MABS Institution
11th கணக்குப்பதிவியல் மாதத் தேர்வு -1(முதலின மற்றும் வருவாயின நடவடிக்கைகள்)-Aug 2020
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
வருவாயினச் செலவு என்றால் என்ன?
-
பின்வருபவை முதலின, வருவாயின, இனங்களா என்பதை கூறுக.
(i) ஏற்கனவே உள்ள கட்டடத்தோடு கூடுதலாகக்கட்டியது ரூ 5,000
(ii) பழைய மகிழுந்து வாங்கியது ரூ 30,000 மேலும், அதனை உடனடியாக பழுது பார்த்ததற்கானச் செலவு ரூ 2,000
(iii) புதிய தொழிற்சாலையை வண்ணம் பூசுவதற்கானச் செலவு ரூ 10,000
(iv) புதிய இயந்திரம் மீதான ஏற்றிச் செல் செலவு, வண்டிக்கட்டணம் ரூ 150 மற்றும் நிறுவுகைச் செலவுகள் ரூ 200
(v) வாங்கிய பழைய வாகனத்தை பழுது பார்த்ததற்கானச் செலவு ரூ .150. -
நீள்பயன் வருவாயினச் செலவு என்றால் என்ன?
-
வருவாயின வரவு பற்றி சிறு குறிப்பு தரவும்.
-
கீழ்க்காணும் செலவினங்களையும், வரவினங்களையும் முதலினமா அல்லது வருவாயினமா என வகைப்படுத்துக.
(i) நிலைச்சொத்து வாங்குவதற்காக, இயக்குனரின் வெளிநாட்டுப் பயணத்திற்கு செலவழிக்கப்பட்ட தொகை ரூ 10,000.
(ii) பெறுதற்குரிய கடனாளிகளிடமிருந்து அந்த வருடத்தில் பெற்ற தொகை .
(iii) புதிய கட்டடம் கட்டுவதற்காக பழைய கட்டடத்தை இடிப்பதற்கு மேற்கொண்ட செலவு.
(iv) தீயினால் இயந்திரத்தில் ஏற்பட்ட பாதிப்பிற்காக பெறப்பட்ட காப்பீட்டுரிமைத் தொகை. -
பின்வருபவை முதலினச் செலவுகளா அல்லது வருவாயினச் செலவுகளா என்பதை காரணத்துடன் விளக்கவும்.
(i) தொழிற்சாலை தொடங்க உரிமம் பெறுவதற்காகச் செலுத்தியக் கட்டணம் ரூ 25,000
(ii) தொழிற்கூடம் கட்டுவதற்கானச் செலவு செய்தது ரூ 2,00,000 மற்றும் கட்டுமானப் பொருட்கள் சேகரித்து வைப்பதற்காக தற்காலிக குடிசைகள் கட்டியச் செலவு ரூ 10,000
(iii) வாங்கிய பழைய இயந்திரத்தைப் புதுப்பிப்பதற்கானச் செலவு ரூ 5,000. -
வருவாயினச் செலவின் இயல்புகள் யாவை?
-
முதலின வரவு மற்றும் வருவாயின வரவு வேறுபடுத்தவும்.
-
நீள்பயன் வருவாயினச் செலவின் இயல்புகள் யாவை?
-
நீள்பயன் வருவாயினச் செலவு என்றால் என்ன? இரண்டு உதாரணங்கள் தரவும்.
-
முதலினச் செலவு மற்றும் வருவாயினச் செலவு வேறுபடுத்தவும்.
-
முதலினா மற்றும் வருவாயினச் செலவுகளைத் தீர்மானிக்கும் கருதுகோள்கள் யாவை?
-
முதலினச் செலவின் இயல்புகள் யாவை?
-
பின்வருவனவற்றை முதலினம் அல்லது வருவாயினம் என வகைப்படுத்தவும்.
(i) இரயில்வேத் துறைக்கு, இரயில் தண்டவாளம் அமைக்க செலுத்திய தொகை ரூ 50,000.
(ii) பழைய அறைகலன் விற்றதில் ஏற்பட்ட நட்டம்.
(iii) சரக்கு விற்பனையின் பேரில் செலுத்திய ஏற்றிச்செல் கட்டணம். -
பின்வரும் செலவினங்களை முதலினம், வருவாயினம், நீள்பயன் வருவாயினச் செலவினங்களாக, வகைப்படுத்தவும்.
(i) மூன்று ஆண்டுகளுக்கு பயனளிக்கும் வகையில் செய்யப்பட்ட விளம்பரச் செலவு.
(ii) கட்டடம் பதிவு செய்யும் போது செலுத்திய பதிவுக் கட்டணம்.
(iii) பழைய கட்டடம் வாங்கிய போது, அதனைப் பராமரித்து, வண்ணம் பூசி பயன்படுத்துவதற்கு ஏற்றாற்போல் மாற்றியதற்கானச் செலவு. -
பேஷன் டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்தின் பின்வரும் நடவடிக்கைளை, முதலினம் மற்றும் வருவாயினங்களாக வகைப்படுத்துக.
