MABS Institution
11th கணக்குப்பதிவியல் வாரத் தேர்வு -1(பிழைத் திருத்தம்)-Aug 2020
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
பின்வரும் பிழைகள் இருப்பாய்வு தயாரித்த பின் கண்டறியப்பட்டன. அவற்றைத்
திருத்துவதற்கான குறிப்பேட்டுப் பதிவுகளைத் தரவும். அனாமத்துக் கணக்கு இருப்பதாகக் கருதவும்.
(அ) விற்பனை ஏட்டின் கூட்டுத்தொகையில் ரூ.350 குறைவாகக் கூட்டப்பட்டுள்ளது.
(ஆ) ரொக்க ஏட்டின் பற்றுப் பக்கத்திலுள்ள தள்ளுபடிப் பத்தியின் மொத்தம் ரூ.420 பேரேட்டில் எடுத்து எழுதப்படாமல் உள்ளது.
(இ) கொள்முதல் ஏட்டின் ஒரு பக்கத்தின் கூட்டுத்தொகை ரூ.5,353 அடுத்த பக்கத்திற்கு முன் எடுத்து எழுதும் போது ரூ.5,533 என எழுதப்பட்டுள்ளள்ளது.
(ஈ) சம்பள சம்பளம் ரூ.2,400 பேரேட்டில் ரூ.24,000 என எடுத்து எழுதப்பட்டுள்ளது.
(உ) செம்பியன்மாதேவியிடமிருந்து கடனுக்கு ரூ.180 க்கு சரக்கு வாங்கியது அவர் கணக்கில் ரூ.1,800 என எடுத்து எழுதப்பட்டுள்ளது -
இருப்பாய்வு தயாரிக்கும் முன் கீழ்க்கண்ட பிழைகள் கண்டறியப்பட்டன. அவற்றைத் திருத்தவும்.
(அ) கொள்முதல் திருப்ப ஏட்டில் ரூ.500 குறைவாகக் கூட்டப்பட்டுள்ளது.
(ஆ) கொள்முதல் திருப்ப ஏட்டில் ரூ.600 அதிகமாகக் கூட்டப்பட்டுள்ளது.
(இ) விற்பனைத் திருப்ப ஏட்டில் ரூ.700 குறைவாகக் கூட்டப்பட்டுள்ளது.
(ஈ) விற்பனைத் திருப்ப ஏட்டில் ரூ.800 அதிகமாகக் கூட்டப்பட்டுள்ளது -
இருப்பாய்வு தயாரிக்கப்பட வேண்டி உள்ளது எனக் கருதி கீழ்க்கண்ட பிழைகளைத் திருத்தம் செய்யவும்.
(அ) விற்பனை ஏட்டில் ரூ.400 குறைவாகக் கூட்டப்பட்டுள்ளது.
(ஆ) விற்பனைத் திருப்ப ஏட்டில் ரூ.500 அதிகமாகக் கூட்டப்பட்டுள்ளது.
(இ) கொள்முதல் ஏட்டில் ரூ.600 குறைவாகக் கூட்டப்பட்்பட்டுள்ளது.
(ஈ) கொள்முதல் திருப்ப ஏட்டில் ரூ.700 அதிகமாகக் கூட்டப்பட்டுள்ளது.
(உ) பெறுதற்குரிய மாற்றுச் சீட்டு ஏட்டில் ரூ.800 குறைவாகக் கூட்டப்பட்டுள்ளது -
பின்வரும் பிழைகளை, இருப்பாய்வு தயாரித்த பின் திருத்தம் செய்யவும்.
(அ) ராமுவிற்கு ரூ.1,000 சம்பளம் செலுத்தியது தவறாவறாக அவரின் கணக்கில் பற்று வைக்க வைக்க வைக்கப்பட்டுள்ளது.
(ஆ) கடனுக்கு பாலுவுக்கு ரூ.450 க்கு சரக்கு விற்றது பாலபாலன் கணக்கில் பற்று வைக்க வைக்க வைக்கப்பட்டுள்ளது -
பின்வரும் பிழைகள், இருப்பாய்வு தயாரிக்கும் முன் கண்டறியப்பட்டன. அவற்றை திருத்தம் செய்யவும்.
(அ) கட்டடம் மீதான தேய்மானம் ரூ.5,000 தேய்மானக் கணக்கில் எடுத்தெழுதப்படவில்லை.
(ஆ) வெ வெங்கட்டுக்கு ரூ.2,000 கூலி செலுத்தியது, கூலிக் கணக்கில் இருமுறை
எடுத்தெழுதப்பட்டுள்ளது.
