MABS Institution
11th கணக்குப்பதிவியல் மாதத் தேர்வு -1(முதன்மைப் பதிவேடுகள்)-Aug 2020
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
ரொக்கச் சீட்டு பற்றி குறிப்பு எழுதுக.
-
குறிப்பேடு வரைவிலக்கணம் தருக.
-
இடாப்பு என்றால் (Invoice)?
-
சரிகட்டுப் பதிவுகள் என்றால் என்ன?
-
குறிப்பேட்டில் பதிவு செய்தல் என்பதன் பொருள் என்ன?
-
ரொக்க நடவடிக்கை என்றால் என்ன?
-
பெயரளவு கணக்கிற்கான கணக்கியல் விதியைக் கூறுக.
-
செலுத்துகைச் சீட்டு என்றால் என்ன (Pay-in-slip)?
-
ஆட்டோமொபைல் நிறுவனம் நடத்தும் இராணியின் ஏடுகளில் பின்வரும் விவரங்களை கணக்கியல் சமன்பாட்டின்படி பதிவு செய்க.
(i) ரொக்கத்துடன் தொழில் தொடங்கியது ரூ 80,000 (ii) இரமேஷிடமிருந்து கடனுக்கு சரக்கு வாங்கியது ரூ 10,000 (iii) ரொக்கத்திற்கு அறைகலன் வாங்கியது ரூ 6,000 (iv) கடனீந்தோருக்கு அளித்த ரொக்கம் ரூ 8,000 -
குறிப்பு வரைக (i) பற்றுக் குறிப்பு
(ii) வரவுக் குறிப்பு -
நடவடிக்கை என்றால் என்ன/ அதன் வகைகளை எழுதி விளக்குக.
-
பின்வரும் இனங்களை சொத்து, ஆள்சார் மற்றும் பெயரளவுக் கணக்குகளாக வகைப்படுத்துக்க.
அ] முதல்
ஆ] கொள்முதல்
இ] வணிக நற்பெயர்
ஈ] பதிப்புரிமை
உ] லதா
ஊ] ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா
எ] மின்கட்டணம்
ஏ] பங்காதாயம்
ஐ] கொடுபட வேண்டிய வாடகை
ஒ] ரமேஷ் -
குறிப்பேட்டில் பதிவு செய்யும் படிநிலைகளை விவரி.
-
பின்வருவனவற்றை கணக்கியல் சமன்பாட்டின் படி பதிவு செய்து காட்டுக.
(அ) ரொக்கத்துடன் தொழில் தொடங்கியது ரூ 60,000 (ஆ) ரொக்கத்திற்கு சரக்கு வாங்கியது ரூ 20,000 (இ) ரூ 10,000 மதிப்புள்ள சரக்கினை விற்பனைச் செய்தது ரூ 15,000 (ஈ) வாடகை ரொக்கமாக செலுத்தப்பட்டது ரூ 500 -
கீழ்கண்டவைகளுக்கு ஏதேனும் ஒரு தொகையுடன் நடவடிக்கைகளைத் தருக.
அ] சொத்துகள் மற்றும் முதலின் மதிப்பு கூடுதல்.
ஆ] சொத்துக்களின் மதிப்பு கூடுதல் மற்றும் குறைதல்
இ] சொத்துக்கள் மற்றும் பொறுப்புகளின் மதிப்பு கூடுதல்.
ஈ] சொத்துகள் மற்றும் முதலின் மதிப்பு குறைதல். -
இரட்டைப்பதிவு கணக்கு முறையின் விதிகள் யாவை?
-
கணக்கு என்றால் என்ன? கணக்குகளை வகைப்படுத்தி, தகுந்த உதாரணங்களுடன் கூறுக.
-
பின்வரும் நடவடிக்கைகளின் கணக்கியல் சமன்பாட்டினை தயார் செய்க.
(அ) முருகன் ரூ 80,000 பணத்துடன் தொழிலைத் தொடங்கினார் .
(ஆ) ரொக்கத்திற்கு சரக்கு வாங்கியது ரூ 30,000.
(இ) ரொக்கமாக வழங்கிய சம்பளம் ரூ 5,000.
(ஈ) குமாரிடமிருந்து சரக்கு வாங்கியதற்கு, பணம் வைப்பு இயந்திரம் மூலமாக செலுத்தப்பட்டது ரூ 5,000.
