அஜித் அவர்களின் கீழ்க்காணும் இருப்பாய்வு மற்றும் சரிக்கட்டுதல்களிலிருந்து 2016, மார்ச் 31ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய வியாபார இலாபநட்டக் கணக்கையும், அந்நாளைய இருப்புநிலைக் குறிப்பையும் தயார் செய்யவும்.
விவரம் |
பற்று ரூ |
விவரம் |
வரவு ரூ |
தொடக்கச் சரக்கிருப்பு |
15,000 |
முதல் |
25,000 |
அறைகலனும் பொருத்துகைகளும் |
30,000 |
வெளித் திருப்பம் |
1,000 |
கொள்முதல் |
40,000 |
செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டு |
10,000 |
விற்பனைத் திருப்பம் |
2,000 |
விற்பனை |
1,24,000 |
உள்தூக்குக் கூலி |
10,000 |
வாரா ஐயக்கடன் ஒதுக்கு |
500 |
அலுவலக வாடகை |
23,000 |
கடனாளிகள் மீதான தள்ளுபடி ஒதுக்கு |
100 |
பற்பல கடனாளிகள் |
20,100 |
|
|
வங்கியிருப்பு |
19,600 |
|
|
வாராக்கடன் |
900 |
|
|
|
1,60,600 |
|
1,60,600 |
சரிக்கட்டுதல்கள்:
(அ) கணக்காண்டு இறுதியில் சரக்கிருப்பு ரூ 8,000
(ஆ) கூடுதல் வாராக்கடன் ரூ 100
(இ) பற்பல கடனாளிகள் மீது 2% வாரா ஐயக்கடன் ஒதுக்கு உருவாக்குக.
(ஈ) பற்பல கடனாளிகள் மீது 1% தள்ளுபடி ஒதுக்கு உருவாக்குக.