MABS Institution
11th வேதியியல் மாதத் தேர்வு -3(வாயு நிலைமை)-Aug 2020
-
-
-
அமுக்கத்திறன் காரணி வரையறு.
-
காற்று கரைசல்கள் கொண்ட கலன்கள் வெப்பப்படுத்துவத்தைப் பற்றிய தெளிவான எச்சரிக்கை கொண்டிருக்கும் ஏன்?
-
ஒரு வாயு உள்ள கலனின் சுவரில் மிகச்சிறிய பசைத் தன்மை கொண்ட ஒரு பரப்பு உள்ளதெனக் கருதவும். இப்பரப்பில் அழுத்தம் மற்றும் மற்ற இடங்களை விட அதிகமாக இருக்குமா அன்றி குறைவாக இருக்குமா?
-
ஒரு வாயுவின் கன அளவு மற்றும் மோல்களை தொடர்புபடுத்தும் கணிதமுறை வாய்ப்பாட்டினை தருக
-
-
விரவுதல் மற்றும் பாய்தல் வேறுபாடு தருக.
-
அம்மோனியா HCl உடன் வினைபுரிந்து அடர்ந்த வெண்ணிற புகையான NH4Cl ஐ தருகிறது.புகை HCl க்கு அருகில் தோன்றுவது ஏன்?
-
-
ஜூல் தாம்சன் விளைவை எழுதுக.
-
சமவெப்ப அழுத்த நிலையில், ஒரு குறிப்பிட்ட வாயுவின் விரவுதல் வீதம், நைட்ரஜனை காட்டிலும் 0.5 மடங்கு அதிகம்.அக்குறிப்பிட்ட வாயுவின் மோலார் நிறையினைக் கணக்கிடுக.
-
நமது வளிமண்டலத்தில் ஹைட்ரஜன் இல்லை.ஏன்?நிலவில் வளிமண்டலம் ஏன் இல்லை?
-
2.98 atmல் 250சி ல் உள்ள எரிவாயு உலோகத்தொட்டி ஒன்று வைக்கப்பட்டுள்ளது அத்தொட்டி 12atm அழுத்தம் வரை மட்டுமே தாங்கி பின் அதிக அழுத்தத்தினால் வெடிக்க கூடியது அத்தொட்டி உள்ள கட்டிடத்தில் தீப்பிடிக்கும் போது அத்தொட்டி முதலில் வெடிக்குமா அல்லது உருகத் தொடங்குமா என கண்டறிக.(உலோகத்தின் உருகுநிலை 1100K)
-
வாயுக்கள் பற்றிய கீழ்கண்ட உண்மைகளுக்கு சரியான விளக்கம் தருக
அ) வாயுக்கள் கலனின் அடிப்பரப்பில் தங்குவதில்லை
ஆ) வாயுக்கள் தமக்குக் கொடுக்கப்பட்டுள்ள வெளியில் பரவுகின்றன -
வாயுக்களை திரவமாக்கப் பயன்படும் பல்வேறு முறைகளை எழுதுக.
-
கொடுக்கப்பட்டுள்ள குறைந்த வெப்பநிலையில் கீழ்க்கண்டவற்றுள் எந்த வாயு நல்லியல்பு வாயுவிலிருந்து விலகும் அல்லது விளக்குக.
-
சல்பர் ஹெக்சாகுளோரைடு ஒரு நிறமற்ற மனமற்ற வாயு அது நல்லியல்புத்தன்மை உடையதாக கருதி 5.43dm3 கனஅளவுள்ள ஒரு எஃகு கலனில் 69.50ல் 1.82மோல் கொண்ட வாயுவின் அழுத்தத்தினைக் கணக்கிடுக.
-
ஒரு உலோகத்தினை ஹைட்ரோகுளோரிக் அமிலத்துடன் வினைபுரியச் செய்யும் போது ஹைட்ரஜன் உருவாகிறது. ஒரு மாணவன் இந்த வினையின் மூலம் 154.4x10-3 கனஅளவுள்ள வாயுவினை 742 mm Hg அழுத்தத்தில் மற்றும் 298K வெப்பநிலையில் சேகரிக்கிறான் எனக் கருதவும்.மாணவன் சேகரித்த ஹைட்ரஜன் வாயுவின் நிறை என்ன?
-
எவரெஸ்ட் மலையின் உச்சியின் மீதுள்ள ஒருவர் உறிஞ்சி கொண்டு நீரினை உறிஞ்சுவது எளிதா?
-
காற்று நிரப்பிய பலூனினை அறை வெப்ப நிலையிலிருந்து குளிர்ந்த மிகக் குறைந்த வெப்பநிலைக்கு மாற்றப்படுவதைக் கொண்டு சார்லஸ் விதிக்கு எடுத்துக்காட்டாக எவ்வாறு பயன்படுத்தலாம்?
-
ஆர்கான் ஒரு மந்தவாயு. இது மின்விளக்குகளில் டங்ஸ்டன் இழை ஆவியாவதைத் தடுக்க பயன்படுகிறது. மாறா கனஅளவில் உள்ள ஒரு மின் விளக்கில் 180C ல் 1.2atm ள்ள ஆர்கான் வாயு 850C க்கு வெப்பப்படுத்தப்படுகிறது. அதன் இறுதி அழுத்தத்தினை (atm) கணக்கிடுக.
-
மோட்டார் வாகன ஓட்டி பிரேக்கினை உபயோகிக்கும் போது பயணிகள் முன்பக்கமாக விழுவார்கள். ஆனால் ஹீலியம் பலூன் வண்டியின் பின்பக்கமாகத் தள்ளப்படும்.ஏன்?
-
ஒரு சமவெப்ப அழுத்த நிலையில் \({ C }_{ n }{ H }_{ 2n-2 }\) என்ற மூலக்கூறு வாய்பாடு கொண்ட ஹைட்ரோகார்பன் போன்று ஹைட்ரஜன் வாயு \(3\sqrt { 3 } \) மடங்கு விரவுதல் வீதம் கொண்டதெனில் n ன் மதிப்பு என்ன?
-
பாயிலின் விதியினை தருக.
-
ஏரி ஒன்றில் ஒரு சிறிய குமிழி 60 மற்றும் 4atm உள்ள அடிப்புறத்தில் இருந்து 250சி மற்றும் 1atm உள்ள மேற்பரப்பிற்கு வருகின்றது அதன் ஆரம்ப கனஅளவு 1.5ml எனில் இறுதி கனளவினை கண்டறிக.
-
நைட்ரஜன் வாயுவின் இரு வேறு மாத்திரைகளுள் ஒன்று A 1.5 மோல்கள் 37.6dm3 கனஅளவுள்ள கலனில் 289K ல் வைக்கப்பட்டுள்ளது.மற்றொன்று B16.5dm3 கனளவுள்ள கலனில் 298K ல் வைக்கப்பட்டுள்ளது மாதிரி B யில் உள்ள மோல்களின் எண்ணிக்கையை கணக்கிடுக.
-
நல்லியல்பு வாயுக்கள் என்பன யாவை? இயல்புவாயுக்கள் நல்லியல்பு வாயுக்களிலிருந்து எவ்வாறு வேறுபடுகின்றன?
-
பாயில் விதியின் விளைவுகளை எழுதுக.