(உ) கூடுதல் முதல் இட்டது ரூ 10,000. -
வள்ளுவர் துணி வியாபாரம் செய்யும் தனிவணிகர். அவரது வியாபாரத்தில் பின்வரும் நடவடிக்கைகள் 2018 மார்ச் மாதத்தில் இடம் பெற்றிருந்தன. அவைகளை குறிப்பேட்டில் பதிவு செய்க.
மார்ச் ரூ 1 ரொக்கம் மற்றும் சரக்குடன் வியாபாரம் தொடங்கியது ரொக்கம் 90,000 சரக்குகள் 60,000 2 X நிறுவனத்திடமிருந்து 20 ஆயத்த சட்டைகள் கடனுக்கு வாங்கியது 10,000 3 பணம் வைப்பு இயந்திரம் மூலம் வங்கிக்கு செலுத்தியது 30,000 4 Y நிறுவனத்திடமிருந்து ரொக்கம் செலுத்தி 10 புடவைகள் வாங்கப்பட்டன 6,000 5 தேசிய மின்னனு நிதி பரிமாற்றம் மூலம் X நிறுவனத்திற்கு தொகை செலுத்தப்பட்டது 6 A நிறுவனத்திற்கு 5 புடவைகள் கடனுக்கு விற்கப்பட்டது 4,000 7 A நிறுவனம் தாம் செலுத்த வேண்டிய தொகையை பணம் வைப்பு இயந்திரத்தின் மூலம் செலுத்தியது 8 Z நிறுவனத்திடம் 20 சேலைகளை கொள்முதல் செய்து எடுப்பு அட்டைகள் மூலம பணம் செலுத்தியது 12,000 9 இணையவங்கி மூலம் பணம் செலுத்தி எழுது பொருட்கள் வாங்கப்பட்டது 6,000 10 வங்கிக் கட்டணம் பிடித்தம் செய்யப்பட்டது 200 -
கீழ்க்காணும் நடவடிக்கைகளின் அடிப்படையில் கணக்கியல் சமன்பாட்டினைக் காட்டுக.
அ] ரம்யா தொழில் தொடங்க ரொக்கம் போட்டது ரூ 25,000 ஆ] சோபனாவிடமிருந்து சரக்கு கொள்முதல் செய்தது ரூ 20,000 இ] அமலா ரூ 18,000 அடக்கவிலை கொண்ட சரக்கு விற்றது ரூ 25,000 ஈ] ரம்யா தொழிலிலிருந்து எடுத்தது ரூ 5,000 -
பின்வரும் வணிக நடவடிக்கைகளின் விளைவுகளை கணக்கியல் சமன்பாட்டில் காண்பிக்கவும்.
(i) அன்பு, ரொக்கம் ரூ 20,000 சரக்குகள் ரூ 12,000 மற்றும் இயந்திரம் ரூ 8,000 த்துடன் தொழில் தொடங்கினார்
(ii) ரமணியிடமிருந்து கடனுக்கு சரக்கு வாங்கியது ரூ 7,000
(iii) ரமணிக்கு ரூ 6,900 கொடுத்து கணக்கு முழுவதும் தீர்க்கப்பட்ட து
(iv) ரூ 5,400 மதிப்புள்ள சரக்குகள் கடனுக்கு இராஜனுக்கு விற்கப்பட்டது ரூ 6,000
(v) இராஜனிடமிருந்து ரூ 5,800 பெற்றுக்கொண்டு அவரது கணக்கு முடிக்கப்பட்டது
(vi) கொடுபட வேண்டிய கூலி ரூ 400 -
2017 ஏப்ரல் 1 அன்று திரு. கார்த்திக் ஒரு பலசரக்கு கடையினை ஆரம்பித்தார் . அவருடைய ஏடுகளில் பின்வரும் நடவடிக்கைகளுக்கான குறிப்பேட்டுப் பதிவுகள் தருக.
