழைய கூட்டாளிகளிடமிருந்து 3:2 என்ற விகிதத்தில் வாங்கினார். புதிய இலாபப் பகிர்வு விகிதம் மற்றும் தியாக விகிதம் கணக்கிடவும்.
-
சுரேஷ் மற்றும் தினேஷ் என்ற இரு கூட்டாளிகள் 3:2 விகிதத்தில் இலாப நட்டத்தைப் பகிர்ந்து வந்தனர். அவர்கள் இரமேஷ் என்பவரை கூட்டாளியாகச் சேர்த்தனர். சுரேஷ் என்பவர் தன்பங்கில் 1/5 பங்கும், தினேஷ் என்பவர் தன் பங்கில் 2/5 பங்கும் தியாகம் செய்கின்றனர். புதிய இலாபப் பகிர்வு விகிதம் மற்றும் தியாக விகிதம் கணக்கிடவும்.
-
சொத்துகள் மற்றும் பொறுப்புகள் மறுமதிப்பீடு செய்வதற்கான குறிப்பேட்டுப் பதிவுகள் யாவை?
-
அனில், சுனில் மற்றும் ஹரி என்ற மூன்று கூட்டாளிகள் 4:3:3 என்ற விகிதத்தில் இலாப நட்டத்தைப் பகிர்ந்து வந்தனர். அவர்கள் ராஜா என்பவரை 20% இலாபத்திற்கு கூட்டாளியாகச் சேர்த்தனர். புதிய இலாபப் பகிர்வு விகிதம் மற்றும் தியாக விகிதம் கணக்கிடவும்.
-
ஹமீது மற்றும் கோவிந்த் என்ற இரு கூட்டாளிகள் 5:3 விகிதத்தில் இலாப நட்டத்தைப் பகிர்ந்து வந்தனர். அவர்கள் ஜான் என்பவரை கூட்டாளியாகச் சேர்த்தனர். ஜான் ஹமீதிடமிருந்து 1/5 பங்கும், கோவிந்திடமிருந்து 1/5 பங்கும் பெறுகிறார். புதிய இலாபப் பகிர்வு விகிதம் மற்றும் தியாக விகிதம் கணக்கிடவும்.
-
பிரசாந்த் மற்றும் நிஷா என்ற இரு கூட்டாளிகள் 3:2 விகிதத்தில் இலாப நட்டத்தைப் பகிர்ந்து வந்தனர். அவர்கள் ரம்யா என்பவரை கூட்டாளியாகச் சேர்த்தனர். பிரசாந்த் தன்பங்கில் 2/5 பங்கும், நிஷா தன் பங்கில் 2/5 பங்கும் தியாகம் செய்கின்றனர். புதிய இலாபப் பகிர்வு விகிதம் மற்றும் தியாக விகிதம் கணக்கிடவும்.
-
அமுதா மற்றும் புவனா இருவரும் கூட்டாளிகள். அவர்கள் 5:3 என்ற விகிதத்தில் இலாப-நட்டம் பகிர்ந்து வந்தனர். சித்ரா 3/8 பங்கு விகிதத்தில் புதிய கூட்டாளியாக சேர்கிறார். அப்போது ரூ.8,000 தமது நற்பெயர் பங்களிப்பாக கொண்டு வருகிறார். அவர்கள் மாறுபடும் முதல் முறையில் கணக்கினை பராமரிக்கின்றனர். நற்பெயருக்கென தொகை முழுவதையும் அவர்கள் எடுத்துக்கொள்கிறார்கள். நற்பெயரைச் சரிகட்டத் தேவையான குறிப்பேட்டுப்பதிவுகளை உருவாக்கவும்.
-
நற்பெயருக்கான கணக்கியல் செயல்முறை குறித்து சிறு குறிப்பு தரவும்.
-
ரவி மற்றும் குமார் என்ற இரு கூட்டாளிகள் 7:3 என்ற விகிதத்தில் இலாப நட்டத்தைப் பகிர்ந்து வந்தனர். அவர்கள் கிறிஸ்டி என்பவரை \(\frac { 3 }{ 7 } \) பங்கிற்கு கூட்டாளியாகச் சேர்த்தனர். கிறிஸ்டி ரவியிடமிருந்து \(\frac { 2 }{ 7 } \) பங்கும், குமாரிடமிருந்து \(\frac { 1 }{ 7 } \) பங்கும் பெறுகிறார். புதிய இலாபப் பகிர்வு விகிதம் மற்றும் தியாக விகிதம் கணக்கிடவும்.
