MABS Institution
11th வேதியியல் மாதத் தேர்வு -1(அணுவின் குவாண்டம் இயக்கவியல் மாதிரி)-Aug 2020
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
சம ஆற்றல் ஆர்பிட்டால்கள் என்றால் என்ன? இந்த சம ஆற்றல் பண்பு எவ்வாறு இழக்கப்படுகிறது. உதாரணத்துடன் கூறுக.
-
Δv = 0.1% மற்றும் V = 2.2 ×106 ms-1 ஆக உள்ள எலக்ட்ரான் ஒன்றின் நிலையை அளவிடுவதில் உள்ள நிச்சயமற்றத் தன்மையினைக் கணக்கிடுக.
-
காலத்தைச் சார்ந்து அமையாத ஷ்ரோடிங்கர் அலைச்சமன்பாட்டினை சுருக்கமாக விளக்குக.
-
O-அணுவில் உள்ள 8வது எலக்ட்ரான் மற்றும் Cl – அணுவில் உள்ள 15வது எலக்ட்ரான் குரோமியத்தின் கடைசி எலக்ட்ரான் ஆகியனவற்றிற்கான நான்கு குவாண்டம் எண்களின் மதிப்புகளையும் தீர்மானிக்கவும்.
-
ஹைட்ரஜனின் 2s ஆர்பிட்டாலின் ஆற்றலானது லித்தியத்தின் 2s ஆர்பிட்டாலின் ஆற்றலை விட அதிகம் ஏன்?
-
பின்வரும் P3 எலக்ட்ரான் அமைப்புகளை கருதுக.
[அ][ஆ]
[இ]
[ஈ]
இவற்றுள் அடி ஆற்றல் நிலையைப் பெற்றுள்ளது எது? உனது விடைக்கான சரியான காரணத்தைக் கூறு.
-
டி -பிராக்ளே அலைநீளம் எதற்கு முக்கியத்துவம் உடையது? எதற்குப் புறக்கணிக்கத்தக்கது?
-
ஹைட்ரஜன் அணுவின் போர் வட்டப்பாதையின் சுற்றளவானது, அணுக்கருவினைச் சுற்றி வரும் எலக்ட்ரானுக்கான டிபிராக்ளி அலைநீளத்தின் முழு எண் மடங்கிற்குச் சமம் எனக் காட்டுக.
-
பருப்பொருட்களின் ஈரியல்புத் தன்மைக்கான டி -பிராக்ளே தொடர்பை தருவி.
-
அணுவின் குவாண்டம் இயக்கவியல் மாதிரியின் முக்கியக் கூறுகள் யாவை?
-
140kmhr-1 வேகத்தில் பயணிக்கும் 160g நிறையுடைய கிரிக்கெட் பந்து ஒன்றின் டிபிராலி அலைநீளம் (cmல்) கணக்கிடுக.
-
p, d, f ஆர்பிட்டால்களின் வடிவங்களை பற்றி விவரித்து எழுதுக.
-
-
ஆரப்பங்கீட்டு சார்பை தக்கச் சான்றுடன் விளக்குக.
-
நிறை எண் 37 உடைய ஒரு அயனி ஒற்றை எதிர்மின் சுமையினைப் பெற்றுள்ளது. இந்த அயனியானது, எலக்ட்ரான்களைக் காட்டிலும் 11.1% அதிகமான நியூட்ரான்களைப் ப் பெற்றிருந்தால், அந்த அயனியின் குறியீட்டினைக் கண்டறிக.
-
-
Li2+அயனியானது ஹைட்ரஜனை ஒத்த அயனியாகும். அதனை போர் மாதிரியின் அடிப்படையில் விவரிக்க இயலும். மூன்றாம் வட்டப்பாதையின் போர் ஆரம் மற்றும் நான்காம் வட்டப்பாதையில் உள்ள ஒரு எலக்ட்ரானின் ஆற்றல் ஆகியவற்றைக் கண்டறிக
-
பின்வரும் செயல்முறைக்கு தேவைப்படும் ஆற்றலைக் கணக்கிடுக.
He+ (g) → He2+ (g) + e-
சிறும ஆற்றல் நிலையில் உள்ள ஹைட்ரஜனின் அயனியாக்கும் ஆற்றல் -13.6 evatom-1.