MABS Institution
11th கணக்குப்பதிவியல் வாரத் தேர்வு -1(தேய்மானக் கணக்கியல்)-Aug 2020
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
ஜுலை 1, 2016 அன்று, அறைகலன் ரூ. 60,000 க்கு வாங்கப்பட்டது. அதன் வாழ்நாள் 5 ஆண்டுகள். 5 ஆண்டுகள் முடிவில் அதன் இறுதி மதிப்பு ரூ. 4,000. நேர்க்கோட்டு முறையில் தேய்மான விகிதம் காண்க
-
தேய்மானம் ஏற்படுவதற்கான காரணங்கள் யாவை?
-
ஜாய் என்ற நிறுவனம் 1.4.2016 அன்று ரூ. 75,000-க்கு இயந்திரம் ஒன்றை வாங்கியது. 31.3.2018
அன்று ரூ.62,000-க்கு அவ்வியந்திரத்தை விற்பனை செய்தது. நிலைத் தவணை முறையில்
தேய்மானம் ஆண்டுக்கு 10% நீக்கப்படவேண்டும். ஆண்டுதோறும் கணக்குகள் மார்ச் 31-ல் முடிக்கப்படுகிறது. விற்ற இயந்திரத்தின் மீதான இலாபம் அல்லது நட்டத்தை கணக்கிடுக -
1.1.2018 அன்று ஒரு நிறுவனம் ரூ. 9,000 மதிப்புள்ள இயந்திரம் ஒன்றை வாங்கியது. நிறுவுகைச் செலவாக ரூ. 1,000 செலவழித்தது. குறைந்து செல் மதிப்பு முறையில் ஆண்டுக்கு தேய்மானம்
15% என்ற விகிதத்தில் 2018 ஆம் ஆண்டுக்கு தேய்மானத் தொகையை கணக்கிடவும். கணக்குகள் மார்ச் 31 ல் முடிக்கப்பெற்றன. -
தேய்மானத்தின் இயல்புகள் யாவை?
-
திரு.அப்துல் 2001 ஏப்ரல் 1,அன்று ரூ. 2,00,000 மதிப்புள்ள இயந்திரத்தை வாங்கினார். மூன்று ஆண்டுகள் அவ்வியந்திரம் பயன்படுத்தப்பட்ட பிறகு ரூ.1,60,000 க்கு விற்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் தேய்மானம் 10% குறைந்து செல் இருப்புமுறையில் விளக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் கணக்கேடுகள் மார்ச் 31அன்று முடிக்கப் பெறுகின்றன. இயந்திரம் விற்பனை மீதான இலாபம் அல்லது நட்டம் காண்க.
-
திருவாளர்கள் சங்கர் அன்ட்கோ நிறுவனம் 1.1.2015 அன்று ரூ. 10,00,000 மதிப்புள்ள இயந்திரம் ஒன்றை வாங்கியது. நிறுவனம் ஆண்டுதோறும் 10% தேய்மானம் நேர்க்கோட்டு முறையில் நீக்கப்பட்டது. ஆண்டுதோறும் கணக்கேடுகள் மார்ச் 31 அன்று முடிக்கப்பெறுகின்றன. குறிப்பேட்டுப் பதிவுகள் தருக.
-
ஜனவரி 1, 2014 அன்று இராஜ் நிறுவனம் ரூ. 90,000 மதிப்புள்ள இயந்திரத்தை வாங்கியது. ஜுலை 1, 2014 அன்று, மற்றொரு இயந்திரத்தை ரூ. 60,000க்கு வாங்கியது. ஜனவரி 1, 2015 அன்று ஜனவரி 1, 2014ல் வாங்கிய இயந்திரத்தை ரூ. 40,000க்கு விற்பனை செய்தது. குறைந்து செல் மதிப்பு முறையில் ஆண்டுக்கு 10% தேய்மானம் நீக்கப்பட வேண்டும். கணக்குகள் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 31ல் முடிக்கப்படுகிறது. இயந்திரக் கணக்கினை 2014 மற்றும் 2015 ஆண்டுகளுக்கு தயாரிக்கவும்.
-
ஒரு தயாரிப்பு நிறுமம், ஏப்ரல் 1, 2010 அன்று பொறி வகை மற்றும் இயந்திரம் ரூ. 4,50,000க்கு வாங்கி, நிறுவுதல் செலவாக ரூ. 50,000 செலவழித்தது. மூன்று ஆண்டுகள் பயன்படுத்திய பிறகு, அச்சொத்தானது ரூ. 3,85,000 க்கு விற்கப்பட்டது. தேய்மானம் ஆண்டுதோறும் 15% நிலைத் தவணை முறையில் நீக்கப்பட வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் கணக்குகள் மார்ச் 31-ல் முடிக்கப்படுகின்றன. விற்ற இயந்திரத்தின் மீதான இலாபம் அல்லது நட்டத்தைக் கணக்கிடவும்.