MABS Institution
11th கணக்குப்பதிவியல் மாதத் தேர்வு -2(வங்கிச் சரிகட்டும் பட்டியல்)-Aug 2020
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
2016 மார்ச் 31 - ல் சுதா நிறுவனத்தின் ரொக்க ஏடு ரூ 3,000 வங்கி ரொக்க இருப்பைக் காட்டியது.ஆனால் வங்கியில் பணம் பெற முன்னிலைப்படுத்தப்படாத காசோலைகள் ரூ 370, ரூ 350 மற்றும் ரூ 200 ஆகும் மற்றும் 820 மதிப்புள்ள காசோலைகள் வங்கியில் செலுத்தியும் பணமாக்கப்படவில்லை.அந்நாளில் வங்கி அறிக்கையின் படியான இருப்பைக் கணக்கிடுக.
-
கீழ்க்காணும் தகவல்களிலிருந்து. 2003 மார்ச் 31 - ல் திரு முத்து அவர்களின் ரொக்க ஏடு உணர்த்தும் வங்கியிருப்பை கண்டுபிடி.
1. 31.03.2008 - ல் வங்கி அறிக்கையின் வரவிருப்பு ரூ 5,000
2. வங்கிக் கட்டணம் ரூ 120 ரொக்க ஏட்டில் பதியப்படவில்லை.
3. ஏற்கனவே ரூ 7,000 - க்கு செலுத்திய காசோலைகளில் ரூ 2, 000 காசோலை இன்னும் வங்கியாளரால் வரவு வைக்கப்படவில்லை.
4. ஏற்கனவே ரூ 9,000 - க்கு விடுத்த காசோலைகளில் ரூ 7,600 - க்கான காசோலைகள் மட்டுமே வங்கியில் முன்னிலைப்படுத்தபட்டிருக்கின்றன.
5. வாங்கியாளர் நேரடியாக வசூலித்த பங்கா தாயம் ரூ 800 இன்னும் ரொக்க ஏட்டில் பதியப்படவில்லை.
6. 31.03.08 - க்கு முன்னர் காசோலை அவமதிக்கப்பட்டது. ரூ 1,200 ரொக்க ஏட்டில் பதியவில்லை. -
திரு.மணிகண்டன் அவர்களின் பின்வரும் விவரங்களைக் கொண்டு .2017 மார்ச் 31 - க்கு வங்கி சரிகட்டும் பட்டியல் தயாரிக்கவும்.
1. பின்வரும் காசோலைகள் மார்ச் மாதத்தில் நிறுவனத்தின் நடப்புக் கணக்கில் செலுத்தப்பட்டாலும் வங்கி ஏப்ரலில் வரவு செய்தது.
2. பின்வரும் காசோலைகள் மார்ச் மாதத்தில் விடுக்கப்[பட்டன.அனால் ஏப்ரல் மாதத்தில் பணமாக்கப்பட்டது.
3. வாடிக்கையாளரிடமிருந்து பெறப்பட்ட ரூ 200 - க்கான காசோலை மார்ச் ,மாதத்தில் ரொக்க ஏட்டின் வங்கிப் பத்தியில் பதிவு செய்யப்பட்டது.அனால் ஏப்ரல் மாதத்தில் தான் வங்கியில் செலுத்தப்பட்டது.
4. வங்கி அறிக்கையானது வட்டிக்காக வரவாக ரூ 500 ம் வங்கிக் கட்டணத்திற்காக பற்றாக ரூ 200 -ம் காட்டியது.
5.31 03.017 ம் நாளைய ரொக்க ஏட்டின் படி இருப்பு ரூ 36,000 -
பின்வரும் விவரங்களிலிருந்து டிசம்பர் 31, 2017-ம் நாளுக்குரிய ரொக்க ஏட்டின் படியான இருப்பைக் கண்டறிக
விவரம் ரூ 1 வங்கி அறிக்கையின் படி மேல்வரைப்பற்று 6,500 2 வங்கியில் செலுத்திய காசோலை இன்னும் வரவு வைக்கப்படவில்லை 10,500 3 விடுத்த காச�ோலை இன்னும் செலுத்துகைக்கு முன்னிலைப்படுத்தப்படாதது 3,000 4 வங்கியால் தவறுதலாக பற்று வைக்கப்பட்டது 500 5 வங்கியால் பற்று வைக்கப்பட்ட வங்கிக் கட்டணம் மற்றும் வட்டி 180 6 சரக்குகள் மீதான காப்பீட்டு முனைமம் நிலை அறிவுறுத்தலின்படி வங்கியால் நேரடியாகச் செலுத்தப்பட்டது 100 -
தண்டபாணியின் ரொக்க ஏடு ரூ ,15,000 மேல்வரைப் பற்றிருப்பினைக் காட்டியது. பின்வரும் விவரங்களைக் கொண்டு 2017 - ஜூன் 30 - ல் வங்கி இருப்பினைக் காட்டும் வங்கி சரிகட்டும் பட்டியல் ஒன்றை வரைக.