2017
ஏப்ரல்1 வங்கியில் நடப்பு கணக்கினை உருவாக்கிட வைப்பாக செலுத்திய தொகை ரூ 2,00,000 3 காசோலையின் மூலம் சரக்கு வாங்கியது ரூ 40,000 5 பத்திரங்களில் செய்யப்பட்ட முதலீடுகள் ரூ 40,000 6 இராதாவிற்கு சரக்குகள் விற்றத் தொகை ரூ 20,000-ற்கான காசோலை பெறப்பட்டு உடனடியாக வங்கியில் செலுத்தப்பட்டது 7 அலுவலகத் தேவைக்காக வங்கியிலிருந்து பணம் எடுக்கப்பட்டது ரூ 15,000. 10 கமலாவிடமிருந்து கொள்முதல் செய்த தொகை ரூ 10,000 பணம் வைப்பு இயந்திரம் மூலம் செலுத்தப்பட்டது. 12 வனிதாவிற்கு சரக்குகள் விற்ற தொகை ரூ 10,000 பற்று அட்டை மூலம் செலுத்தப்பட்டது 15 முதலீடுகள் மீதான வட்டி நேரடியாக வங்கியின் மூலம் வசூலிக்கப்பட்டது ரூ 1,000. 20 நிலை அறிவுறுத்தலின்படி காப்பீட்டு முனைமம் வங்கியால் செலுத்தப்பட்டது ரூ 2,000 25 குணாவிற்கு செய்த விற்பனை தொகை ரூ 6,000. அவர் அதற்கான தொகையினை பணம் வைப்பு இயந்திரம் மூலம் செலுத்தினார் -
வீணா ஒரு ஜவுளி வியாபாரி. 2018 ஜனவரி 1 இல் அவருடைய வியாபாரம் பின்வரும் இருப்புகளைக் காட்டியது. கை ரொக்கம் ரூ 20,000; வங்கி இருப்பு ரூ 70,000; சரக்கிருப்பு ரூ 15,000. பின்வரும் நடவடிக்கைகள் ஜனவரி 2018 இல் நடைபெற்றன அந்நடவடிக்கைகளின் விளைவுகளை கணக்கியல் சமன்பாட்டின்படி காட்டுக.
(i) சுப்புவிடமிருந்து கடனுக்கு வாங்கிய ஆயத்த சட்டைகள் ரூ 20,000 (ii) சுப்புவிடம் பணம் பெறாமல் திருப்பிய சரக்கு ரூ 5,000 (iii) ஜனனியிடம் ரூ 1,600 மதிப்புள்ள சரக்குகள் கடனுக்கு விற்பனை செய்தது ரூ 2,000 (iv) ஜனனி திருப்பியனுப்பிய ஒரு சட்டையின் விற்பனை மதிப்பு ரூ 500 (v) ஜனனி வங்கியில் உள்ள பணம் வைப்பு இயந்திரத்தின் மூலம் பணம் செலுத்தியது ரூ 1,500 (vi) கட்டடத்திற்கான காப்பீட்டு முனைமம் இணையவங்கி மூலம் செலுத்தியது ரூ 1,000 (vii) காப்பீட் டு முனைமம் செலுத்தியதில், முன் கூட்டிச் செலுத்தியது ரூ 100 -
-
கீழ்கண்ட குறிப்பேட்டுப் பதிவுகளுக்குரிய நடவடிக்கைகளைத் தருக.
அ] ரொக்கக் க/கு ப அறைகலன் க/கு ஆ] வாடகை க/கு ப ரொக்கக் க/கு இ] வங்கி க/கு ப ரொக்கக் க/கு ஈ) தமிழ்ச் செல்வி க/கு ப விற்பனை க/கு -
ஜெயசீலி என்னும் தனிவணிகர் ஒரு பலசரக்கு கடையினை நடத்தி வருகிறார். 2018, ஜனவரியில் அக்கடையின் நடவடிக்கைகள் பின்வருமாறு இருந்தன. அவைகளைக் குறிப்பேட்டில் பதிவு செய்க.
ஜனவரி ரூ 1 ரொக்கத்துடன் தொழில் தொடங்கியது 80,000 2 வங்கியில் செலுத்திய ரொக்கம் 40,000 3 ரொக்கத்திற்கு கொள்முதல் செய்தது 5,000 4 லிப்டன் நிறுவனத்திடமிருந்து சரக்குகளை கடனுக்கு கொள்முதல் செய்தது 10,000 5 ஜாய் என்பவரிடம் ரொக்கத்திற்கு சரக்கு விற்றது 11,000 6 சம்பளத்தை ரொக்கமாக வழங்கியது 5,000 7 லிப்டன் நிறுவனத்திடம் ஜனவரி 4 அன்று கொள்முதல் செய்ததற்கான தொகை காசோலை மூலம் செலுத்தப்பட்ட 8 ரொக்கத்திற்கு அறைகலன் வாங்கியது 4,000 9 மின் கட்டணம் ரொக்கமாக செலுத்தப்பட்டது 1,000 10 நிலை அறிவுறுத்தலின் படி வங்கி செலுத்திய காப்பீட்டு முனைமம் 300
-