St. Britto Hr. Sec. School - Madurai
12th கணக்குப்பதிவியல் மாதத் தேர்வு -1(கூட்டாண்மை நிறுவன கணக்குகள் – அடிப்படைகள்)-Aug 2020
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
பின்வரும் தகவல்களிலிருந்து, மன்னன் மற்றும் சேவகன் எனும் கூட்டாளிகளின் முதல் கணக்குகளை அவர்களின் முதல் மாறுபடும் முதலாக இருக்கும்போது தயாரிக்கவும்.
விவரம் மன்னன் ரூ. சேவகன் ரூ. 2018, ஜனவரி 1 அன்று முதல் (வரவிருப்பு) 2,00,000 1,75,000 2018 ஆம் ஆண்டின் எடுப்புகள் 40,000 35,000 எடுப்புகள் மீதான வட்டி 1,000 500 2018 ஆம் ஆண்டின் இலாபப் பங்கு 21,000 16,500 முதல் மீது வட்டி 12,000 10,500 ஊதியம் 18,000 - கழிவு - 2,500 -
மன்னன் மற்றும் இரமேஷ் எனும் கூட்டாளிகள் 3:1 எனும் விகிதத்தில் இலாபம் மற்றும் நட்டங்களை பகிர்ந்து வந்தனர். 2017, ஏப்ரல் 1 அன்று அவர்களுடைய முதல்: மன்னன் ரூ.80,000, இரமேஷ் ரூ.60,000 மற்றும் அவர்கள் நடப்புக் கணக்குகள் முறையே ரூ.10,000 மற்றும் ரூ.5,000 என வரவிருப்பைக் காட்டியது. 2018, மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய முதல் மீது வட்டி ஆண்டுக்கு 5% கணக்கிடவும் மற்றும் அதற்கான குறிப்பேட்டுப் பதிவுகளையும் தரவும.
-
அந்தோணி மற்றும் அக்பர் என்ற இரு கூட்டாளிகள் தங்கள் இலாபம் மற்றும் நட்டங்களை 3:2 என்ற விகிதத்தில் பகிர்ந்து வந்தனர். 2018, ஜனவரி 1 அன்று அவர்களின் முதல் கணக்குகளின் இருப்புகள் அந்தோணி ரூ.60,000 மற்றும் அக்பர் ரூ.40,000 ஆகும். 2018, ஏப்ரல் 1 அன்று அந்தோணி கூடுதல் முதலாக ரூ.10,000 கொண்டு வந்தார். அவ்வாண்டில் அக்பர் ரூ.5,000 கூடுதல் முதல் கொண்டு வந்தார். 2018, டிசம்பர் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய முதல் மீது வட்டி ஆண்டுக்கு 6 % எனக் கணக்கிடவும்.
-
2017, ஜனவரி 1 அன்று அறிவழகன் மற்றும் சீனிவாசன் என்ற கூட்டாளிகளின் முதல் கணக்குகள் முறையே ரூ.15,000 மற்றும் ரூ.10,000 இருப்பினைக் காட்டியது. 2017, ஜுலை 1 அன்று அறிவழகன் கூடுதல் முதலாக ரூ.5,000 கொண்டு வந்தார் மற்றும் 2017, செப்டம்பர் 1 அன்று சீனிவாசன் கொண்டு வந்த கூடுதல் முதல் ரூ.10,000.
2017, டிசம்பர் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய முதல் மீது வட்டி ஆண்டுக்கு 6 கணக்கிடவும். -
கூட்டாண்மை வரைவிலக்கணம் தரவும்.
-
கூட்டாண்மை ஒப்பாவணம் என்றால் என்ன?
-
நிலைமுதல் முறை என்றால் என்ன?
-
கூட்டாளி ஒருவருக்கு முதல் மீது வட்டி அனுமதிக்க மேற்கொள்ள வேண்டிய குறிப்பேட்டுப் பதிவு என்ன?
-
இலாபநட்டப் பகிர்வு கணக்கு ஏன் தயாரிக்கப்பட வேண்டும்?
-
-
தங்கள் இலாப நட்டங்களை சமமாகப் பகிர்ந்து வரும் சுபா மற்றும் சுதா என்ற கூட்டாளிகளின் பின்வரும் இருப்புநிலைக் குறிப்பிலிருந்து 2017, டிசம்பர் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய முதல் மீது வட்டி ஆண்டுக்கு 6 கணக்கிடவும்.