(இ) நிலாவுக்கு கடனுக்கு ரூ.250க்கு சரக்கு விற்றது, சரியாக விற்பனை ஏட்டில் பதிவு செய்யப்பட்ட போதிலும், பேரேட்டில் ரூ. 200 என எடுத்தெழுதப்பட்டுள்ளள்ளது. -
பின்வரும் பிழைகள் இருப்பாய்வு தயாரிக்கும் முன் கண்டறியப்பட்டன. அவற்றைத் திருத்துக.
(அ) அங்கப்பனுக்கு ரூ.500 செலுத்தியது தவறுதலாக அங்கண்ணன் கணக்கில் பற்று வைக்கப்பட்டுள்ளது.
(ஆ) அறைகலன் ரூ.750-க்கு விற்றது, விற்பனைக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.
(இ) பாக்யா பாக்யாவிடமிருந்து சரக்கு ரூ.2,100-க்கு வாங்கியது, தவறுதலாக விற்பனை ஏட்டில் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
(ஈ) இயந்திரம் நிறுவுவதற்குச் செலுத்திய கூலி ரூ.1,000 கூலிக் கணக்கில் பற்று
வைக்கப்பட்டுள்ளது. -
இருப்பாய்வு தயாரிக்கப்பட்டு வித்தியாசம் அனாமத்துக் கணக்குக்கு எடுத்துச் செல்லப்பட்டது எனக் கருதி பின்வரும் பிழைகளைத் திருத்தம் செய்யவும்.
(அ) விற்பனை ஏட்டின் கூட்டுத்தொகை ரூ.250 குறைவாகக் கூட்டப்பட்டுள்ளது.
(ஆ) கொள்முதல் ஏட்டில் ரூ.120 குறைவாகக் கூட்டப்பட்்பட்டுள்ளது.
(இ) விற்பனை ஏட்டில் ரூ.130 அதிகமாகக் கூட்டப்பட்டுள்ளது.
(ஈ) பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு ஏட்டில் ரூ.75 குறைவாகக் கூட்டப்பட்டுள்ளது.
(உ) கொள்முதல் ஏட்டில் ரூ.35 அதிகமாகக் கூட்டப்பட்டுள்ளது -
கீழ்க்காணும் பிழைகள் கணக்காளரால் இருப்பாய்வு தயாரித்த பின் கண்டறியப்பட்டன. அனாமத்துக் கணக்கு உள்ளது. அவற்றைத் திருத்தம் செய்யவும்.
(அ) ரொக்க ஏட்டின் பற்றுப் பக்கம் உள்ள தள்ளுபடிப் பத்தியின் கூட்டுத்தொகை ரூ.1,180 இன்னும் பேரேட்டில் எடுத்து எழுதப்படவில்லை.
(ஆ) அறிவுச் செல்வனிடமிருந்து கடனுக்கு ரூ.600 க்கு சரக்கு வாங்கியது பேரேட்டில் அவரது கணக்கின் பற்றுப் பக்கத்தில் எடுத்து எழுதப்பட்டுள்ளது.
(இ) ரொக்க ஏட்டின் வரவரவுப் பக்கம் உள்ள தள்ளுபடிப் பத்தியின் கூட்டுத்தொகையில் ரூ.400 குறைவாகக் கூட்டப்பட்டுள்ளது.
(ஈ) விற்பனைத் திருப்ப ஏட்டின் கூட்டுத்தொகையான ரூ.570 இருமுறை பேரேட்டில் எடுத்து எழுதப்பட்டுள்ளது.
(உ) முகிலுக்கு ரூ.87-க்கு கடனுக்கு சரக்கு விற்றது பேரேட்டில் அவர் கணக்கில் ரூ.78 என எடுத்து எழுதப்பட்டுள்ளள்ளது. -
பின்வரும் பிழைகள் இருப்பாய்வு தயாரிக்கும்போது கண்டறியப்பட்டன. அவற்றைத் திருத்தவும்.
(அ) அகிலாவுக்கு ரூ.1,520-க்கு கடனுக்கு சரக்கு விற்றற்றது அவர் கணக்கில் ரூ.1,250 எனப் எடுத்தெழுதப்பட்டுள்ளது.
(ஆ) நரேந்திரனிடம் கடனுக்கு ரூ.5,500-க்கு சரக்கு கொள்ள்முதல் செய்தது, அவர் கணக்கில் ரூ.5,050 என வரவு வைக்கப்பட்டுள்ளது.
