MABS Institution
11th கணக்குப்பதிவியல் மாதத் தேர்வு -1(வங்கிச் சரிகட்டும் பட்டியல்)-Aug 2020
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
கீழ்க்காணும் விவரங்களைக் கொண்டு சிவா நிறுவனத்தின் டிசம்பர் 31, 2017-ம் நாளுக்குரிய வங்கிச் சரிகட்டும் பட்டியலைத் தயார் செய்க.
(அ) ரொக்க ஏட்டின் படியான வரவிருப்பு ரூ 12,000
(ஆ) ரூ 1,200 மதிப்புள்ள காசோலை விடுத்து செலுத்துகைக்காக முன்னிலைப்படுத்தப்பட்டது தவறுதலாக ரொக்க ஏட்டில் ரூ 2,100 என வரவு வைக்கப்பட்டது.
(இ) வங்கி அறிக்கையின் பற்றுப் பக்கம் ரூ 100 குறைவாகக் கூட்டப்பட்டது -
கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களிலிருந்து ரஹீம் நிறுவனத்தின் 2018 மார்ச் 31-ம் நாளுக்குரிய வங்கிச் சரிகட்டும் பட்டியலைத் தயார் செய்க.
(அ) ரொக்க ஏட்டின் படி மேல்வரைப்பற்று ரூ 2,500
(ஆ) ரொக்க ஏட்டின் பற்று பக்கம் ரூ 700 குறைவாக கூட்டப்பட்டுள்ளது.
(இ) நிகழ் நேர மொத்த தீர்வகம் (RTGS) வழியாக வங்கியில் பெறப்பட்ட தொகை ரூ 2,00,000 ரொக்க ஏட்டில் பதியப்படவில்லை
(ஈ) 2018 மார்ச் 29 அன்று விடுத்த இரு காசோலை ரூ 1,800 மற்றும் ரூ 2,000-இல் இரண்டாவது காசோலை மட்டுமே செலுத்துகைக்கு முன்னிலைப்படுத்தப்பட்டது.
(உ) நிலை அறிவுறுத்தலின்படி வங்கி செலுத்திய சிற்றுந்து மீதான காப்பீட்டு முனைமம் ரூ.1,000 ரொக்க ஏட்டில் பதியப்படவில்லை. -
கீழ்க்காணும் விவரங்களைக் கொண்டு சைமன் நிறுவனத்தின் 2018 மார்ச் 31-ம் நாளுக்குரிய வங்கிச் சரிக்கட்டும் பட்டியலை தயாரிக்கவும்
(அ) வங்கி அறிக்கையின் படி பற்றிருப்பு ரூ 2,500
(ஆ) செலுத்திய காசோலை இன்னும் வசூலித்து வரவு வைவைக்கப்படவில்லை ரூ 10,000
(இ) இணைய வங்கி மூலம் செலுத்திய தொகை ரூ 2,000 ரொக்க ஏட்டில் பதியப்படவில்லை -
2018 மார்ச் 31 -ஆம் நாளுக்குரிய வங்கிச் சரிக்கட்டும் பட்டியலைத் தயார் செய்து ரொக்க ஏட்டின் படியான இருப்பினைக் கண்டறிக
விவரம் ரூ வங்கி அறிக்கையின் படியான வங்கி இருப்பு 15,000 விடுத்த காசோலை இன்னும் செலுத்துகைக்கு முன்னிலைப்படுத்தப்படாதது 2,500 வங்கிக் கட்டணம் ரொக்க ஏட்டில் பதியப்படவில்லை 250 வங்கியால் பற்று செய்யப்பட்ட வட்டி ரொக்க ஏட்டில் பதியப்படவில்லை 500 நிலை அறிவுறுத்தலின்படி வங்கி செலுத்திய காப்பீட்டு முனைமம் ரொக்க ஏட்டில் பதியப்படவில்லை 300 செலுத்திய காசோலை இன்னும் வரவு வைக்கப்படாதது 900