2017, டிசம்பர் 31 ஆம் நாளைய இருப்புநிலைக் குறிப்பு பொறுப்புகள் ரூ. சொத்துகள் ரூ. முதல் கணக்குகள்: நிலைச் சொத்துகள் 30,000 சுபா 15,000 நடப்புச் சொத்துகள் 20,000 சுதா 20,000 நடப்புப் பொறுப்புகள் 15,000 50,000 50,000 அவ்வாண்டில் சுபா மற்றும் சுதாவின் எடுப்புகள் முறையே ரூ.2,500 மற்றும் ரூ.3,500. அவ்வாண்டில் ஈட்டிய இலாபம் ரூ.15,000.
-
கூட்டாண்மையின் சிறப்பியல்புகளைத் தரவும்.
-
-
தங்கள் இலாப நட்டங்களை 3:4 என்ற இலாபவிகிதத்தில் பகிர்ந்து வரும் பிருந்தா மற்றும் பிரவீனா என்ற கூட்டாளிகளின் பின்வரும் இருப்புநிலைக் குறிப்பிலிருந்து 2017, டிசம்பர் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய முதல் மீது வட்டி ஆண்டுக்கு 6 % கணக்கிடவும்.
2017, டிசம்பர் 31 ஆம் நாளைய இருப்புநிலைக் குறிப்பு பொறுப்புகள் ரூ. சொத்துகள் ரூ. முதல்கணக்குகள்: பல்வகைச் சொத்துகள் 80,000 பிருந்தா 30,000 பிரவீனா 40,000 இலாப நட்டப் பகிர்வு க/கு 10,000 80,000 80,000 2017, ஜுலை 1 அன்று பிருந்தா கொண்டு வந்த கூடுதல் முதல் ரூ.6,000 மற்றும் 2017, அக்டோபர் 1 அன்று பிரவீனா கொண்டு வந்த கூடுதல் முதல் ரூ.10,000. அவ்வாண்டில் பிருந்தா மற்றும் பிரவீனா எடுப்புகள் முறையே ரூ.5,000 மற்றும் ரூ.7,000. அவ்வாண்டில் ஈட்டிய இலாபம் ரூ.31,000.
-
A மற்றும் B வழங்கிய முதல் முறையே ரூ.4,00,000 மற்றும் ரூ.2,00,000. அவர்களின் இலாபப் பகிர்வு விகிதம் 3:2. அவ்வாண்டின் முதல் மீது வட்டி கணக்கிடுவதற்கு முன்னர் இலாபம் ரூ.27,000. பின்வரும் நிலைகளில் முதல் மீதான வட்டித் தொகையைக் கணக்கிடவும்.
(i) முதல் மீது வட்டி குறித்து கூட்டாண்மை ஒப்பாவணத்தில் ஏதும் குறிப்பிடாத போது
(ii) கூட்டாண்மை ஒப்பாவணத்தின் படி முதல் மீது வட்டி ஆண்டுக்கு 3 % அனுமதிக்கப்படும் போது
(iii) கூட்டாண்மை ஒப்பாவணத்தின் படி முதல் மீது வட்டி ஆண்டுக்கு 5 % அனுமதிக்கும் போது -
வேலன் என்ற கூட்டாளி 2018, ஏப்ரல் 1 அன்று ரூ.20,000 எடுத்துக்கொண்டார். எடுப்புகள் மீது வட்டி ஆண்டுக்கு 10% என கணக்கிடப்பட வேண்டும். மாறுபடும் முதல் முறை எனக் கொண்டு 2018, டிசம்பர் 31அன்று எடுப்புகள் மீது வட்டி கணக்கிட்டு அதற்குரிய குறிப்பேட்டுப் பதிவுகளையும் தரவும்.
-
அருண் என்பவர் ஒரு கூட்டாண்மை நிறுவனத்தின் கூட்டாளி. கூட்டாண்மை ஒப்பாவணத்தின்படி எடுப்புகள் மீது வட்டி ஆண்டுக்கு 12% விதிக்க வேண்டும். டிசம்பர் 31 ஆம் நாளோடு முடிவடையும் 2018 ஆம் ஆண்டில் அவருடைய எடுப்புகள் பின்வருமாறு:
நாள் ரூ. மார்ச் 1 6,000 ஜுன் 1 4,000 செப்டம்பர் 1 5,000 டிசம்பர் 1 2,000 எடுப்புகள் மீதான வட்டித் த�ொகையைக் கணக்கிடவும்
-
2018 ஆம் ஆண்டில் இராஜன் என்ற கூட்டாளி எடுத்த எடுப்புகள் ரூ.30,000. எடுப்புகள் மீது வட்டி ஆண்டுக்கு 10% என விதிக்கப்பட்டது. 2018, டிசம்பர் 31 அன்றைய எடுப்புகள் மீது வட்டி கணக்கிடவும்.
