மது என்பவரின் ஏடுகளிலிருந்து எடுக்கப்பட்ட கீழ்க்காணும் விவரங்களிலிருந்து 2018, மார்ச் 31 ஆம் நாளைய இருப்புநிலைக் குறிப்பைத் தயார் செய்க.
விவரம் |
ரூ |
விவரம் |
ரூ |
முதல் |
2,00,000 |
பற்பல கடனீந்தோர் |
40,000 |
எடுப்புகள் |
40,000 |
செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டு |
20,000 |
கைரொக்கம் |
15,000 |
நற்பெயர் |
60,000 |
வங்கியிடமிருந்து பெற்ற கடன் |
40,000 |
பற்பல கடனாளிகள் |
80,000 |
வங்கி மேல்வரைப்பற்று |
20,000 |
நிலம் மற்றும் கட்டடம் |
50,000 |
முதலீடுகள் |
20,000 |
வாகனங்கள் |
80,000 |
பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு |
10,000 |
வங்கி ரொக்கம் |
25,000 |
இறுதிக் கணக்குகள் தயாரிக்கையில் கீழ்க்காணும் சரிக்கட்டுதல்கள் செய்யப்பட வேண்டும்:
(அ) கொடுபட வேண்டிய பொறுப்புகள்: சம்பளம்: ரூ 10,000; கூலி ரூ 20,000; வங்கி மேல்வரைப்பற்று மீது வட்டி ரூ 3,000 மற்றும் வங்கி கடன் மீது வட்டி ரூ 6,000
(ஆ) முதல் மீது வட்டி ஆண்டுக்கு 10 % அனுமதிக்க வேண்டும்.
(இ) வாராக்கடன் ரூ 10,000; பற்பல கடனாளிகள் மீது 10 % வாராக்கடன் ஒதுக்கு உருவாக்கப்பட வேண்டும்.
(ஈ) இறுதிச் சரக்கிருப்பின் மதிப்பு ரூ 1,20,000
(உ) வாகனங்கள் மீது ஆண்டுக்கு 10 % தேய்மானம் நீக்கப்பட வேண்டும்.
மேற்குறிப்பிட்ட சரிக்கட்டுதல்களுக்கு முன் அவ்வாண்டின் நிகர இலாபம் ரூ 96,000.