1. லாரிக்கு டயர் வாங்கியது ரூ 2,500.
2. ரூ 10,000 மதிப்புள்ள பழைய இயந்திரத்தை ரூ 9,500 க்கு விற்றது.
3. பங்குகளில் முதலீடு செய்ததிலிருந்து பங்காதாயம் பெற்றது ரூ 5,000.
4. ரூ 1,200 அடக்கவில்லை கொண்ட டிசர்ட்கள் ரூ 1,500 க்கு விற்பனை செய்தது.
5. மின்சாரம் பயன்பாட்டைக்குறைக்கு புதியவகை இயந்திரம் மாற்றியது ரூ 600 -
பின்வரும் செலவினங்களை முதலின, வருவாயினச் செலவினங்களாக வகைப்படுத்தவும்.
(i) நிலம் வாங்குவதற்குச் செய்யப்பட்ட பத்திரப்பதிவு கட்டணம்.
(ii) வாங்கிய பழையக் கட்டடத்தைப் புதுப்பிப்பதற்காகச் செய்த பழுது பார்ப்புச் செலவுகள்.
(iii) சரக்குக் கொள்முதலின் போது செலுத்திய ஏற்றிச்செல் கட்டணம்.
(iv) கடன் பெறுவதற்காகச் செய்யப்பட்ட சட்டச் செலவுகள். -
பின்வரும் நடவடிக்கைகளை முதலினம், மற்றும் வருவாயினமாக வகைப்படுத்தவும்.
(i) சரக்கு விற்பனை வாயிலாகப் பெற்றது ரூ 75,000.
(ii) வங்கியிடமிருந்து பெற்றக் கடன் ரூ 2,50,000.
(iii) முதலீடு விற்பனைச் செய்தது ரூ 1,20,000.
(iv) கழிவுப் பெற்றது ரூ 30,000.
(v) புதிய இயந்திரம் நிறுவுவதற்கான கூலி செலுத்தியது ரூ 1,400. -
கீழ்க்காணும் நடவடிக்கைகளை முதலினம் மற்றும் வருவாயினங்களாக வகைப்படுத்துக.
1. இயந்திரத்தின் பழுதடைந்த பகுதியை மாற்றுவதற்கான செலவு செய்தது ரூ 560.
2. பழைய இயந்திரத்தை வாங்கியவுடன் முழுமையாக புதுப்பிக்கச் செலவு செய்தது ரூ 1,500.
3. உள்தூக்குக் கூலி கொடுத்தது ரூ 230.
4. சொத்து விற்பதினால் ஏற்பட்ட இலாபம் ரூ 700.
5. அறைகலன் விற்றதின் நட்டம் ரூ 250. -
வாசுதேவன் என்பவரின் தொழில் நடவடிக்கைகள் தரப்பட்டுள்ளன. அவை முதலினம் அல்லது வருவாயினம் ஆகியவற்றில் எவ்வகையினைச் சார்ந்தது எனக்குறிப்பிடுக.
1. சரக்கு கொள்முதல் செய்தது ரூ 7,000
2. கட்டத்திற்கு தீக்காப்பீடு செய்தது ரூ 1,200.
3. மாத இதழுக்கு சந்தா செலுத்தியது ரூ 75
4. கிடங்கு கட்டடம் கட்டுமானச் செலவு ரூ 1,00,000.
5. நிலம் வாங்கியது ரூ 1,00,000. -
பின்வரும் செலவினங்களை முதலின, வருவாயின அல்லது நீள்பயன் வருவாயினச் செலவினங்களா எனக் கூறவும்.
(i) நிலம் வாங்குவதற்காக வழக்கறிஞருக்கு கொடுத்த சட்டச் செலவுகள் ரூ 20,000
(ii) புதிய பொருளைச் சந்தையில் அறிமுகப்படுத்த மேற்கொண்ட பேரளவிலான விளம்பரச் செலவுகள் ரூ 12,00,000
(iii) தொழிற்சாலை உரிமம் புதுப்பித்தது ரூ 12,000
(iv) தொழிற்சாலையில் வண்ணம் பூசுவதற்கானச் செலவு ரூ 4,000. -
இராஜீ என்பவர் 2018 ஆம் ஆண்டு தன் தொழில் செலவிடப்பட்ட செலவுகளைத் தருகிறார். அவை எவ்வகைச் செலவினத்தைச் சார்ந்தது எனக் குறிப்பிடுக.
1. காப்புரிமை பெறச் செலவு செய்தது ரூ 12,000.
2. புதிய இயந்திரம் கொண்டு வர வண்டிச் சத்தம் செலுத்தியது ரூ 700.
3. அறைகலன் பழுதுபார்ப்புச் செலவு ரூ 515.
4. அரசாணையின்படி மழைநீர் சேகரிப்பு அமைப்பு செய்ய செலவு ரூ 5,000
5. விளம்பரச் செலவு அதிகமாகச் செய்தது ரூ 7,500.