தண்டபாணியின் ரொக்க ஏடு ரூ ,15,000 மேல்வரைப் பற்றிருப்பினைக் காட்டியது. பின்வரும் விவரங்களைக் கொண்டு 2017 - ஜூன் 30 - ல் வங்கி இருப்பினைக் காட்டும் வங்கி சரிகட்டும் பட்டியல் ஒன்றை வரைக.
1. 2017 ஜூன் 27 ல் விடுத்த நான்கு காசோலைகளில் இரு காசோலைகள் ரூ 5,000 ரூ 4,000 30.6.2017 அன்று வரை முன்னிலைப்படுத்தப்படவில்லை.
2. வங்கியில் செலுத்திய காசோலைகள் மதிப்பு ரூ 17,800 அனால் வங்கி வசூலித்து வரவு வைக்கவில்லை.
3. வங்கி அறிக்கையின்படி ரூ 150 வங்கிக் கட்டணம் பற்று வைக்கப்பட்டுள்ளது.
4. மேல்வரைப்பற்றின் மீதான வட்டி ரூ 280 பற்று வைக்கப்பட்டுள்ளது.
5. நிலை ஆணையின்படி , காப்பீட்டு முனைமம் ரூ 2,750 செலுத்தப்பட்டுள்ளது.