(இ) ரவிவர்மனிடமிருந்து கடனுக்கு ரூ.404-க்கு அறைகலன் வாங்கியது, அறைகலன் கணக்கில் ரூ.440 எனப் பற்று வைக்கப்பட்டுள்ளது.
(ஈ) ரூ.2,000 ரொக்கத்திற்கு இயந்திரம் வாங்கியது, பேரேட்டில் இயந்திரக் கணக்கில் எடுத்து எழுதப்படாமல் உள்ளது.
(உ) கொள்முதல் ஏட்டின் கூட்டுத்தொகை ரூ.899 முன் எடுத்து எழுதும் போது ரூ.989 என எழுதப்பட்டுள்ளது -
ஒரு நிறுவனத்தின் கணக்காளர் இருப்பாய்வு சமன்படாமல் ரூ.922 வித்தியாசம் (கூடுதல் வரவு) இருப்பதை அறிந்தார். அவர் அந்தத் தொகையை அனாமத்துக் கணக்கில் பதிந்து விட்டு, அதைத் தொடர்ந்து பின்வரும் பிழைகளைக் கண்டறிந்தார்.
(அ) ரொக்க ஏட்டின் வரவுப் பக்கம் உள்ள தள்ளுபடிப் பத்தியின் கூட்டுத்தொகை ரூ.78 பேரேட்டில் எடுத்து எழுதப்படவில்லை.
(ஆ) கொள்முதல் ஏட்டின் கூட்டுத்தொகையில் ரூ.1,000 குறைவாக உள்ளது.
(இ) கடனுக்கு நடராஜனுக்கு ரூ.375 க்கு சரக்கு விற்றது விற்பனை ஏட்டில் ரூ.735 என்று பதிவு செய்யப்பட்டுள்ளது.
(ஈ) மேகலாவுக்கு கடனுக்கு ரூ.700 க்கு சரக்கு விற்றது கொள்முதல் ஏட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பிழை திருத்தப் பதிவுகளை தந்து அனாமத்துக் கணக்கைத் தயாரிக்கவும். -
இருப்பாய்வு தயாரிக்கும்போது கண்டறியப்பட்ட, பின்வரும் பிழைகளைத் திருத்தம் செய்யவும்.
(அ) ரொக்கக் ஏட்டின் பற்றுப் பக்கத்தில் உள்ள தள்ளுபடிப் பத்தியின் மொத்தம் ரூ.225 இருமுறை பேரேட்டில் எடுத்து எழுதப்பட்டுள்ளது.
(ஆ) பொன்னரசனால் ரூ.75 மதிப்புள்ள சரக்கு திருப்பித் தரப்பட்டு அவர் கணக்கில் எடுத்து எழுதப்படாமல் உள்ளது.
(இ) யாழினியிடமிருந்து பெற்ற ரொக்கம் ரூ.1,000 பேரேட்டில் எடுத்து எழுதப்படவில்லை.
(ஈ) வட்டி பெற்றது ரூ.300 இன்னும் பேரேட்டில் எடுத்து எழுதப்படவில்லை.
(உ) ரூ.100 வாடகை செலுத்தியது வாடகைக் கணக்கில் ரூ.10 என எடுத்து எழுதப்பட்டுள்ளது. -
இராமனின் ஏடுகள் சமன்படவில்லை. இருப்பாய்வின் வித்தியாசத் தொகையாகிய ரூ.1,270-ஐ கணக்காளர் அனாமத்துக் கணக்கில் பற்று வைத்தார். பின்வரும் பிழைகளைத் திருத்தம் செய்து அனாமத்துக் கணக்கைத் தயாரிக்கவும்.
(அ) உரிமையாளரால் சொந்த உபயோகத்திற்காக ரூ.75 மதிப்புள்ள சரக்கு எடுக்கப்பட்டது ஏடுகளில் பதிவுசெய்யப்படாமல் உள்ளது.
(ஆ) சண் சண்முகத்திற்கு கடனுக்கு ரூ.430 க்கு சரக்கு விற்றது அவர் கணக்கில் ரூ.340 என வரவு வைக்கப்பட்டுள்ளள்ளது
(இ) விவேக்கிடமிருந்து கடனுக்கு ரூ.400 க்கு சரக்கு வாங்கியது விற்பனை ஏட்டில் பதிவு செய்யப்பட்டது. ஆயினும், விவேக்கின் கணக்கில் சரியாக வரவு வைக்கப்பட்டுள்ளது.
(ஈ) கொள்முதல் திருப்ப ஏட்டின் கூட்டுத்தொகைகை ரூ.300 பேரேட்டில் எடுத்து எழுதப்படவில்லை