-
மாலா மற்றும் அனிதா இருவரும் கூட்டாளிகள். அவர்கள் 3:2 என்ற விகிதத்தில் இலாபம் மற்றும் நட்டங்களைப் பகிர்ந்து வந்தனர். மெர்சி என்பவர் 1/5 இலாப விகிதத்தில் கூட்டாண்மையில் கூட்டாளியாக சேருகிறார். புதிய இலாபப் பகிர்வு விகிதம் மற்றும் தியாக விகிதம் கணக்கிடவும்.
-
வெற்றி மற்றும் இரஞ்சித் இருவரும் கூட்டாளிகள். அவர்கள் 3:2 எனும் விகிதத்தில் இலாபம் பகிர்ந்து வந்தனர். அவர்களது 31-12-2017 நாளன்றைய இருப்புநிலைக் குறிப்பு பின்வருமாறு இருந்தது.
பொறுப்புகள் ரூ. ரூ. சொத்துகள் ரூ. முதல் கணக்குகள் அறைகலன் 25,000 வெற்றி 30,000 சரக்கிருப்பு 20,000 இரஞ்சித் 20,000 50,000 கடனாளிகள் 10,000 காப்பு நிதி 5,000 கைரொக்கம் 35,000 பற்பல கடனீந்தோர் 45,000 இலாப நட்ட க/கு (நட்டம்) 10,000 1,00,000 1,00,000 பின்வரும் சரிக்கட்டுதல்களில் 01.01.2018 அன்று சூரியா என்பவர் நிறுவனத்தின் புதிய கூட்டாளியாக சேர்கிறார்.
(i) சூரியா 1/4 இலாபப் பங்கிற்காக ரூ.10,000 முதல் கொண்டுவருகிறார்.
(ii) சரக்கிருப்பு 10% குறைத்து மதிப்பிடப்படுகிறது.
(iii) கடனாளிகள் ரூ.7,500 என மதிப்பிடப்படுகிறது.
(iv) அறைகலன் மதிப்பு ரூ.40,000 என மாற்றி அமைக்கப்படுகிறது.
(v) கொடுபட வேண்டிய கூலி ரூ.4,500 இதுவரை பதிவு செய்யப்படவில்லை.
புதிய கூட்டாளி சேர்க்கைக்கு பின் நிறுவனத்தின் மறுமதிப்பீடு கணக்கு, கூட்டாளிகளின் முதல் கணக்கு மற்றும் இருப்புநிலைக் குறிப்பு தயார் செய்யவும். -
-
அருண், பாபு மற்றும் சார்லஸ் மூவரும் கூட்டாளிகள். அவர்கள் இலாபம் மற்றும் நட்டங்களை சமமாக பகிர்ந்து கொள்கின்றனர். அவர்கள் துரை என்பவரை 1/4 விகிதத்தில் எதிர்கால இலாபத்தினை பகிர்ந்துகொள்ள ஒப்புக்கொண்டு கூட்டாண்மையில் சேர்க்கின்றனர். நிறுவனத்தின் நற்பெயர் மதிப்பு ரூ.36,000 என்று மதிப்பிடப்படுகிறது. நற்பெயருக்காக துரை தமது பங்கின் அளவு தொகை கொண்டு வருகிறார். பழைய கூட்டாளிகள் நற்பெயருக்கான பாதித் தொகையினை எடுத்துக் கொண்டனர். மாறுபடும் முதல் முறையில் ஏடுகள் பராமரிக்கப்படுகின்றன எனக் கொண்டு தேவையான குறிப்பேட்டுப் பதிவுகளை தரவும்.
-
வாசு மற்றும் தேவி இருவரும் கூட்டாளிகள். அவர்கள் 3:2 என்ற விகிதத்தில் இலாபம் பகிர்ந்து வருகின்றனர். அவர்கள் நிலா என்பவரை 1/4 இலாப பங்கிற்கு கூட்டாண்மையில் சேர்க்கின்றனர். நிலா தன்னுடைய பங்காக ரூ.3,000 நற்பெயருக்கென செலுத்துகிறார். அவர்களின் புதிய இலாபப்பகிர்வு விகிதம் 3:3:2. நிலைமுதல் முறையில் கணக்குகள் பராமரிக்கப்படுகின்றன எனக்கொண்டு, தேவையான குறிப்பேட்டுப் பதிவுகளை உருவாக்கவும்
-
-
தீபக், செந்தில் மற்றும் சந்தோஷ் ஆகிய கூட்டாளிகள் இலாப நட்டங்களை சமமாகப் பகிர்ந்து கொள்கின்றனர். அவர்கள் ஜெரால்டு என்பவரை 1/3 இலாபப் பங்கிற்கு கூட்டாளியாக சேர்த்துக் கொண்டனர். நிறுவனத்தின் நற்பெ்பெயர் ரூ.45,000 என மதிப்பிடப்பட்டு அதற்கா்கான தன்னுடைய பங்கினை ஜெரால்டு ரொக்ககமாக கொண்டு வந்தார். பழைய கூட்டாளிகள் தங்களின் நற்பெயருக்கான மதிப்பில் பாதித்தொகையினை எடுத்துக்கொண்டனர். மாறுபடும் முதல் முறையைப் பின்பற்றுவதாகக் கொண்டு நற்பெயரை சரிக்கட்டுவதற்கான குறிப்பேட்டுப் பதிவுகளைத் தரவும்.