-
கூட்டாண்மை ஒப்பாவணத்தின் உள்ளடக்கங்கள் ஏதேனும் ஆறினைத் தரவும்.
-
நிலைமுதல் முறைக்கும் மாறுபடும் முதல் முறைக்கும் இடையேயான வேறுபாடுகளைத் தரவும்.
-
கூட்டாண்மை ஒப்பாவணம் இல்லாதபோது, இந்திய கூட்டாண்மைச் சட்டம் 1932-ன் படி கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து சிறு குறிப்பு தரவும்.
-
ஜெயராமன் என்ற கூட்டாளி ஒவ்வொரு மாத நடுவிலும் ரூ.10,000 எடுத்துக் கொண்டார். எடுப்புகள் மீது வட்டி ஆண்டுக்கு 6% அனுமதிக்க வேண்டும். 2018, டிசம்பர் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய எடுப்புகள் மீது வட்டி கணக்கிடவும்.
-
அன்பு என்பவர் ஒரு கூட்டாண்மை நிறுவனத்தின் கூட்டாளி. கூட்டாண்மை ஒப்பாவணத்தின்படி எடுப்புகள் மீது வட்டி ஆண்டுக்கு 12 % கணக்கிடப்படுகிறது. 2018, டிசம்பர் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டில் அவருடைய எடுப்புகள் பின்வருமாறு:
நாள் ரூ. மார்ச் 1 6,000 ஜுன் 1 4,000 செப்டம்பர் 5,000 டிசம்பர் 1 2,000 பெருக்குத் தொகை முறையைப் பயன்படுத்தி எடுப்புகள் மீது வட்டி கணக்கிடவும்.
-
ஜான் என்பவர் ஒரு கூட்டாண்மை நிறுவனத்தின் கூட்டாளி. அவர் வழக்கமாக ஒவ்வொரு மாதமும் ரூ.1,000 எடுத்துக் கொள்கிறார். எடுப்புகள் மீது வட்டி ஆண்டுக்கு 5% விதிக்கப்பட வேண்டும். எடுப்புகள் மீது வட்டி சராசரி கால முறையைப் பயன்படுத்தி கீழ்க்கண்ட சூழ்நிலைகளில் கணக்கிடவும். அவர்
(i) ஒவ்வொரு மாதத் தொடக்கத்தில் எடுத்திருந்தால்
(ii) ஒவ்வொரு மாத நடுவில் எடுத்திருந்தால்
(iii) ஒவ்வொரு மாத இறுதியில் எடுத்திருந்தால் -
வெண்ணிலா மற்றும் ஈஸ்வரி இருவரும் கூட்டாளிகள். வெண்ணிலா ஒவ்வொரு அரையாண்டின் தொடக்கத்திலும் ரூ.5,000 எடுத்துக் கொண்டார். கணக்கிடப்பட வேண்டிய எடுப்புகள் மீதான வட்டி ஆண்டுக்கு 4%. 2018, டிசம்பர் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய எடுப்புகள் மீது வட்டி, சராசரி கால முறையைப் பயன்படுத்திக் கணக்கிடவும்.
-
முரளி மற்றும் சேது இருவரும் ஒரு கூட்டாண்மை நிறுவனத்தின் கூட்டாளிகள். முரளி, கழிவுக்கு முன் உள்ள நிகர இலாபத்தில் 10% கழிவாகப் பெற வேண்டும். சேது, கழிவுக்குப் பின் உள்ள நிகர இலாபத்தில் 10% கழிவாகப் பெற வேண்டும். 2019, மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய கழிவு கணக்கிடுவதற்கு முன்னர் உள்ள நிகர இலாபம் ரூ.2,20,000. முரளி மற்றும் சேதுவிற்கு தரவேண்டிய கழிவினைக் கண்டுபிடிக்கவும்.
-
அருளப்பன் மற்றும் நல்லசாமி இருவரும் ஒரு கூட்டாண்மை நிறுவனத்தின் கூட்டாளிகள். அவர்கள் தங்கள் இலாப நட்டங்களை 4:1 என்ற விகிதத்தில் பகிர்ந்து வருகின்றனர். 2018, ஜனவரி 1அன்று அவர்களுடைய முதல் முறையே ரூ.20,000 மற்றும் ரூ.10,000. கூட்டாண்மை ஒப்பாவணம் பின்வருவனவற்றைக் குறிப்பிடுகிறது:
(அ) முதல் மீது வட்டி ஆண்டுக்கு 5 % அனுமதிக்க வேண்டும்.
