ஹைட்ரஜனை தொழில் முறையில் தயாரிக்க பின்வரும் நீர்வாயு மாற்ற வினை மிக முக்கியமானதாகும்.
\(CO(g)+{ H }_{ 2 }O(g)\rightleftharpoons CO_{ 2 }(g)+{ H }_{ 2 }(g)\)
கொடுக்கப்பட்ட வெப்பநிலையில் KP = 27, 2L குடுவையில் 0.13 மோல் CO, 0.56 மோல் நீர் 0.78 மோல் CO2 மற்றும் 0.28 மோல் H2 ஆகியன எடுத்துக்கொள்ளப்பட்டால், சமநிலையை அடைய வினை எந்த திசையில் நிகழும் எனக் கண்டறிக.