-
இலாப நட்டங்களை சமமாகப் பகிர்ந்து கொள்ளும் ஜேம்ஸ் மற்றும் ஜஸ்டினாவின் 1.1.2017 ம் நாளன்றைய இருப்பு நிலைக்குறிப்பு பின்வருமாறு:
பொறுப்புகள் ரூ. ரூ. சொத்துகள் ரூ. முதல் கணக்குகள்: கட்டடம் 70,000 ஜேம்ஸ் 40,000 சரக்கிருப்பு 30,000 ஜஸ்டினா 50,000 90,000 கடனாளிகள் 20,000 கடனீந்தோர் 35,000 வங்கி ரொக்கம் 15,000 காப்பு நிதி 15,000 முன்கூட்டிச் செலுத்திய
காப்பீடு5,000 1,40,000 1,40,000 மேற்கூறிய நாளில் பாலன் என்பவரை எதிர்கால இலாபத்தில் 1/5 பங்கிற்கு பின்வரும் விவரங்கள் அடிப்படையில் கூட்டாளியாக சேர்த்தனர்.
(i) பாலன் ரூ.25,000 முதல் கொண்டுவந்தார்.
(ii) நற்பெயரில் அவருடைய பங்காக ரூ.10,000 ரொக்கமாக கொண்டுவந்தார்.
(iii) சொத்துகள் கீழ்க்கண்டவாறு மதிப்பிடப்பட்டன:
கட்டடம் ரூ.80,000; கடனாளிகள் ரூ.18,000; சரக்கிருப்பு ரூ.33,000.
தேவையான பேரேட்டுக் கணக்குகளை தயார் செய்து கூட்டாளி சேர்ப்பிற்கு பின்வரும் இருப்புநிலைக் குறிப்பினைத் தயார் செய்யவும். -
அம்பிகா, தரணி மற்றும் பத்மா மூவரும் ஒரு கூட்டாண்மை நிறுவனத்தின் கூட்டாளிகள். அம்மூவரும் 5:3:2 என்ற விகிதத்தில் இலாபம் பகிர்ந்து வந்தனர். அவர்கள் இரம்யா என்பவரை 25% இலாபம் தருவதாக கூட்டாண்மையில் அனுமதித்தனர். புதிய இலாபப் பகிர்வு விகிதம் மற்றும் தியாக விகிதம் கண்டறியவும்.
-
ஹரி, மாதவன் மற்றும் கேசவன் ஆகிய கூட்டாளிகள் இலாப நட்டங்களை 5:3:2 என்ற விகிதத்தில் பகிர்ந்து வருகின்றனர். 2017, ஏப்ரல் 1 அன்று வான்மதி புதிய கூட்டாளியாகச் சேர்த்தபின் அவர்களின் இலாப விகிதம் 4:3:2:1 என முடிவு செய்யப்பட்டது. பின்வரும் சரிக்கட்டுதல்கள் செய்யப்பட வேண்டும்:
(அ) வளாகத்தின் மதிப்பு ரூ.60,000 அதிகரிக்கப்பட்டது
(ஆ) சரக்கிருப்பு மீது ரூ.5,000, அறைகலன் மீது ரூ.2,000, இயந்திரம் மீது ரூ.2,500 தேய்மானம் நீக்கப்பட வேண்டும்.
(இ) கொடுபட வேண்டிய பொறுப்பு ரூ.500 உருவாக்கப்பட வேண்டும்.
குறிப்பேட்டுப் பதிவுகள் தந்து, மறுமதிப்பீட்டுக் கணக்கினை தயார் செய்யவும். -
பிரவீணா மற்றும் தான்யா என்ற இரு கூட்டாளிகள் 7:3 என்ற இலாப விகிதத்தில் இலாபத்தைப் பகிர்ந்து வந்தனர். அவர்கள் மாலினி என்பவரை கூட்டாண்மையில் சேர்த்துக் கொண்டனர். பிரவீணா, தான்யா மற்றும் மாலினி அவர்களின் புதிய இலாப விகிதம் 5:2:3. தியாக விகிதத்தைக் கணக்கிடவும்.