MABS Institution
11th கணக்குப்பதிவியல் மாதத் தேர்வு -1(தேய்மானக் கணக்கியல்)-Aug 2020
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
தேய்மானம் என்றால் என்ன?
-
ஏப்ரல் 1, 2015 அன்று ஒரு நிறுவனம் ரூ. 50,000 மதிப்புள்ள இயந்திரம் ஒன்றை வாங்கியது. அதன் வாழ்நாள் 6 ஆண்டுகள். குறைந்து செல் மதிப்பு முறையில் ஆண்டுதோறும் 30% தேய்மானம் நீக்கப்படவேண்டும். ஒவ்வொரு ஆண்டும் கணக்குகள் டிசம்பர் 31 - ல் முடிக்கப்பெறுகின்றன. ஏப்ரல் 1, 2015 முதல் மூன்று ஆண்டுகளுக்கு இயந்திரக் கணக்கு மற்றும் தேய்மானக் கணக்கு தயாரிக்கவும்
-
ஜுலை 1, 2016 அன்று, அறைகலன் ரூ. 60,000 க்கு வாங்கப்பட்டது. அதன் வாழ்நாள் 5 ஆண்டுகள். 5 ஆண்டுகள் முடிவில் அதன் இறுதி மதிப்பு ரூ. 4,000. நேர்க்கோட்டு முறையில் தேய்மான விகிதம் காண்க
-
குறைந்து செல் மதிப்பு முறை என்றால் என்ன?
-
1.1.2016 அன்று ரூ.5,000 மதிப்புள்ள அறைகலன் ஒன்று வாங்கப்பட்டது, நிறுவுதல் செலவுகள்
ரூ.1,000. குறைந்து செல் இருப்பு முறையில் ஆண்டுதோறும் 10% தேய்மானம் ஒதுக்க வேண்டும். முதல் இரண்டு ஆண்டுகளுக்கு குறிப்பேட்டில் பதிவுகள் தருக. -
ஒரு நிறுவனம் ரூ. 40,000 மதிப்புள்ள இயந்திரத்தை வாங்கியது. நிறுவுதல் செலவாக ரூ. 2,000 மேற்கொண்டது. இயந்திரத்தின் எதிர்நோக்கும் பயனளிப்பு காலம் 5 ஆண்டுகள். நேர்க்கோட்டு முறையில் ஆண்டுத் தேய்மானத்தொகையை கணக்கிடுக.
-
ஆண்டுத் தொகை முறையில் தேய்மானம் கணக்கிடுதல் என்றால் என்ன?
-
நேர்க்கோட்டு முறையில் தேய்மான விகிதம் காண்க
இயந்திரம் வாங்கிய விலை ரூ. 80,000
முதலாக்கம் செய்ய வேண்டிய செலவுகள் ரூ. 20,000
எதிர்நோக்கும் இறுதி மதிப்பு ரூ. 4,000
எதிர்நோக்கும் பயனளிப்பு காலம் : 4 ஆண்டுகள் -
1.1.2018 அன்று ஒரு நிறுவனம் ரூ. 9,000 மதிப்புள்ள இயந்திரம் ஒன்றை வாங்கியது. நிறுவுகைச் செலவாக ரூ. 1,000 செலவழித்தது. குறைந்து செல் மதிப்பு முறையில் ஆண்டுக்கு தேய்மானம்
15% என்ற விகிதத்தில் 2018 ஆம் ஆண்டுக்கு தேய்மானத் தொகையை கணக்கிடவும். கணக்குகள் மார்ச் 31 ல் முடிக்கப்பெற்றன. -
தேய்மானத்தின் இயல்புகள் யாவை?
-
ஜனவரி 1,2015 அன்று ரூ. 400000 மதிப்புள்ள இயந்திரம் வாங்கப்பட்டது. ரூ. 15000 நிறுவுதல் செலவாகவும், ரூ. 10000 வண்டிக் கட்டணமாகவும் செலவழிக்கப்பட்டது. நேர்க்கோட்டு முறையில் ஆண்டுதோறும் 10%தேய்மானம் நீக்கப்படவேண்டும்.கணக்குகள் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 31ல் முடிக்கப்பெறுகின்றன. முதல் இரண்டு ஆண்டுகளுக்கு இயந்திரத்தின் மீதான தேய்மான தொகையைக் கணக்கிடவும்.
-
கீழ்க்கண்ட விவரங்களைக் கொண்டு, நேர்க்கோட்டு முறையில் தேய்மான விகிதம் காண்க.
1.1.2018 அன்று ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட இயந்திரம் வாங்கியது ரூ. 38,000
1.1.2018 அன்று பழுது பார்த்தல் செலவு செய்தது ரூ. 12,000
இயந்திரத்தின் எதிர் நோக்கும் பயனளிப்பு காலம்: 4 ஆண்டுகள்
எதிர்நோக்கும் இறுதி மதிப்பு ரூ. 6,000 -
குறைந்து செல் மதிப்பு முறையின் நன்மைகள் மற்றும் குறைபாடுகளைக் கூறவும்.
-
தேய்மானத் தொகையை நிர்ணயிக்கும் காரணிகள் யாவை?
-
நேர்க்கோட்டு முறையில் தேய்மான விகிதம் காண்க.
இயந்திரத்தின் அடக்கவிலை ரூ. 2,30,000 நிறுவுவதற்கான செலவுகள் ரூ. 20,000 பயனளிப்புக் காலம் 10 ஆண்டுகள் ஏறி மதிப்பு ரூ. 50,000 -
தேய்மானம் கணக்கிடுதலில் நேர்க்கோட்டு முறை, குறைந்து செல் மதிப்பு முறை இடையே உள்ள வேறுபாடுகளை பட்டியலிடுக.
