செந்தாமரை நிறுவனத்தின் 2018 மார்ச், 31-ஆம் நாளன்றைய ரொக்க ஏட்டின் வங்கிப்பத்தியானது ரூ 40,200 பற்றிருப்பைக் காட்டியது. ரொக்க ஏட்டையும், வங்கி அறிக்கையையும் ஆய்வு செய்தபோது கீழ்கண்ட விவரங்கள் கண்டறியப்பட்டன:
(அ) 2018 மார்ச், 29 அன்று வங்கியில் ரூ 2,240 க்குச் செலுத்திய காசோலை 2018 ஏப்ரல் 4 அன்றுதான் வங்கியால் வரவு வைக்கப்பட்டது.
(ஆ) இணைய வங்கி வாயிலாக செலுத்திய ரூ 180 ரொக்க ஏட்டில் இரண்டு முறை பதியப்பட்டது.
(இ) ரூ 1,000 மதிப்புள்ள மாற்றுச்சீட்டை, செந்தாமரை நிறுவனம் அதன் வங்கியில் தள்ளுபடி செய்தது. 2018 மார்ச் 30 அன்று அந்த மாற்றுச்சீட்டு மறுக்கப்பட்டது. ஆனால், இதற்கான பதிவுகள் ஏதும் செந்தாமரை நிறுவன ஏடுகளில் செய்யப்படவில்லை.
(ஈ) ரூ 500 மதிப்புள்ள காசோலை நிறுவனம் செலுத்தவேண்டிய கடனுக்காக விடுக்கப்பட்டு ரொக்க ஏட்டில் 2018 மார்ச், 31-க்கு முன்னர் பதியப்பெற்றது. ஆனால், அந்நாள்வரை வங்கியில் செலுத்துகைக்கு முன்னிலைப் படுத்தப்படவில்லை
(உ) 2018 மார்ச், 30 அன்று ரூ 2,000 மதிப்புள்ள காசோலை ரொக்க ஏட்டில் வங்கியில் செலுத்தப்பட்டதாக பதிவு செய்யப்பட்டது. ஆனால், வங்கி அறிக்கையில் 2018 ஏப்ரல், 3 அன்று பதியப்பெற்றது.
(ஊ) வங்கி நேரடியாக தமிழக அரசிடமிருந்து போக்குகுவரத்து மானியம் ரூ 3,000 பெற்றது. ஆனால் இது குறித்து செந்தாமரை நிறுவனத்திற்கு தெரிவிக்கப்படவில்லை.
(எ) ரூ.1,500 தவறுதலாக செந்தாமரை நிறுவனக் கணக்கில் வங்கியால் பற்று வைக்கப்பட்டது. இது குறித்த விவரங்கள் ஏதுமில்லை.
(ஏ) 2018 மார்ச், 31 ரொக்க ஏட்டின் செலுத்தல்கள் பகுதி ரூ 1,200 குறைவாக கூட்டப்பட்டுள்ளது