MABS Institution
11th கணக்குப்பதிவியல் மாதத் தேர்வு -4(தேய்மானக் கணக்கியல்)-Aug 2020
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
1.1.2018 அன்று ஒரு நிறுவனம் ரூ. 9,000 மதிப்புள்ள இயந்திரம் ஒன்றை வாங்கியது. நிறுவுகைச் செலவாக ரூ. 1,000 செலவழித்தது. குறைந்து செல் மதிப்பு முறையில் ஆண்டுக்கு தேய்மானம்
15% என்ற விகிதத்தில் 2018 ஆம் ஆண்டுக்கு தேய்மானத் தொகையை கணக்கிடவும். கணக்குகள் மார்ச் 31 ல் முடிக்கப்பெற்றன. -
குறைந்து செல் மதிப்பு முறையின் நன்மைகள் மற்றும் குறைபாடுகளைக் கூறவும்.
-
ஜனவரி 1, 2015 அன்று ஒரு நிறுவனம் ரூ. 90,000 மதிப்புள்ள இயந்திரம் ஒன்றை வாங்கியது. அதை நிறுவுவதற்கான செலவுகள் ரூ. 10,000. ஜுலை 1, 2017 அன்று அவ்வியந்திரம் ரூ. 58,000 -க்கு விற்கப்பட்டது. ஆண்டுதோறும் தேய்மானம் 20% குறைந்து செல் மதிப்பு முறையில் நீக்கப்பட்டது. ஆண்டுதோறும் கணக்குகள் டிசம்பர் 31-ல் முடிக்கப் பெறுகின்றன. இயந்திரக் கணக்கினை தயாரிக்கவும்.
-
ஜனவரி 1, 2016 அன்று ரூ. 25,000க்கு சொத்து ஒன்று வாங்கப்பட்டது. ஆண்டுதோறும் நேர்க்கோட்டு முறையில் தேய்மானம் நீக்கப்பட வேண்டும். அச்சொத்தின் எதிர்நோக்கும் பயனளிப்பு காலம் 10 ஆண்டுகள் மற்றும் அதன் இறுதி மதிப்பு ரூ. 1,000. கணக்குகள் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 31ல் முடிக்கப்பெறுகின்றன. தேய்மான விகிதம் கணக்கிட்டு, இரண்டு ஆண்டுகளுக்கு குறிப்பேட்டுப் பதிவுகள் தரவும்.
-
குமரன் பிரதர்ஸ் நிறுவனம் 1.1.2000 அன்று ரூ.5,00,000 மதிப்புள்ள இயந்திரம் ஒன்றை வாங்கியது 1.1.2002 அன்று அவ்வியந்திரம் ரூ.4,00,000க்கு விற்கப்பட்டது. அந்நிறுவனம் ஆண்டுதோறும் தேய்மானது 15% நேர்க்கோட்டு முறையில் நீக்கியது. ஆண்டுதோறும் கணக்கேடுகள் மார்ச் 31 அன்று முடிக்கப் பெறுகின்றன.இயந்திரம் கணக்கு தயார் செய்க.
-
ஜனவரி 1, 2015 அன்று பயன்படுத்தப்பட்ட ஒரு இயந்திரம் ரூ. 58,000க்கு வாங்கப்பட்டு பழுதுபார்ப்புக்காக ரூ. 2,000 செலவு செய்யப்பட்டது. ஜுலை 1, 2017 அன்று அந்த இயந்திரம் ரூ. 28,600க்கு விற்கப்பட்டது. குறைந்து செல் மதிப்பு முறையில் தேய்மானம் ஆண்டுக்கு 10% எனக்கொண்டு 2011 முதல் 2013 வரை இயந்திரக் கணக்கினை தயாரிக்கவும். கணக்குகள் ஆண்டுதோறும் டிசம்பர் 31ல் முடிக்கப் பெறுகின்றன.