(ஆ) அருளப்பன் மற்றும் நல்லசாமி இருவருக்கும் விதித்த எடுப்புகள் மீதான வட்டி முறையே ரூ.200 மற்றும் ரூ.300 ஆகும்.
(இ) முதல் மீது வட்டி மற்றும் எடுப்புகள் மீதான வட்டி கழிப்பதற்கு முன் உள்ள நிறுவனத்தின் நிகர இலாபம் ரூ.18,000.
கூட்டாளிகளுடைய முதல் மாறுபடும் முதல் எனக் கொண்டு தேவையான குறிப்பேட்டுப் பதிவினைத் தரவும் மற்றும் 2018, டிசம்பர் 31 ஆம் நாளைய இலாபநட்டப் பகிர்வு கணக்கையும் தயார் செய்யவும். -
-
ரிச்சர்ட் மற்றும் ரிஸ்வான், 2018, ஜனவரி 1 அன்று முறையே ரூ.3,00,000 மற்றும் ரூ.2,00,000 முதலாகக் கொண்டு தொழில் தொடங்கினர்.
கூட்டாண்மை ஒப்பாவணத்தின்படி,
(அ) முதல் மீது வட்டி ஆண்டுக்கு 6% தரப்பட வேண்டும்.
(ஆ) ரிஸ்வான் ஆண்டுக்கு ரூ.50,000 ஊதியம் பெற வேண்டும்.
(இ) முதல் மீது வட்டி மற்றும் ரிஸ்வானின் ஊதியத்தை கழித்த பின், கழிவுக்குப் பின் உள்ள இலாபத்தில் 10% ரிச்சர்ட் கழிவாகப் பெற வேண்டும்.
(ஈ) இரு கூட்டாளிகளுக்கு இடையேயான இலாபப் பகிர்வு விகிதம் 3:2.
அவ்வாண்டில் நிறுவனம் ஈட்டிய இலாபம் ரூ.3,00,000.
நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் - 31 இல் கணக்கு முடிக்கிறது எனக் கொண்டு இலாபநட்டப் பகிர்வு கணக்கை தயாரிக்கவும். -
பின்வரும் தகவல்களிலிருந்து ரூபன் மற்றும் டெரி அவர்களின் முதல், நிலை முதல் எனக்கொண்டு, அவர்களின் முதல் கணக்குகளைத் தயாரிக்கவும்.
விவரம் ரூபன் ரூ. டெரி ரூ. 2018, ஏப்ரல் 1 அன்று முதல் 70,000 50,000 2018, ஏப்ரல் 1 அன்று நடப்புக் கணக்கு (வ) 25,000 15,000 கூடுதல் முதல் கொண்டு வந்தது 18,000 16,000 2018 – 2019 – ல் எடுப்புகள் 10,000 6,000 எடுப்புகள் மீது வட்டி 500 300 இலாபப் பங்கு (2018 – 2019) 35,000 25,800 முதல் மீது வட்டி 3,500 2,500 சம்பளம் - 18,000 கழிவு 12,000 -
-
-
பின்வரும் தகவல்களிலிருந்து, பத்மினி, மற்றும் பத்மா என்ற கூட்டாளிகளின் முதல் மாறுபடும் முதல் எனக் கொண்டு அவர்களின் முதல் கணக்குகளைத் தயாரிக்கவும்.
விவரம் பத்மினி ரூ. பத்மா ரூ. 2018, ஜனவரி 1 அன்று முதல் (வரவிருப்பு) 5,00,000 4,00,000 2018 ஆம் ஆண்டில் எடுப்புகள் 70,000 40,000 எடுப்புகள் மீது வட்டி 2,000 1,000 2018 – ல் இலாபப் பங்கு 52,000 40,000 முதல் மீது வட்டி 30,000 24,000 ஊதியம் 45,000 - கழிவு - 21,000 -
சந்தோஷ் என்பவர் ஒரு கூட்டாண்மை நிறுவனத்தின் கூட்டாளி. கூட்டாண்மை ஒப்பாவணத்தின்படி எடுப்புகள் மீது வட்டி ஆண்டுக்கு 6% கணக்கிடப்பட வேண்டும். 2018, டிசம்பர் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டில் அவருடைய எடுப்புகள் பின்வருமாறு:
நாள் ரூ. பிப்ரவரி 1 2,000 மே 1 10,000 ஜுலை 1 4,000 அக்டோபர் 1 6,000 பெருக்குத் தொகை முறையைப் பயன்படுத்தி எடுப்புகள் மீது வட்டி கணக்கிடவும்.