ஒரு குறிப்பிட்ட வகை குறுந்தகடு ஒன்றின் விலை ரூ8 ஆக இருக்கும் போது 22,000 குறுந்தகடுகளை வாடிக்கையாளர்கள் வாங்குவார்கள். ஒரு குறுந்தகட்டின் விலை ரூ30 அல்லது அதற்கு மேல் விலை கொடுத்து வாங்க மாட்டார்கள். அதே சமயத்தில் ஒரு குறுந்தகட்டின் விலை ரூ6 அல்லது அதற்கு குறைவாக இருக்கும் போது உற்பத்தியாளர் விற்பனை செய்ய மாட்டார். இருப்பினும், குறுந்தகடு ஒன்றின் விலை ரூ14 ஆக இருக்கும் போது உற்பத்தியாளரால் 24,000 குறுந்தகடுகளை வழங்க இயலும். தேவை மற்றும் வழங்கல் அளவுகள், விலைக்கு நேர்விகித சமமாக எடுத்துக்கொக்கொண்டால் பின்வருவனவற்றை எவ்வாறு காணலாம்.
(i) தேவைச் சமன்பாடு (Demand Equation)
(ii) வழங்கல் சமன்பாடு (Supply Equation)
(iii) சந்தையின் சமநிலையில் குறுந்தகடுகளின் எண்ணிக்கை மற்றும் விலை
(iv) ஒரு குறுந்தகட்டின் விலை ரூ10 எனில் தேவை மற்றும் வழங்கல் அளவு.