பின்வரும் பிழைகள் இருப்பாய்வு தயாரிக்கப்பட்ட பின் கண்டறியப்பட்டன. அனாமத்துக் கணக்கு இருப்பதாகக் கருதி பிழை திருத்தக் குறிப்பேட்டுப் பதிவுகளைத் தருக.
(அ)கொள்முதல் ஏட்டின் மொத்தம் ரூ.100 குறைவாகக் கூட்டப்பட்டுள்ளது.
(ஆ) ரொக்க ஏட்டின் பற்றுப்பக்கம் உள்ள தள்ளுபடிப் பத்தியின் கூட்டுத்தொகை ரூ.575 பேரேட்டில் எடுத்து எழுதப்படவில்லை.
(இ) விற்பனை ஏட்டின் ஒரு பக்கத்தின் கூட்டுத்தொகைகை ரூ.5,975 அடுத்த பக்கத்தில் முன் எடுத்து எழுதும் பொது ரூ.5,795 என எழுதப்பட்டுள்ளது.
(ஈ) சம்பள சம்பளம் ரூ.1,800 பேரேட்டில் ரூ.18,000 என எடுத்தெழுதப்பட்டுள்ளது.
(உ) முகிலனிடமிருந்து கடனுக்கு ரூ.150-க்கு சரக்கு வாங்கியது முகிலன் கணக்கில் ரூ.1,500 என எடுத்தெழுதப்பட்டுள்ளது