1. 2017 ஜூன் 27 ல் விடுத்த நான்கு காசோலைகளில் இரு காசோலைகள் ரூ 5,000 ரூ 4,000 30.6.2017 அன்று வரை முன்னிலைப்படுத்தப்படவில்லை.
2. வங்கியில் செலுத்திய காசோலைகள் மதிப்பு ரூ 17,800 அனால் வங்கி வசூலித்து வரவு வைக்கவில்லை.
3. வங்கி அறிக்கையின்படி ரூ 150 வங்கிக் கட்டணம் பற்று வைக்கப்பட்டுள்ளது.
4. மேல்வரைப்பற்றின் மீதான வட்டி ரூ 280 பற்று வைக்கப்பட்டுள்ளது.
5. நிலை ஆணையின்படி , காப்பீட்டு முனைமம் ரூ 2,750 செலுத்தப்பட்டுள்ளது. -
திரு.இனியன் என்பவரின் ரொக்க ஏடு ரூ 16,000 வங்கி மேல்வரை பற்றிருப்பை 31 ஆகஸ்ட் 2017 - ல் காட்டியது.ரொக்க ஏட்டையும் வங்கி அறிக்கையும் ஒப்புநோக்கும் போது . பின்வருபவை தெரிய வந்தன.
1. வங்கியில் செலுத்திய ரூ 2,800 - க்கான காசோலை 31 ஆகஸ்ட் வரை வசுலாகவில்லை.
2. விடுத்த காசோலைகளில் ரூ 1,440 ஆகஸ்ட் 31 வரை செலுத்ததகைக்கு முன்னிலைப்படுத்தப் படவில்லை.
3. வங்கியால் பதிவு செய்த மேல்வரைப்பற்று மீதான வட்டி ரூ 220 ரொக்க ஏட்டில் பதியப்படவில்லை.
4. ஜூலை 1 - ல் தள்ளுபடி செய்த ரூ 1,600 மதிப்புள்ள பெறுதற்குரிய மாற்றுச்சீட்டுக்கு பணம் மறுக்கப்பட்டது.
5. வாடிக்கையாளர் வங்கியில் நேரடியாக செலுத்தியது ரூ 900 க்கு ரொக்க ஏட்டில் பதிவு இல்லை .31-08-2017 ல் வங்கி சரிகட்டும் பட்டியல் தயாரிக்கவும். -
சுதா நிறுமத்தின் வங்கி அறிக்கையானது 2017 டிசம்பர்ம்பர், 31 அன்று ரூ 10,000 மேல்வரைப்பற்றினை காட்டியது. வங்கிச் சரிகட்டும் பட்டியல் தயார் செய்க.
(அ) 2017 டிசம்பர், 30 அன்று வங்கியில் செலுத்திய காசோலை ரூ15,000 வங்கியால் வசூலித்து வரவு வைக்கப்படவில்லை.
(ஆ) 2017 டிசம்பர், 31 அன்று வங்கியால் பற்று வைக்கப்பட்ட நீண்டகால கடன் மீதான வட்டி ரூ 500. ஆனால் சுதா நிறுவனத்தின் ஏடுகளில் பதியப்பட்படவில்லை.
(இ) 2017 டிசம்பர், 24 அன்று ரூ 550-க்கான காசோலை விடுக்கப்பட்டு வங்கியரால் செலுத்தப்பட்ட ரூ 505 என ரொக்க ஏட்டின் வங்கிப் பத்தியில் பதியப்பட்டது.
(ஈ) 2017 டிசம்பர், 27 அன்று விடுத்த காசோலை ரூ 200 இரு முறை ரொக்க ஏட்டில் பதியப்பட்டது.
(உ) ரொக்க வைப்பு ரூ 2,598 வங்கியால் ரூ 2,589 எனப் பதியப்பட்டது.
(ஊ) பணம் வைப்பு இயந்திரம் வாயிலாக 2017 டிசம்பர்ம்பர், 31 அன்று வாடிக்கையாளரால் செலுத்தப்பட்ட ரூ 2,000 சுதா நிறுமத்தின் ஏடுகளில் பதியப்படவில்லை.
(எ) மேல்வரை மேல்வரை மேல்வரைப்பற்று மீதான வட்டி ரூ.600 சுதா நிறுவனத்தின் ஏடுகளில் பதியப்படவில்லை.
(ஏ) 2017 டிசம்பர், 29 அன்று விடுத்த இரு காசோலைகள் முறையே ரூ 500 மற்றும் ரூ 700 -இல் முதல் காசோலை மட்டுமே 2017 டிசம்பர், 31 -க்கு முன் செலுத்துகைக்கு முன்னிலைப்படுத்தப்பட்டது. -
பின்வரும் தகவல்களிலிருந்து வங்கிச் சரிகட்டும் பட்டியலைத் தயார் செய்க.
