St. Britto Hr. Sec. School - Madurai
12th இயற்பியல் மாதத் தேர்வு -1(மின்னோட்டவியல்)-Aug 2020
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
கிர்க்காஃப்பின் மின்னழுத்த வேறுபாட்டு விதியைக் கூறு.
-
ஓம் விதியின் நுண் வடிவத்தை கூறு.
-
P1 மற்றும் P2 இரு உலோகக் கம்பிகள் ஒரே உலோகம் மற்றும் ஒரே நீளமுடையன. ஆனால் வெவ்வேறு குறுக்குப்பரப்புகள் A1, A2சேர்த்து இணைக்கப்பட்டு, மின்னியக்கு விசையின் மூலத்துடன் இணைக்கப்படுகிறது. எனில் இரு கம்பிகளும் தொடரிணைப்பு மற்றும் பக்க இணைப்புகளில் உள்ளபோது அவற்றில் கட்டுறா எலக்ட்ரான்களின் இயக்குதிசைவேகங்களின் விகிதத்தைக் காண்க.
-
ஒரு கடத்தியின் நீளம் 1, dc மூலத்துடன் இணைக்கப்படுகிறது. அதன் மின்னழுத்தம் V கம்பியானது நீட்டப்படும் போது. அதன் நீளம் இரட்டிப்பாகும். Vஐ மாறிலியாகக் கொண்டு இழுப்புதிசைவேகம், மின்தடை, மின்தடை எண் போன்ற மின்தடை காரணிகள் மாறுபடுவதை விளக்கு.
-
சீபெக் விளைவு என்றால் என்ன?
-
மின்னோட்டம் என்பது ஒரு ஸ்கேலர் ஏன்?
-
ஒரு கடத்தியில் மின்னோட்டம் என்பது உருவாகிறது?
-
மரபு மின்னோட்டம் என்றால் என்ன?
-
0.5 mm2 குறுக்குவெட்டுப்பரப்பு கொண்ட தாமிரக்கம்பியில் 0.2 A அளவுள்ள மின்னோட்டம் பாய்கிறது. அத்தாமிரக்கம்பியில் உள்ள கட்டுறா எலக்ட்ரான்களின் அடர்த்தி 8.4 x 1028 m-3 எனில் இக்கட்டுறா எலக்ட்ரான்களின் இழுப்புத்திசை வேகத்தை கணக்கிடுக.
-
10°C மற்றும் 40°C வெப்பநிலைகளில் ஒரு பொருளின் மின்தடைகள் முறையே 45 Ω மற்றும் 85 Ω ஆகும் எனில் அதன் வெப்பநிலை மின்தடை எண்ணைக் கண்டுபிடி.
-
ஓம் விதியின் நுண்மாதிரி அமைப்பிலிருந்து ஓம் விதியின் பயன்பாட்டு வடிவத்தை பெறுக. அதன் வரம்புகளை விவாதி.
-
-
ஒரு கம்பியின் மின்தடை 20 Ω. இக்கம்பி தனது ஆரம்ப நீளத்திலிருந்து எட்டு மடங்கு நீளம் அதிகரிக்குமாறு சீராக நீட்டப்பட்டால், கம்பியின் புதிய மின்தடை என்ன?
-
ஒரு கடத்தி வழியே 32 A மின்னோட்டம் பாயும்போது, ஓரலகு நேரத்தில் கடத்தியில் பாயும் எலக்ட்ரான்களின் எண்ணிக்கையை காண்க.
-
-
வோல்ட்மீட்டரை பயன்படுத்தி மின்கலத்தின் அக மின்தடையை காண்பதை விளக்குக.
-
கிர்க்காஃப் விதிகளை கூறி விளக்குக.
-
மீட்டர் சமனச்சுற்றை பயன்படுத்தி தெரியாத மின்தடையை காண்பதை விளக்குக.
-
மீ கடத்திகளின் பயன்பாடுகள் யாவை? (Applications of Super Conductors).
-
ஆய்வகங்களில் பயன்படுத்தப்படும் மின்தடையாக்கிகளின் பயன் யாது? அதன் நிற வளையங்கள் கொண்டு மின்தடை எவ்வாறு கணக்கிடப்படுகிறது என எடுத்துக்காட்டுடன் விவரி?
-
24 Ω மின்தடையின் குறுக்கே மின்னழுத்த வேறுபாடு 12 V எனில், மின்தடை வழியே செல்லும் மின்னோட்டத்தின் மதிப்பு என்ன?
-
20 W – 220V மற்றும் 100W – 220V என குறிப்பிடப்பட்டுள்ள இரு மின்பல்புகள் தொடரிணைப்பில் 440 V மின்னழுத்த வேறுபாட்டு (Power supply) மூலத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. எந்த மின்பல்பின் மின் இழை துண்டிக்கப்படும்? (Fused)
-
ஒரு மீட்டர் சமனச்சுற்று ஆய்வில் 15 Ω என்ற படித்தர மின்தடையாக்கி வலது இடைவெளியில் இணைக்கப்பட்டுள்ளது. சமன்செய் நீளங்களின் விகிதம் 3:2 எனில் மற்றொரு இடைவெளியில் உள்ள மின்தடையாக்கியின் மதிப்பைக் காண்க.
-
ஒரு மின்கலம் 2 Ω மின்தடை வழியாக 0.9 A மின்னோட்டத்தையும், 7 Ω மின்தடை வழியே 0.3 A மின்னோட்டத்தையும் ஏற்படுத்துகிறது எனில் மின்கலத்தின் அகமின்தடையைக் கணக்கிடுக.
-
-
ஒரு மீட்டர் சமனச் சுற்றில், மின்தடைப் பெட்டியில் 10 Ω என்ற அளவு மின்தடை வைக்கப்பட்டுள்ளது. சமன்செய் நீளத்தின் மதிப்பு l1 = 55 cm எனில் தெரியாத மின்தடையின் மதிப்பை கணக்கிடுக.
-
ஜூல் வெப்ப விதியின் பயன்பாடுகளை மின்சார சாதனங்களின் மூலம் விவரி
-
-
மின்னழுத்தமானியின் அடிப்படைச் சுற்றினை படம் வரைந்து விவரி. அதன் மூலம் சமன்செய் நீளம் எவ்வாறு கணக்கிடப்படுகிறது?