-
குறிப்பேட்டுப் பதிவுகள் மற்றும் இயந்திரக் கணக்கு தயாரிக்கவும்.
இயந்திரம் வாங்கிய நாள் 01.01.2016 இயந்திரத்தின் விலை ரூ. 36,000 வண்டிக் கட்டணம் ரூ. 2,500 நிறுவுதல் செலவு ரூ. 1,500 இயந்திரத்தின் வாழ்நாள் 5 ஆண்டுகள் -
ஒரு தயாரிப்பு நிறுமம், ஏப்ரல் 1, 2010 அன்று பொறி வகை மற்றும் இயந்திரம் ரூ. 4,50,000க்கு வாங்கி, நிறுவுதல் செலவாக ரூ. 50,000 செலவழித்தது. மூன்று ஆண்டுகள் பயன்படுத்திய பிறகு, அச்சொத்தானது ரூ. 3,85,000 க்கு விற்கப்பட்டது. தேய்மானம் ஆண்டுதோறும் 15% நிலைத் தவணை முறையில் நீக்கப்பட வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் கணக்குகள் மார்ச் 31-ல் முடிக்கப்படுகின்றன. விற்ற இயந்திரத்தின் மீதான இலாபம் அல்லது நட்டத்தைக் கணக்கிடவும்.
-
கணேஷ் அன்ட் கோ 2010 அக்டோபர் 1,அன்று ரூ. 3,00,000 மதிப்புள்ள இயந்திரத்தை வாங்கியது இயந்திரத்தை நிறுவுவதற்காக ரூ.20,000 செலவு செய்யப்பட்டது. நிறுவனம் ஆண்டுதோறும் 10% வீதம் நேர்க்கோட்டு முறையில் தேய்மானம் நீக்கியது. ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 31 அன்று கணக்குகள் முடிக்கப் பெறுகின்றன.
இயந்திரம் கணக்கையும், தேய்மானம் கணக்கையும் முதல் மூன்று ஆண்டுகளுக்குத் தயார் செய்யவும். -
இராம் ஆடை நிறுவனம் ஏப்ரல் 1, 2014 அன்று ரூ. 2,00,000 மதிப்புள்ள ஓர் இயந்திரத்தை நிலா நிறுவனத்திடமிருந்து கடனாக வாங்கியது. அதற்கு நிறுவுகைச் செலவாக ரூ. 10,000 செலவழித்தது. குறைந்து செல் மதிப்பு முறையில் ஆண்டுக்கு 10% தேய்மானம் நீக்கப்பட்டது. முதல் மூன்று ஆண்டுகளுக்கு இயந்திரக் கணக்கு மற்றும் தேய்மானக் கணக்கினை தயாரிக்கவும். கணக்குகள் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 31-ல் முடிக்கப் பெறுகின்றன.
-
-
இலக்குமி போக்குவரத்து நிறுவனம், அக்டோபர் 1, 2014 அன்று ரூ. 8,00,000க்கு கனரக வாகனம் ஒன்றை வாங்கியது. குறைந்து செல் மதிப்பு முறையில் ஆண்டுதோறும் 15% தேய்மானம் நீக்கவேண்டும். 31 மார்ச் 2017ல் அக்கனரக வாகனம் ரூ. 5,00,000க்கு விற்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் கணக்குகள் மார்ச் 31ல் முடிக்கப்பெறுகின்றன. விற்ற வாகனத்திற்கான இலாபம் அல்லது நட்டத்தினைக் கணக்கிடவும்.
-
ஜனவரி 1, 2016 அன்று ரூ. 25,000க்கு சொத்து ஒன்று வாங்கப்பட்டது. ஆண்டுதோறும் நேர்க்கோட்டு முறையில் தேய்மானம் நீக்கப்பட வேண்டும். அச்சொத்தின் எதிர்நோக்கும் பயனளிப்பு காலம் 10 ஆண்டுகள் மற்றும் அதன் இறுதி மதிப்பு ரூ. 1,000. கணக்குகள் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 31ல் முடிக்கப்பெறுகின்றன. தேய்மான விகிதம் கணக்கிட்டு, இரண்டு ஆண்டுகளுக்கு குறிப்பேட்டுப் பதிவுகள் தரவும்.
-
-
இராமு நிறுவனம் ஜூலை 1, 2016-ல் இயந்திரம் ஒன்றை ரூ. 14,000 க்கு வாங்கியது. அதை நிறுவுவதற்கு ரூ. 1,000 செலவழித்தது. நிறுவனம் நிலைத் தவணை முறையில் 10% ஆண்டுதோறும் தேய்மானமாக நீக்கியது. ஒவ்வொரு ஆண்டும் கணக்குகள் டிசம்பர் 31ல் முடிக்கப்படுகின்றன. முதல் இரண்டு ஆண்டுகளுக்கு குறிப்பேட்டில் பதிவுகள் தந்து இயந்திரக் கணக்கு மற்றும் தேய்மான கணக்கினைத் தயாரிக்கவும்.
-
ஜுலை 1, 2015 ஒரு நிறுவனம் ரூ. 1,00,000 மதிப்புள்ள இயந்திரம் ஒன்றை வாங்கியது. குறைந்து செல் இருப்பு முறையில் ஆண்டுதோறும் 20% தேய்மானம் நீக்கப்பட வேண்டும். நிறுவனம் தனது கணக்குகளை ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 31ல் முடிக்கிறது. 31.12.2017 வரை இயந்திரக் கணக்கு தயாரிக்கவும்.