விவரம் 1 ரொக்க ஏட்டின் படி வரவிருப்பு 5,000 2 விடுத்த காசோலை இன்னும் செலுத்துகைக்கு முன்னிலைப்படுத்தப்படாதது 3,000 3 செலுத்திய காசோலை இன்னும் வரவு வைக்கப்படாதது 4,000 4 மேல்வரைப்பற்று மீதான வட்டி வங்கியால் பற்று வைக்கப்பட்டது ரொக்க ஏட்டில் பதியப்படவில்லை 120 5 வங்கியால் வசூலிக்கப்பட்ட பங்காதாயம் ரொக்க ஏட்டில் காட்டப்படவில்லை 760 6 வட்டி வங்கியால் பற்று செய்யப்பட்டது ரொக்க ஏட்டில் இரு முறை பதியப்பட்டுள்ளது 300 7 வங்கியில் தள்ளுபடி செய்த மாற்றுச்சீட்டு மறுக்கப்பட்டது 520 8 மாற்றுச்சீட்டு மறுக்கப்பட்டதற்கான வங்கிக் கட்டணம் வங்கியால் பற்று வைக்கப்பட்டது 55 -
திரு.இளவரசியின் ரொக்க ஏடு ரூ8,000 வங்கி மேல்வரைப் பற்றிருப்பை 31 அக்டோபர் 2015ல் காட்டியது.ரொக்க ஏட்டையும் வங்கி செல்லோட்டையும் ஒப்பு நோக்கும் போது பின்வருபவை தெரிய வந்தன.
[அ] வங்கியில் செலுத்திய ரூ 1,400 க்கான காசோலை 31 அக்டோபர் வரை வசூலாகவில்லை.
[ஆ] விடுத்த காசோலைகளில் ரூ 720 அக்டாபர் 31 வரை செலுத்துகைக்கு முன்னிலைப்படுத்தப்படவில்லை.
[இ] வங்கியால் பதிவு செய்த மேல்வரைப் பற்று மீதான வட்டி ரூ 110 ரொக்க ஏட்டில் பதியப்படவில்லை.
[ஈ] செப்டம்பர் 1ல் தள்ளுபடி செய்த ரூ 800 மதிப்புள்ள பெறுதற்குரிய மாற்றுச் சீட்டுக்கு பணம் மறுக்கப்பட்டது.
[உ] வாடிக்கையாளர் வங்கியில் நேரடியாக செலுத்தியது ரூ 450 க்கு ரொக்க ஏட்டில் பதிவு இல்லை.
31.3.2015 ல் வங்கி சரிகட்டும் பட்டியலை தயாரிக்கவும். -
பின்வரும் விவரங்களிலிருந்து ராஜா நிறுவனத்தின் 2018 ஜனவரி 31-ம் நாளுக்குரிய வங்கிச் சரிகட்டும் பட்டியல் தயார் செய்க.
(அ) வங்கி அறிக்கையின் படி இருப்பு ரூ 5,000
(ஆ) ரொக்க ஏட்டில் பதிவு செய்யப்பட்டு 2018 ஜனவரி 25 -இல் வங்கியில் செலுத்தப்பட்ட காசோலை ரூ 800 வங்கி அறிக்கையில் 2018 பிப்ரவரி 2 அன்று பதியப்பட்டது.
(இ) தேசிய மின்னணு பணப் பரிமாற்றம் (NEFT) வாயிலாக வங்கியால் பெறப்பட்ட தொகை ரூ 3,000 ரொக்க ஏட்டில் பதியப்படவில்லை
(ஈ) 2018 மார்ச் 29 அன்று விடுத்த இரு காசோலைகள் ரூ 3,000 மற்றும் ரூ 2,000 -இல் முதல் காசோலை மட்டுமே செலுத்துகைக்கு முன்னிலைப்படுத்தப்பட்டது.
(உ) நிலை அறிவுறுத்தலின்படி வங்கியால் செலுத்தப்பட்ட வாகன காப்பீட்டு முனைமம் ரூ 1,000 ரொக்க ஏட்டில் பதியப்படவில்லை.
(ஊ) ரொக்க ஏட்டின் வரவுப் பக்கம் ரூ 700 குறைவாக கூட்டப்பட்டுள்ளது.
(எ) வங்கியால் மாநில அரசிடமிருந்து நேரடியாக பெறபெறப்பட்ட மானியம் ரூ 10,000 ரொக்க ஏட்டில் பதியப்படவில்லை -
2018 மார்ச் 31 -ஆம் நாளுக்குரிய வங்கிச் சரிக்கட்டும் பட்டியலைத் தயார் செய்து ரொக்க ஏட்டின் படியான இருப்பினைக் கண்டறிக
விவரம் ரூ வங்கி அறிக்கையின் படியான வங்கி இருப்பு 15,000 விடுத்த காசோலை இன்னும் செலுத்துகைக்கு முன்னிலைப்படுத்தப்படாதது 2,500 வங்கிக் கட்டணம் ரொக்க ஏட்டில் பதியப்படவில்லை 250 வங்கியால் பற்று செய்யப்பட்ட வட்டி ரொக்க ஏட்டில் பதியப்படவில்லை 500 நிலை அறிவுறுத்தலின்படி வங்கி செலுத்திய காப்பீட்டு முனைமம் ரொக்க ஏட்டில் பதியப்படவில்லை 300 செலுத்திய காசோலை இன்னும் வரவு வைக்கப்படாதது 900